தமிழ் நாட்டில் மட்டுமன்றி, இந்திய மக்கள் அனைவரின் அன்பையும், கௌரவத்தையும் வென்ற தமிழ்நாட்டின் முதல்வர் ஜெ. ஜெயலலிதாவின் மறைவு மிகவும் கவலையளிப்பதாக இந்த இரங்கல் கடிதத்தில் அவர் தெரிவித்திருக்கிறார்.
ஆறு முறை தமிழ்நாட்டின் முதல்வராக தேர்தெடுக்கப்பட்ட ஜெயலலிதா, பொது மக்களின் நம்பிக்கையை வென்றதால்தான், நோய்வாய் பட்டிருந்த நிலையிலும் கூட நடைபெற்ற தேர்தலில் பெரும் வெற்றி பெற்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசியில் ரீதியாக முரண்பாடுகள் காணப்பட்டாலும், இலங்கை மற்றும் தமிழ்நாட்டு மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தீர்ப்பதில் மனிதாபிமானமாகத் தலையிட வேண்டும் என்பது அவரது நிலைப்பாடாக இருந்தது. ஜெயலலிதாவின் மனிதாபிமானப் பண்புக்கு இது தெளிவான உதாரணமாகும் என்று இந்த செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
தென்னிந்தியா மற்றும் இலங்கை இடையே மனிதாபிமான, சமூக உறவுகளை உறுதிப்படுத்துவதற்காக அவர் பல சந்தர்ப்பங்களில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டார் என்றும் அவர் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டு மக்களால் மிகுந்த கௌரவுத்துடன் "அம்மா" என அழைக்கப்பட்ட தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆற்றிய பொதுப் பணிகள் மக்களின் உள்ளங்களில் எப்போதும் நீங்கா நினைவுகளாக தொடர்ந்து நிலைக்கும் என்றும் இந்த இரங்கல் செய்தியில் ரணில் எழுதியுள்ளார்.
0 commentaires :
Post a Comment