12/02/2016

அம்மான் எங்கிருந்தாலும் வாழ்க


Afficher l'image d'origineஅன்பான கருணா அம்மானுக்கு! படுவான் கரையில் இருந்து வெலிக்கடைக்கு ஒரு கடிதம்

நான் ஒரு படுவான்கரை சிறுவன். உங்களுக்கு என்னை தெரியாது.ஆனால் உங்களை எனக்கு நன்றாகவே தெரியும்.

நீங்கள் கிழக்கு மாகாணத்திலிருந்து வன்னிக்கு யாழ்ப்பாணத்துக்கும் ஆயிரக்கணக்கில் எமது இளைஞர்களை களமுனைக்கு இட்டு சென்றுகொண்டிருந்த காலமொன்றிருந்தது.

"வீட்டுக்கொரு பிள்ளை" இதுவல்லவோ நமது தமிழ் தேசிய கடமை என்று போராளிகள் முன் மெய்சிலிர்க்க உரையாற்றிக்கொண்டிருந்தீர்கள். .

 அப்போதெல்லாம் யாழ்ப்பாணத்திலிருந்த இளைஞர்களோ  எந்த மண்ணுக்காக போராட என்று தொடங்கினார்களோ அந்த மண்ணை விட்டு விட்டு வெளிநாடுகளை நோக்கி ஓடிக்கொண்டிருந்தார்கள்.

அப்போது யாழ்ப்பாண மண்ணை மட்டுமல்ல வன்னி மண்ணையும் தலைவர் பிரபாகரனையும்  கூட பாதுகாப்பதில் முன்னணி வகித்தவர்கள் எமது இளைஞர்களே ஆகும். அதன்காரணமாக உங்களை தலைவர் பிரபாகரன் தனது வலதுகரமாக சித்தரித்தார். அதுமட்டுமல்ல மட்டக்களப்பை வீரம் விளை நிலம் என்று புலிகள் பிரகடனமும் செய்தனர்


ஆனால் 2002ல் உருவான சமாதான ஒப்பந்த காலத்தில் புலிகள் உருவாக்கிய நிழல் அமைச்சரைவை என்று சொல்லக்கூடிய நிர்வாக கட்மைப்பில்  இருந்த 32  துறைசார் பொறுப்பாளர்களில் ஒரே ஒருவரை மட்டுமே கிழக்கிலிருந்து புலிகள் நியமித்தனர்.அதுதான் மாவீரர் பணிமனை பொறுப்பு ஆகும்.

ஏனைய  அரசியல்,சமூக,கலாசார,பண்பாட்டு,கல்வி ,பொருளாதார,நிதி,நீதி,--போன்ற அனைத்து துறைகளும் வடக்கு மாகாணத்தவர்களுக்கே வழங்கப்பட்டது.


அதன்பின்னர்தான் தேசியம் என்பதற்குள் ஒழிந்திருந்த  யாழ்ப்பாண தலைமைகளின் மேலாதிக்க தன்மை தங்களுக்கு புரியத்தொடங்கியது. அதுவரை 9000 மாவீரர்கள் உங்கள் பாதையில் கிழக்கு மாகாணத்திலிருந்து வந்து இணைந்து கொண்டு மாவீரானமை வீண் என்று அன்றுதான் வரலாறு உங்களுக்கு பாடம் கற்று தந்தது.

இது பற்றி நீங்கள் கேள்வியெழுப்ப தொடங்கவே உங்களை துரோக பட்டம் கட்டி மரணதண்டனை கொடுக்கும் திட்டம் வன்னியில் தயாரானது. மட்டக்களப்பில் இருந்து வன்னிக்கு வரும்படி தலைவரது உடனடி அழைப்பை மறுதலித்தீர்கள். மாத்தையாவுக்கு என்ன நடந்தது என்பதை அறியாதவரா நீங்கள்? பாம்பின் கால் பாம்புதான் அறியும்.

"தமிழ் தேசியம் என்னும் பெயரில் எமது மக்களின் உரிமைகளை யாழ்ப்பாண எஜமானர்களிடம் அடகு வைக்க நான் தயாரில்லை" என்று  மார்ச் -4, 2004ல் கிழக்கு போராளிகளிடையே உரையாற்றிவிட்டு சுமார் 6000 போராளிகளை வீடுகளுக்கு அனுப்பினீர்கள். அதில் ஒருவனே நான்.

அதன் பிறகு நடந்த வன்னி புலிகளின் படையெடுப்பு வெருகலாற்றிலே நிறைவேற்றிய கிழக்கு படுகொலைகள் பிரசித்தமானவை. இயக்கத்தில் இருந்தபோது நீங்கள் செய்திருக்க கூடிய அனைத்து பாவங்களையும்  எங்கள் ஆறாயிரம் பேரையும் வீட்டுக்கு அனுப்பியதன் ஊடாக மட்டுமல்ல தொடந்து கிழக்கு மாகாண படுவான்கரை மண்ணிலிருந்து  இளம் பரம்பரை எதிர்கொண்டிருந்த அழிவுகளை தடுத்து நிறுத்தியதன் ஊடாகவும் கழுவி கொண்டீர்கள்.

  1983ஆம் ஆண்டு கிரான் என்னும் ஊரிலிருந்து வந்து  மட்டக்களப்பு நகரின் முன்னணி கல்லூரியான மெதடிஸ்த மத்திய கல்லூரியில் உயர்தரம் கற்றுக்கொண்டிருந்த நீங்கள் அதனை உதறி தள்ளிவிட்டு தமிழ் மக்களின் விடுதலைக்காக புறப்பட்டீர்கள்.   அன்றிலிருந்து சுமார் இருபது வருடகாலம் ஒரு கெரில்லாவாக வடக்கு கிழக்கு காடுகளெங்கும் அலைந்து திரிந்த உங்களுக்கு பசியோ பட்டினியோ சொகுசோ நித்திரையோ ஒரு பொருட்டல்ல என்பது எனக்கு தெரியும்.   சிறை என்பது உங்களுக்கு இன்னுமொரு அனுபவமாக இருந்து விட்டு போகட்டும். ஆனால் எங்களை வாழவைத்த அம்மான் எங்கிருந்தாலும் வாழ்க.

மீன்பாடும் தேனாடான்



1 commentaires :

தமிழரின் தாய்மதம் said...

1983 ஆம் ஆண்டில் இருந்து 1987 ஆம் ஆண்டு வரையில் தனது தென்மானிலத்தில் புலிகளுக்கு பயிற்சி கொடுத்து, பணம் கொடுத்து ஆயுதங்களை வழங்கி ஆதரித்து வந்த அயல் நாடு, பின்னர் ஏன் இவர்கள் குறித்து கண்டு கொள்ளாது போனது.வடமராட்சியை மீற்பதற்காக படையினர் தாக்குதலை மேற்கொண்ட போது இரண்டு இராட்சத யுத்த வீமானங்களின் துனையுடன் உணவு போதிகளை வீசி இலங்கையை மிரட்டிய இந்தியா ஏன் புதுமத்தாளனுக்குள் மக்கள் சிக்கிக் கொண்ட போது மெளனியாக இருந்தது. அன்று பிரபாகரனுக்கு தஞ்சம் கொடுத்த இந்தியா ஏன் பின்னர் தனது கரையோர பிரதேசங்களின் பாதுகாப்பை பலப்படுத்தி இந்தியாவிற்கு எவரும் புகுந்து கொள்ளாத வரையில் பார்த்துக் கொண்டது. இவைகள் எல்லாம் புலிகளின் தீவிர விசுவாசிகளுக்கு புரிந்து கொண்டாலும், தவறுகளை ஏற்றுக் கொள்ளும் மனோபாவம் அவர்களுக்கு இன்னமும் வரவில்லை. ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் வீதி மறிப்பு போராட்டங்களையும், உண்ணாவிரத போராட்டங்களையும் புலிகளின் ஆதரவாளர்கள் நிகழ்த்தியும் அருகில் இருந்த இந்தியா நினைத்ததே நடந்தேறியது.
மே மாதம் 18 ஆம் திகதி பிரபாகரனும் மேலும் புலிகளின் பிராதான தலைவர்கள் பலரும் கொல்லப்பட்டதின் பின்பாக இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் புலிகள் குறித்து கருத்து தெரிவிக்கையில் “ புலிகள் செய்த தவறுகளில் மாபெரும் தவறு இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியினை கொலை செய்ததே ஆகும் “என்று கூறியிருந்தார். இந்த செய்த்¢யானது ஜனாதிபதினால் புலிகளுக்கு சொல்லப்பட்டது என்றே பலரும் எண்ணியிருந்தார்கள். ஆனால் ஜனாதியினால் இந்தியாவிற்கு மறைமுகமாக கூறப்பட்ட செய்தியாகவே இது இருந்தது. அது என்னவெனில் இலங்கையில் பயங்கரவாதத்தினை ஒழிப்பதற்காக மட்டும் நீங்கள் எங்களுக்கு உதவவில்லை, இலங்கை ஒரு அயல் நாடு என்பதற்காக நீங்கள் எங்களுக்கு உதவவில்லை, உங்கள் நாட்டு தலைவரை கொன்றவருக்கு தண்டணை வழங்குவதற்காகவே நீங்கள் எங்களுக்கு உதவியிருந்தீர்கள்இ புலிகள் மட்டும் ராஜீவ் காந்தியினை கொலை செய்யாது இருந்தால், நீங்கள் எப்படியும் இந்த யுத்தத்தினை நிறுத்தி பிரபாகரனை காப்பாற்றி இருப்பீர்கள். ஜனாதிபதி கூறிய செய்தி இவ்வாறான உள் அர்த்தத்தினை உள்டக்கியதாகவே இருந்தது.
புலிகளின் தலைவர் இந்திய எதிர்ப்பு சக்திகளின் தரப்பில் தன்னை இணைந்து கொண்டிருந்தமையினால், யுத்த நிறுத்தத்தினை ஏற்படுத்தி இறுதி நேரத்தில் அவரை பிழைக்க வைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் தென் கிழக்காவியாவிற்குள் குறிப்பாக இலங்கைக்குள் இந்தியாவிற்கு எதிராக குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் அதில் இருந்து தப்பிக்க முடியாது என்பதினை இந்தியா காண்பித்து விட்டது. பிரபாகரன் உயிருடன் கைது செய்யப்பட்டு அவரை இலங்கை தம்மிடம் ஒப்படைத்தால்! தமிழகத்தில் பெரிய அளவில் குழப்பங்கள் ஏற்ப்படும், ஆகையினால் அவரு உயிருடன் பிடிபடக் கூடாது என்ற எண்ணங்கள் டெல்லி தரப்பில் இருந்தாக பேசப்பட்டது.
18 வருடங்கள் காத்திருந்து தமது ஒருமைப்பாட்டிற்கு இடைஞ்சல் ஏற்படுத்தியவரும், தமிழகத்தில் குழப்பத்தை உண்டு பண்ணுவதற்கு முயற்சிகளை மேற்கொண்டவரும், தமது முன்னாள் பிரதமரை திட்டமிட்டு கொன்றவருமான புலிகளின் தலைவருக்கு தன் கை படாது இந்தியா சாதூர்யமாக தண்டணை வழங்கியது. இந்திய எதிர்தரப்பில் பிரபா தன்னை இணைந்துக் கொண்டமையினால், அவரின் எதிர்காலம் இறுதிக் காலமாகி போனது.

Post a Comment