11/07/2016

இராணுவ வீரர்கள் மீது கண்ணீர் புகை வீச்சு

ங்கவீனமடைந்த இராணுவ வீரர்கள் முன்னெடுத்துள்ள ஆர்ப்பாட்டப் பேரணியின் மீது கலகம் அடக்கும் பொலிஸார், கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி, அவ்வார்ப்பாட்டத்தை கலைத்துள்ளனர்.
ஜனாதிபதி  செயலகத்துக்கு முன்பாக, கொழும்பு-காலி வீதியை மறித்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மீதே இவ்வாறு கண்ணீர் புகைக்குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த இராணுவ வீரர்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக,  கொழும்பு காலிமுகத்திடலுக்கு செல்லும் வீதியில் உள்ள லோட்டஸ் சுற்றுவட்டம் தற்காலிகமாக, இன்று காலை மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

0 commentaires :

Post a Comment