மட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனை போலிஸ் பிரிவில் உள்ள வாகனேரி ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலயம் மீது இந்த தாக்குதல் இடம் பெற்றுள்ளது.
ஆலயத்தின் அர்ச்சகர் வழக்கம் போல் இன்று காலை பூசைக்காக ஆலயம் சென்றிருந்த வேளை அதனை கண்டு போலிஸாரிடம் புகார் செய்துள்ளார்.
சம்பவத்தின் பின்னணியோ அதில் தொடர்புடையவர்களோ இதுவரை அடையாளம் காணப்படவில்லை என ஆரம்ப கட்ட போலிஸ் விசாரனை தகவல்கள் தெரிவிக்கின்றன.
கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி. துரைராஜசிங்கம் இது தொடர்பான தகவல் அறிந்து அங்கு சென்று சேதங்களை பார்வையிட்டார்.
அண்மைக்காலமாக கிழக்கிலுள்ள எல்லைக்கிராமங்களில் வாழும் தமிழ் மக்களை அச்சுறுத்தி வெளியேற்றும் முயற்சியில் பொதுபலசேனாவும் மங்ளராமாய விகாரை தேரரும் பகிரங்கமாகவே ஈடுபட்டு வருகின்றனர். அதேபோன்று எமது மக்களின் வழிபாட்டுத்தலங்களும் சேதமாக்கப்பட்டு வருகின்றன. வாகரையில்,வாகனேரியில் என்று இந்த தாக்குதல்கள் எமது பூர்வீக கிராமங்களில் வாழும் மக்களை குறிவைத்து நடத்தப்பட்டு வருகின்றது.
நேற்றைய தினம் வாகனேரியில் உள்ள ஆலைய சிவலிங்கம் சேதமாக்கப்பட்டுள்ளது. தமிழரசு கட்சியினரே இதற்கு பதில் சொல்ல கடமைப்பட்டுள்ள்ளார்கள். ஏனெனில் அவர்களே கிழக்கு மாகாண சபையின் ஆட்சியை தாரை வார்த்தவர்கள். மத்தியில் ரணில் அரசுடன் கொஞ்சி குலாவி கூட்டாட்சி செய்பவர்கள். எம்பி பதவிகளையும், எதிர்க்கட்சி தலைவர் பதவியையும் ,அதிகாரத்தின் எல்லாவித சுகங்களையும் எமது மக்களின் பெயரால் அனுபவித்து வருபவர்கள். எனவே எமது மக்களின் வாழ்விடங்கள் மீதும் வழிபாட்டு தலங்கள் மீதும் மேற்கொள்ளப்பட்டுவரும் அச்சுறுத்தல்களுக்கு பொறுப்பு சொல்வதிலிருந்து அவர்கள் தப்பமுடியாது.
பிள்ளையான் ஆட்சியில் புனரமைக்கப்பட்ட எல்லைக்கிராமங்களும் வழிபாட்டுத்தலங்களும் தமிழரசுக்கட்சியின் ஆட்சியில் அச்சுறுத்தலுக்குள்ளாகின்றன.
0 commentaires :
Post a Comment