விளக்க மறியல் உத்தரவு மேலும் இரு வாரங்கள் நீடிக்கப்பட்ட நிலையில், 15 மாதங்களுக்கு மேலாக விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
2015 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 11ஆம் தேதி கொழும்பிலுள்ள குற்றப்புலனாய்வு துறை தலைமையகத்திற்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டு இவர் கைது செய்யப்பட்டிருந்தார். பின்னர் நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இன்று திங்கட்கிழமை மீண்டும் மட்டக்களப்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மீண்டும் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, நீதிபதி எம்.கணேசராஜா எதிர்வரும் 23ஆம் தேதி வரை விளக்க மறியலை நீடிப்பதற்கான உத்தரவை பிறப்பித்தார்.
ஒரு லட்ஷம் கொலைகளில் ஒன்றை மட்டுமே விசாரிக்க சொன்ன ரணில்-தமிழரசுகட்சி நல்லாட்சியின் இரண்டுவருட சாதனை இந்த பழிவாங்கல் மட்டுமே.
0 commentaires :
Post a Comment