2/28/2017

திரவியம் மீது திட்டமிட்டு; மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கின்றோம். த.ம.வி.பு கட்சி

திரவியம் மீது திட்டமிட்டு; மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.Résultat de recherche d'images pour "தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்"
 
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பிரதித்தலைவரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமாகிய நாகலிங்கம் திரவியம் மீது ஓட்டமாவடி நாவலடிச் சந்தியில் வைத்து நடாத்தப்பட்ட தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பதுடன் குறித்த சம்பவம் தொடர்பாக நீதியான விசாரணை நடத்தப்பட வேண்டும் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினர் வேண்டுகோள் விடுத்துள்ளது
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பிரதித் தலைவரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமாகிய நாகலிங்கம் திரவியம் (ஜெயம்) நாவலடி சந்தியில் வைத்து தாக்கப்பட்டது தொடர்பாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
 மேலும் அவ்வறிக்கையில் வாழைச்சேனையிலிருந்து வாகரை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த கிழக்கு மாகாணசபை உறுப்பினர் நாகலிங்கம் திரவியத்தின் வாகனத்தில் நாவலடிச் சந்திக்கு அருகில் ஏற்பட்ட சிறிய வீதி விபத்தினை அடுத்து திட்டமிட்ட முறையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பிரதித் தலைவர்இகிழக்கு மாகாண சபை மக்கள் பிரதிநிதி என்று நன்கு தெரிந்திருந்த போதும்  பொல்லுஇ தடி உள்ளிட்ட ஆயுதங்களால் சிலர் மேற்கொண்ட தாக்குதலை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
மக்கள் பிரதிநிதி மீதான இத்தாக்குதலானது அரசியல் காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடாக தமிழ் அரசியல் தலைமைகளையும் மௌனிகளாகுவதற்கான திட்டமிட்ட தாக்குதலாக இருக்குமோ என ஐயங்கொள்ளத் தோன்றுகிறது.
 சட்டத்தினை யாரும் கையில் எடுத்துக் கொள்வதனை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. அண்மைக்காலமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆங்காங்கே ஏற்பட்டுவரும் சில திட்டமிட்ட குழுக்களின் விசமத்தனமான சட்டத்திற்கு முரணான செயற்பாடுகள் பூதாகரமாக இனவிரிசலை ஏற்படுத்துவதற்கு சமுகஇசமயத் தலைவர்களும் சமாதான விரும்பிகளும் இடங்கொடுக்கக் கூடாது. குறித்த திட்டமிட்ட தாக்குதல் தொடர்பாக  பொலிசார் பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தி குற்றவாளிகளை சமுகத்தின் முன் அடையாளப்படுத்துவதுடன் சட்டப்படியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவ்வறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளது.
»»  (மேலும்)

2/27/2017

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பிரதித் தலைவர் திரவியம் (ஜெயம்) மீது ஓட்டமாவடியில் வைத்து தாக்குதல்.

கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பிரதித் தலைவருமாகிய திரவியம் (ஜெயம்) மீது ஓட்டமாவடியில் வைத்து தாக்குதல். அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.Image may contain: one or more people, stripes and indoor
»»  (மேலும்)

சிறைக் கைதிகள் இருந்த வாகனம் மீது நடந்த தாக்குதலில் 7 பேர் பலி

இலங்கையில் சிறைக் கைதிகளை அழைத்துச் சென்ற வாகனமொன்றின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 5 கைதிகள் உட்பட 7 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.தாக்குதல் நடந்த பகுதியை ஆய்வு செய்யும் போலீசார்

களுத்துறை சிறைச்சாலையிலிருந்து கடுவல நீதிமன்றத்திற்கு கைதிகளை அழைத்துச் சென்ற சிறைச்சாலை வாகனம் மீது இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது
இன்று திங்கள்கிழமை நடைபெற்ற இந்த சம்பவத்தில் இரு சிறைச்சாலை அதிகாரிகளும் கொல்லப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தில் மூன்று அதிகாரிகள் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களில் ஒருவரான பாதள உலக குழு தலைவர் என கூறப்படும் அருண உதயசாந்த என்ற விளக்கமறியல் கைதியை இலக்கு வைத்து இந்த துப்பாக்கி பிரயோகம் நடைபெற்றுள்ளதாக ஆரம்ப கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
»»  (மேலும்)

2/23/2017

நல்லாட்சியிலும் தொடரும் படுகொலைகள்.  இது இந்தக்குழு ?

இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று புதன்கிழமை இரவு சிவில் அதிகாரியொருவர் அடையாளம் தெரியாத ஆட்களினால் சுடப்பட்டுள்ளார்.

காணி மறுசீரமைப்பு ஆணையகத்தின் மாவட்ட இயக்குநரான என். விமல்ராஜ், சுடப்பட்டு காயமடைந்த நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
களுதாவளையிலுள்ள அவரது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்ற இரு நபர்கள், பேச வேண்டும் என கூறி அழைத்து துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

அரசு அதிகாரியொருவர் சுடப்பட்ட இந்த சம்பவமானது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
சம்பவம் தொடர்பான விசாரனைகளை முன்னெடுக்கும் போலீஸ் தரப்பு தகவல்களின் படி துப்பாக்கிதாரிகளோ அல்லது அதற்கான பின்னனியோ இதுவரை கண்டறியப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
»»  (மேலும்)

2/22/2017

கிழக்கின் இளம் கல்வியாளர்கள்

கிழக்கின் இளம் கல்வியாளர்கள்

உலகின் முதல் தமிழ் பேராசிரியரை நமக்கு தந்தது கிழக்கு மண் சுவாமி விபுலானந்தர் தொடக்கம் உலகம் போற்றும் நம் பேராசிரியர் மெளனகுரு என தமிழ் கல்வியுலகுக்கும் கலை இலக்கிய உலகுக்குக்கும் கிழக்கு மாகாணம் பெரும் பங்களிப்பை செய்துள்ளது.
கிழக்குப் பல்கலைக் கழகத்தின் தோற்றம் பல இளம் கல்வியாளர்களை நமக்கு இனங் காட்டியுள்ளது.அவர்களில் பலர் என் மாணவர்கள் என்பதில் பெருமையுறும் என் மனம்.
...
ஆய்வியல் அறிஞன் சு.சிவரத்தினம்
Image may contain: 1 person, outdoor கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத் துறையின் முதல் மாணவர் தொகுதியில் கல்வி கற்று பல்கலைக் கழகத்திலேயே தற்காலிக விரிவுரையாளராக பணியாற்றி பேராசிரியர் சிவத்தம்பியின் கீழ் இள முனைவர்பட்டம் பெற்றவர்.மதுரை காமராஜர் பல்கலையில் கலாநிதி பட்டம் பெற்றவர்.முற்போக்கு ஆய்வியல் நோக்கில் பல ஆராய்ச்சி கட்டுரைகளை எழுதி தமிழ் ஆய்வுலகில் தனி முத்திரை பதித்தவர்.கடந்த பல ஆண்டுகளாக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் ,காட்சி புல கற்கைகள் துறையில் விரிவுரையாளராக சிறப்பாக பணியாற்றி வருகிறார்.கூத்து மீளுருவாக்கம் ஈழத் தமிழர் ஓவியம் என்னும் பேசு பொருட்களில் சொல்லாடலில் முக்கிய கவனிப்பு பெற்ற ஆய்வு கட்டுரைகளை படைத்தவர்.கிழக்கு மண்ணுக்கு பெருமை சேர்க்கும் நம்பிக்கை தரும் இளம் அறிஞர்.

இசையறிஞன் த.பிரதீபன்

இலங்கையில் இசைக் கலையில் புகழ் பெற்ற சுவாமி விபுலானந்தா இசை நடனக் கல்லூரியின் முதல் அதிபர் என பெருமை பெற்ற திருமதி தட்சணாமூர்த்தியின் இசை வாரிசு.பாரம்பரியமான இசைக் குடும்பத்தில் பிறந்து இன்று இசையறிஞனாக உயர்ந்திருக்கும் கலாநிதி பிரதீபன்.வாய்ப்பாட்டு,மிருதங்கம் ,தபேலா,வீணை,ஹார்மோனியம் என வாத்தியங்களை சிறப்பாக கையாளும் திறன் படைத்தவர்.நம் மண்ணின் இசை பற்றிய புரிதலும் அது பற்றியதான ஆய்வு முயற்சிகளை மேற்கொண்டிருப்பவர்.இன்று சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் இசை விரிவுரையாளர்.வெறும் கர்நாடக சங்கீதத்த்குள் மாத்திரம் முடங்கி விடாமல் ஈழத் தமிழர்களுக்கான தனித்துவ இசை பற்றிய ஞானமும் தேடலும் மிக்க இசையறிஞன் இவன்.

மண்சார் மரபியலறிஞன் மோகனதாசன்

பல்கலை விற்பன்னன் சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் நாடகத்துறை விரிவுரையாளர்.பாடகன்,நடிகன்,ஆடகன் பறை ,உடுக்கு,மத்தளம் என நம் மண்ணின் மரபு வாத்தியங்களை சிறப்பாக வாசிக்கும் திறன் படைத்தவர்.எனுடைய நாடகங்கள் பலவற்றிற்கு நடிப்பு இசை என உயிர் கொடுத்தவர்.நம் கூத்து இசை மரபின் எல்லா நுட்பங்களையும் அறிந்த மரபியலறிஞன்.கிழக்கு மண்ணின் பாரம் பரிய கலைகளின் மீட்டுருவாக்க முயற்சிகளில் முன்னின்று உழைப்பவர்.ஆய்வு நிகழ்த்துகை என எல்லா தளங்களிலும் நம்பிகை தரும் மரபியலறிஞன்

நன்றி முகநூல்
திரு -பாலசிங்கம் சுகுமார்.
»»  (மேலும்)

சறுக்கி வீழ்ந்த சற்குரு

கோயம்புத்தூர் மாவட்ட எல்லையில் மேற்குத் தொடர்ச்சி மலையில் வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள ஈஷா யோகா மையத்தில் அமைக்கப்பட்டுள்ள 112 அடி உயர சிவன் சிலையை பிப்ரவரி 24ஆம் தேதியன்று திறப்பதற்காக இந்தியப் பிரதமர் வருவதாகக் கூறப்படும் நிலையில், அந்த மையம் சுற்றுச்சூழல் விதிமுறைகளை மீறுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.ஜக்கி வாசுதேவ்

ஜக்கி வாசுதேவ் எனப்படும் ஆன்மீக குருவினால் நடத்தப்படும் இந்த மையத்தில் இந்த ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதியன்று, மகா சிவராத்திரி தினத்தையொட்டி நடக்கும் விழாவுக்கு 2 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிகழ்வையடுத்து, ஈஷா யோகா மையத்தின் விதிமீறல்கள் குறித்த குற்றச்சாட்டுகள் மீண்டும் கவனத்திற்கு வந்துள்ளன.
சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில், அனுமதி பெறாமல் கட்டப்பட்ட 44 ஆயிரம் சதுர அடி பரப்பிலான கட்டடங்களை இடிப்பதற்கு ஏற்கெனவே நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கும் நிலையில், இப்போது 112 அடி உயரமுள்ள சிவன் சிலை நிர்மாணிக்கப்பட்டிருப்பது குறித்து சூழல் ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.
அனுமதி பெறாமல் கட்டப்பட்ட கட்டடங்கள், சலுகை விலையில் மின்சாரம், தொடர்ந்து கட்டுமானப் பரப்பை அதிகரித்துக்கொண்டே போவது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு இதுவரை 5 வழக்குகளைப் பதிவு செய்துள்ளது. வெள்ளியங்கிரி மலை பழங்குடியினர் பாதுகாப்பு சங்கம் ஒரு வழக்கைப் பதிவுசெய்துள்ளது.
பூவுலகின் நண்பர்கள் அமைப்பு, இந்த சிலை திறக்கப்படுவதைத் தடுக்க வேண்டுமென தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்த வழக்கு தற்போது நிலுவையில் இருக்கிறது. தொடர்ந்து விதிமீறல்களில் ஈடுபட்டுவரும் ஈஷா யோகா மையத்தின் விழாவில் கலந்துகொள்ளக்கூடாது என இந்தியப் பிரதமருக்கு பூவுலகின் நண்பர்கள் சார்பில் கடிதம் ஒன்றும் எழுதப்பட்டுள்ளது.
»»  (மேலும்)

அரசு துறைகளில் வேலை கோரி மட்டக்களப்பில் பட்டதாரிகள் போராட்டம்

மட்டக்களப்புமட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த வேலையற்ற பட்டதாரிகள் அரசு துறைகளில் வேலைவாய்ப்பு உட்பட சில கோரிக்கைகளை முன் வைத்து மட்டக்களப்பு நகரில் காந்தி சதுக்க முன்றலில் நேற்று செவ்வாய்க்கிழமை ஆரம்பித்த காலவரையற்ற சத்தியாக்கிரக போராட்டம் இன்று புதன்கிழமை இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது.
இந்த போராட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பாகங்களிலிருந்தும் பெண்கள் உட்பட ஏராளமான வேலையற்ற பட்டதாரிகள் கலந்து கொண்டு தங்களுடைய கோரிக்கையை வலியுறுத்தும் வகையில் குரல் எழுப்புகின்றனர்.
கிழக்கு மாகாணத்தில் சுமார் 5500 பட்டதாரிகள் தொழில் இன்றி இருப்பதாக வேலையற்ற பட்டதாரிகள் சார்ந்த அமைப்புகள் கூறுகின்றன..
மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் வெளியிட்டுள்ள தகவலில் அம் மாவட்டத்தில் மட்டும் சுமார் 1500 வேலையற்ற பட்டதாரிகள் இருப்பதாக அறியமுடிகின்றது.
»»  (மேலும்)

2/21/2017

நாளை மாலை சிவன் கோவிலடி, திருக்கோணமலையில் ஒன்று கூடுவோம்

Image may contain: 3 people, text
»»  (மேலும்)

தமிழர்களிடம் இருந்து அரசியல் கற்கும் நாகலாந்து

Résultat de recherche d'images pour "india nagaland"  நாகாலாந்து மாநில புதிய முதல்வராக, நாகாலாந்து மக்கள் முன்னணி தலைவர், ஷுர்ஹோசிலி லேஜேட்சு தேர்வு செய்யப்பட்டார். வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில், முதல்வர், டி.ஆர்.ஜெலியாங் தலைமையிலான நாகாலாந்து மக்கள் முன்னணி ஆட்சி நடந்து வந்தது. உள்ளாட்சி தேர்தலில், பெண்களுக்கு, 33 சதவீதம் இட ஒதுக்கீடு அளித்து பிறப்பித்த உத்தரவுக்கு, அங்கு, பழங்குடியினர் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து, போராட்டங்களை நடத்தின. இதனால் ஏற்பட்ட நெருக்கடியால், முதல்வர் பதவியில் இருந்து ஜெலியாங் விலகினார். இதையடுத்து, ஆளும் கட்சியில், புதிய முதல்வரை தேர்ந்தெடுக்க போட்டி நிலவியது. நாகாலாந்து மக்கள் முன்னணி தலைவர், ஷுர்ஹோசிலி லேஜேட்சும், முன்னாள் முதல்வரும், எம்.பி.,யுமான நீபியூ ரியோவும், முதல்வர் போட்டியில் களமிறங்கினர்.

இந்த போட்டியில் நாகலாந்து அரசியல் வாதிகள் தமிழ் நாட்டு பாணியில் உறுப்பினர்களை சிறை வைப்பில் மடக்கினர்.   எம்.எல்.ஏ.,க்கள், அசாம் மாநிலம் காஜிரங்காவில் உள்ள ஒரு ஆடம்பர விடுதி யில் நேற்று முன்தினம் சிறை வைக்கப்பட்டனர். சட்டசபையில், மொத்தம் உள்ள, 60 இடங்களில், 48 எம்.எல்.ஏ.,க்களை உடைய நாகாலாந்து மக்கள் முன்னணி, நான்கு எம்.எல்.ஏ.,க்கள் உள்ள பா.ஜ., மற்றும் எட்டு சுயேச்சைகள், ஒரே கூட்டணியில் உள்ளன.

8 முறை எம்.எல்.ஏ., : இந்நிலையில், ஷுர்ஹோசிலி லேஜேட்சுவை, ஆளும் கட்சி நேற்று ஒருமனதாக, முதல்வராக தேர்வு செய்தது. இதையடுத்து, அவர் விரைவில் பதவியேற்க உள்ளார்; எட்டு முறை எம்.எல்.ஏ.வாக இருந்த அவர், கடந்த தேர்தலில் போட்டியிடவில்லை. எனவே, முதல்வர் பதவி யேற்ற பின், ஆறு மாதங்களுக்குள், ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.,வாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.
»»  (மேலும்)

2/20/2017

கேப்பாப்புலவு மக்களுக்கு ஆதரவாக மாணவர்கள் போராட்டம் -

கேப்பாப்புலவில் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளை விடுவிக்க கோரி, அக்கிராம மக்களினால், மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, வவுனியா பாடசாலைகளில் மாணவர்கள் போராட்டத்தில் இன்று ஈடுபட்டனர்.
இன்று காலை, பாடசாலைகளுக்கு முன்பாக ஒன்றுகூடிய மாணவர்கள், “மக்களின் காணிகளை மக்களிடம் கொடு, அரசாங்கமே எங்களின் நிலத்தை எங்களுக்கு விட்டு விடு, அரசே நில ஆக்கிரமிப்பின் மூலம் மாணவாகளின் கல்வியை பாழாக்காதே, காணிக்காக போராடும் மக்ளுக்கு தீர்வை வழங்கு, எதிர்க்கட்சித்தலைவர் 2016 ஏமாற்றப்பட்ட தலைவரா, ஏமாந்த தலைவரா” போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இப் போராட்டங்கள் அனைத்து பாடசாலைகளிலும் சுமார் ஒரு மணிநேரம் இடம்பெற்றிருந்தது.

»»  (மேலும்)

2/16/2017

தமிழகத்தின் முதல் அமைச்சராக 'எடப்பாடி' கே.பழனிச்சாமி பதவி ஏற்றார்

தமிழகத்தின் முதல் அமைச்சராக 'எடப்பாடி' கே.பழனிச்சாமி பதவி ஏற்றார்.
எடப்பாடி பழனிச்சாமிபதவி ஏற்பு உறுதிமொழியையும், ரகசியக் காப்பு உறுதிமொழியையும் கடவுளின் பெயரால் எடுத்துக்கொண்டார் பழனிச்சாமி.
பதவி ஏற்றபின் ஆளுநருக்கும் அவரது மனைவிக்கும், பழனிச்சாமி பூங்கொத்து கொடுத்தார்.அதற்குப் பின், அவரது அமைச்சரவைக்கு நியமிக்கப்பட்ட 31 பேரும் உறுதி மொழிகளை ஒட்டுமொத்தமாக எடுத்துக் கொண்டனர்.
எடப்பாடி பழனிச்சாமி யார்?

அதிமுகவின் சார்பில் சேலம் மாவட்டம், எடப்பாடி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக 1989-1991, 1991-1996, 2011 -2016, மற்றும் 2016 முதல் தற்போது வரை பதவியில் உள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினராக 1998- 1999 வரை பதவி வகித்தார்.
அவர் ஒவ்வொரு முறையும் எடப்பாடி தொகுதியில்தான் போட்டியிட்டார்.
2011ல் பாமகவின் கார்த்தி மற்றும் 2016ம் ஆண்டு தேர்தலில் அண்ணாதுரையை தோற்கடித்தார்.
2016ல் முதலில் பொதுப் பணித்துறை அமைச்சராக இருந்தவர் பின்னர் நெடுஞ்சாலை துறைக்கு மாற்றப்பட்டார்.
தமிழக அரசின் தமிழ்நாடு சிமெண்ட் கார்பரேஷன் மற்றும் பால் வள துறையிலும் பணியாற்றியுள்ளார்.
அதிமுக கட்சியை பொறுத்த வரையில், தற்போது அதிமுகவின் தலைமை நிலைய செயலாளர் மற்றும் சேலம் மாவட்ட செயலாளராக உள்ளார்
»»  (மேலும்)

2/14/2017

சசிகலா உட்பட மூவருக்கு நான்காண்டுகள் சிறை

தமிழகத்தை உலுக்கிய ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில், விசாரணை நீதிமன்றம் அளித்த தண்டனைத் தீர்ப்பை முழுவதுமாக இந்திய உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது.சசிகலா மற்றும் இளவரசி


»»  (மேலும்)

2/12/2017

புதிய அரசியல் கட்சி தொடங்கினார் கருணா

இலங்கையில் முன்னாள் துணை அமைச்சரான கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தலைமையில் புதிய அரசியல் கட்சியொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.புதிய அரசியல் கட்சி தொடங்கிய கருணா அம்மான்

தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி என பெயரிடப்பட்டுள்ள அக் கட்சியின் அங்குரார்ப்பண நிகழ்வு சனிக்கிழமை மட்டக்களப்பு நகரில் நடைபெற்றது
தனது கட்சியை அறிமுகம் செய்து வைத்து உரையாற்றிய கருணா அம்மான் ''தமிழ் மக்களை முன்னிலைப்படுத்தி வடக்கு - கிழக்கு மாகாணங்களை மையப்படுத்தியதாக தமது கட்சியின் செயல்பாடுகள் அமையும் '' என்கின்றார்.
''13 வது அரசியல் யாப்பு திருத்தம் மூலம் இணைக்கப்பட்டிருந்த வடக்கு - கிழக்கு அன்றைய அரசியல் சூழ்நிலை காரணமாகவே பிரிக்கப்பட்டமை தூரதிர்ஷ்டமானது. எனவே தமிழர் தாயகமான வடக்கு - கிழக்கு இணைந்ததாகவே இருக்க வேண்டும் '' என்றும் வலியுறுத்தி கூறுகின்றார்.
''தற்போதைய சூழ்நிலையில் தமிழ் மக்களின் பிரச்சனைகளை இணக்கப்பாட்டுடனும் புத்திசாலித்தனமாகவும் கையாள வேண்டும். அதன் அடிப்படையிலேயே தமது கட்சியின் செயல்பாடுகள் முன்னெடுக்கப்படும் '' என்றும் அவர் குறிப்பிட்டார்.
விடுதலைப்புலிகளின் கிழக்கு மாகாண தளபதிகளில் ஒருவராக விளங்கிய கருணா அம்மான் 10 வருடங்களுக்கு முன்னதாக அந்த அமைப்பிலிருந்து வெளியேறியிருந்தார்.
வடக்கு - கிழக்கு இணைந்த தலைமை வேண்டாம் . கிழக்குக்கு தனித் தலைமை வேண்டுமென அவ் வேளை தெரிவித்திருந்த அவர் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் என்ற கட்சியை ஆரம்பித்திருந்தார் .
சில வருடங்களின் பின் அக் கட்சியின் தலைமை கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரான பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் வசமானது.
கருணா அம்மான் ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியில் இணைந்து கொண்டார். அக் கட்சியில் உப தலைவர் பதவியும் தேசிய பட்டியல் வழியாக நாடாளுமன்ற உறுப்பினர் பதவியும் அவருக்கு கிடைத்திருந்தது.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அரசாங்கத்தில் மீள்குடியேற்ற துணை அமைச்சராக பதவி வகித்த அவர் தற்போது ஆட்சி மாறிய நிலையில் மகிந்த ராஜபக்ஸவுடனே தொடர்புகளை கொண்டிருந்தார் .
சில நாட்களுக்கு முன்பு கொழும்பு நுகேகொடையில் நடைபெற்ற மகிந்த ராஜபக்ஸ தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சி கூட்டத்திலும் கலந்து கொண்டு உரையாற்றியிருந்தார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது
»»  (மேலும்)