12/26/2016

மாவீரர் துயிலும் இல்லங்கள் புனித பிரதேசங்களாக பிரகடனம்

Résultat d’images pour ltte
கிளிநொச்சி மாவட்டத்தில் அண்மையில் விடுவிக்கப்பட்ட மாவீரர் துயிலும் இல்லங்களை புனிதப் பிரதேசங்களாக பிரகடனப்படுத்த மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
 
இன்று (24) இடம்பெற்ற கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தின்போதே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டது.
 
அபிவிருத்திக் குழுவின்  இணைத் தலைவர்களான முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான அங்கஜன் மற்றும் ஸ்ரீதரன் ஆகியோரின் தலைமையில் குறித்த கூட்டம் இடம்பெற்றது.

இதன்போது நீர்ப்பாசனம், கால்நடை உற்பத்தி, உள்ளூராட்சி நகர திட்டமிடல் ஆகிய விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
 
உள்ளூராட்சி விடயம் குறித்து ஆராயப்பட்ட போது கிளிநொச்சி மாவட்டத்தில் விடுவிக்கப்பட்ட மாவீரர் துயிலும் இல்லங்கள் பராமரிக்கப்பட்டு அதனை புனித பிரதசேமாக பிரகடனப்படுத்த வேண்டும் என பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளால்  முன்மொழியப்பட்டது.
 
அதன்படி முன்மொழிவை ஏற்ற இணைத் தலைமைகள், மாவீரர் துயிலும் இல்லங்களை புனிதப் பிரதேசங்களாக பிரகடனப்படுத்துவதாகவும் அவற்றை பிரதேச சபையினூடாக  பராமரிப்பதற்கான தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.

»»  (மேலும்)

12/24/2016

இலங்கை முன்னாள் எம் பி நடராஜா ரவிராஜ் கொலை வழக்கில் ஐந்து பேர் விடுதலை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த ஐந்து பேரையும் கொழும்பு மேல் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. கொழும்பு மேல் நீதிமன்றம்

சிங்கள ஜுரர் சபையின் முன் கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் ஜுரர்களின் ஏகமனதான முடிவின்படி, குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் மேல் நீதிமன்ற நீதிபதி மணிலால் வைத்தியதிலக்க குற்றமற்றவர்கள் என விடுதலை செய்துள்ளார்.
வெள்ளியன்று நள்ளிரவு வரையிலும் இந்த வழக்கின் ஜுரர் சபை நடத்திய நீண்ட ஆலோசனைகளின் பேரில் எதிரிகளை விடுதலை செய்யும் முடிவு அறிவிக்கப்பட்டது.
இந்தத் தீர்ப்பு வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12.25 மணிக்கு வழங்கப்பட்டது. இலங்கையின் வரலாற்றில் இவ்வாறு நள்ளிரவு வேளையில் தீர்ப்பு ஒன்று வழங்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கில் ஆறு பேருக்கு எதிராகக் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. அவர்களில் ஒருவர் வழக்கு விசாரணைகள் நடைபெற்ற போது இறந்துவிட்டார். இதனையடுத்து. எஞ்சிய ஐந்து பேருக்கு எதிராக வழக்கு நடத்தப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்டவர்களில் மூவர் முன்னாள் கடற்படைப் புலனாய்வு பிரிவைச் சேர்ந்தவர்களாவர், ஏனைய மூவரும் கிழக்கில் விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்த கருணா குழுவினர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு மாதமாக நீடித்த ரவிராஜ் கொலை வழக்கில் அளிக்கப்பட்ட சாட்சியங்களில் வெளியிடப்பட்ட பல தகவல்கள் பெரும் பரபரப்பையும் பெரும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியிருந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் நிரபராதிகள் என்று விடுதலை செய்யப்பட்டு தீர்ப்பு வெளியாகியிருக்கிறது.

கடந்த 2006 ஆம் ஆண்டு நவம்பர் 9 ஆம் திகதி கொழும்பு நாரஹேன்பிட்டி, மணிங் டவுண் பகுதியில் அவருடைய இல்லத்திற்கு அருகில் வாகனத்தில் பயணம் செய்து கொண்டிருந்த போது ஆயுததாரிகளினால் ரவிராஜ் சுட்டுக் கொல்லப்பட்டார்.
»»  (மேலும்)

12/23/2016

சிரியாவின் அலெப்போ நகருக்கான போர் முடிவடைந்தது

அலெப்போவில் கடைசி போராளி குழுக்கள் வெளியேற்றப்பட்டதை தொடர்ந்து, அந்நகரை முழுமையாக மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளதாக சிரியா ராணுவம் தெரிவித்துள்ளது.சிரியாவின் அலெப்போ நகருக்கான போர் முடிவடைந்தது

அலெப்போவில் பாதுகாப்பு மீண்டும் ஏற்படுத்தப்பட்டிருப்பதாகவும், போராளிகளுக்கு இது மாபெரும் அடி என்றும் செய்திக்குறிப்பு ஒன்றில் ராணுவம் தெரிவித்துள்ளது.
அலெப்போவை விட்டு வெளியேற விரும்பிய அனைத்து பொதுமக்கள், காயமடைந்தவர்கள் மற்றும் போராளிகளும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுவிட்டதாக சர்வதேச செஞ்சிலுவை சங்கம் உறுதி செய்துள்ளது.
சிரியா அதிபர் பஷார் அல்-அசாத்துக்கு எதிராக 2011 ஆம் ஆண்டிலிருந்து தொடங்கிய எழுச்சியை தொடர்ந்து அவருக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய வெற்றி இதுவாககும்.
கடந்த வாரத்தில் மட்டும் குறைந்தது 34 ஆயிரம் பொதுமக்கள் மற்றும் போராளிகள் கிழக்கு அலெப்போவிலிருந்து வெளியேற்றப்பட்டிருப்பதாக ஐ.நா அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
»»  (மேலும்)

12/20/2016

எதிர்வரும் ஜனவரி 20 ஆம் திகதி முதல் அமெரிக்காவின் உத்தியோகபூர்வ ஜனாதிபதியாக டொணால்ட் டிரம்ப்

ஐக்கிய அமெரிக்காவின் 45ஆவது ஜனாதிபதியை தீர்மானிக்கும் தேர்தல் கல்லூரி வாக்களிப்பில் ஹிலாரியை தோல்வியடையச் செய்து டொனால்ட் டிரம்ப் ஜனாதிபதியாக தெரிவு செய்யபட்டுள்ளார்.

தேர்தல் கல்லூரியின் தேர்வாளர்கள் தமது வாக்குகளை ஹிலாரிக்கு மாற்றியளிக்கும் பட்சத்தில் டிரம்ப் ஜனாதிபதியாவதில் சிக்கல்கள் இருப்பதாக தகவல்கள் வந்த நிலையிலேயே ஹிலாரியை (224) விட அதிக வாக்குகளை பெற்று (304) அமெரிக்காவின் 45 ஆவது ஜனாதிபதியாக டிரம்ப் உறுதி செய்யப்பட்டுள்ளார்.


முதல்கட்ட ஜனாதிபதி தேர்தலில் எதிர்பாராதவிதமாக டிரம்ப் வெற்றி பெற்றிருந்தார். அதே நேரம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த ஹிலாரி கிளிண்டன் அதிர்ச்சியான தோல்வியை தழுவியிருந்தார்.
ஹிலாரிக்கு டிரம்பை விட மக்கள் ஆதரவு அதிகமாக இருந்தாலும், அமெரிக்க அரசியலமைப்பு சட்டத்தின் பிரகாரம் ஜனாதிபதியை முடிவு செய்யும் அதிகாரமானது தேரல்தல் கல்லூரியின் தேர்வாளர்கள் அளிக்கப்படும் வாக்குகளின் அடிப்படையிலேயே முடிவுசெய்யப்படும். அதனடிப்படையில் முதல் கட்ட வாக்களிப்பில் டிரம்பிற்கு 306, ஹிலாரிக்கு 232
வாக்குகள் என வாக்களித்து தேர்வாளர்கள் டிரம்ப் ஜனாதிபதியாவதை உறுதி செய்திருந்தனர்.

இந்நிலையிலேயே அடுத்தக்கட்ட தேர்வாளர் வாக்கு பதிவுகள் இன்று (20) இடம்பெற்ற நிலையிலேயே டிரம்பிற்கு அதிகளவான வாக்குள் அளிக்கப்பட்டிருந்தன. வெற்றிக்குறித்து கருத்து தெரிவித்துள்ள டிரம்ப் தனது முழு அர்ப்பணிப்பு
மிகு சேவையை நாட்டுக்கு வழங்கி நாட்டின் ஒற்றுமைக்கும் வளர்ச்சிக்கும் பாடுபடவுள்ளதாகவும், தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றியை தெரிவிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜனவரி 20 ஆம் திகதி அமெரிக்காவின் உத்தியோகபூர்வ ஜனாதிபதியாக டொணால்ட் டிரம்ப் பதவியேற்கவுள்ளமை குறிப்பிடத்தகு விடயமாகும்.
»»  (மேலும்)

ஜெர்மன் கிறிஸ்துமஸ் மார்க்கெட்டில் லாரி ஏற்றித் தாக்குதல்: 9 பேர் பலி

ஜெர்மன் தலைநகர் பெர்லினில் கிறிஸ்துமஸ் மார்க்கெட்டுக்குள் லாரியை ஓட்டிச் சென்று நடத்தப்பட்ட தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.சம்பவ இடத்தில் போலீசார்

»»  (மேலும்)

துருக்கியில் ரஷ்ய தூதர் சுட்டுக் கொலை

துருக்கி தலைநகர் அங்காராவில் உள்ள கலைக்கூடத்தில், துருக்கிக்கான ரஷ்ய தூதரான ஆண்ட்ரே கார்லோஃப் மீது நிகழ்ந்த துப்பாக்கி சூட்டில் அவர் உயிரிழந்தார். துப்பாக்கி சூட்டில் ரஷ்ய தூதர் ஆண்ட்ரே கார்லோஃப் மரணம்

துருக்கிக்கான ரஷ்ய தூதரான ஆண்ட்ரே கார்லோஃப் உயிரிழந்துள்ளதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கலைக்கூடத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்தில், துருக்கிக்கான ரஷ்ய தூதரான ஆண்ட்ரே கார்லோஃப் உரையாற்றிய தொடங்கிய போது, சிரியாவின் அலெப்போ நகர் குறித்த தகவலுடன் கோஷமிட்டவாறு துப்பாக்கி ஏந்திய ஒருவர் கார்லோஃபை நோக்கி சுட்டதாக தகவல்கள் தெரிக்கின்றன.
இந்த தாக்குதலில், மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.
தாக்குதல் நடைபெற்ற கலைக்கூடத்தில் இருந்த ஒலிவாங்கியின் அருகே சூட் ஆடை அணிந்த இருவர் தாக்குதலில் காயமடைந்து தரையில் கிடப்பதை, இந்த தாக்குதல் சம்பவம் குறித்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் காண்பித்துள்ளன.
தாக்குதல் நடத்திய நபர், பணியில் இல்லாத துருக்கி போலீஸ்காரர் என்று கூறப்படுகிறது. மிக நெருக்கமான தூரத்தில் இருந்து ரஷ்ய தூதர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார். போலீசார் அவரை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக துருக்கி ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டாலும் ரஷ்ய தூதர் உயிரிழந்துவிட்டதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் உறுதி செய்துள்ளது.
"தீவிரவாதம் ஒருபோதும் வெற்றி பெற முடியாது. இன்னும் உறுதியுடன் எதிர்ப்போம்" என்று வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஜகரோவா தெரிவித்தார். தீவிரவாதத்தை ஒடுக்க அவர் ஆற்றிய பணிகள் ஏராளம் என்றும், அவர் எப்போதும் மனதில் நிலைத்திருப்பார் என்றும் தெரிவித்தார்.
»»  (மேலும்)

12/18/2016

கிழக்கில் எழுக தமிழ் பேரணி எதை சாதிக்க போகின்றது நீங்களே சிந்தியுங்கள் ..நிர்மல் தனபால்

கிழக்கில் எழுக தமிழ் பேரணி எதை சாதிக்க போகின்றது நீங்களே சிந்தியுங்கள் ..நிர்மல் தனபால் 
Image may contain: one or more people and outdoor
------------------------------------------------------------------
30 வருட அகிம்சைவழி ... அரசியல் போராட்டம் 30 வருடத்துக்கு மேலான ஆயுத போராட்டம் இறுதியில் தமிழ் சமுகம் அடைந்த பலன்தான் என்ன ?

அன்று தமிழ் இளைஞர்களை உணர்வுகளை தூண்டியது போன்று இன்று எழுக தமிழ் என கிழக்கில் இளைஞர்களை பலிக்கிடாக்களாக்கவே ஆயத்தங்கள் நடக்கின்றன. நம்மை காலம் காலமாக உசுப்பேற்றி அரசியல் அடிமைகளாக நடாத்திய வர்க்கத்தினர்  யார் என உங்களுக்கு புரியும்.
இதனை கிழக்கில் உள்ள அனைத்து தமிழ் மக்களும் நன்றாக சிந்திக்க வேண்டும். சம காலத்தில் கிழக்கில் விடுதலை புலிகள் உள்ளனர் என்று முன்னாள் போராளிகளின் நடவடிக்கைகளை புலனாய்வு செய்கின்ற  சூழலில் இவ்வாறான பலனற்ற போராட்டங்கள் நம்மீது
திணிக்கப்படுவதை  சாதாரணமாக எடுத்துவிட முடியாது .

கிழக்கு மாகாணம் பறிபோன போதும் தமிழர் பூர்வீக நிலங்கள் முஸ்ஸீம்களாளும் சிங்களவர்களாளும் பறிபோன போதும் குறிப்பாக பறிக்கப்பட்ட போதும் அக்கறை கொள்ளாத இவ் அமைப்புக்கள் எழுக தமிழ் மூலமாக எதை சாதிக்க போகின்றார்கள்? வடக்கில் இது போன்று நடாத்தி எதை சாதித்தார்கள்? என்ன  தீர்வை பெற்று தந்து விட்டார்கள்?  எதுவுமே இல்லை. எல்லாமே நாடகம்.

அதுமட்டும் அன்றி இதை கிழக்கில் யார் முன்னெடுக்கின்றார்கள் என்பதையும் நோக்க வேண்டும்.   வடக்கில் சைக்கிள் சின்னத்தில் போட்டியிட்ட கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கட்சியே மக்கள் பேரவை என்ற அமைப்பின் ஊடாக முன்னெடுக்கின்றன. வடக்கில் தன்னால் நிலை கொள்ள முடியாமையினை உணர்ந்து கிழக்கில் இப்படியான நிகழ்வுகளை நடாத்தி தன் அரசியல் தடத்தை பதிக்க நினைக்கின்றது .

இது பாரிய விளைவுகளை கிழக்கில் உண்டுபண்ணும் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில்  வழமையாகவே 3 தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் வரும் இச் சூழலில் தமிழர்களின் வாக்குகள் இன்னும் சிதறும் பட்சத்தில் எப்படி கூட்டமைப்பு கிழக்கு மாகாண சபையினை பறி கொடுத்ததோ அதேபோன்று மட்டக்களப்பு மாவட்டத்தினையும் பறி கொடுக்க நேரிடும் .

எனவே சிந்தியுங்கள்! எழுக தமிழ் என்ற போர்வையில் மீண்டும் உனர்வுகளை தூண்டி மீதம் உள்ளதையும் இழப்பதா?

மீண்டும் தந்தை செல்வா காலம் தொடக்கம் சம்பந்தன் ஐயா காலம் வரை எப்படி அரசியல் அடிமைகளாக இருந்தோமோ அப்படியே இன்னும் இருக்க போகின்றோமா எண்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் .


»»  (மேலும்)

இலங்கையில் இந்து ஆலயத்தின் மீது தாக்குதல்


மட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனை போலிஸ் பிரிவில் உள்ள வாகனேரி ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலயம் மீது இந்த தாக்குதல் இடம் பெற்றுள்ளது.

ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலயம்


ஆலயத்தின் அர்ச்சகர் வழக்கம் போல் இன்று காலை பூசைக்காக ஆலயம் சென்றிருந்த வேளை அதனை கண்டு போலிஸாரிடம் புகார் செய்துள்ளார்.
சம்பவத்தின் பின்னணியோ அதில் தொடர்புடையவர்களோ இதுவரை அடையாளம் காணப்படவில்லை என ஆரம்ப கட்ட போலிஸ் விசாரனை தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி. துரைராஜசிங்கம் இது தொடர்பான தகவல் அறிந்து அங்கு சென்று சேதங்களை பார்வையிட்டார்.

அண்மைக்காலமாக கிழக்கிலுள்ள எல்லைக்கிராமங்களில் வாழும் தமிழ் மக்களை அச்சுறுத்தி வெளியேற்றும் முயற்சியில் பொதுபலசேனாவும் மங்ளராமாய விகாரை தேரரும் பகிரங்கமாகவே ஈடுபட்டு வருகின்றனர். அதேபோன்று எமது மக்களின் வழிபாட்டுத்தலங்களும் சேதமாக்கப்பட்டு வருகின்றன. வாகரையில்,வாகனேரியில் என்று இந்த தாக்குதல்கள் எமது பூர்வீக கிராமங்களில் வாழும் மக்களை குறிவைத்து நடத்தப்பட்டு வருகின்றது.

நேற்றைய தினம் வாகனேரியில் உள்ள ஆலைய சிவலிங்கம் சேதமாக்கப்பட்டுள்ளது. தமிழரசு கட்சியினரே இதற்கு  பதில் சொல்ல கடமைப்பட்டுள்ள்ளார்கள். ஏனெனில் அவர்களே கிழக்கு மாகாண சபையின் ஆட்சியை தாரை வார்த்தவர்கள். மத்தியில் ரணில் அரசுடன் கொஞ்சி குலாவி  கூட்டாட்சி செய்பவர்கள். எம்பி பதவிகளையும், எதிர்க்கட்சி தலைவர் பதவியையும் ,அதிகாரத்தின் எல்லாவித சுகங்களையும் எமது மக்களின் பெயரால் அனுபவித்து வருபவர்கள். எனவே எமது மக்களின் வாழ்விடங்கள் மீதும் வழிபாட்டு தலங்கள் மீதும் மேற்கொள்ளப்பட்டுவரும் அச்சுறுத்தல்களுக்கு  பொறுப்பு சொல்வதிலிருந்து அவர்கள் தப்பமுடியாது.

பிள்ளையான் ஆட்சியில் புனரமைக்கப்பட்ட எல்லைக்கிராமங்களும் வழிபாட்டுத்தலங்களும் தமிழரசுக்கட்சியின் ஆட்சியில் அச்சுறுத்தலுக்குள்ளாகின்றன.
»»  (மேலும்)

12/16/2016

வட கிழக்கு இணைப்புக்காக, சிங்களத் தலைவர்களின் விருப்பங்களை நிறைவேற்ற, த.தே.கூட்டமைப்பு தயாராகி விட்டது: அதாஉல்லாஹ்

Résultat de recherche d'images pour "அதாஉல்லாஹ்"நாட்டில் பாரியதொரு சிங்கள – முஸ்லிம் இனக் கலவரத்தினை தோற்றுவித்துவிட்டு; ‘சிங்கள மக்களுடன் முஸ்லிம்கள் வாழ முடியாது. வாருங்கள் கிழக்கை வடக்குடன் இணைத்து, தமிழ் மக்களுடன் சேர்ந்து வாழ்வோம்’ என்கின்ற ஒரு நிலையை தோற்றுவிப்பதற்காகத்தான், பொதுபலசேனாவை வெளிச்சக்திகள் இயக்குகின்றன என்று, முன்னாள் அமைச்சரும், தேசிய காங்கிரசின் தலைவருமான அதாஉல்லாஹ் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் புத்தருடைய சிலை உடைக்கப்பட்டமைக்கு எதிராக வாயைத் திறக்காத பொதுபலசேனாவினர், முஸ்லிம்களை மட்டும் ஏன் திட்டிக் கொண்டு திரிகின்றனர் என்பதை சிந்தித்துப் பார்க்குமாறும், அவர் கோரிக்கை விடுத்தார்.

‘சுதந்திர கிழக்கு’ எனும் தலைப்பில் கிழக்கின் தனித்துவத்துக்காக நடத்தப்பட்டு வரும், விழிப்புணர்வுக் கூட்டம், கடந்த வெள்ளிக்கிழமை மூதூரில் நடைபெற்றது.

அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, முன்னாள் அமைச்சர் அதாஉல்லாஹ் மேற்கண்ட விடயங்களைக் கூறினார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்;
“இலங்கை இந்திய ஒப்பந்தம் நடைபெற்றபொழுது நமக்கென்று பலமான ஒரு கட்சி இருக்கவில்லை. நமக்கென்று ஒரு குரல் இருக்கவில்லை. மிக இலகுவாக கிழக்கு முஸ்லிம்களை அவர்கள் வடக்குடன் இணைத்து எமது பலத்தைக் குறைத்தார்கள். அடிமைச் சாசனம் எழுதினார்கள். இதிலிருந்து விடுதலை பெறுவதற்காகவே நாங்கள் முஸ்லிம் காங்கிரஸின் தலைவரைப் பலப்படுத்தனோம்.
விடுதலைப் புலிகளோடு நோர்வேயும், ரணில் விக்ரமசிங்க வன்னியில் ஒப்பந்தம் செய்து எங்களை அடிமையாக்கினார்கள். அது மிகவும் பாரதூரமான அடிமை சாசனம் என்று எல்லோரும் சொன்னார்கள். அந்த ஒப்பந்தம் முஸ்லிம்களை சிறு குழு என்று குறிப்பிட்டது.
வடக்கிலிருந்து கிழக்கு மாகாணத்தை பிரிக்க வைத்தோம். இப்போதுதான் தமிழர்களும், முஸ்லிம்களும் ஒற்றுமையாக வாழ்கின்றோம். பழைய காலங்களைப்போல் தமிழர்கள் எங்களை பார்க்கின்றார்கள் சந்தேகம் இல்லாமல் வாழ்கின்றோம்.

கிழக்குத் தமிழர்களும் முஸ்லிம்களும் உறவினர்களைப் போல், இரண்டறக் கலந்து உறவோடு வாழ்ந்தோம். இங்குள்ள தமிழ் மக்களிடம் வட மாகாணத்தவர்கள்தான் சந்தேகத்தை ஏற்படுத்தினார்.
வடக்கையும் – கிழக்கையும் இணைத்து முஸ்லிம்களை அடிமைகளாக மாற்றியமையினால், கிழக்கிலுள்ள தமிழ் மக்களுக்குள்ளும் தமிழ் பேரினவாதம் உருவானது. மூதூரில் இருந்த தமிழ் மக்களிடையே இருந்து தமிழ் பேரினவாதம் உருவானது. ஆலையடிவேம்பில் இருந்து உருவானது. பாண்டிருப்பில் இருந்து உருவானது. இவை முதலில் இருக்கவில்லை.
வடக்கிலிருந்து கிழக்கு மாகாணம் வேறாகப் பிரிக்கப்பட்டால்தான், தமிழர்களும் முஸ்லிம்களும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கு  ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும் என்று கூறினோம்.

கிழக்குக்கு  ஒரு மாகாண சபை உருவானது. அந்த சபையில்  முதல் முறையாக, தமிழர் ஒருவரை முதலமைச்சராக்குவதற்கு நாங்கள் உடன்பட்டோம். பிள்ளையானை முதலமைச்சராக்கினோம். உரிமை வேண்டும் என்று களத்திலே இருந்து அவர்கள் ஆயுதமேந்திப் போராடியவர்கள். பின்னர், அதிலிருந்து வெளியேறிவந்து அரசியல் நீரோட்டத்திலே கலந்தார்கள். அப்போது, அவர்களுக்கு முன்னுரிமை அவர்களுக்கு கொடுக்க வேண்டுமென்ற நாங்கள் எண்ணினோம். அவர்களை கௌரவித்தோம்.

இரண்டாம் முறை திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த நஜீப் ஏ மஜீத் முதலமைச்சரானார். மூன்றாவது முறை முஸ்லிம் காங்கிரசுக்குள் இருக்கின்ற ஒரு சகோதரன் முதலமைச்சராகியுள்ளார். அதைப்பற்றி எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. முஸ்லிம் சமூகம் விரும்பாத ஒரு விடயத்தை தமிழர் சமூகம் செய்யவோ, தமிழர் சமூகம் விரும்பாத ஒன்றை முஸ்லிம் சமூகம் செய்வதற்கோ முடியாதவாறு ஒரு கூட்டு நிலை – கிழக்கில் உருவாகியுள்ளது.

ஆகவே, ஒருவர் இல்லாமல் ஒருவர் இல்லை. உலகம் அழிகின்ற வரைக்கும் இந்த நிலை இருந்தால் மாத்திரம்தான் இங்குவாழ முடியும். வடக்கிலே இருந்து எங்களை அனுப்பிவிட்டார்கள். அந்த மக்களுக்க மீள் குடியேற இப்போது விருப்பமில்லை. அவர்களின் வாழ்விடங்கள் அனைத்தும் காடாகிக் கிடக்கின்றன.

அரசியல் அமைப்பை மாற்றுகின்ற ஒரு சபையாகவும், தேர்தல் முறையை மாற்றுவதற்கான ஒரு சபையாகவும் நாடாளுமன்றம் மாற்றப்பட்டுள்ளது.  இந்த சூழ்நிலையில் முஸ்லிம்கள் ஒற்றுமைப்படவேண்டியுள்ளது. அதற்காக, முஸ்லிம் தலைமைகளுக்கு அழுத்தம் கொடுக்கப்படவேண்டியுள்ளது.
நாங்கள் இங்கு வாக்கு கேட்டுவரவில்லை. நாளை தேர்தலுமில்லை. நாங்கள் செய்த சேவைகளைச் சொல்லவும் இங்கு வரவில்லை. இது – நாட்டுக்கும் நமக்கும் முக்கியமான ஒரு காலமாகும். சிறுபான்மையினருக்கு மாத்திரமன்றி, சிறுபான்மையிலும் சிறுபான்மையாகவுள்ள முஸ்லிம்களுக்கு ஒரு முக்கியமான காலமாகும். இந்தக் காலத்தில் நாம் அவதானமாக இருக்கவேண்டும். அதற்காக, உங்களை விழிப்பூட்டுவதற்காகவே நாங்கள் இங்குவந்துள்ளோம்.

நாடாளுமன்றில் கட்சிகள் இருக்கின்றன. அமைச்சர்கள் இருக்கின்றார்கள். அப்படியிருக்க, நாங்கள் ஏன் இங்கு வந்தோம் என்று நீங்கள் நினைக்கலாம். மிகத்தெளிவாக ஓன்றைச் சொல்கின்றேன். அதனை விளக்குவதற்காகவே நோர்வேயினுடைய ஒப்பந்தத்தைப் பற்றிச் சொன்னேன். இப்போதும் நமது பிரதமருடைய ஆலோசகர்களாக நோர்வேகாரர்கள்தான் இருக்கின்றார்கள். இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு முன்னதாக, தேர்தல் முறையிலே மாற்றங்களைக் கொண்டு வரவுள்ளனர். இதன் பின்னணியிலும் நோர்வேக்காரர்கள்தான் இருக்கின்றார்கள்.



அண்மையில் யாழ்ப்பாணத்தில் புத்தருடைய சிலையை உடைத்திருக்கிறார்கள். அந்த விடயத்துக்கும் பொதுபலசேனா வாய் திறக்கவில்லை என்றால் இதற்கு அர்த்தம் என்ன?

யாரோ எல்லாம் வந்து நமது உணர்ச்சிகளை அவர்களுக்கு லாபகரமாக பாவித்துவிட்டுச் செல்கின்றார்கள். வெளிநாடுகளும், உள்நாட்டிலுள்ள அரசியல் தலைவர்களும் அதனைத்தான் செய்கின்றார்கள். புத்தரின் சிலை உடைக்கப்பட்டமைக்கு எதிராக ஏன் பொதுபலசேனா பேசவில்லை என்பதனை சிந்தியுங்கள். அரசியல் மாற்றங்களுக்கும் வேறுவேறு தேவைகளுக்குமாக, வெளிநாட்டவர்களும், உள்நாட்டவர்களும் முஸ்லிம்களை கிள்ளுக்கீரையாக  பாவித்திருக்கின்றார்கள்.
நாளை இந்த நாட்டில் பாரியதொரு சிங்கள – முஸ்லிம் இனக் கலவரத்தினை தோற்றுவித்துவிட்டு; ‘சிங்கள மக்களுடன் முஸ்லிம்கள் வாழ முடியாது, வாருங்கள் கிழக்கை வடக்குடன் இணைத்து, தமிழ் மக்களுடன் சேர்ந்து வாழ்வோம்’ என்கின்ற ஒரு நிலையை தோற்றுவிப்பதற்காகத்தான், பொதுபலசேனாவை வெளிச்சக்திகள் இயக்குகின்றனவோ என்கின்ற அச்சம் தோன்றுகின்றது.
»»  (மேலும்)

வழிக்கு வந்தார் ஹக்கீம் -ஹசனலிக்கு முழு அதிகாரம் கொண்ட செயலாளர் பதவியையும் வழங்குவதாக ஹக்கீம் உறுதி-

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.சல்மான், தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை, இன்று வெள்ளிக்கிழமை, இராஜிநாமாச் செய்துள்ளார்.

முஸ்லிம் காங்கிரசின் செயலாளர் நாயகம் எம்.ரி.ஹசனலிக்கு, தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்கும் பொருட்டே, சல்மான் இராஜிநாமச் செய்துள்ளார் எனத் தெரிய வருகிறது.

மு.கா. தலைவர் ஹக்கீமுக்கும் - செயலாளர் நாயகம் ஹசனலிக்கும் இடையில், நேற்று வியாழக்கிழமை பேச்சுவார்த்தை  நடைபெற்றது.
இதன்போது, ஹசனலிக்கு உடனடியாக தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும், ஒருமாத காலத்துக்குள் கட்சியின் பேராளர் மாநாட்டைக்கூட்டி, அதன்மூலம் - முழு அதிகாரம் கொண்ட செயலாளர் பதவியையும் வழங்குவதாக ஹக்கீம் உறுதியளித்திருந்தார் எனத் தெரியவருகிறது.

மு.காங்கிரசின் செயலாளர் தொடர்பான சர்ச்சைக்குத் தீர்வுகாணும் பொருட்டு, ஹசனலியுடன் இவ்வாறானதொரு சமரசத்துக்கு மு.கா. தலைவர் வந்துள்ளார்.

இதேவேளை, இன்று வெள்ளிக்கிழமை காலை, தேர்தல் ஆணைக்குழுவின் தலைவரை, மு.கா.தலைவர் ரவுப் ஹக்கீம், செயலாளர் நாயகம் எம்.ரி. ஹசனலி மற்றும் உயர்பீட செயலாளர் மன்சூர் ஏ.காதர் ஆகியோர் சந்தித்திருந்தனர்.

கடந்த காலங்களில் ஹசனலி கட்சியிலிருந்து ஒதுக்கப்பட்டமை குறித்து முஸ்லீம் காங்கிரசின் முக்கியஸ்தர் பசீர் சேகுதாவூத் உட்பட பலர் ஹக்கீமுக்கு எதிராக குரல் எழுப்பிவருவது தெரிந்ததே.
»»  (மேலும்)

கறுவாக்கேணியை சேர்ந்த கலாபூசணம் திரு.மாகாதேவன் அவர்களுக்கு விருது

Image may contain: one or more people and people standingகறுவாக்கேணியை சேர்ந்த கலாபூசணம் திரு.மாகாதேவன் அவர்களுக்கு 14.12.2014 ஞாயிற்றுக்கிழமை பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் விருது வழங்கப்பட்டது.
கலாபூசணம் மகாதேவன் அவர்கள் கறுவாக்கேணி விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் முதல் மாணவனும் பிரபலமான கவிஞரும் எழுத்தாளரும் மற்றும் பேச்சாளரும் ஆவார்.
»»  (மேலும்)

12/14/2016

சந்திரகாந்தனின் விடுதலை வேண்டி ஆலயத்தில் வழிபாடும்,அன்னதான நிகழ்வும்

Image may contain: 2 people, people smiling, outdoorதலைவர் சந்திரகாந்தனின் விடுதலை வேண்டி ஆலயத்தில் வழிபாடும்,அன்னதான நிகழ்வும்
இலங்கையில் உள்ள பயங்கரவாத தடுப்புச்சட்டத்தை நீக்கி அதன் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் தமிழ் இளைஞர்களை விடுதலைசெய்யக்கோரி வெல்லாவெளியில் ஆலயத்தில் வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டது.
போரதீவுப்பற்று பொது அமைப்புகள்,சிவநேசன் அமைப்பு என்பன இணைந்து இந்த நிகழ்வினை இன்று செவ்வாய்க்கிழமை நடாத்தியது.
...
மட்டக்களப்பு வெல்லாவெளி முத்துமாரியம்மன் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள்,பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
இலங்கையில் பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்கி அதன் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் விடுதலையடையவேண்டி பிரார்த்தனைகளும் நடைபெற்றது.
இது தொடர்பான போராட்டங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் முன்னெடுக்கப்படவுள்ளதாக இங்கு தெரிவிக்கப்பட்டது.
»»  (மேலும்)

 ஊர்ஜிதமாகியது வடக்கு- கிழக்கு இணைப்பு முதல் கட்ட தீர்வு

Résultat de recherche d'images pour "north east sri lanka"முல்லைத்தீவில் இருந்து கடல்மார்க்கமாக படகொன்றில் கடத்தி திருகோணமலைக்கு கொண்டுவரப்பட்ட 140 கிலோ கிராம் கஞ்சா, நிலாவெளி பிரதேசத்தில் வைத்து இன்று அதிகாலை 2 மணியளவில்  கைப்பட்டப்பட்டது. சந்தேகத்தின் பேரில் மூவர் கைதுசெய்யப்பட்டனர்.

திருகோணமலை பிராந்திய துர்நடத்தை ஒழிப்பு பிரிவின்  பொலிஸ் குழு ஒன்று குறித்த பிரதேசத்தில் சுற்றி வளைத்து தேடுதல் நடாத்திய போது குறித்தளவு கஞ்சா கைப்பற்றப்பட்டது.

இந்தச் சம்பவம் குறித்து, சுற்றிவளைப்பு குழுவுக்கு தலைமை தாங்கிச் சென்ற உதவி பொலிஸ் பரிசோதகர் ரத்னநாயக்க தெரிவிக்கையில்,
முல்லைத்தீவிலிருந்து கடல் மார்க்கமாக ஒரு தொகை கஞ்சா வழியாக கடத்தி வருவதாக தமக்கு கிடைத்த இரகசிய தகவல்களை அடுத்து குறித்த பிரதேசத்தில் பொலிஸ் குழுவொன்று மறைந்திருந்தது.
அவ்வாறு மறைந்திருந்த வேளையில் அவ்வழியாக பயணித்த வானொன்றை அக்குழு வழிமறித்து சோதனை நடத்தியது.
அந்த வானில் மூவர் இருந்ததுடன், வானிலிருந்து 140 கிலோகிராம் கஞ்சாவும் கைப்பற்றப்பட்டது.
சந்தேகநபர்கள், கல்முனைப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள்; என்றும் கஞ்சா, முல்லைத்தீவில் இருந்து படகொன்றில் கொண்டுவரப்பட்டு  நிலாவெளி கடற்கரையில் இறக்கப்பட்டு, அங்கிருந்து வான் ஒன்றில் ஏற்றிவரப்பட்டது.

திருகோணமலை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியேட்சகர் சந்திரக்குமாரவின் தலைமையின் கீழ் இம் மாவட்டத்தில் குற்றச் செயல்களை முற்றாக ஒழிப்பதற்கு மேற்கொண்டுவரும்  பிராந்திய துர்நடத்தை ஒழிப்பு பிரிவின்  நடவடிக்கைக்கு கிடைத்த வெற்றியென்றும் அவர் தெரிவித்தார்.

»»  (மேலும்)

12/13/2016

சமஸ்டியை கைவிடோம் ஏனெனில் அது எமக்கு தொழில், ஆனால் ஒற்றையாட்சிக்குள் தீர்வை ஏற்போம்

இனப்பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வு விடயத்தில் சமஷ்டியாகவோ, ஒற்றையாட்சியாகவோ இருக்க வேண்டிய  தேவையில்லை. பிரிக்கப்படாத ஒரே நாட்டுக்குள் ஒரு தீர்வு என்ற சொல் அரசியலமைப்புச் சட்டத்தில் இருக்க வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் கிழக்கு மாகாண விவசாய அமைச்சருமான கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார்.  

தமிழக முதல்வராக இருந்து மறைந்த ஜெ.ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு, கல்லடி துளசி மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (11) நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றியபோது, 'சமஷ்டியைக் கைவிட்டு விட்டோம் என்று சிலர் கூறுகின்றார்கள். ஒற்றையாட்சிக்குள் கூடுதலான அதிகாரம் பெறப்போகின்றோம் என்று மேலும் சிலர் கூறுகின்றார்கள். அவ்வாறு அல்ல நாங்கள் என்பதுடன், நிதானமாகச் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றோம். இதை எமது உறுப்பினர்களுக்கும் மக்களுக்கும் தெளிவுபடுத்துவோம்' என்றார்.
'எமது நாட்டில் உருவாக்கப்படும் அரசியலமைப்புச் சட்டம் தொடர்பாக பல செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. இந்நிலையில், மிகமிக உளப்பூர்வமாக எவ்வாறு விடுதலையைப் பெற முடியும் என்பது தொடர்பிலும்; எங்களுடைய விடயங்கள் தொடர்பில் எதிரிகளை எவ்வாறு இணக்கப்பாட்டுக்குக் கொண்டுவருதல், நீடித்து நிலைக்கக்கூடிய அரசியலமைப்பை உருவாக்குதல் ஆகியவற்றுக்காக முழுமையான அரசியல் தந்திரம் மற்றும்; அரசியல் உளவியல் என்கின்ற விடயங்களை வைத்துக்கொண்டு நாங்கள் நடவடிக்கை எடுத்துக்கொண்டிருக்கின்றோம்' என்றார்.


»»  (மேலும்)

ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகமாக பதவியேற்றார் குட்டரெஸ் - See more at: http://www.tamilmirror.lk/187979#sthash.N68Ee9dU.dpuf

ஐக்கிய நாடுகளின் ஒன்பதாவது செயலாளர் நாயகமாக அந்தோனியோ குட்டரெஸ், நேற்று (12) பதவியேற்றுக் கொண்டார். பூகோளரீதியாக நெருக்கடியையும், ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவுசெய்யப்பட்டமையைத் தொடர்ந்ததான நிச்சயமற்றதன்மையை எதிர்கொண்டுள்ள ஐக்கிய நாடுகளில் மாற்றத்தை ஏற்படுத்த எதிர்பார்த்துள்ளதாக குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.

. ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையில் இடம்பெற்ற தனித்த பதவியேற்பு நிகழ்வில், பொதுச்சபையின் தலைவர் பீற்றர் தொம்ப்ஸனின் முன்னால், ஐக்கிய நாடுகளின் ஆவணத்தின் முன்னால் கையை வைத்து குட்டரெஸ் பதவியேற்றுக் கொண்டார். சிரியாவில் இடம்பெறும் மோதல், ட்ரம்பின் நிர்வாகத்தின் கீழ் உலகில் ஐக்கிய அமெரிக்காவின் வகிபாகம் போன்ற நிலைமைகளின் கீழேயே, போர்த்துக்கல்லின் முன்னாள் பிரதமரான குட்டரெஸ், எதிர்வரும் முதலாம் திகதி முதல், பான் கி மூனிடமிருந்து பொறுப்புக்களை ஏற்றுக்கொள்ளவுள்ளார்.

1995ஆம் ஆண்டு முதல் 2002ஆம் ஆண்டு வரை போர்த்துக்கல்லின் பிரதமராகவிருந்த குட்டரெஸ், 2005ஆம் ஆண்டு ஜூன் மாதம் தொடக்கம் 2015ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் வரை, அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகராகப் பணியாற்றியிருந்தார். இதேவேளை, ஐக்கிய நாடுகளின் பால்சமநிலைத்துவத்தைக் கொண்டுவர எதிர்பார்க்கும் குட்டரெஸ், சிரேஷ்ட பதவிகளுக்கு பெண்களை நியமிப்பதை முன்னுரிமையாகக் கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்நிலையில், ஐக்கிய நாடுகளின் உப செயலாளர் நாயகமாக நைஜீரியாவின் சூழல் அமைச்சர் அமினா மொஹமட் நியமிக்கப்பாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது - 
»»  (மேலும்)

12/12/2016

மலையகத்தில் வாழ்வோர் இந்திய தமிழரல்ல. அவர்கள் இலங்கை தமிழர்கள் - தோழர் அணுரகுமார திஸாநாயக்க


Afficher l'image d'origineஆங்கிலேயர் இலங்கையை ஆக்கிரமித்த போது அவர்களுக்கு தேவையான பொளாதார மற்றும் உற்பத்திகளை மேற்கொண்டார்கள். அதற்கு தேவையான வேலையாட்களை இலங்கையில் பெற்றுக் கொள்ள முடியாத நிலையில் , இந்தியாவிலிருந்து மன்னார் ஊடாக இந்தியர்களை வேலைக்கு அழைத்து வந்தார்கள். அவர்கள் பல மாதங்களாக மலையகத்தை நோக்கி நடந்து வந்த போது வழி நெடுகிலும் அநேகர் நோய் வாய்ப்பட்டு இறந்து போனார்கள். எவ்வளவு தொகையினர் வந்தார்கள். எவ்வளவு தொகையினர் வழி நெடுகிலும் இறந்தார்கள். எவ்வளவு பேர் மலையகத்துக்கு வந்து சேர்ந்தார்கள் என சரியான கணக்கு வழக்குகள் இல்லாமல் போயின. வந்து சேர்ந்தோரை விட வழியில் மாண்டோர் அநேகம்.

1873லிருந்து அதாவது 180 க்கு அதிகமான வருடங்களாக இந்த மக்கள் எமது நாட்டின் பொருளாதாரத்துக்கு பெரும் பங்கை வகித்துள்ளனர். அவர்கள் இலங்கை பொருளாதரத்தை உயர்த்த பட்ட பங்கு கணக்கு பார்க்கவே முடியாத அளவு மிக அதிகமானது.

நாம் இவர்களை எமது நாட்டு குடியுரிமையுள்ளோர் என கருத்தில் எடுத்து செயல்பட்டுள்ளோமா? ஏனைய இனங்களுக்கு உள்ள அளவாவது தகுதியை பெற்றுக் கொடுக்க நாம் தவறியுள்ளோம். யாழ் நூலகத்தை எரித்தமை தொடர்பாக பிரதமர் ரணில் மன்னிப்பு கோரினார். அதேபோல மலைக மக்களின் இந்நிலை குறித்தும் நீங்கள் மன்னிப்பு கேட்க வேண்டும். 180 வருடங்கள் அந்த மக்கள் படும் துன்பங்களுக்கு எமது ஆட்சியாளர்கள் பொறுப்பேற்க வேண்டும்.

மலையக மக்களின் வாக்குகளை பெற்றீர்கள். மலையக தலைவர்களது ஆதரவை பெற்று ஆட்சியை நடத்தினீர்கள். மலையக மக்களின் தலைவர்கள் எனச் சொல்லிக் கொள்வோர் அந்த மக்களிடம் சாந்தா பண பிச்சை எடுத்து பதவிக்கு வந்து , அவர்களும் தனது மக்களுக்கு செய்தது எதுவுமே இல்லை. மலையக மக்களால் தேர்வானவர்களும் , அவர்களை சுற்றியிருந்தவர்களும் தத்தமது சுக போகங்களுக்காக மட்டுமே தமது அதிகாரத்தை பயன்படுத்திக் கொண்டர்களே தவிர , அந்த அப்பாவி மக்கள் ஒரு அடி முன் நகர எந்தவொரு முன்னெடுப்பையும் செய்ததில்லை. அதே நேரத்தில் அந்த மலையக மக்கள் ஒரு படி முன்னேறுவதை தடுப்பதில் , அந்த மலையக தலைவர்களே முட்டுக் கட்டையாக இருந்தார்கள். அவர்கள் முன்னேறினால் தமது அரசியல் தடைப்பட்டு போகும் என்பதால். மலையக தலைவர்கள் , தமது மக்களின் வேதனைகளை தமது அரசியல் வியாபாரத்துக்கு வாக்குகளாக பயன்படுத்திக் கொண்டார்கள். இதுதான் சரித்திரம். இதனால் அந்த மலையக மக்கள் கீழ் மட்ட மக்கள் கூட்டமாகியுள்ளார்கள்.

மலையகத்தில் வாழும் 9 லட்சத்தில் , சிங்களவர் மற்றும் இஸ்லாமியர் தவிர்த்து 8லட்சத்து 39 ஆயிரம் இந்திய வம்சா வழியினர் வாழ்கிறார்கள். இந்திய தோட்ட தொழிலாளர்கள் என்கிறார்கள். இதை நாங்கள் ஏற்றுக் கொள்வதில்லை. இவர்கள் இலங்கை தமிழர்கள். மலையக தலைவர்கள் ஏன் இன்னும் மலையக தோட்டத் தொழிலாளர்கள் என ஏன் அழைக்கிறார்கள் என எனக்கு விளங்கவில்லை?
(UNP லக்ஸ்மன் கிரியல்ல இடைமறிக்கிறார்) நான் ஒவ்வொரு குடும்பத்துக்கு 7 பேர்ச்சஸ் நிலம் இலவசமாக கொடுக்க வேண்டுமென நான் பாராளுமன்றத்தில் ஒரு பத்திரத்தை கொடுத்துள்ளேன். அது நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
அணுர தொடர்கிறார் : அது என்னிடம் இருக்கிறது. இந்த மலையக மக்கள் இந்தியாவுக்கு யுத்த காலத்தில் போனார்கள். இந்தியாவில் , இவர்களை இலங்கை தமிழர் என்கிறார்கள். இலங்கையில் , இந்திய தமிழர்கள் என்கிறார்கள். 3 - 4 தலைமுறையினராக வாழும் இவர்களுக்கு இலங்கை குடியுரிமை இருக்கிறது. வாக்குரிமை இருக்கிறது. அனைவரும் போல இவர்களை இலங்கை தமிழர் என நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். மலையக தலைவர்களுக்கு வாக்குகளுக்கு இந்திய தமிழர் என சொல்லிக் கொள்வதில் பயன் இருக்கலாம். ஆனால் இலங்கை தமிழராக இவர்களை நாம் அடையாளப்படுத்தல் வேண்டும்.

இலங்கையில் வாழும் மக்களில் பாடசாலை செல்லாதோர் தொகை 4.2. ஆனால் மலையகத்தில் 7.2. முறையான குடி நீர் மற்றும் மலசல கூட வசதிகள் இல்லை. 27 சதவீத மலசல கூட வசதி இல்லா மக்கள் வாழ்கிறார்கள். தமது ஊதியத்தில் 42 சதவீத பணத்தை தமது உணவுக்காக செலவிடுகிறார்கள். பொதுவாக இலங்கையில் ஏனையோர் 37 சதவீதத்தைதான் உணவுக்காக செலவழிக்கிறார்கள். அவர்களது குறுகிய வரவில் பாதி பணம் உணவு தேவைகளுக்கு மலையக மக்கள் செலவு செய்கிறார்கள். லைட் - குடிநீர் - உடை மற்றும் தேவைகளுக்கு மீதி பாதி செலவு செய்ய வேண்டியுள்ளது. அவர்களது உணவு கூட ஏழ்மையான உணவுகள்தான். அதனால் அவர்கள் கெஸ்டிரைட்டிஸ் நோய்களுக்கு ஆளாகியுள்ளார்கள். அதேபோல மது மற்றும் புகை பிடித்தலுக்கு 7 சதவீதத்தை செலவு செய்கிறார்கள். இலங்கையரின் சராசரியை விட 5 மடங்கு அதிகமானது இது. கல்வியில் 2.7 சதவீதத்தினரே சாதாரண தரத்திலிருந்து , உயர் தரத்துக்கு தேர்வாகிறார்கள். கணணி அறிவு கூட போதியளவு இல்லை. அதாவது கல்வி பகிர்வில் குறைவு இருக்கிறது. குழந்தை இறப்பு 12 வீதம். போசாக்கின்மை 5.6 வீதம். இவை அரச கணிப்பீடுகள். உண்மை இதை விட மேலாகவே இருக்கும். இந்த மக்களின் நிலை கண்டு நீங்கள் வெட்கப்பட வேண்டுமல்லவா? இப்போது ஐதேகவுக்கே அதிக வாக்குகளை அளித்துள்ளார்கள். எனவே அவர்களுக்காக நீங்கள் சில விடயங்களை முன் வந்து நிறைவேற்ற கடமைபட்டுள்ளீர்கள். வீட்டு பிரச்சனை மிக முக்கயமானது. 73சதவீதத்தினர் லைன் வீடுகளில்தான் வாழ்கிறார்கள். நீங்கள் போய் பாருங்கள். இவற்றில் அதகிமானவை தற்காலீக குடிசைகள். அந்த வீடுகள் வீடுகளே இல்லை. துணி - தகடு - உடைந்து விழும் சுவர்கள் இது ஒரு அவல வாழ்வு. மனிதர்கள் மிருகங்கள் போல வாழ்கிறார்கள். அம்பேவெல மாட்டு தொழுவங்களை போய் பாருங்கள். அதை விட மிக மோசமான லையன் வீடுகளில் இம்மக்கள் வாழ்கிறார்கள். இதுவே யதார்த்தம். இதை நீங்கள் யாரும் கண்டு கொள்ளவே இல்லை. 2லட்சத்து 493 வீடுகள் தேவைக்கு , கடந்த 23 வருடங்களில் நீங்கள் கட்டிய வீடுகள் 25 ஆயிரத்து 2 வீடுகள் மட்டுமே! வாழ வழி செய்யாத அரசு ஒரு அரசா?

மன்னாரிலிருந்து மலையகம் வரை சாவடித்து சாவடித்து கொண்டு வந்த இந்திய மக்களை நீங்கள் சாவதற்கு வழியாகியுள்ளீர்கள்? சாப்பிட இல்லை - வாழ வழியில்லை - எதிர்கால நம்பிக்கை இல்லையென்றால் அவர்கள் சாவதை தவிர வேறு என்ன செய்வது? நீங்கள் மலையகத்துக்கு ஒதுக்கியது பிச்சை காசு. இவர்களுக்காக விசேடமான ஒரு பகுதியை தேர்வு செய்து கரிசனை காட்ட வேண்டும். இங்கிருந்து வரும் ஒரு அமைச்சருக்கு அவர்களது பிரச்சனையை தீர்க்க சொல்வதல்ல செய்ய வேண்டியது அது தேசிய காரியம். அதை தேசம் ஏற்று செய்ய வேண்டும். இந்த பகுதியின் பிரச்சனையை தனியொரு பிரச்சனையாக கருதி செயல்பட வேண்டும். 10 வருட திடமொன்றின் கீழ் அவை திட்டமிட்டு நடைமுறைபடுத்தல் வேண்டும். அது எந்த அரசு - எந்த கட்சி வருகிறதோ இல்லையோ அது தடைபடாமல் செயல்படுத்தும் திட்டமாக வரைவு பட வேண்டும். இல்லா விட்டால் இந்த மக்கள் காலா காலத்துக்கும் தலை தூக்க மாட்டார்கள். அங்கிருந்து பாராளுமன்றத்துக்கு தேர்வாகி வருவோருக்கு தேவையானதை மட்டும் செய்ய இடமளிக்காது தரித்திர தன்மையிலிருந்த அந்த மக்கள் மீண்டு வாழ ஒரு திட்டத்தை அரசு முன்னெடுக்க வேண்டும்.
»»  (மேலும்)

12/11/2016

இன்று மட்டக்களப்பில் தமிழ் நாட்டின் முதலமைச்சர்  ஜெயலலிதா ஜெயராம் அவர்களுக்கான அஞ்சலி கூட்டம்

 இன்று மட்டக்களப்பில் தமிழ் நாட்டின் முதலமைச்சர்  ஜெயலலிதா ஜெயராம் அவர்களுக்கான அஞ்சலி கூட்டம் இடம்பெற்றது.   TMVP கட்சி மட்டக்களப்பு தலைமைக்காரியாலயத்தில் இடம்பெற்ற  இந்நிகழ்வில்     கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான பூ.பிரசாந்தன், பிரதிதலைவர் யோகவேள் மற்றும் முன்னாள் தவிசாளர்கள் கட்சி தொண்டர்கள் போன்றோர் கலந்துகொண்டனர்.தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின்  மகளிர் அணித் தலைவி செல்வி மனோகர் இந்நிகழ்வுக்கு தலைமை தாங்கினார்.
»»  (மேலும்)

ஜெயலலிதா ஜெயராம் -அ .மார்க்ஸ்



ஜெயலலிதா ஜெயராம் (24 பிப்ரவரி 1948 – 5 டிசம்பர் 2016)


(ஜெயலலிதா மறைவை ஒட்டி இதழ் ஒன்றுக்காக உடன் எழுதப்பட்ட கட்டுரை)

மிகப்பெரிய அளவு அடித்தள மக்களின் பங்கேற்பு, சென்னை விமான நிலையத்திலிருந்து விமானங்கள் திசை திருப்பி விடப்படும் அளவிற்கு நாடெங்கிலிருந்தும் அரசியல் தலைவர்களின் வருகை ஆகியவற்றுடன் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் இறுதி ஊர்வலமும் சடங்குகளும் நேற்று சென்னையில் நடந்தேறின. மாவட்டங்களிலிருந்து பஸ் போக்குவரத்து நிறுத்தப் பட்டிருக்காவிட்டால் கட்டுப்படுத்த இயலாத அளவிற்கு மக்கள் திரண்டிருப்பர் எனக் கூறப்படுகிறது. ஜெயாவின் மரணச் செய்தியைக் கேட்டு தமிழகமெங்கும் 26 பேர்கள் காலமாகியுள்ளதாக  இன்று ஒரு நாளிதழில் செய்தி வெளிவந்துள்ளது.
இரண்டு வயதில் தந்தை மரணம். 16 வயதில் விருப்பமின்றி திரைப்படத் துறையில் ஈடுபடுத்தப்பட்டது, 34 வயதில் அரசியல் நுழைவு, 43 வயதில் முதல்வர், இருமுறை ஊழல் குற்றச்சாட்டுகளில் சிறையேகிப் பதவி இழத்தல், மீண்டும் பெரும்மக்கள் ஆதரவுடன் பதவி ஏறல், மிக உயர்ந்த மருத்துவ வசதிகள் அளிக்கப்பட்டும் 75 நாட்கள் பிரக்ஞை இல்லாமலேயே இருந்து மரணம் – என ஒரு ஏற்ற இறக்கங்கள் மிக்க வாழ்வை வாழ்ந்தவர் ஜெயா.
“நான் ஒரு பாப்பாத்தி எனச் சொல்லிக் கொள்வதில் பெருமைப் படுகிறேன்” எனச் சட்டமன்றத்தில் பீற்றிக் கொண்ட ஒரு கன்னடத்துப் பார்ப்பனர் திராவிட இயக்கமொன்றின் தலைவராக 27 ஆண்டுகள் கோலோச்ச நேர்ந்ததற்கு திராவிட இயக்கங்களின் பலவீனங்கள் முக்கிய காரணமாக இருந்தன.
ஜெயாவின் பலமும் பலவீனமும் அவருக்கு குடும்பம் ஒன்று இல்லாமல் இருந்ததுதான். முக்கிய எதிரணியாக இருந்த கட்சியின் ஆக அருவருப்பான குடும்ப அரசியலை மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருந்தனர். அந்த மாதிரியான குடும்ப அரசியல் ஆபத்து ஜெயாவுக்கு இல்லை அல்லது அவரே அந்த ஆபத்திலிருந்து தன்னை விலக்கிக் கொண்டார். ஆனால் அதற்குப் பதிலாக ரத்த பந்தமில்லாத ஒரு நட்பை அவர் உருவாக்கிக் கொண்டது இன்னும் பெரிய ஆபத்தாக விளைந்தது. அது ஜெயாவின் அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி சொத்துக்களை வாங்கிக் குவிக்கும் மாஃபியா கும்பலாக அவரைச் சுற்றி அரண் எழுப்பி நின்றது. இப்படி உருவான வளர்ப்பு மகனுக்கு அவர் நடத்திய அருவருப்பான் ஆடம்பரத் திருமணம் அவரை ஆட்சியிலிருந்து அகற்றியது. ஒரு வேளை அ.தி.மு.க உடைந்து அந்த இடுக்கில் இந்துத்துவ அரசியல் உள் நுழைய நேர்ந்தால் அதற்கும் இந்த உறவே காரணமாக இருக்கப் போகிறது.
எனினும் ஜெயாவை மக்கள் மன்னித்தார்கள். ஒவ்வொருமுறையும் மன்னித்தார்கள். அவர் மீது வைக்கப்பட்டு, நீதிமன்றங்களால் ஏற்கப்பட்ட குற்றச்சாட்டுகளையும் கூட மக்கள் ஏற்கவில்லை. மக்களின் தர்க்கத்தைப் புரிந்து கொள்வது அப்[படி ஒன்றும் கடினம் அல்ல. இவர்மீது ஊழல் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டன. இவருக்கு வாக்களிக்காமல் விட்டால் அந்த இடத்தை நிரப்பும் வாய்ப்புப் பெற்றவர்கள்  இவருக்கு எள்ளளவும் சளைக்காத ஊழல் பேர்வழிகள்தான். அவர்கள் ஊழல் இன்னும் நிரூபிக்கப்பட வில்லை அவ்வளவுதான். இந்த அமைப்பில் ஊழல் தவிர்க்க இயலாதது என ஏற்றுக் கொள்ளும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டனர்..
அவர் பதவிகளில் இருந்த காலம் இந்தியத் தொழிற் துறையில் அந்நிய மூலதனம் தங்குதடையின்றி அனுமதிக்கப்பட்ட காலம். 2003 ல் அவர் ஒரு 90 முக்கிய தொழில் நிறுவனங்களை  அழைத்து அவர்களுக்குப் பச்சைக் கொடி காட்டினார். அவர்கள் மகிழ்ந்து நன்றி சொன்னார்கள். இதற்குச் சில தினங்கள் முன்னர்தான் (ஜூலை 2003) போராட்டத்தில் கலந்து கொண்ட இலட்சத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களைப் பணி நீக்கம் செய்து போராடும் தொழிலாளர்களை இரும்புக் கரம் கொண்டு அடக்கத் தன் அரசு தயக்கம் காட்டாது என்பதை அவர் கோடி காட்டியிருந்தார். முதலாளிகள் அமைப்பு (CII) இதை வெகுவாகப் பாராட்டி, “உங்களிடமிருந்து நாங்கள் கற்றுக் கொள்ள வேண்டும்” என்றது. ஃபோர்ட், ஹ்யூண்டாய், நோக்கியா என உலகளவிலான பன்னாட்டு நிறுவனங்கள் திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் இங்கே கடைவிரித்தன.
________________________________________________________________________________________________________
1948 பிப் 24 கர்நாடக மாநிலம் பாண்டவபுரம் தாலுகா மேல்கோட்டையில் பிறப்பு
1950 தந்தை மரணம்
1965 தமிழில் திரைப்பட கதாநாயகியாக அறிமுகம். தென்னிந்திய மொழிகளில் 140 திரைப்படங்கள்.
1982  அரசியல் நுழைவு
1984 மாநிலங்கள் அவை உறுப்பினர்
1989 அ.தி.முக பொதுச் செயலர்; முதல் பெண் எதிர்க்கட்சித் தலைவி
1991 முதலமைச்சர்; மிகவும் இளம் வயது முதல்வர்.
1995 வளர்ப்பு மகன் சுதாகரனின் ஆடம்பரத் திருமணம்
1996 தேர்தல் தோல்வி தொடர்ந்து கருணாநிதி அரசு தொடுத்த லஞ்ச ஊழல் வழக்குகள்; சில மாத காலம் சிறைவாசம்
1998 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க அணியில் அமைச்சரவையில் பங்கேற்பு. வஜ்பேயீ அரசுக்கு ஆதரவைத் திரும்பப் பெற்று ஆட்சி கவிழ்ப்பு
2001 மீண்டும் தேர்தலில் வெற்றி; மீண்டும் முதல்வர். சில மாதங்களில் லஞ்ச வழக்கொன்றில் குற்றம்சாட்டப்பட்டு பதவி இழப்பு. ஆறு மாதத்தில் மீண்டும் பதவி ஏற்பு. போலீஸ் அடக்குமுறையுடன் கூடிய ஆட்சி.
2004  நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வி
2006 சட்டமன்றத் தேர்தலில் தோல்வி.
2011 தேர்தலில் வெற்றி. மீண்டும் முதல்வர்.
2014 செப் சொத்து குவிப்பு வழக்கில் பதவி இழப்பு. 22 நாள் சிறைவாசத்திற்குப் பின் பிணையில் விடுதலை
2015 மே கர்நாடக உயர்நீதிமன்றத் தீர்ப்பை ஒட்டி வழக்கிலிருந்து விடுதலை. மீண்டும் முதல்வர்
2016 சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி இல்லாமலே வெற்றி. 1984 க்குப் பின் தொடர்ந்து அடுத்தடுத்து இருமுறை ஆட்சியை வென்றவர் எனும் சாதனை.
2016 டிச 5 எழுபத்தைந்து நாட்கள் மருத்துவ மனையில் இருந்து மரணம்
________________________________________________________________________________________________________
இதையும் மக்கள் பெரிதாய் எடுத்துக் கொள்ளவில்லை. இதெல்லாம் தவிர்க்க இயலாதவை. யார் வந்தாலும் இப்படித்தான் நடக்கும் என்பதை ஏற்கும் மனநிலைக்கு மக்கள் அதற்குள் பழக்கப் படுத்தப்பட்டிருந்தனர். ஆனானப்பட்ட இடதுசாரிகளே டாட்டாவுக்கு இடம் கொடுத்து ஆட்சியை இழந்து நிற்கும் நிலையில் அம்மா மட்டும் என்ன செய்ய முடியும் என்பது மக்களின் ‘லாஜிக்’ ஆக இருந்தது.
இவற்றின் இன்னொரு பக்கமாக அம்மாவின் ஆட்சியில் ‘பாப்புலிசம்’ அதன் எல்லையைத் தொட்டது. இலவச கம்ப்யூட்டர், மிக்சர், கிரைண்டர், தொலைக் காட்சிப் பெட்டிகள், மின் விசிறிகள், அம்மா தண்ணீர், அம்மா உணவகங்கள்…. வேறு என்னதான் வேண்டும்? இந்தச் செலவை எல்லாம் ஈடுகட்ட இருந்தது அவருக்கு ‘டாஸ்மாக்’.
அம்மாவின் ஆட்சி என்றால் அது போலீஸ் ஆட்சியாகத்தான் இருக்கும் என்பது ஊரறிந்த செய்தி. என்கவுன்டர் கொலைகள், லாக் அப் சாவுகள், காவல்துறை அத்துமீறல்கள் எதிலும் அவர் காவல் துறையை விட்டுக் கொடுத்ததில்லை. அப்படியான அத்து மீறல்களைத் தொடர்ந்து ‘குறைந்த விலை போலீஸ் கான்டீன்கள்’ முதலான பரிசுகளும் பதவி உயர்வுகளும் காவலர்களுக்குக் காத்திருந்தன.
அவர் இறந்த அன்று ஏதோ ஒரு ஆங்கிலத் தொலைக் காட்சி அவரது பழைய நேர்காணல் ஒன்றை ஒளிபரப்பு செய்து கொண்டிருந்தது. அழகான ஆங்கிலத்தில் அம்மா சொன்னார்: “நான் பழைய ஜெயலலிதா அல்ல. நான் மாறிக் கொண்டிருக்கிறேன்”.
அது உண்மை. காலம் யாரைத்தான் மாற்றவில்லை. நீங்களும் நானும் கூடத்தான் மாறிக் கொண்டிருக்கிறோம். அரசியல்வாதிகளையும், அதுவும் நீண்ட காலம் அரசியலில் இருப்பவர்களையும் நாம் அப்படித்தான் மதிப்பிட வேண்டும். ஏதோ ஒரு காலத்தில் உறைந்தவர்களாக அவர்களைச் சுருக்கிப் பார்த்துவிட முடியாது. தான் ஒரு பாப்பாத்தி என்பதில் பெருமைப்படுவதாகச் சொன்ன அவர்தான் சங்கரசாரியைக் கைது செய்து சிறையில் அடைத்தார். சுப்பிரமணிய சாமி முதலான பார்ப்பனீய சக்திகளுக்கு எதிராகவும் இருந்தார். சசிகலா போன்ற பார்ப்பனரல்லாதவர்களையே “உயிர்த் தோழி” யாக இருத்திக் கொண்டார். கருணாநிதியின் ஆட்சியில்தான் சங்கராச்சாரி மீதான அந்த வழக்கு நீர்க்கச் செய்யப் பட்டது என்பதையும் மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருந்தனர்.
போர் என்றால் சிலர் கொல்லத்தான் படுவார்கள் என ஈழ மக்கள் மீதான அடக்குமுறையை ஆதரித்துப் பேசிய ஜெயாதான் 2011க்குப் பின்னர் ஈழ மக்களின் நம்பிக்கை நட்சத்திரமானார். இலங்கை அரசுக்கு எதிராகப் பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் எனச் சட்டமன்றத்தைக் கூட்டித் தீர்மானம் இயற்றினார். மஹிந்த ராஜபக்‌ஷே உள்ளிட்ட “போர்க் குற்றவாளிகள்” மீது நடவடிக்கை வேண்டும் என்றார். ஐ.நா அவை இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராகக் கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொண்டிருந்த நிலையில் 2013ல் சட்டமன்றத்தைக் கூட்டி “இனப் படுகொலை” க்குக் காரணமான இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் எனவும், தனி ஈழத்திற்கான கருத்துக் கணிப்பு வேண்டும் எனவும் தீர்மானம் இயற்றினார். 2013 காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது என அவர் காட்டிய எதிர்ப்புத்தான் கடைசி நேரத்தில் மன்மோகன் சிங் தன் கொழும்புப் பயணத்தை ரத்து செய்வதற்குக் காரணமாகியது. 2015ல் இலங்கை மீதான ஐ.நா மனித உரிமை ஆணையத் தீர்மானத்தை நீர்க்கச் செய்யும் முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டபோது அதற்கு எதிராக இந்தியா செயல்பட வேண்டும் எனத் தீர்மானம் இயற்றினார்.
ராஜீவ் காந்தி ஜெயாவுக்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர்தான். எனினும் ராஜீவ் கொலைக் குற்றத்தில் தண்டிக்கப்பட்டவர்களின் விடுதலைக்கு அதரவாகவும் அவர் நடவடிக்கைகளை மேற்கொண்டார். இறுதிக் காலத்தில் கச்சத்தீவு பிரச்சினையிலும் அவர் தீவிரமாக இருந்தார்.
பத்திரிகையாளர்களைச் சந்தித்து விளக்கம் அளிப்பதைத் தவிர்ப்பது, தி.மு.க ஆட்சி செய்தது என்பதற்காகவே சமச்சீர்க் கல்வித்திட்டத்தை ஊற்றி மூட முயற்சித்தது, அண்ணா நூலகத்தை மூடவும், இராணி மேரிக் கல்லூரியை அந்த இடத்திலிருந்து அகற்றவும் முயற்சித்தது, சட்டமன்றத்திற்கெனக் கட்டப்பட்ட கட்டிடத்தை மருத்துவமனை ஆக்கியது, எதிர்க் கட்சித் தலைவர்கள், தெருக்களில் கொள்கை முழக்கமிட்டுப் பாடி ஆடிய கலைஞர்கள் மீதெல்லாம் வழக்குத் தொடுத்தது முதலான நடவடிக்கைகள் அவரிடம் இறுதி வரையிலும் மாறாமல் இருந்த பண்புகள் எனலாம். 2015 சென்னை வெள்ள எதிர்ப்பு நடவடிக்கையிலும் அவரது செயலின்மை பெரிய அளவில் கண்டிக்கப்பட்டது.
மக்கள் அவரைப் பெரிதும் நேசித்தனர். பெற்றோர், பிள்ளைகள், உற்றார், உறவினர் எனும் எந்த இரத்த பந்தமும் அருகில் இல்லாமல் அவரை நேசித்த மக்கள் மட்டுமே சூழ அவர் மரணம் நிகழ்ந்துள்ளது. வாரிசு என அவர் யாரையும் விட்டுச் செல்லவில்லை; நியமித்தும் செல்லவில்லை. அவரைப் பற்றிய கணிப்பில் கவனத்துக்குரிய அம்சங்களில் முக்கியமானது இது.

நன்றி முகநூல் *அ .மார்க்ஸ்





»»  (மேலும்)

12/10/2016

பியர் இறக்குமதிக்கு வரிச்சலுகை வழங்கும் நல்லாட்சி வரவு செலவு திட்டம்

Résultat d’images pour bier  Afficher l'image d'origine பியரை இறக்குமதி செய்யும் நிறுவனத்துக்கு இறக்குமதி வரி நிவாரணம் வழங்கப்பட்டமையால் ஒரு பில்லியன் ரூபாய், அரச வருமானம் இல்லாமல் போயுள்ளதாக ஜே.வி.பியின் தலைவரும் எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவுமான அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் தற்போது இடம்பெற்றுகொண்டிருக்கின்ற வரவு-செலவுத்திட்டம் (பாதீடு) இறுதிநாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், பியரை இறக்குமதி செய்யும் போது, அதற்கென இறக்குமதி வரி அறவிடப்படவேண்டும். எனினும், அந்நிறுவனத்துக்கு வரி நிவாரணம் வழங்கியமையால் பாரிய அரச நிதி இழக்கப்பட்டுள்ளது.

வரி நிவாரணம் வழங்கிய நிலையில் பியரை அந்த நிறுவனம் விற்பனை செய்தமையால், நிறுவனத்துக்கு 100 கோடி ரூபாய் இலாபம் கிடைத்துள்ளது. பியர் இறக்குமதி செய்வதற்கு வரி நிவாரணம் வழங்கப்பட்டபோதும், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக அந்தப் பகுதியில் உள்ள விகாரையொன்றுக்கு பொருட்கள் கொண்டுவரப்பட்டன. பொருட்களுடன் வந்த கொள்கலனுக்கு வரி அறவிடப்பட்டது இது நியாயமா? பியர் நிறுவனத்துக்கு வரி நிவாரணம் வழங்கப்பட்டுள்ள நிலையில், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டிருந்த மக்களுக்கு அரசாங்கம் போதியளவான நிவாரணத்தை வழங்கவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.
»»  (மேலும்)

பாராளுமன்ற உறுப்பினர் திலகரின் உணர்ச்சிகரஆக்ரோஷமான சிங்கள உரை





  1. பாராளுமன்ற உறுப்பினர் திலகரின் உணர்ச்சிகரஆக்ரோஷமான சிங்களத்திலான நேற்றைய உரையை பல தடவைகள் கேட்டேன். உண்மையில் சிங்கள மக்களுக்குப் புரியும் வகையில் மிகத் தெளிவாக மக்கள் பிரச்சினைகளை முன்வைத்திருந்தார்.
    உரையின் மிகச் சுருக்கமான பதிவு இது.

"மக்கள் விடுதலை முன்னணிக்கு ஒரு காலத்தில் கொள்கையொன்று இருந்தது. ஐந்து அம்சப் பிரிவினை அது. அதில் ஐந்தாவது பிரிவாகவே நாங்கள் இருந்தோம். எங்களுக்கு எதிரான கொள்கைகளை கொண்டிருந்த கட்சியொன்றின் தலைவர் எமது மக்களுக்காக பாராளுமன்றத்தில் பேசுவதையிட்டு மதிப்பளிக்கிறோம். அந்த கொள்கைகளை மாற்றிக்கொண்டு எமது மக்களின் வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட வேண்டும் என அவர் பேசுகின்றமை வரவேற்கத்தக்கது.
எமது மக்களின் பிரச்சினைகளை பேசும் போது இருக்கும் உணர்வு, அந்தப் பிரச்சினைகளை தீர்க்கும்போது இல்லை என்பதே கவலையான விடயமாக இருக்கிறது.
இலங்கையில் ஆகக்குறைந்த சம்பளமாக 10ஆயிரம் வழங்கப்பட வேண்டும் என சட்டம் சொல்கிறது. ஆனால் பெருந்தோட்டங்களில் நியமிக்கப்பட்டுள்ள ஆசிரிய உதவியாளர்களுக்கு மட்டும் வெறும் 6ஆயிரம் வழங்கப்படுகிறது. இது எந்த வகையில் நியாயம்?
பெருந்தோட்டங்களில் மாத்திரம் தோட்டப்புற வைத்தியசாலைகள் என்ற பெயரில் வைத்தியசாலைகள் இயங்குகின்றன. அங்கு எம்.பி.பி.எஸ். வைத்தியர்கள் இல்லை. உலகத்தில் எந்த இடத்திலும் இல்லாத வகையில் பெருந்தோட்ட வைத்திய உதவியாளர்களே வைத்தியம் செய்கிறார்கள். இந்த வைத்தியசாலைகளுக்கு ஒரு சதமேனும் அரசாங்கம் பணம் வழங்குவதில்லை. ஏன் இந்த வேறுபாடு?
எங்களுக்கு என்று தனியான குடிநீர் திட்டம் இல்லை. நாம் எப்போதும் சுத்திகரிக்கப்பட்ட நீரை அருந்தியது கிடையாது.
தோட்டப் பாதைகள் என தனியாக இருக்கின்றன. அவை வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு உட்பட்டவை அல்ல. மாகாண சபைகளுக்கு உட்பட்டவையும் அல்ல. அந்த தோட்டப்பாதைகளை தோட்ட நிர்வாகமே கண்காணிக்க வேண்டும். அதனால் மிக மோசமான நிலையில் பாதைகள் உள்ளன.
ஏனைய ஊழியர்களை போல அரசாங்கத்தினால் தொழிலாளர்களின் சம்பளம் நிர்ணயிக்கப்படுவதில்லை. கூட்டு ஒப்பந்தத்தின் ஊடாக இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை ஒப்பந்தமிடப்படுகிறது. அதுவும் வீதிக்கு இறங்கி, கோஷமிட்டு, போராட்டம் நடத்தியே ஒரு ரூபாவோ, இரண்டு ரூபாவோ அதிகரிப்பை தொழிலாளர்கள் பெறுகிறார்கள்.
இதற்கு காரணம் என்ன? தேசிய நீரோட்டத்தில் நாம் இணைத்துக்கொள்ளப்படவில்லை. எமக்கு பல்வேறு தடைகள் உள்ளன. அவற்றை தாண்டியே நாம் வெளியில் வர வேண்டியிருக்கிறது. எம்மால் முடியும். இங்கு பாராளுமன்றத்தில் தமிழில், சிங்களத்தில், ஆங்கிலத்தில் எமது மக்களின் குறைகளை எடுத்துச் சொல்கிறேன். இதுபோல என்னுடைய தம்பி, தங்கையர்கள் ஏராளமானோர் மலையத்தில் இருக்கிறார்கள்"
»»  (மேலும்)

12/09/2016

மூதூர் தமிழ் பிரதேசங்கள் ஒருங்கிணைந்த தனியான பிரதேச செயலாளர் பிரிவு

-பாலசுகுமார்-

மூதூர் வாழ் தமிழ் மக்களுக்கும். அரசியல் வாதிகளுக்கும் இதனை சமர்ப்பிக்கிறேன் .முன்னரும் ஒரு தடவை முகநூலில் இதனைப் பேசியிருக்கிறேன் மீண்டும் நாம் இந்த விடயம் பற்றி உரத்து குரல் கொடுக்க வேண்டிய சூழ் நிலை ஏற்பட்டுள்ளது.
இன்று வந்த ஒரு செய்தி தோப்பூர் உப பிரதேச செயலகம் தனி செயலகமாக தரமுயர்த்தப் பட இருப்பதாக அறிய முடிகிறது.
மூதூர் பிரதேசத்தில்...
52 தமிழ் கிராமங்களும்,72வீதம் நலப்பரப்பு இருந்தும் ஒரு பிரதேச செயலகத்தை போராடி பெற முடியாத நிலையிலா தமிழ் மக்கள் உள்ளனர்,இந்த விடயத்தில் அரசியல் வாதிகள் அக்கறை காட்டா விட்டால் பொது மக்கள் கையிலெடுத்து முன் நகர வேண்டும்.
மல்லிகைத்தீவு,
கிளிவெட்டி,
கட்டைப்பறிச்சான்
சம்பூர்
மலைமுந்தல்
நல்லூர் ,
பாட்டாளிபுரம்,
மட்டப்புக்களி
நீனாகேணி
வீரமாநகர்
பினாட்டுக்ல்
கோபாலபுரம்
இளக்கந்தை
நவரெட்ணபுரம்
கூனித்தீவு
சூடைக் குடா
சேனையூர்,
மருதநகர்
கடற்கரைச்சேனை ,
சந்தோஷபுரம்
சாலையூர்
கிறவல்குழி
சம்புக்கழி
அம்மன்நகர்
கணேசபுரம்
பள்ளிக்குடியிருப்பு,
சந்தான வெட்டை
தங்கபுரம்
ஸ்ரீனிவாசபுரம்
இத்திக்குளம்
குமாரபுரம்
பட்டித்திடல்,
கங்கவேலி,
அகஸ்தியர் தாபனம்
புளியடிசோலை
பெருவெளி,
மணல்சேனை
இருதயபுரம்,
பாலத்தடிச்சேனை
மருதநகர்
முன்னம் போடிவெட்டை
ஸ்ரீநாராயணபுரம்
பாரதிபுரம் ,
மேங்காமம்,
இறால்குழி

சீதனவெளி,
கயமுந்தான்,
சின்னக்குளம்,
சின்ன மல்லிகைத்தீவு,
கங்கை,
நாவலடி
சகாயபுரம்-64
முயற்சி திருவினையாகட்டும் 

நன்றி முகநூல் *பாலசுகுமார்
»»  (மேலும்)

12/08/2016

இந்தோனேசியாவில் கடும் நிலநடுக்கம் : 100 பேர் பலி

இந்தோனேசியா நாட்டின் சுமத்ரா தீவில் அமைந்துள்ள அச்சே பகுதியை இன்று அதிகாலை தாக்கிய நிலநடுக்கத்துக்கு 100 பேர் பலியாகினர். இடிபாடுகளுக்குள் சிக்கித் தவிக்கும் பலரை மீட்கும் பணி முழுவீச்சில் நடைபெறுகிறது.
 
குறித்த நிலநடுக்கமானது 6.5 அலகு ரிக்டர் அளவுகோலில் பதிவாகியுள்ளது.
»»  (மேலும்)

12/07/2016

40 க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பாகிஸ்தான் சர்வதேச விமானம் விழுந்து நொறுங்கியது

பாகிஸ்தான் சர்வதேச விமானம் (Pakistan International Airlines)நாட்டின் வடக்கு பகுதியில் விழந்து நொறுங்கியதில் பலர் கொல்லப்பட்டுள்ளனர் என உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.பாகிஸ்தான் சர்வதேச விமானம் (கோப்புப்படம்)


சித்ராலில் இருந்து இஸ்லாமாபாத்திற்கு சென்று கொண்டிருந்த பிகே-661 என்ற விமானம் சில மணிநேரத்திற்கு முன்பு கட்டுப்பாட்டு கோபுரத்துடனான தொடர்பை இழந்துவிட்டது என அந்த விமான சேவை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த விமானத்தில் மொத்தம் 47 பயணிகள் இ்ருந்தனர்.
விமான விபத்து நடந்த இடத்தில் இருந்து இதுவரை 21 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டிருப்பதாக ராணுவம் கூறியது.
அந்த இடத்துக்கு சென்று தேட ஹெலிகாப்டர் ஒன்றும் அனுப்பப்பட்டுள்ளது.
விபத்துக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை.
ஆனால் பாகிஸ்தானின் மிகப் பிரபலமான் பாப் இசை பாடகர் ஜுனைத் ஜாம்ஷெட் இந்த விமானத்தில் பயணித்தார், அவருக்கு என்ன ஆனது என்று இது வரை தெரியவில்லை.
இஸ்லாமாபாத்தில் இருந்து 70 கிலோமீட்டர் வேகத்தில் (43 மைல்) வந்த அந்த விமானம், ஹேவாலியன் என்ற இடத்தில் கீழே விழந்ததாக ஒரு பிராந்திய போலிஸ் அதிகாரி ராயிட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்
பாகிஸ்தானின் தேசிய விமானமான பிஐஏவில் ஏற்பட்ட பாதுகாப்புப் பிரச்சனைகள் காரணமாக, 2006ல் நடந்த பெரிய அளவிலான விமான விபத்தில் 44 பேர் இறந்தனர் என்று குற்றம் சாட்டப்பட்டது.
பாதுகாப்பு காரணங்களுக்காக, இந்த விமான நிறுவனச் சேவைகள் , 2007ல் ஐரோப்பிய ஒன்றியத்தால் தடை செய்யப்பட்டன.
»»  (மேலும்)

சம்பூர் மக்களை வெளியேறுமாறு உத்தரவு? சம்பந்தர் எங்கே?

Résultat d’images pour சம்பூர்சம்பூரில் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள அனல் மின் நிலையத்துக்கு தேவையான நிலக்கரியை துறைமுகத்திலிருந்து அனல் மின்நிலையத்துக்குக் கொண்டு செல்லவும் அனல் மின் நிலையத்தேவைக்கு கடல் நீரைக் கொண்டு செல்லவும் என அடையாளப்படுத்தப்பட்ட காணிகளில் வாழ்ந்துவரும் மக்களை வெளியேறுமாறு, மூதூர் நீதிமன்ற நீதவான் எம்.றிஸ்வான், உத்தரவு பிறப்பித்தார். 
»»  (மேலும்)

கண்டியில் அரங்க ஆய்வுகூடத்தின் புதிய தயாரிப்பு

பேராசிரியர் சி.மௌனகுரு

தோற்றம் ( THE RISE) பரிணாமம் ஒன்று (Evolution one)

சமகால நடனக் கலைகுழு வருடாவருடம் நடன நாடக விழாவினை நடத்தி வருகிறதுகிறது. இவ் விழாவில் பல் நாட்டுக் கலைஞர்களும் கலந்து கொண்டு தம் திறமை காட்டுகிறார்கள் .ஒருவரை ஒருவர் அவரவர் தளத்தில் புரிந்து கொள்கின்றனர் சென்ற ஆண்டு அவர்கள் நடத்திய சர்வதேச நடன விழாவில் அரங்க ஆய்வுகூடம் தனது காண்டவ தகனம் நாடகத்துடன் பங்கு கொண்டது. இவ்வாண்டு இவ்விழாவில் எம்மிடமிருந்து ஓர் புத்தாக்கத்தை அவர்கள் வேண்டினர்.

பரிணாமம் ஒன்று இந்நாடகத்தின் பரிணாமம் ஒன்று பிரபஞ்ச வெளியில் சூர்யக் கிரகங்களின் தோற்றத்தையும். அதினின்று உருவான,உலகத் தோற்றத்தையும், உயிரின் தோற்றத்தையும் அதன் கூர்ப்பில் மனித தோற்றத்தையும் ,அம்ம்னிதர்கள் கருவி கையாளுகை,அறிவு வளர்ச்சி மூலம் இயற்கைச் சக்திகளான இடி மின்னனல்,மழை.புயல் என்பனவற்றைத் தமது கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்தமையையும் ,கைத்தொழில் புரட்சிவரை மானுடம் இயற்கைமீது தமது ஆதிக்கம் செலுத்தியமை பற்றியும் கூறுகிறது.

பரிணாமம் இரண்டாம் பாகம் இப்பகுதி கைதொழில் புரட்சியின் பின் மனித குலம் இயற்கை அழித்து அதனைத் தமது சுயநலத்துக்காப் பிரயோகித்தமையும், அதனால் வரும் இயற்கை உபாதங்களும் டயனசோறாஸ் எனும் உயிரினம் இயற்கையுடன் நிற்க முடியாமல் அழிந்து போனதைப் போல மனித குலமும் அழிந்து போவதைக் கூறுகிறது.

பரிணாமம் மூன்றாம் பாகம் இப்பகுதி கூர்ப்பில் இன்னொரு உயிரினம் தோன்றுவதைக் கூறுகிறது. விஞ்ஞான உண்மையும் விஞ்ஞானக் கற்பனயும் கலந்ததாக இந் நாட்டிய நாடகம் உருவாக்கப் படுகிறது கூத்து ,பரத. களரிப்பயிட்டு ,.நாடக அசைவுகள், சமகால நடனம் என்பன கலந்து ஒரு பரிட்சார்த்தமாக இது தயாரிக்கபட்டுள்ளது கூத்திசை ,கூத்துத் தாளக்கட்டுகள் பரத ஜதிகள் ,கிராமிய இசை ,மெல்லிசை, கர்னாடக இசை .ஸ்வரக் கோவை என்பன அளவறிந்து கலக்கப்பட்டு உருவாக்கிய ஒரு புத்தாக்கம் இதன் முதாலாம் பாகத்தையே நாம்15 நிமிட நேரம் ஆற்றுகை செய்கிறோம் இது கடந்த இரு வாரங்களாக இதனை உருவாக்கக் கடும் பயிற்சியில் ஈடுபட்டோம். பரதம்,நாடகம் பயின்று வெளியேறிய மாணவர்கள், அரங்க ஆய்வுகூடத்தில் கூத்து,நடிப்பு பயின்ற மாணவர்கள் என 7 பேர் இதில் பங்கு கொள்கின்றனர். வழமைபோல பல்வேறு இசைக்கருவிகளும் இசைக்கப்படுகின்றன. ரெகோட்டாக அன்றி உயிரோட்டமுள்ள இசையாக இது ஆற்றுகையின் போது இசைக்கபடுகிறது. பரதம் பயின்ற ஜெகதாரணி ,கிருபாரதி. சரண்யா, சஜித் ஆகியோரும் நாடகம் பயின்றற துஜன், ரமேஷ், கிருஸ்ண மேனன் ஆகியோரும் இதில் பங்கு கொள்கின்றனர்.

தபேலா,உடுக்கு,,வாதியங்களை இசைப்பதுடன் தன் கனமான சாரீரத்தினால் நாடகத்துக்கு உயிர் தருகிறார். மோகனதாஸன் மிருதங்கம் இசைப்பதுடன் தன் அருமையான் குரலினால் உயிரூட்டுகிறார். பிரதீபன் கீபோட்டின் துணையுடன் ஆடலுக்கும் காட்சிகளுக்கும் வளம் தருகிறார் யூட் நிரோஸன் சுகிர்தாவின் வளம் மிகுந்த கம்பீரமான குரல் நாடகத்துக்கு இன்னொரு பரிமாணம் தருகிறது. சிம்போலையும் தாளத்தையும் நான் கையாளுகிறேன். கேதீஸ்வரனும்,அமல்ராஜும் மேடை உடைஒப்பனை தயாரிப்பு என்பனவற்றில் உதவுகின்றனர். கடந்த மூன்று வாரங்களாச் செயற்படுகிறோம். மகிழ்ச்சியாக இருக்கிறோம். இந்நாடகம் 6ஆம் திகதி மாலை (.6.12.2016 அன்று கண்டியில் இடம் பெறுகிறது.
»»  (மேலும்)

கருணா அம்மானுக்கு பிணை

Afficher l'image d'origine  அரச வாகனமொன்றை முறைகேடாகப் பயன்படுத்தியமை தொடர்பாக, நிதிக் குற்றப் புலனாய்வு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட  கருணா அம்மான் என்றழைக்கப்படும் முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன்,  பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
10 இலட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான நான்கு சரீர பிணைகளில் செல்ல, கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டிய, இன்று புதன்கிழமை உத்தரவிட்டார்.
அத்துடன், வௌிநாட்டுக்குச்  செல்ல, கருணா அம்மானுக்கு தடை விதித்த நீதவான்,  ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நிதிக் குற்றப் புலனாய்வு பொலிஸார் முன்னிலையில் ஆஜராகுமாறு உத்தரவிட்டார்.
»»  (மேலும்)

சோ ராமசாமி காலமானார்

தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளர்களில் ஒருவரும் நடிகரும் நாடக ஆசிரியருமான சோ ராமசாமி இன்று அதிகாலையில் காலமானார். அவருக்கு வயது 82.
சோ ராமசாமி

"சோ" என அழைக்கப்பட்ட ஸ்ரீநிவாச ஐயர் ராமசாமி கடந்த சில நாட்களாகவே உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவந்தார்.
1934 டிசம்பர் 5ஆம் தேதி சென்னை மயிலாப்பூரில் பிறந்த அவருக்கு மனைவியும் ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கின்றனர்.
இவருடைய தந்தையார் பெயர் ரா. ஸ்ரீநிவாசன், தாயார் ராஜம்மாள். இவர் தன்னுடைய பள்ளிப் படிப்பை மயிலாப்பூர் பி.எஸ். உயர்நிலைப் பள்ளியிலும், இளநிலைஅறிவியல் (பி.எஸ் சி) பட்டப் படிப்பை விவேகானந்தா கல்லூரியிலும் பயின்றார். பின் 1953-55-ஆம் ஆண்டுகளில் சென்னை சட்டக் கல்லூரியில் தனது சட்டப்படிப்பை முடித்தார். அதன் பிறகு சிறிது காலம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றியார்.
பகீரதன் என்பவர் எழுதிய தேன்மொழியாள் மேடை நாடகத்தில் தான் ஏற்ற கதாபாத்திரத்தின் ஒன்றின் பெயரான சோ என்பதையே தன் புனைப்பெயராக அவர் வைத்துக்கொண்டார்.
தன்னுடைய அங்கத எழுத்துகளுக்காகவும் அரசியல் விமர்சனங்களுக்காகவும் மிகவும் அறியப்பட்ட சோ, 1970ஆம் ஆண்டில் துக்ளக் வார இதழை துவங்கினார். அதன் பிறகு Pickwick என்ற ஆங்கில இதழையும் சில காலம் நடத்தினார்.
1950களில் நாடகங்களை எழுதி நடிக்க ஆரம்பித்த சோ, சுமார் 20 நாடகங்களை எழுதி இயக்கியுள்ளதோடு நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். இவரது இந்து மகா சமுத்திரம் என்ற நூல் 6 தொகுதிகளாக வெளிவந்துள்ளது.
1971ல் இவரது இயக்கத்தில் முகமது பின் துக்ளக் திரைப்படம், இவருடைய திரையுலக வாழ்க்கையின் உச்சங்களில் ஒன்று.
'முகமது பின் துக்ளக்' , 'உண்மையே உன் விலை என்ன' உள்ளிட்ட 5 திரைப்படங்களையும் சோ இயக்கியிருக்கிறார்.
தன்னுடைய நாடகங்கள், எழுத்துகள், திரைப்படங்களில் திராவிட இயக்கத்தைக் கடுமையாக விமர்சித்துவந்த சோ, காங்கிரஸ் கட்சியின் மீதும் தொடர் விமர்சனங்கள் முன்வைத்துவந்தார்.
திராவிட இயக்கம் முன்வைத்த சமூகநீதி, அனைத்து சாதியினரும் அர்ச்சகராவது, பெண்கள் சம உரிமை உள்ளிட்ட கருத்துக்களுக்கு எதிரான விமர்சனங்களைத் தொடர்ந்து அவர் முன்வைத்துவந்தார்.
1975-இல் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியால் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டபோது, அதனைக் கடுமையாக எதிர்த்த சில பத்திரிகையாளர்களில் சோவும் ஒருவர்.
தீவிர வலதுசாரி சிந்தனையாளரான சோ, மக்கள் சிவில் உரிமைக் கழகத்திலும் சில காலம் இணைந்து செயல்பட்டார்.
ஈழப் பிரச்சனை குறித்த இவரது நிலைப்பாடுகள் தமிழகத்தில் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகின.
1999ல் பாரதீய ஜனதாக் கட்சி ஆட்சியில் இருந்தபோது, மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்ட சோ, 2005 வரை அந்தப் பதவியில் இருந்தார்.
2015ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருக்கும் சோ தொடர்ந்து மருத்துவனையிலும் வீட்டிலும் சிகிச்சைபெற்று வந்தார். பிறகு சில நாட்களுக்கு முன்பாக சுவாசப் பிரச்சனையின் காரணமாக மீண்டும் அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சோ டிசம்பர் 7ஆம் தேதி அதிகாலை காலமானார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய நண்பராக விளங்கிய சோ, அவர் காலமான அடுத்த நாள் காலமாகியிருக்கிறார்.
பிரதமர் மோதியின் ஆதரவாளராக கருதப்படும் சோ கடந்தாண்டு உடல்நலன் குன்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, அவரை நேரில் சந்தித்து மோதி நலம் விசாரித்தார்.
»»  (மேலும்)

12/06/2016

ஜெயலலிதா மறைவுக்கு இலங்கை பிரதமர் இரங்கல்

ஜெயலலிதா, ரணில்
தமிழ் நாட்டில் மட்டுமன்றி, இந்திய மக்கள் அனைவரின் அன்பையும், கௌரவத்தையும் வென்ற தமிழ்நாட்டின் முதல்வர் ஜெ. ஜெயலலிதாவின் மறைவு மிகவும் கவலையளிப்பதாக இந்த இரங்கல் கடிதத்தில் அவர் தெரிவித்திருக்கிறார்.
ஆறு முறை தமிழ்நாட்டின் முதல்வராக தேர்தெடுக்கப்பட்ட ஜெயலலிதா, பொது மக்களின் நம்பிக்கையை வென்றதால்தான், நோய்வாய் பட்டிருந்த நிலையிலும் கூட நடைபெற்ற தேர்தலில் பெரும் வெற்றி பெற்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசியில் ரீதியாக முரண்பாடுகள் காணப்பட்டாலும், இலங்கை மற்றும் தமிழ்நாட்டு மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தீர்ப்பதில் மனிதாபிமானமாகத் தலையிட வேண்டும் என்பது அவரது நிலைப்பாடாக இருந்தது. ஜெயலலிதாவின் மனிதாபிமானப் பண்புக்கு இது தெளிவான உதாரணமாகும் என்று இந்த செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
தென்னிந்தியா மற்றும் இலங்கை இடையே மனிதாபிமான, சமூக உறவுகளை உறுதிப்படுத்துவதற்காக அவர் பல சந்தர்ப்பங்களில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டார் என்றும் அவர் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டு மக்களால் மிகுந்த கௌரவுத்துடன் "அம்மா" என அழைக்கப்பட்ட தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆற்றிய பொதுப் பணிகள் மக்களின் உள்ளங்களில் எப்போதும் நீங்கா நினைவுகளாக தொடர்ந்து நிலைக்கும் என்றும் இந்த இரங்கல் செய்தியில் ரணில் எழுதியுள்ளார்.
»»  (மேலும்)

ஜெயலலிதா காலமானார்

அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, ''தமிழக முதல்வர் ஜெயலலிதா திங்கள்கிழமை இரவு 11.30 மணியளவில் காலமானார்'' என்று தெரிவித்துள்ளது.

செப்டம்பர் 22-ஆம் தேதியன்று, திடீர் உடல்நலக்குறைவு காரணமாக, சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


»»  (மேலும்)

12/03/2016

இலங்கை: மட்டக்களப்பின் சில பகுதிகளில் நுழைய பொது பல சேனாவிற்கு நீதிமன்றம் தடை

பொது பல சேனாவின் பொதுச் செயலாளரான கலகொட அத்தே ஞானசார தேரர் உட்பட அந்த அமைப்பை சேர்ந்த பௌத்த பிக்குகள் இன்று சனிக்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வருகை தரவிருந்த நிலையில் மட்டக்களப்பு மற்றும் ஏறாவூர் நீதிமன்றங்களினால் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தலாம்
பொது பல சேனாவின் வருகை அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தலாம் என போலிஸார் முன்வைத்த அறிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிமன்றங்கள் இந்த தடையை விதித்துள்ளன.
மட்டக்களப்பு போலிஸ் தலைமையக இன்ஸ்பெக்டர் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் முன்வைத்த அறிக்கையை ஏற்றுக் கொண்ட பதில் நீதிபதி பேரின்பம் பிரேம்நாத், மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற ஆளுகைக்கு உட்பட்ட பகுதிக்குள் நுழைவதற்கான தடை உத்தரவை பிறப்பித்தார்.
இந்த தடை உத்தரவு நடைமுறையிலிருக்கும் எதிர்வரும் 16 ஆம் தேதி வரை அந்த பகுதியில் அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் செயல்பாடுகளில் ஈடுபடக் கூடாது. கூட்டங்களோ அல்லது பேரணிகளோ நடத்தக் கூடாது என்றும் பொது பல சேனாவிற்கு பிறப்பித்துள்ள அந்த தடை உத்தரவில் பதில் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
மட்டக்களப்பு நகரிலுள்ள மங்களராமய விகாரையில் பொது பல சேனாவை சேர்ந்த பௌத்த பிக்குமார்கள் கலந்து கொள்ளும் நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த தடை உத்தரவு வந்துள்ளது.
அதேவேளை ஏறாவூர் நீதிமன்றத்தில் கரடியனாறு போலிசார் முன்வைத்த அறிக்கையில் வெறுப்புணர்வை தூண்டும் சட்ட விரோத ஓன்றுகூடலுக்கு தடை விதிக்க கோரியிருந்தனர்.
இதனை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் பொது பல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உட்பட அந்த அமைப்பை சார்ந்தவர்கள் ஏறாவூர் நீதிமன்ற ஆளுகைக்குட்பட்ட பகுதிக்குள் நுழைய தடை விதிக்கும் கட்டளையை பிறப்பித்துள்ளது.
போலிஸ் பாதுகாப்பு
அதேவேளை பொது பல சேனா ஏனைய பௌத்த அமைப்புகளுடன் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பௌத்த மரபுரிமைகள் மற்றும் பௌத்த அடையாளங்களை பார்வையிட்டு அதனை பாதுகாக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் வகையில், அந்த இடங்களுக்கு நேரடியாக செல்லவிருப்பதாக ஏற்கனவே அறிவித்திருந்தது.
தற்போது நீதிமன்ற தடை விதித்துள்ள நிலையில் மட்டக்களப்பு நகர் உட்பட அவர்கள் விஜயம் செய்யக் கூடும் என கருதப்படும் இடங்களில் அவர்களை தடுக்கும் வகையில் போலிஸார் தயார் நிலையில் காணப்படுகின்றனர்.
»»  (மேலும்)

12/02/2016

 விடுதலையின் சந்தோஷம்...

சுமார் ஒரு வருடகால சிறைத் தண்டனை அனுபவித்த நிலையில், இன்று விடுதலை பெற்ற முன்னிலை சோஷலிசக் கட்சியின் அரசியல் குழு தலைவர் குமார் குணரட்னம்இ சிறைச்சாலையை விட்டு விடுதலையானார்.
»»  (மேலும்)

கவிஞர் இன்குலாப் அவர்களின் இறப்புச் செய்தி தாள இயலாத துயரத்தை அளிக்கிறது. *அ.மார்க்ஸ் .

  1. கவிஞர் இன்குலாப் அவர்களின் இறப்புச் செய்தி தாள இயலாத துயரத்தை அளிக்கிறது    

  2. என்னுடைய இளமைக்கால அரசியல் ஈடுபாட்டின் ஆதர்சங்களில் ஒருவர் இன்குலாப்
  3. என்னுடைய முதல் நூல் 'எதுகவிதை' யை நான் அவருக்குத்தான் அர்ப்பணித்திருந்தேன். அந்த நூலுக்கு அவர்தான் முன்னுரையும் எழுதியிருந்தார். அந்த நூலில் நான் அன்றைக்கு இருந்த இளமைத் துடிப்புடனும் உணர்ச்சிப் பெருக்குடனும் பாரதிக்குப் பிந்திய மகாகவி என அவரை நான் குறிப்பிட்டிருந்தேன். என்னைப் போன்ற அன்றைய இளைஞர்கள் பாரதிக்குப் பின் சம கால அரசியலில்... அச்சமின்றி நேர்மையாய்த் தன் குரலை ஒலித்த ஒரு பெருங் கவியாய் அவரைத்தான் கண்டோம். பாரதி காலத்திய ஏகாதிபத்திய எதிர்ப்பு அரசியலின் வடிவம் பிரிட்டிஷ் எதிர்ப்பு என்றால் இன்குலாப் காலத்தி்ய ஏகாதிபத்திய எதிர்ப்பு அரசியலை நக்சல்பாரிகள்தான் முன்னெடுத்திருந்த சூழலில் அவர் எள்ளளவும் தயக்கமின்றி அவர்களுடன் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார்.
  4. அன்று அப்படி நக்சல்பாரிகளுடன் அடையாளப்படுத்திக் கொள்வது என்பது அத்தனை எளிதானதல்ல. கடும் அடக்குமுறைகளை எதிர்கொள்ள நேரிடும் என்பது குறித்த எந்த அச்சமும் இன்றி அவர் தன் கவிதைகளையே ஆயுதமாக்கிக் களத்தில் நின்றார்.
  5. சோழர்கால நிலவுடமைக் கொடுமையைத் தோலுரித்த இன்குலாப்பின் ‘ராஜராஜேச்வரீயம்’ எனும் கவிதை அன்றைய தி.மு.க அரசால் பாடநூலிலிருந்து நீக்கப்பட்டபோது கல்லூரி ஆசிரியர் அமைப்புகளின் ஊடாக நாங்கள் எல்லாம் எதிர்த்துக் குரல் கொடுத்தோம்.
  6. தஞ்சையில் ஏகப் பெரிய விளம்பரங்களுடன் ராஜராஜ சோழன் சிலையை கருணாநிதி அரசு திறந்தபோது இன்குலாப்பின் அந்தக் கவிதையை சில ஆயிரம் பிரதிகள் அச்சிட்டு நானும் மன்னை உ.இராசேந்திரனும் தஞ்சை வீதிகளில் வினியோகித்துத் திரிந்தபோது காவல்துறை எங்களை வலைவீசித் தேடியது.
  7. எளிய வாழ்க்கை வாழ்ந்தவர் இன்குலாப். அப்போது நான் தஞ்சையில் வசித்து வந்தேன். சென்னை வரும்போதெல்லாம் தவறாது ஜாம்பசார் ஜானிஜான் தெருவில் இருந்த அவரது வீட்டிற்குச் செல்வேன். முதல் முறை நான் அவரைச் சந்திக்கச் சென்ற போது சென்னையில் கடும் தண்ணீர்ப் பஞ்சம். என்னை நாற்காலியில் உட்காரச் சொல்லிவிட்டு அவர் கீழே சென்று குழாயில் நீர் பிடித்துச் சுமந்து வந்த காட்சி இன்னும் நிழலாய் என் மனதில்……
  8. சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்த இன்குலாப் எந்த மத அடையாளங்களையும் தரித்துக் கொண்டதில்லை. சாகுல் ஹமீது எனும் தன் இயற் பெயரைக்கூட அவர் எந்நாளும் முன்னிலைப்படுத்திக் கொண்டதில்லை.
  9. ஈழப் போராட்டம் மேலெழுந்தபோது அவர் முழுமையாக எந்த விமர்சனகளும் இன்றி அதை ஆதரித்தார். தமிழ்த் தேசிய உணர்வுடன் அவர் செயல்பட்ட காலம் அது.
  10. கடந்த சுமார் 20 ஆண்டுகளாகவே அவர் நோய்வாய்ப்பட்டு , இறுதிப் பத்தாண்டுகள் அதிக இயக்கமின்றி முடங்க நேரிட்டது. மென்மையும், அன்பும், கனிவும் மிக்க அவரது குரலையும், புன்னகை தவழும் அவரது முகத்தையும் அடிக்கடி பார்க்கும் வாய்ப்பை எல்லோரும் இழக்க நேரிட்டது.
  11. இனி அவரை என்றென்றும் பார்க்க இயலாது என எண்ணும்போது கண்கள் பனிக்கின்றன. நெஞ்சம் நெகிழ்கிறது.
  12. “இன்குலாப் ஜிந்தாபாத்” எனும் எழுச்சி முழக்கம் இன்று
    புதிய பொருள் பெறுகின்றது.
  13. என் காலத்துப் புரட்சிக் கவிஞனுக்கு என் மனமார்ந்த அஞ்சலிகள்
நன்றி முகநூல்
»»  (மேலும்)

அம்மான் எங்கிருந்தாலும் வாழ்க


Afficher l'image d'origineஅன்பான கருணா அம்மானுக்கு! படுவான் கரையில் இருந்து வெலிக்கடைக்கு ஒரு கடிதம்

நான் ஒரு படுவான்கரை சிறுவன். உங்களுக்கு என்னை தெரியாது.ஆனால் உங்களை எனக்கு நன்றாகவே தெரியும்.

நீங்கள் கிழக்கு மாகாணத்திலிருந்து வன்னிக்கு யாழ்ப்பாணத்துக்கும் ஆயிரக்கணக்கில் எமது இளைஞர்களை களமுனைக்கு இட்டு சென்றுகொண்டிருந்த காலமொன்றிருந்தது.

"வீட்டுக்கொரு பிள்ளை" இதுவல்லவோ நமது தமிழ் தேசிய கடமை என்று போராளிகள் முன் மெய்சிலிர்க்க உரையாற்றிக்கொண்டிருந்தீர்கள். .

 அப்போதெல்லாம் யாழ்ப்பாணத்திலிருந்த இளைஞர்களோ  எந்த மண்ணுக்காக போராட என்று தொடங்கினார்களோ அந்த மண்ணை விட்டு விட்டு வெளிநாடுகளை நோக்கி ஓடிக்கொண்டிருந்தார்கள்.

அப்போது யாழ்ப்பாண மண்ணை மட்டுமல்ல வன்னி மண்ணையும் தலைவர் பிரபாகரனையும்  கூட பாதுகாப்பதில் முன்னணி வகித்தவர்கள் எமது இளைஞர்களே ஆகும். அதன்காரணமாக உங்களை தலைவர் பிரபாகரன் தனது வலதுகரமாக சித்தரித்தார். அதுமட்டுமல்ல மட்டக்களப்பை வீரம் விளை நிலம் என்று புலிகள் பிரகடனமும் செய்தனர்


ஆனால் 2002ல் உருவான சமாதான ஒப்பந்த காலத்தில் புலிகள் உருவாக்கிய நிழல் அமைச்சரைவை என்று சொல்லக்கூடிய நிர்வாக கட்மைப்பில்  இருந்த 32  துறைசார் பொறுப்பாளர்களில் ஒரே ஒருவரை மட்டுமே கிழக்கிலிருந்து புலிகள் நியமித்தனர்.அதுதான் மாவீரர் பணிமனை பொறுப்பு ஆகும்.

ஏனைய  அரசியல்,சமூக,கலாசார,பண்பாட்டு,கல்வி ,பொருளாதார,நிதி,நீதி,--போன்ற அனைத்து துறைகளும் வடக்கு மாகாணத்தவர்களுக்கே வழங்கப்பட்டது.


அதன்பின்னர்தான் தேசியம் என்பதற்குள் ஒழிந்திருந்த  யாழ்ப்பாண தலைமைகளின் மேலாதிக்க தன்மை தங்களுக்கு புரியத்தொடங்கியது. அதுவரை 9000 மாவீரர்கள் உங்கள் பாதையில் கிழக்கு மாகாணத்திலிருந்து வந்து இணைந்து கொண்டு மாவீரானமை வீண் என்று அன்றுதான் வரலாறு உங்களுக்கு பாடம் கற்று தந்தது.

இது பற்றி நீங்கள் கேள்வியெழுப்ப தொடங்கவே உங்களை துரோக பட்டம் கட்டி மரணதண்டனை கொடுக்கும் திட்டம் வன்னியில் தயாரானது. மட்டக்களப்பில் இருந்து வன்னிக்கு வரும்படி தலைவரது உடனடி அழைப்பை மறுதலித்தீர்கள். மாத்தையாவுக்கு என்ன நடந்தது என்பதை அறியாதவரா நீங்கள்? பாம்பின் கால் பாம்புதான் அறியும்.

"தமிழ் தேசியம் என்னும் பெயரில் எமது மக்களின் உரிமைகளை யாழ்ப்பாண எஜமானர்களிடம் அடகு வைக்க நான் தயாரில்லை" என்று  மார்ச் -4, 2004ல் கிழக்கு போராளிகளிடையே உரையாற்றிவிட்டு சுமார் 6000 போராளிகளை வீடுகளுக்கு அனுப்பினீர்கள். அதில் ஒருவனே நான்.

அதன் பிறகு நடந்த வன்னி புலிகளின் படையெடுப்பு வெருகலாற்றிலே நிறைவேற்றிய கிழக்கு படுகொலைகள் பிரசித்தமானவை. இயக்கத்தில் இருந்தபோது நீங்கள் செய்திருக்க கூடிய அனைத்து பாவங்களையும்  எங்கள் ஆறாயிரம் பேரையும் வீட்டுக்கு அனுப்பியதன் ஊடாக மட்டுமல்ல தொடந்து கிழக்கு மாகாண படுவான்கரை மண்ணிலிருந்து  இளம் பரம்பரை எதிர்கொண்டிருந்த அழிவுகளை தடுத்து நிறுத்தியதன் ஊடாகவும் கழுவி கொண்டீர்கள்.

  1983ஆம் ஆண்டு கிரான் என்னும் ஊரிலிருந்து வந்து  மட்டக்களப்பு நகரின் முன்னணி கல்லூரியான மெதடிஸ்த மத்திய கல்லூரியில் உயர்தரம் கற்றுக்கொண்டிருந்த நீங்கள் அதனை உதறி தள்ளிவிட்டு தமிழ் மக்களின் விடுதலைக்காக புறப்பட்டீர்கள்.   அன்றிலிருந்து சுமார் இருபது வருடகாலம் ஒரு கெரில்லாவாக வடக்கு கிழக்கு காடுகளெங்கும் அலைந்து திரிந்த உங்களுக்கு பசியோ பட்டினியோ சொகுசோ நித்திரையோ ஒரு பொருட்டல்ல என்பது எனக்கு தெரியும்.   சிறை என்பது உங்களுக்கு இன்னுமொரு அனுபவமாக இருந்து விட்டு போகட்டும். ஆனால் எங்களை வாழவைத்த அம்மான் எங்கிருந்தாலும் வாழ்க.

மீன்பாடும் தேனாடான்



»»  (மேலும்)