12/18/2016

கிழக்கில் எழுக தமிழ் பேரணி எதை சாதிக்க போகின்றது நீங்களே சிந்தியுங்கள் ..நிர்மல் தனபால்

கிழக்கில் எழுக தமிழ் பேரணி எதை சாதிக்க போகின்றது நீங்களே சிந்தியுங்கள் ..நிர்மல் தனபால் 
Image may contain: one or more people and outdoor
------------------------------------------------------------------
30 வருட அகிம்சைவழி ... அரசியல் போராட்டம் 30 வருடத்துக்கு மேலான ஆயுத போராட்டம் இறுதியில் தமிழ் சமுகம் அடைந்த பலன்தான் என்ன ?

அன்று தமிழ் இளைஞர்களை உணர்வுகளை தூண்டியது போன்று இன்று எழுக தமிழ் என கிழக்கில் இளைஞர்களை பலிக்கிடாக்களாக்கவே ஆயத்தங்கள் நடக்கின்றன. நம்மை காலம் காலமாக உசுப்பேற்றி அரசியல் அடிமைகளாக நடாத்திய வர்க்கத்தினர்  யார் என உங்களுக்கு புரியும்.
இதனை கிழக்கில் உள்ள அனைத்து தமிழ் மக்களும் நன்றாக சிந்திக்க வேண்டும். சம காலத்தில் கிழக்கில் விடுதலை புலிகள் உள்ளனர் என்று முன்னாள் போராளிகளின் நடவடிக்கைகளை புலனாய்வு செய்கின்ற  சூழலில் இவ்வாறான பலனற்ற போராட்டங்கள் நம்மீது
திணிக்கப்படுவதை  சாதாரணமாக எடுத்துவிட முடியாது .

கிழக்கு மாகாணம் பறிபோன போதும் தமிழர் பூர்வீக நிலங்கள் முஸ்ஸீம்களாளும் சிங்களவர்களாளும் பறிபோன போதும் குறிப்பாக பறிக்கப்பட்ட போதும் அக்கறை கொள்ளாத இவ் அமைப்புக்கள் எழுக தமிழ் மூலமாக எதை சாதிக்க போகின்றார்கள்? வடக்கில் இது போன்று நடாத்தி எதை சாதித்தார்கள்? என்ன  தீர்வை பெற்று தந்து விட்டார்கள்?  எதுவுமே இல்லை. எல்லாமே நாடகம்.

அதுமட்டும் அன்றி இதை கிழக்கில் யார் முன்னெடுக்கின்றார்கள் என்பதையும் நோக்க வேண்டும்.   வடக்கில் சைக்கிள் சின்னத்தில் போட்டியிட்ட கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கட்சியே மக்கள் பேரவை என்ற அமைப்பின் ஊடாக முன்னெடுக்கின்றன. வடக்கில் தன்னால் நிலை கொள்ள முடியாமையினை உணர்ந்து கிழக்கில் இப்படியான நிகழ்வுகளை நடாத்தி தன் அரசியல் தடத்தை பதிக்க நினைக்கின்றது .

இது பாரிய விளைவுகளை கிழக்கில் உண்டுபண்ணும் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில்  வழமையாகவே 3 தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் வரும் இச் சூழலில் தமிழர்களின் வாக்குகள் இன்னும் சிதறும் பட்சத்தில் எப்படி கூட்டமைப்பு கிழக்கு மாகாண சபையினை பறி கொடுத்ததோ அதேபோன்று மட்டக்களப்பு மாவட்டத்தினையும் பறி கொடுக்க நேரிடும் .

எனவே சிந்தியுங்கள்! எழுக தமிழ் என்ற போர்வையில் மீண்டும் உனர்வுகளை தூண்டி மீதம் உள்ளதையும் இழப்பதா?

மீண்டும் தந்தை செல்வா காலம் தொடக்கம் சம்பந்தன் ஐயா காலம் வரை எப்படி அரசியல் அடிமைகளாக இருந்தோமோ அப்படியே இன்னும் இருக்க போகின்றோமா எண்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் .


0 commentaires :

Post a Comment