மட்டக்களப்பு, ஏறாவூரில் முதன்முறையாக காளான் உற்பத்தி வெற்றியளித்துள்ளதாக ஏறாவூர் விரிவாக்கல் பிரிவு விவசாயப் விவசாயப் போதனாசிரியை எம்.எச். முர்ஷிதா ஷிரீன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு, ஏறாவூரில் முதன்முறையாக காளான் உற்பத்தி
ஏறாவூர் விவசாய விரிவாக்கல் பிரிவில் தெரிவு செய்ப்பட்ட பயனாளிகளிடத்தில் பரீட்சார்த்தமாக மேற்கொண்ட காளான் செய்கை அறுவடை, போதனாசிரியை எம்.எச். முர்ஷிதா ஷிரீன் தலைமையில், திங்கட்கிழமை (21) இடம்பெற்றது.
'21 நாட்களில், மிகக் குறைந்த உழைப்பிலும் செலவிலும் மேற்கொண்டு அறுவடையைப் பெற்றுக் கொள்ளக் இந்தக் காளான் செய்கை மூலம், அதிக இலாபத்தை ஈட்ட முடியும்' என்று முர்ஷிதா ஷிரீன் தெரிவித்தார்.
காளான் செய்கையை ஊக்குவிப்பதற்காக ஏறாவூரில் 5 பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டு, அவர்களுக்கு தலா 30 ஆயிரம் ரூபாய் பெறுமதியில் காளான் செய்கைக்கான அனைத்து உபகரணங்களும் காளான் விதைகளும் வழங்கப்பட்டதுடன், செய்கை வழிகாட்டல்களும் வழங்கப்பட்டிருந்தன.
0 commentaires :
Post a Comment