1/30/2017

கனடா மசூதியில் துப்பாக்கிச் சூடு; ஆறு பேர் பலி

கனடாவின் கியூபெக் சிட்டிக்கு வெளியே உள்ள ஒரு மசூதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் ஆறு பேர் கொல்லப்பட்டனர்.
மேலும் எட்டு பேர் காயமடைந்தனர்.கனடா மசூதி தாக்குதல்
கனடா பிரதமர் ஜுஸ்டின் ட்ரூடோ முஸ்லீம்களுக்கு எதிரான பயங்கரவாத்த் தாக்குதல் என்று இதை வர்ணித்து அதைக் கண்டனம் செய்தார்.
இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக போலிசார் கூறினர்.
சேன்ஃபோய் புறநகர்ப் பகுதியில் உள்ள இஸ்லாமிய கலாசார மையத்தில் உள்ள மசூதியில் மாலை தொழுகை நேரத்தில் துப்பாக்கிதாரிகள் சுட ஆரம்பித்தனர்.
அந்தக் கட்டடத்துக்கு வெளியே பல டஜன் கணக்கானோர் இருந்ததாக செய்திகள் கூறுகின்றன.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் ரமலான் பருவத்தின்போது, இந்த மசூதியின் கதவருகில் பன்றியின் தலை ஒன்று போடப்பட்டிருந்தது
»»  (மேலும்)

1/29/2017

Progressive Sri Lankan Diaspora Alliance (PSLDA) முற்போக்கு இலங்கையர் புலம்பெயர் கூட்டணி (மு.பு.இ.கூ )

அண்மையில் இலங்கையில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் எதிர்பார்த்தபடியே  மேற்குலக ஏகாதிபத்தியங்களின்  இந்தியாவினதும் அதீத  தலையீட்டினை கடந்த இரண்டு வருடங்களுக்குள் அதிகரித்துள்ளன.
இலங்கையில் இடம்பெற்று வரும் அரசியல் மாற்றங்கள், அந்நிய ஏகாதிபத்தியங்களின் அதிகரித்துவரும்  தலையீடுகள் என்பன புலம் பெயர்ந்து வாழ்ந்தாலும், தேசிய நலனில் அக்கறை கொண்டோரை விசனம் கொள்ளச் செய்துள்ளன. பொருளாதார மேம்பாடுகள் குறித்து நல்லாட்சி என்ற மகுடத்துடன் மக்களுக்கு அளிக்கப்பட வாக்குறுதிகளை அரசாங்கத்தால்  காப்பாற்ற முடியவில்லை. இலங்கையில் வாழும் பெரும்பான்மையான சாமான்ய உழைக்கும் மக்கள், மத்தியதர அரச உத்தியோகத்தர்கள் இன்றைய அரசின் மீது நாளுக்கு நாள் அதிருப்தி அடைந்து வருகிறார்கள். மொத்தத்தில் இலங்கையின் எதிர்க்கலாம் அச்சமூட்டுவதாக மாறி வருகிறது.

 புதிய அரசினால் நவீன தாராளவாத பொருளாதார கோட்பாடுகள்  முன்னெடுக்கப்பட்டு வருகின்ற. சமூக நலனை அடிப்படையாகக் கொண்ட பொதுச் சேவை துறைகள்  தனியார் மயமாக்கல் மூலம் இழக்கப்பட்டு வருகின்றன.  அதிக இலாபமீட்டலை மட்டுமே இலக்காக கொண்ட  வெளிநாட்டு வியாபார நிறுவனங்களின் முதலீடுகளை ஊக்குவிக்கும் ஒப்பந்தங்கள் செய்யப்படுகின்றன. இலங்கையின் சமூக அரசியல் பொருளாத நடவடிக்கைககளை பங்கு போடும் இந்திய  மேற்கத்தேய நடவடிக்கைகள் ஒருபுறம் நடந்தேற, மறுபுறம் இலங்கை  மக்களின் இறையாண்மையைக் கொண்ட நாடாளுமன்றத்தின் அரசியல் சட்டவாக்கத்திலும் மேற்குலக நாடுகள் ஆலோசனை வழங்குகின்றன. மறைமுகமாகவும் ஆதிக்கம் செலுத்துகின்றன, பிரித்தானிய, அமெரிக்க சட்ட வல்லுனர்களின் அரச சட்டவாக்கத்தின் மீதான தலையீடு மிக நாசூக்காக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
பொருளாதார உதவிகளை வழங்குவதனூடாக இலங்கையின் அபிவிருத்திக்கு உதவி புரிந்த சீனாவின் மீதான எதிர்ப்பு பிரச்சாரங்களை முன்னெடுத்த மேற்குலக ஏகாதிபத்தியங்களின் தரகு முதலாளிகள் இன்று சீனாவிடம் தவிர்க்க முடியாமல் தஞ்சமடைந்திருக்கிறார்கள். மேற்குலக ஏகாதிபதியங்களே  சீனாவின் உதவியை நாடி நிற்கின்ற ஒரு யதார்த்த உலக பொருளாதார  யதார்த்தம் இன்று நிலவுகிறது.
உலக வங்கியின் கடன் தொகை பல்வேறு நிபந்தனைகளுடன் அதிகரித்து செல்வதனையும், அதன் பயனாக மீள் செலுத்தும் மக்கள் மீதான வரிச் சுமை யும் அதிகரித்து செல்வதனையும் அவதானிக்க முடிகிறது. நவ தாராளவாத பொருளாதாரம் வெகு சிலரின் வருமானத்தை அதிகரித்து பாரிய வருமான இடைவெளியை ஏற்படுத்தி வருகிறது. மக்களின் நலனைக் கொண்டு அரசினால் கட்டுப்படுத்தப்படும் முதலாளித்து முறைமைக்கு எதிராக கட்டுப்பாடற்ற இலாப நோக்கம் கொண்ட முதலாளித்துவ  முறைமை முன்னெடுக்கப்படுகிறது.  இந்தப் பின்னணியில் சாமான்ய உழைக்கும் மத்தியதர இலங்கை மக்களின் எதிர்காலம் அச்சமூட்டுவதாக உள்ளது.
ஆகவேதான் இலங்கையின்  மேற்குலக ஏகாதிபத்திய அல்லது அயலில் உள்ள வல்லாதிக்க நாடுகளின் பொருளாதார சமூக, இறையாண்மையில் தலையீடு செய்யும் மேலாண்மையில் இருந்து இலங்கையை மீட்டெடுக்க வேண்டிய கடப்பாடு இன்று இலங்கையின் உழைக்கும் வர்க்கத்தின், விலை போகாத இடதுசாரி முற்போக்கு சக்திகளின், ஏகாதிபத்திய எதிர்ப்பணியினரின் தேர்வாக உள்ளது. அந்த வகையில் புலம்பெயர்ந்து ஐரோப்பாவில் வாழும் இலங்கை மக்களின் நலனை அடிப்படையாகக் கொண்ட, தலையீடற்ற மக்களின் இறைமையை மதிக்கின்ற ஐரோப்பாவில் வாழ்கின்ற முற்போக்கு சகதிகள், இடதுசாரிகள், ஏகாதிபத்திய எதிப்ப்பாளர்களை ஒருங்கிணைத்து அதையொத்த இலங்கை வாழும் மக்கள் சக்திகளுக்கு ஆதரவு அளிக்க வேண்டிய தார்மீகக் கடமை எம்மீதும் உள்ளது என்று உணர்கிறோம்.
இந்த பின்னணியில் புலம்பெயர்ந்து வாழும் முற்போக்கு, ஏகாதிபத்திய எதிர்ப்பு வாத தேசிய நலனில் அக்கறை கொண்ட சிலரின் முயற்சியால் முற்போக்கு புலம்பெயர் இலங்கையர் கூட்டணி (மு.பு.இ.கூ )  உருவாக்கப்பட்டுள்ளது.
எமது கூட்டணிபின்வரும் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு புலம்பெயர் தேசங்களிலும் அவ்வாறான கோட்பாடுகளின் அடிப்படையில் இலங்கையிலும் செயற்படும் சக்திகளுடன், அரசியல் கடசிகளுடன் தேவை ஏற்படின் இணைந்து செயற்படுவது அவசியம் என்று நம்புகிறோம்.
1. இலங்கை ஒரு சுயாதீன  இறைமையுள்ள நாடு என்பதும். அமெரிக்க ஏகாதிபத்தியம் உட்பட  ஏனைய மேற்குலக ஏகாதிபத்தியங்களின் நவ குடியேற்ற வாத கொள்கைகளை எதிர்த்தல், வெளிநாட்டு இராணுவ தளங்களை இலங்கையில் அமைப்பதை எதிர்த்தல்! 
2. அந்நிய நாட்டுக்கு அடிமைப்படாத உண்மையான கூட்டுச் சேரா வெளிநாட்டு உறவினை மேம்படுத்த கோரிக்கை விடுத்தல்.
3.நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை  முற்றாக ஒழிக்கவும், வினைத்திறன் மிகுந்த ஒரு ஜனநாயக மக்கள் வலுமிக்க அரசை உருவாக்க திடம் கொள்ளல், அதிகாரங்களை கிராமிய மட்டங்களில் மக்களை வலுப்படுத்தும் வகையில் பகிர்ந்தளிக்கப்படவும்  அதற்கான பொறிமுறையை ஏற்படுத்தவும் வலியுறுத்தல். 
கலப்பு பொருளாதார முறைமையின் ஊடாக அரசின் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்ட வகையில் பொருளாதார முறைமையை அறிமுக்கப்படுத்தி சோசலிச பொருளாதாரத்தை அதன் விழுமியங்களை மக்கள்   நலன் சார்ந்த வகையில் செயற்படுத்த வற்புறுத்தல். 
சமூக அபிவிருத்தி அடிப்படையில் பொருளாதார அபிவிருத்தி செய்யப்படுவதை உறுதி செய்தல்.  சுகாதார திட்டங்களை இலவசமாகவும் வினைத்திறன் கொண்டதாகவும் செயற்படுத்த பாடுபடுதல்.
சேவைத்துறையினை மக்கள் நலன் பயக்கும் வகையில், அரச கண்காணிப்பினை உறுதி செய்யும் வகையில், ஊழலை  ஒழிக்கும் வகையில் மிகவும் உறுதியான சுயேச்சையான பொறிமுறையை அறிமுகப்படுத்த கோரிக்கை விடுத்தல். 
தொழிலார்கள், அரச ஊழியர்களின் கவுரவத்தையும் நீதியான ஊதியத்தையும் உறுதி செய்யும் விதத்தில் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் பரிந்துரைகளை பின்பற்றும் வகையில் பனியாளர் சட்டங்களை உறுதி செய்வதில் அக்கறை காட்டுதல். 
விவசாயம், கிராமிய அபிவிருத்தி, சூழல் பாதுகாப்பு பற்றிய அக்கறைகளை அவை பற்றிய சுதேசிய மக்களை மேம்பாட்டின் அடிப்படையில் முன்னெடுத்தல். 
சமூக நீதியின் அடிப்படையில் சகல மக்களினதும் அடிப்படை உரிமைகளை உறுதி செய்யும் வகையில் சட்டவாக்கங்களை உருவாக்க பாடுபடுதல்.
நவீன தொழிநுட்ப பயன்பாட்டினை மக்கள் நலன் சார்ந்த உள்நாட்டின் அபிவிருத்திக்கு பயன்படுத்தல். விஞ்ஞான ஆய்வுகளை  ஊக்குவித்தலும்  அவற்றின் மூலம் அடையப்படும் பயன்களை சகல மக்களும் அனுபவிக்கும் வகையில் சமூக நலனோம்புத் திட்டங்களை முன்னெடுப்பதை உறுதி செய்தல். 
  
எனவேதான் மேற்சொன்ன கருத்தோட்டத்தின் அடிப்படையில் செயற்பட நாங்கள் முன் வந்துள்ளோம். மேலும் ஐரோப்பாவெங்கும் வாழும்,எமையொத்த அரசியல் கருத்துக்களுடன் இலங்கையை தாயகமாகக் கொண்ட தமிழ், சிங்கள, முஸ்லீம், பறங்கிய மக்களை ஒன்றிணைத்து பரந்துபட்ட அளவில் ஒரு கூட்டணி ஒன்றினை நிறுவ முயற்சித்துள்ளோம்.அந்த வகையில்  எமது அமைப்பு நேரடியாக  இலங்கையின் உள்ள முற்போக்கு சக்திகளுடனும்   இடசாரி அமைப்புக்களுடனும், ஏகாதிபத்திய பொருளாதார அரசியல் ஆக்கிரமிப்புக்கும்  அடக்கு முறைக்கும்  எதிராக செயற்படும் அமைப்புக்களுட னும்  தொடர்புகளை ஏற்படுத்தி உள்ளோம். எனவே இந்த அமைப்பில் இணைவதற்கும் எமது பணியில் உங்களை பங்காளிகளாக ஆக்கிக் கொள்ளவும் இந்த  அறிவித்தலை வெளியிடுகிறோம். 
மேற் சொன்ன கொள்கை அடிப்படையில் இந்தக் கூட்டணியில்  சேர்ந்து கொள்ள விரும்புபவர்கள் தங்களின் முழுப் பெயர் முகவரி, தொலைபேசி இலக்கம், அவர்கள் சார்ந்த அல்லது ஆதரிக்கின்ற அரசியல் கடசி மற்றும் ஏனைய அரசியல் சார்ந்த மற்றும் சாராத அமைப்புக்களின் பெயர் விபரங்களுடன்  admin@pslda.org எனும் மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளுமாறு பணிவன்புடன் வேண்டுகிறோம்.
»»  (மேலும்)

1/18/2017

எழுகத்தமிழ்-பல தேர்தல்களில் படுதோல்வியடைந்த பன்னாடைகளுக்கெல்லாம் வரவேற்பு கொடுக்க அமலுக்கு துரைரெத்தினத்துக்கும் என்ன அடிமை புத்தியா?





(மட்டக்களப்பில் எதிர்வரும் சனிக்கிழமை (21) ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த தமிழ் மக்கள் பேரவையின் எழுக தமிழ் நிகழ்வு பிற்போடப்பட்டுள்ளதாக தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர்களில் ஒருவரான ரி.வசந்தராஜா தெரிவித்துள்ளார்.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன்,கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னம்,தமிழ் தேசிய முன்னணியின் தலைவர் கே.கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.)


எழுகத்தமிழ்-பல தேர்தல்களில் படுதோல்வியடைந்த பன்னாடைகளுக்கெல்லாம் வரவேற்பு கொடுக்க அமலுக்கு துரைரெத்தினத்துக்கும் என்ன அடிமை புத்தியா?


இந்த எழுக தமிழ் பொன்னப்பலம்   பல்லாயிரம் இளைஞர்கள் ஆயுதமேந்தி போராடி மடிந்து கொண்டிருந்தபோது லண்டன் சீமையிலே பட்டப்பிடிப்பு படித்து கொண்டிருந்தவர்.
இப்போ வந்து எழுக தமிழ் என்று மக்களை உசுப்பேற்றுகின்றார்.

 பல தேர்தல்களில் படுதோல்வியடைந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு செங்கம்பளம் விரிக்கும் மட்டக்களப்பு மக்கள் பிரதிநிதிகளுக்கு வெட்கமில்லையா? உங்களுக்கு என்ன அடிமைப்புத்தியா? முடிந்தால் கிழக்கு மாகாண மக்கள் எதிர்கொள்ளும் இன,சமூக, பொருளாதார ,பண்பாட்டு சிக்கல்களுக்கு ஒரு தீர்வை சொல்லுங்கள் அதையிட்டு ஒரு நிகழ்வை, ஊர்வலத்தை,போராட்டத்தை நடத்துங்கள்,அதனை வடக்கு தலைமைகளை ஏற்று போராட அழையுங்கள். அது ஏன் ? என்ன தீர்வு என்ன நிகழ்வு என்ன யோசனை என்றாலும் வடக்கிலிலுருந்துதான் வரவேண்டுமா?


அமலுக்கும் ,துரைரெத்தினத்துக்கும் மக்கள் வாக்களித்தது.இந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு செங்கம்பளம் விரிக்க அல்ல. கேவலம் கேவலம்.அங்கிருந்து வந்தவுடன் எவனென்றாலும் தலைவனாகி விடுவானா?

இருக்கின்ற மாகாண சபையை கூட நடக்கமுடியாமல் யாழ்ப்பாண தலைமைகள் சாதி சண்டையும்,ஊழலும்,சீர்கேடுமாக சந்தி சிரிக்கும் நிலைக்கு வந்து விட்டன. ஆனால் மட்டக்களப்பான் மட்டும் இன்னும் யாழ்ப்பாண தலைமைகள் தமக்கும் தீர்வை பெற்று தரும் என்னும் நப்பாசையில் ஊறி கிடப்பதேன்? அமலுக்கு துரைரெத்தினத்துக்கும் என்ன அடிமை புத்தியா?

இந்த பொன்னம்பலத்தின் பாட்டனார் ஜி.ஜி.பொன்னம்பலம் வடக்கிலே கொடிகட்டி பறந்த காலத்தில் மட்டக்களப்பில் தனது இனவாத கருத்துக்களை பரப்பி தமிழ் காங்கிரஸ் என்னும் கட்சியை  அங்குரார்ப்பனம் செய்ய வந்த வேளை அவரை கூழ் முட்டையடித்து துரத்தியவர்கள் மட்டக்களப்பு மக்கள் ஆனால் கேவலம் இன்று  மூன்று தேர்தல்களில் தோற்று போன பன்னாடைகளுக்கெல்லாம் வரவேற்பு கொடுக்கும் நிலை.












.
»»  (மேலும்)

1/12/2017

இலங்கை மீண்டும் அழியும்: சங்கரி

“தேசிய அரசாங்கம் என்ற போர்வையில் நமது நாடு எங்கே செல்கின்றது என்று எவருக்கும் தெரியவில்லை. என்னுடைய 60 வருடகால அரசியல் அனுபவத்தை வைத்து நான் சொல்வதை எவரும் புரிந்து கொள்வதுமில்லை. ஆனால் மீண்டும் ஒரு அழிவை எமது நாடு சந்திக்கப் போகின்றது என்பது மட்டும் உறுதி” என்று, தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு நேற்று எழுதியுள்ள கடிதத்திலேயே, மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்தக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“விடுதலைப் புலிகள் அழிந்தமையானது, ஒரு சிலருக்கு வேண்டுமானால், சந்தோசமாக இருக்கலாம். ஆனால் எனக்கு அப்படி அல்ல. நான், நாட்டு மக்கள் அனைவரையும் நேசிப்பவன். எது நடந்து விடக்கூடாது என்று விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு அடிக்கடி கடிதம் எழுதினேனோ, அதுதான் கடைசியில் நடந்தும் முடிந்தது.
அதேபோல்தான் இன்றும் தனித்து நின்று கூறுகின்றேன். தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள், தாங்கள்தான் என்று கூறும் ஒருசிலருடன் மட்டும் நீங்கள் உறவு வைத்துக்கொண்டு, ஏனையவர்களை புறம்தள்ளி, தேசிய அரசாங்கம் என்ற போர்வையில் நடத்தும் ஆட்சியில்,  எமது மக்களுக்கு நிலையான தீர்வு எதுவும் கிட்டப்போவதில்லை. உங்கள் தேசிய அரசாங்கத்தில் உள்ள அமைச்சர்களே, அரசில் நம்பிக்கை இழந்து பேசுகின்றார்கள். இந்நிலையில், எமது மக்களுக்கு, இந்த அரசு எதனையும் சாதிக்கப்போவதில்லை. காலங்காலமாக குறிப்பிட்ட ஒருசிலருடன், அவர்களை திருப்திப்படுத்துவதற்காக மட்டுமே நடத்திய பேச்சுவார்த்தைகள் அனைத்தும் தோல்வியிலேயே. முடிந்தன.
அதுதான் வரலாறும் ஆகும். அவ்வாறான ஒரு செயலையே மீண்டும் நீங்கள் அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றீர்கள். இது நாட்டுக்கு மீண்டும் ஒரு அழிவையே கொண்டுவரும். சகல தமிழ் அமைப்புகள் மற்றும் சகல முஸ்லிம் தலைவர்கள் ஆகியோரை உள்ளடக்கி ஒரு பேச்சுவார்த்தை மூலம் விரைவில் ஒரு தீர்வை முன்வையுங்கள்.
புதிய அரசியல் அமைப்பு என்று கூறி காலத்தை இழுத்தடிப்பதும், மக்கள் மீது வரிச்சுமையை ஏற்றிவிட்டு, என்றுமில்லாதவாறு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சலுகைகளை அளிப்பதும், மாற்றத்தை ஏற்படுத்திய சகல இன மக்களையும் ஒரு ஏமாற்றும் செயலாகவே நான் கருதுகின்றேன். மீண்டும் மக்களிடையே இனக்குரோதம் வளரத் தொடங்கியுள்ளது என்பது, நாட்டில் அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளே சான்றுகூறுகின்றன.
இந்திய முறையிலான ஒரு அரசியல் சாசனத்தை உருவாக்கி, தென்னாபிரிக்க அரசியல் சாசனத்தில் உள்ளது போன்ற உரிமைகள் சட்டத்தை உள்ளடக்கி, அதனை மீறுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கையை மேற்கொள்வதன் மூலம் ஒரு நல்ல தீர்வை வழங்கி, நாட்டு மக்கள் அனைவரையும் சுபீட்சமாக வாழவைக்கலாம்” என்று அந்தக் கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
»»  (மேலும்)

நேருக்கு நேர் கனடாவில் பிள்ளையானும் விக்கினேஸ்வரனும்



கனடாவில்  இடம்பெற்ற ஒரு பத்திரிகையாளர் மாநாட்டில் வட மாகாண முதல்வர் விக்கினேஸ்வரன் அவர்கள் ஒரு கேள்வியை எதிர்கொள்ள நேர்ந்து மூக்குடைபட்டுள்ளார்.


உங்களது மூன்று வருட ஆட்சியில் நீங்கள் மக்களுக்காக செய்த பணிகளில் சிலவற்றை குறிப்பிட்டு சொல்ல முடியுமா? என கேட்கப்பட்ட போது அவரிடம் பதிலேதும் இருக்கவில்லை.
இதே கேள்வியை கிழக்கு மாகாண முன்னாள் முதல்வர் சந்திரகாந்தனிடம்  (பிள்ளையான்)  கேட்டிருந்தால் அவர் என்ன சொல்ல முடிந்திருக்கும்.


*மட்டக்களப்பு நகரை அழகுபடுத்தும் பல்வேறு திட்டங்களை செய்து முடித்தேன்.

*மட்டக்களப்பு நகரின் மத்தியில் இருந்த 30 வருட பழமை வாய்ந்த மிக சிறு பஸ் நிலையத்துக்கு பதிலாக பிரமாண்டமான புதிய பஸ்நிலையம் அமைத்தேன்.

*ஏழை மக்கள் குறைந்த செலவில் தமது வைபவங்களை நடத்த கலாசார மண்டபங்களை அமைத்து அவற்றை பிரதேச சபைகளுக்கு பாரம் கொடுத்தேன்.அவற்றுக்கு எம்முடன் இணைந்து போராடி மரணித்த வீரர்களின் பெயர்களை (நந்தகோபன்,ரெஜி,குகனேசன்) பொறித்தேன்.

*மிக பெரிய,சிறிய நூலகங்களை புதிதாக உருவாக்கி வாசகர்களுக்கு தந்தேன்.

*படுவான்கரை போன்ற பின்தங்கிய பிரதேசங்களை மேம்படுத்த புதிய (வவுணதீவு,திருக்கோவில் )கல்வி வலையங்களை உருவாக்கினேன்.

*43 குக்கிராமங்களை உள்ளடக்கிய பிட்படுத்தப்பட்ட வெல்லாவெளி பிரதேசத்தின் வளர்ச்சிக்காக அந்த பிரதேச  சபையை இடம்மாற்றி  புதிய கட்டிடம் அமைத்து செயலூக்கம் மிக்கதாக மாற்றினேன்.

*மாகாணமெங்கும் நூறுக்கும் மேற்பட்ட பாடசாலைகளை திருத்தி,அபிவிருத்தி செய்து அவற்றை தரமுயர்த்தினேன்.

*முடிந்தவரை பின்தங்கிய பாடசாலைகளின் கணித விஞ்ஞான,ஆங்கில ஆசிரியர் பற்றாக்குறைகளை  நிவர்த்தி செய்ய பரபட்சமற்ற இடமாற்றங்களை செய்தேன்.

*பல்வேறு கிராமிய வீதிகளையும் மின்னிணைப்புகளையும் புனர் நிர்மாண பணிகளையும் செய்தேன்.

*பல குளங்களை தூர்வாரி, திருத்தி,புனரமைத்து விவசாயிகளின் தேவைகளை பூர்த்தி செய்தேன்.

*பல கிராமிய ஆயுள்வேத வைத்திய சாலைகளை புதிதாக உருவாக்கினேன்.

*பல எல்லைக்கிராம மக்களை மீள குடியேற்றி அவர்களது விவசாய, போக்குவரத்து பாடசாலை ,ஆலைய தேவைகளை பூர்த்தி செய்ததன் ஊடாக மாகாண எல்லைகளை பலப்படுத்தினேன்.

*திருமலையில் இருந்த பல மாகாண திணைக்களங்களின் தலைமையகங்களை மட்டக்களப்பு நகருக்கு மாற்றியதன் ஊடாக மட்டக்களப்பு,அம்பாறை மாவட்ட மக்கள் எதிர்கொண்ட நடைமுறை பிரயாண சிரமங்களை சீர் செய்தேன்.

*இருபது வருடகாலமாக துருப்பிடித்து கிடந்த மாகாண சபையை பொறுப்பெடுத்து அதனை கட்சி தீர்மானங்களை நிறைவேற்றும் இடமாக  மாற்றி கேலிக்கிடமாக்காமல் பல்வேறு நியதி சட்டங்களை உருவாக்கி(நிதி வரி வசூலிப்பு சட்டம், மதுவரி சட்டம்,தனியார் போக்குவரத்து சட்டம் மாகாண சபையை சட்ட வலுவாக்கம் மிக்கதொன்றாக பயணிக்க வழி சமைத்தேன்.

*மாகாண சபைக்கு வருடாவருடம் மத்திய அரசால் ஒதுக்கப்பட்ட  அனைத்து நிதியையும் மக்களின் தேவைகளுக்கு ஏற்றவாறு பணி செய்ய முழுமையாக பயன்படுத்தியது மட்டுமன்றி மேலதிக நிதியையும் பெற்று எமது மாகாண அபிவிருத்திக்கு பங்காற்றினேன்.  ஒரு போதும் ஒரு சதமெனும் எமது  மாகாண சபைக்கென ஒதுக்கப்பட்ட பணம் எனது ஆட்சிகாலத்தில் திருப்பியனுப்பப்பட்ட வரலாறில்லை.

*அனைத்துக்கும் மேலாக எத்தனையோ போராட்டங்களுக்கும் இழப்புகளுக்கும் விலைகொடுப்புகளுக்கும் பின்னர் கிடைத்த இந்த மாகாண சபை முறைமையை கையூட்டுட்டுக்களும் கயமைத்தனங்களும் காடைத்தனங்களும் ஊழல் பெருச்சாளிகளும்  கடை விரிக்கும் மையமாக மாற நான் ஒருபோதும் இடம்கொடுத்ததில்லை. என் மீதோ எனது அமைச்சர்கள் மீதோ எவ்வித ஊழல் குற்றசாட்டுகளோ ஊழல் விசாரணை  ஆணைக்குழுக்களோ அமைக்கும் கேவலமான நிலைக்கு இட்டு செல்லும் வண்ணம் எனது மாகாண சபை நான் நடத்தவில்லை.


மீன்பாடும் தேனாடான்



»»  (மேலும்)

1/09/2017

ஒரு லட்ஷம் கொலைகளில் ஒன்றை மட்டுமே விசாரிக்க சொன்ன ரணில்-தமிழரசுகட்சி நல்லாட்சியின்   இரண்டுவருட சாதனை

Afficher l'image d'origineஇலங்கையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை வழக்கில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதான கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் மீதான விளக்கமறியல் தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளது.


விளக்க மறியல் உத்தரவு மேலும் இரு வாரங்கள் நீடிக்கப்பட்ட நிலையில், 15 மாதங்களுக்கு மேலாக விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
2015 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 11ஆம் தேதி கொழும்பிலுள்ள குற்றப்புலனாய்வு துறை தலைமையகத்திற்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டு இவர் கைது செய்யப்பட்டிருந்தார். பின்னர் நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இன்று திங்கட்கிழமை மீண்டும் மட்டக்களப்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மீண்டும் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, நீதிபதி எம்.கணேசராஜா எதிர்வரும் 23ஆம் தேதி வரை விளக்க மறியலை நீடிப்பதற்கான உத்தரவை பிறப்பித்தார்.

ஒரு லட்ஷம் கொலைகளில் ஒன்றை மட்டுமே விசாரிக்க சொன்ன ரணில்-தமிழரசுகட்சி நல்லாட்சியின்   இரண்டுவருட சாதனை இந்த பழிவாங்கல் மட்டுமே.

»»  (மேலும்)

1/07/2017

தமிழ் மக்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்- தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கோரிக்கை

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு குழு தலைவர்கள்
ஒற்றையாட்சி முறையை ஏற்க முடியாது. சமஸ்டி முறையே வேண்டும். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் இணைப்பு முக்கியம் என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்கள் குறித்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்துடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என்றும் இந்தக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டிருக்கின்றது.
புதிய அரசியலமைப்பில் ஓர் அரசியல் தீர்வு காணப்படும் என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நம்பிக்கையோடு கருத்து வெளியிட்டு வருகின்றார்.
ஆனால், தமிழ் மக்களின் அபிலாசைகளுக்கு முரணான வகையில் அரசியல் தீர்வு தொடர்பாக, அரசு தரப்பில் இருந்து பல்வேறு கருத்துக்கள் வெளியாகி வருகின்றன. .
இதனால் அரசாங்கத்தின் மீதும், அரசியல் தீர்வுக்கான முயற்சிகள் மீதும் சந்தேகங்கள் எழுந்திருக்கின்றன.
இது குறித்து இந்தக் கூட்டத்தில் ஆராயப்பட்டபோதே, கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனிடம் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
அரசியல் தீர்வில் முக்கியமாக இடம்பெற வேண்டிய தமிழ் மக்களின் அபிலாசைகள் குறித்து அரசிடம் மாறுபட்ட நிலைப்பாடு காணப்படுவதால், புதிய அரசியலமைப்பு உருவாக்குவதற்கான வழிகாட்டல் குழுவில் இருந்து கூட்டமைப்பு விலக வேண்டும் என்று ஈபிஆர்எல்எவ் கட்சியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய சுரேஸ் பிரேமச்சந்திரன் வலியுறுத்தியிருந்தார்.
ஆயினும், அத்தகைய நடவடிக்கை இன்றைய சூழலில் பொருத்தமற்றதாக இருக்கும் என்று தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் முஸ்லிம் மக்களிடமிருந்து, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் இணைப்பிற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருப்பதனால், மாகாண இணைப்பு விடயம் கடினமாக இருக்கின்றது என்பதும் இந்தக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
ஆயினும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட வேண்டும் என்ற தமிழ் மக்களின் ஆவலை, அரசியல் தீர்வில் புறந்தள்ளிவிட முடியாது என்பதும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அரசியல் தீர்வுக்கான முயற்சியில் சில நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. தொடர்ந்து அதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படும். தமிழ் மக்கள் விரும்பாத தீர்வை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்று கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கூறியுள்ளார்
»»  (மேலும்)

1/05/2017

அரசியலமைப்பு சபையின் கூட்டம் ஒத்திவைப்பு

  பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் இன்று வியாழக்கிழமை இடம்பெறவிருந்த அரசியலமைப்பு சபையின் கூட்டம், மறுஅறிவித்தல் வரையிலும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஒத்திவைக்கப்பட்ட காரணம் இதுவரையிலும் வெளியாகவில்லை. -
»»  (மேலும்)

மாவீரர் நினைவு சமாதி அமைக்கும் பணிகள் நிறுத்தம்

கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் பொது நினைவுச் சமாதி அமைக்கும் பணி இன்று, முன்னெடுக்கப்பட்ட நிலையில், பின்னர் அப்பணிகள் பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
மாவீரர் துயிலுமில்லத்தில் இன்று ஒன்று கூடிய மாவீரர்களின் உறவினர்கள் மற்றும் முன்னாள் போராளிகள் இந்தப் பணியை ஆரம்பித்தனர்.
“யுத்தம் முடிவுக்கு வந்தப் பின்னர் 2016 ஆம் ஆண்டு மாவீரர் நாள் கொண்டாடுவதற்கு அனுமதியளிக்கப்பட்டது. அப்போது அப்போது வெறும் தரையில் சிதைக்கப்பட்ட கல்லறை மற்றும் நினைவுக் கற்களின் எச்சங்களை குவித்து அதன் முன் விளக்கேற்றி நினைவு கூறப்பட்டது.
எனவேதான் துயிலுமில்லம் வழமை போன்று மாற்றி அமைக்கும் வரைக்கும் ஒரு பொதுவான நினைவுச் சமாதினை அமைத்து நினைவு கூறுவதற்கு தீர்மானித்து அந்தப் பணிகளை இன்று ஆரம்பித்துள்ளோம்” எனத் தெரிவித்த மாவீரர்களின் உறவினர்கள் தாம் கொண்டு  சென்ற செங்கல், சீமெந்து என்பவற்றைக் கொண்டு நினைவுச் சமாதி அமைக்கும் ஏற்பாடுகளை முன்னெடுத்தனர்.
»»  (மேலும்)