11/18/2016

உள்ளேன் ஐயா" சொல்லி ஒழுங்காக வரவு செலவு திட்டத்தை ஆதரித்து கை உயர்த்த தயாராகுங்கள்.

  Résultat de recherche d'images pour "அமல் வியாழேந்திரன்"   Résultat de recherche d'images pour "ஸ்ரீநேசன்"  அடுத்த ஆண்டுக்கான வரவு செலவு திட்டமானது ஏகாதிபத்தியத்தால் வடிவமைக்கப்பட்டது. இலங்கை நீண்டகாலமாக செயற்படுத்திவரும் மக்கள்நல திட்டங்கள் பலவற்றை இல்லாதொழிக்கும் வண்ணம் திட்டமிடப்பட்டுள்ளது. இலவச கல்வியை,இலவச மருத்துவத்தை,என பொதுத்துறைகள் பலவற்றை தனியார் மயமாக்கிவிடும் அபாயத்தை கொண்டுள்ளது.


மறுபுறம் வடக்கு கிழக்கு மக்களுக்கு எந்தவித நன்மையையும் இல்லாதது இந்த வரவு செலவு திட்டம் என அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் குரல் எழுப்பியுள்ளார்.

இந்த நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்த வரவு செலவு திட்டத்தை ஆதரிக்குமா? எதிர்க்குமா? நல்லாட்சி எது? அது யாருக்கான நல்லாட்சி?  என்று எதிர்ப்பு தெரிவிக்குமா?  கேள்விகள் எதுவுமின்றி வழமைபோல ஐக்கிய தேசிய கட்சியின் ஏகாதிபத்திய விசுவாசத்துக்கு துணைபோகுமா?

இந்த நல்லாட்சி  நாயகர்கள் ஆட்சி மாற்றத்தின் பின் தமிழ் மக்களுக்கு எதனை பெற்று கொடுத்தனர்? ஜனாதிபதியின் முதல் நூறு நாள் வேலைத்திட்டத்தில் தமிழ் மக்களுக்கு ஏதும் இருக்கவில்லை. இதுவரை அரசியல் கைதிகளை விடுவிக்க எந்தவித ஒப்புதல்களும் இல்லை.வடக்கு கிழக்கில் முளைக்கும் புத்தர் சிலைகளுக்கும் இராணுவ தேவைகளுக்கு பிடிக்கப்படும் காணிகளுக்கும் இன்றுவரை தடையில்லை. கிழக்கில் மங்கள ராமாய தேரர் பொதுப்பலசேனாவை விட தீவிரமாக இனவாதத்தை கக்குகின்றார்.

அனைத்துக்கும்இ மேலாக இந்த வரவு செலவு திட்டம் இன மத வேறுபாடுகளைத்தாண்டி ஒடுக்கப்படும் மக்கள் அனைவருக்கும் எதிரானது. அப்படியிருக்க இன்னுமேன் இந்த நல்லாட்சி நடிப்பு ?

அநேகமாக  இரவோடு இரவாக தமிழ் தேசிய கூட்டமைப்புகாரர் கொழும்பில் ரணிலுக்கு வாக்கு கொடுப்பார்கள். எல்லாவித பரிமாற்றங்களும் நடக்கும். கோடீஸ்வரன் தொடங்கி படித்த எம்பிக்கள் அமல் வியாழேந்திரன்,ஸ்ரீநேசன் மற்றும் யோகேஸ்வரன் வரை "உள்ளேன் ஐயா" ஐயா சொல்லி ஒழுங்காக   வரவு செலவு திட்டத்தை ஆதரித்து கை உயர்த்த தயாராகுங்கள். வாழ்க நல்லாட்சி.  பாவம் மக்கள்.

குறைந்த பட்சம் யுத்தம் முடிந்து  இத்தனை ஆண்டுகளுக்கு பின்னரும் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ்கிடந்தது பாவப்பட்ட ஜென்மங்களாக பரிதவிக்கும்   சிறைக்கைதிகளையாவது விடுவிக்கும் உடன்பாடோடு வரவுசெலவு திட்டத்தை அணுகியிருக்கலாம்.

0 commentaires :

Post a Comment