12/07/2016

கண்டியில் அரங்க ஆய்வுகூடத்தின் புதிய தயாரிப்பு

பேராசிரியர் சி.மௌனகுரு

தோற்றம் ( THE RISE) பரிணாமம் ஒன்று (Evolution one)

சமகால நடனக் கலைகுழு வருடாவருடம் நடன நாடக விழாவினை நடத்தி வருகிறதுகிறது. இவ் விழாவில் பல் நாட்டுக் கலைஞர்களும் கலந்து கொண்டு தம் திறமை காட்டுகிறார்கள் .ஒருவரை ஒருவர் அவரவர் தளத்தில் புரிந்து கொள்கின்றனர் சென்ற ஆண்டு அவர்கள் நடத்திய சர்வதேச நடன விழாவில் அரங்க ஆய்வுகூடம் தனது காண்டவ தகனம் நாடகத்துடன் பங்கு கொண்டது. இவ்வாண்டு இவ்விழாவில் எம்மிடமிருந்து ஓர் புத்தாக்கத்தை அவர்கள் வேண்டினர்.

பரிணாமம் ஒன்று இந்நாடகத்தின் பரிணாமம் ஒன்று பிரபஞ்ச வெளியில் சூர்யக் கிரகங்களின் தோற்றத்தையும். அதினின்று உருவான,உலகத் தோற்றத்தையும், உயிரின் தோற்றத்தையும் அதன் கூர்ப்பில் மனித தோற்றத்தையும் ,அம்ம்னிதர்கள் கருவி கையாளுகை,அறிவு வளர்ச்சி மூலம் இயற்கைச் சக்திகளான இடி மின்னனல்,மழை.புயல் என்பனவற்றைத் தமது கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்தமையையும் ,கைத்தொழில் புரட்சிவரை மானுடம் இயற்கைமீது தமது ஆதிக்கம் செலுத்தியமை பற்றியும் கூறுகிறது.

பரிணாமம் இரண்டாம் பாகம் இப்பகுதி கைதொழில் புரட்சியின் பின் மனித குலம் இயற்கை அழித்து அதனைத் தமது சுயநலத்துக்காப் பிரயோகித்தமையும், அதனால் வரும் இயற்கை உபாதங்களும் டயனசோறாஸ் எனும் உயிரினம் இயற்கையுடன் நிற்க முடியாமல் அழிந்து போனதைப் போல மனித குலமும் அழிந்து போவதைக் கூறுகிறது.

பரிணாமம் மூன்றாம் பாகம் இப்பகுதி கூர்ப்பில் இன்னொரு உயிரினம் தோன்றுவதைக் கூறுகிறது. விஞ்ஞான உண்மையும் விஞ்ஞானக் கற்பனயும் கலந்ததாக இந் நாட்டிய நாடகம் உருவாக்கப் படுகிறது கூத்து ,பரத. களரிப்பயிட்டு ,.நாடக அசைவுகள், சமகால நடனம் என்பன கலந்து ஒரு பரிட்சார்த்தமாக இது தயாரிக்கபட்டுள்ளது கூத்திசை ,கூத்துத் தாளக்கட்டுகள் பரத ஜதிகள் ,கிராமிய இசை ,மெல்லிசை, கர்னாடக இசை .ஸ்வரக் கோவை என்பன அளவறிந்து கலக்கப்பட்டு உருவாக்கிய ஒரு புத்தாக்கம் இதன் முதாலாம் பாகத்தையே நாம்15 நிமிட நேரம் ஆற்றுகை செய்கிறோம் இது கடந்த இரு வாரங்களாக இதனை உருவாக்கக் கடும் பயிற்சியில் ஈடுபட்டோம். பரதம்,நாடகம் பயின்று வெளியேறிய மாணவர்கள், அரங்க ஆய்வுகூடத்தில் கூத்து,நடிப்பு பயின்ற மாணவர்கள் என 7 பேர் இதில் பங்கு கொள்கின்றனர். வழமைபோல பல்வேறு இசைக்கருவிகளும் இசைக்கப்படுகின்றன. ரெகோட்டாக அன்றி உயிரோட்டமுள்ள இசையாக இது ஆற்றுகையின் போது இசைக்கபடுகிறது. பரதம் பயின்ற ஜெகதாரணி ,கிருபாரதி. சரண்யா, சஜித் ஆகியோரும் நாடகம் பயின்றற துஜன், ரமேஷ், கிருஸ்ண மேனன் ஆகியோரும் இதில் பங்கு கொள்கின்றனர்.

தபேலா,உடுக்கு,,வாதியங்களை இசைப்பதுடன் தன் கனமான சாரீரத்தினால் நாடகத்துக்கு உயிர் தருகிறார். மோகனதாஸன் மிருதங்கம் இசைப்பதுடன் தன் அருமையான் குரலினால் உயிரூட்டுகிறார். பிரதீபன் கீபோட்டின் துணையுடன் ஆடலுக்கும் காட்சிகளுக்கும் வளம் தருகிறார் யூட் நிரோஸன் சுகிர்தாவின் வளம் மிகுந்த கம்பீரமான குரல் நாடகத்துக்கு இன்னொரு பரிமாணம் தருகிறது. சிம்போலையும் தாளத்தையும் நான் கையாளுகிறேன். கேதீஸ்வரனும்,அமல்ராஜும் மேடை உடைஒப்பனை தயாரிப்பு என்பனவற்றில் உதவுகின்றனர். கடந்த மூன்று வாரங்களாச் செயற்படுகிறோம். மகிழ்ச்சியாக இருக்கிறோம். இந்நாடகம் 6ஆம் திகதி மாலை (.6.12.2016 அன்று கண்டியில் இடம் பெறுகிறது.

0 commentaires :

Post a Comment