12/20/2016

எதிர்வரும் ஜனவரி 20 ஆம் திகதி முதல் அமெரிக்காவின் உத்தியோகபூர்வ ஜனாதிபதியாக டொணால்ட் டிரம்ப்

ஐக்கிய அமெரிக்காவின் 45ஆவது ஜனாதிபதியை தீர்மானிக்கும் தேர்தல் கல்லூரி வாக்களிப்பில் ஹிலாரியை தோல்வியடையச் செய்து டொனால்ட் டிரம்ப் ஜனாதிபதியாக தெரிவு செய்யபட்டுள்ளார்.

தேர்தல் கல்லூரியின் தேர்வாளர்கள் தமது வாக்குகளை ஹிலாரிக்கு மாற்றியளிக்கும் பட்சத்தில் டிரம்ப் ஜனாதிபதியாவதில் சிக்கல்கள் இருப்பதாக தகவல்கள் வந்த நிலையிலேயே ஹிலாரியை (224) விட அதிக வாக்குகளை பெற்று (304) அமெரிக்காவின் 45 ஆவது ஜனாதிபதியாக டிரம்ப் உறுதி செய்யப்பட்டுள்ளார்.


முதல்கட்ட ஜனாதிபதி தேர்தலில் எதிர்பாராதவிதமாக டிரம்ப் வெற்றி பெற்றிருந்தார். அதே நேரம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த ஹிலாரி கிளிண்டன் அதிர்ச்சியான தோல்வியை தழுவியிருந்தார்.
ஹிலாரிக்கு டிரம்பை விட மக்கள் ஆதரவு அதிகமாக இருந்தாலும், அமெரிக்க அரசியலமைப்பு சட்டத்தின் பிரகாரம் ஜனாதிபதியை முடிவு செய்யும் அதிகாரமானது தேரல்தல் கல்லூரியின் தேர்வாளர்கள் அளிக்கப்படும் வாக்குகளின் அடிப்படையிலேயே முடிவுசெய்யப்படும். அதனடிப்படையில் முதல் கட்ட வாக்களிப்பில் டிரம்பிற்கு 306, ஹிலாரிக்கு 232
வாக்குகள் என வாக்களித்து தேர்வாளர்கள் டிரம்ப் ஜனாதிபதியாவதை உறுதி செய்திருந்தனர்.

இந்நிலையிலேயே அடுத்தக்கட்ட தேர்வாளர் வாக்கு பதிவுகள் இன்று (20) இடம்பெற்ற நிலையிலேயே டிரம்பிற்கு அதிகளவான வாக்குள் அளிக்கப்பட்டிருந்தன. வெற்றிக்குறித்து கருத்து தெரிவித்துள்ள டிரம்ப் தனது முழு அர்ப்பணிப்பு
மிகு சேவையை நாட்டுக்கு வழங்கி நாட்டின் ஒற்றுமைக்கும் வளர்ச்சிக்கும் பாடுபடவுள்ளதாகவும், தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றியை தெரிவிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜனவரி 20 ஆம் திகதி அமெரிக்காவின் உத்தியோகபூர்வ ஜனாதிபதியாக டொணால்ட் டிரம்ப் பதவியேற்கவுள்ளமை குறிப்பிடத்தகு விடயமாகும்.

0 commentaires :

Post a Comment