12/26/2016

மாவீரர் துயிலும் இல்லங்கள் புனித பிரதேசங்களாக பிரகடனம்

Résultat d’images pour ltte
கிளிநொச்சி மாவட்டத்தில் அண்மையில் விடுவிக்கப்பட்ட மாவீரர் துயிலும் இல்லங்களை புனிதப் பிரதேசங்களாக பிரகடனப்படுத்த மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
 
இன்று (24) இடம்பெற்ற கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தின்போதே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டது.
 
அபிவிருத்திக் குழுவின்  இணைத் தலைவர்களான முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான அங்கஜன் மற்றும் ஸ்ரீதரன் ஆகியோரின் தலைமையில் குறித்த கூட்டம் இடம்பெற்றது.

இதன்போது நீர்ப்பாசனம், கால்நடை உற்பத்தி, உள்ளூராட்சி நகர திட்டமிடல் ஆகிய விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
 
உள்ளூராட்சி விடயம் குறித்து ஆராயப்பட்ட போது கிளிநொச்சி மாவட்டத்தில் விடுவிக்கப்பட்ட மாவீரர் துயிலும் இல்லங்கள் பராமரிக்கப்பட்டு அதனை புனித பிரதசேமாக பிரகடனப்படுத்த வேண்டும் என பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளால்  முன்மொழியப்பட்டது.
 
அதன்படி முன்மொழிவை ஏற்ற இணைத் தலைமைகள், மாவீரர் துயிலும் இல்லங்களை புனிதப் பிரதேசங்களாக பிரகடனப்படுத்துவதாகவும் அவற்றை பிரதேச சபையினூடாக  பராமரிப்பதற்கான தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.

0 commentaires :

Post a Comment