2017ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்ட இரண்டாவது வாசிப்பு மீதான இறுதிநாள் விவாதம் நாடாளுமன்றத்தில் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்றுகொண்டிருக்கின்றது.
இந்த விவாதத்தின் கலந்துகொண்டு இன்றுக்காலை உரையாற்றிய, எதிர்க்கட்சிகளின் பிரதமகொறடாவும் ஜே.வி.பியின் தலைவருமான அனுரகுமார திஸாநாயக்க, தமிழ்நாட்டு முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா கையாண்ட முறைமையையே இந்த நல்லாட்சி அரசாங்கமும் கடைப்பிடித்துள்ளது.
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, வாக்குகளை பெற்றுக்கொள்வதற்கான பிளண்டர் வழங்கினார். இந்த அரசாங்கமோ, உயர்தர மாணவர்களுக்கு டெப் வழங்குவதற்கான யோசனையொன்றை முன்வைத்துள்ளது.
உயர்தரத்தை முடித்ததன் பின்புதான் அவர்களுக்கு வாக்குரிமை கிடைக்கும். அப்போது, இந்த அரசாங்கத்துக்கு அவர்கள் வாக்களிப்பர் என்றுதான் டெப் வழங்கப்படுகின்றது. இது வாக்குகளுக்காக ஜெயலலிதா, பிளண்டர் வழங்கியமைக்கு ஒப்பானதாகும்.
கணினி அறிவை மேம்படுத்தவேண்டுமாயின், 7ஆம் வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கே டெப், வழங்கப்படவேண்டும். இந்த அரசாங்கம் அவ்வாறு ஏன் செய்வதில்லை. வாக்குகளை இலக்குவைத்து டெப் வழங்கப்படுகின்றதே தவிர, அறிவை மேம்படுத்துவதற்காக அல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
0 commentaires :
Post a Comment