நிமல் தனபாலன்
எமது நாட்டில் நிலவும் நல்லாட்சியின்... அடுத்த சமிக்கை மட்டக்களப்பு தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரை ஐக்கிய நாடுகளின் அபிவிருத்திக்கான திட்டமிடலின் இலங்கைக்கான குழுவில் இணைத்து கொண்டதேயாகும் .
ஆம் நல்ல விடயம் தானே அதற்கும் தலைப்புக்கும் என்ன தொடர்பு என நீங்கள் சிந்திக்க கூடும் அதே சிந்தனையோடு கூட வருவதே சந்தேகமும் கூட. காரணம் கூட்டமைப்பு கட்சிக்கு வழங்கிய எதிர் கட்சி தலைவர் பதவியும் அவரின் செயல்பாடும் இவ்வாறான பதவிகள் வழங்க
படுவதிலும் பின்னர் அவர்களின் செயற்பாடுகளினாலுமே இவ்வாறான சந்தேகங்கள் எழுகின்றன .
அமைக்கப்பட்ட இக் குழுவில் இணைக்கப்பட்டுள்ளவர்கள் (மலையகத்துக்கு ராதாகிருஷ்ணனும் ஆளும் அரசின் நேரடி அல்லது மறைமுக செயல்பாட்டளர்கள்) ஆனால் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் வியாளேந்திரன் யார் ? எதற்காக வழங்கப்பட்ட்து ? என்பதே இப்போ இருக்கும் சந்தேகம் .
ஆனால் ஒருபுறம் வியாழேந்திரன் முன்னெடுக்கும் திட்டமிட்ட சிங்கள குடியேற்றத்துக்கு எதிரான துணிச்சலான நடவடிக்கைகளும் வெளியிடுகின்ற காரசாரமான அறிக்கைகளும் தொடர அதே வேளையில் மறுபுறம் இப்படியான பதவி அவரை நோக்கி வருவதே இவ்வாறான சந்தேகங்கள் வலுப்பெற காரணமாக அமைகின்றன .
தமிழர்கள் செறிந்து வாழும் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு தமிழருக்கு முழு மாவட்ட அபிவிருத்தி தலைவர் பதவி கொடுக்க முடியாத நல்லாட்சி அரசு, கிழக்கின் திருகோணமலை அம்பாறை போன்ற மாவட்டங்களுக்கு வழங்காமல் இந்த ஐ.நா பதவியை மட்டக்களப்பு மாவட்டத்துக்கு கொடுப்பதே சந்தேகத்துக்கான காரணம் ஆகும்.
அம்மாவட்டங்களில் சிங்கள குடியேற்றத்துக்கு எந்த தடையும் இல்லை.
நமக்கு முன் உதாரணமாக உள்ள எதிர் கட்சி தலைவர் பதவிக்கு விலை போனது போல ஐக்கிய நாடுகளின் உதவியால் மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ள இருக்கும் சிங்கள குடியேற்றத்துக்கான தடைக்கல்லை அகற்றும் ஒரு மாற்றிடாகவும் இருக்கலாம் .
ஆகவே இனி வரும் காலங்கள்தான் பதில் சொல்லும் வியாளேந்திரன் விலை போய் விட்டாரா இல்லயா என்பதை பொறுத்தித்திருந்து பார்ப்போம்
0 commentaires :
Post a Comment