பாராளுமன்றத்தில் இன்று திங்கட்கிழமை 2017 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் தேசிய கொள்கை மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு செலவினம் தொடர்பான குழு நிலை விவாதத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்;
சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு ஏற்ற வகையிலேயே பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பாதுகாப்பிற்கு கடந்த முறையை விடவும் நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது.
அது மாத்திரமின்றி ஐக்கிய தேசியக் கட்சி கொள்கையில் இதுவரையும் மாற்றமில்லை. அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்தல் கொள்கை இன்னமும் நடைமுறையில் உள்ளது. இலாபம் பெற முடியமான நிறுவனங்களை தான் தனியார் மயப்படுத்துகின்றார்கள்.
அத்துடன் அம்பாந்தோட்டை விமான நிலையத்தையும் துறைமுகத்தையும் விற்க முனைகின்றீர்கள். ஏன் இப்படி செய்கின்றீர்கள். எமது வளங்களை பாதுகாத்து நாட்டை வளர்ச்சிக்கு உட்படுத்த முடியாதா? ஏன் மக்களின் சாபத்திற்கு உள்ளாகின்றீர்கள்?
அத்துடன் பிணைமுறி விவகாரத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவியில் இருக்கும் வரைக்கும் இதில் விசாரணை நிறைவு பெறாது. ஏனெனில் பிணைமுறி விவகாரம் தொடர்பில் பிரதான சூத்திரதாரி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவாகும். ஆகவே பிரதமர் உடனடியாக பதவி விலக வேண்டும்.
0 commentaires :
Post a Comment