புகழ்பெற்ற கர்நாடக இசைப் பாடகர் பாலமுரளி கிருஷ்ணா காலமானார். இவருக்கு வயது 86. பத்ம விபூஷன், செவாலியே விருது பெற்றுள்ளார்.
2 முறை தேசிய விருதும் பெற்றுள்ளார். இவர் கர்நாடக சங்கீதத்தில் ஏராளமான கீர்த்தனைகள் இயற்றியுள்ளார். திரைப்படபாடல்களும் பாடியுள்ளார்.
இளையராஜாவின் இசையில் சின்ன கண்ணன் அழைக்கிறான் என்ற பாடலையும் பாடியுள்ளார். பாரம்பரிய இசைத்தனம் சிறிதுமில்லாத ஒரு மெல்லிசைப் பாடலை முதன்முதலில் திரையிசையில் பாட வைத்தது இளையராஜாதான் என்பது மறுக்க முடியாத உண்மை.
இதேபோல் திருவிளையாடல் படத்தில் பாடிய ஒரு நாள் போதுமா உள்ளிட்ட பாடல்கள் மிகவும் பிரபலம்.
இதுவரை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் பல பாடல்கள் பாடியுள்ளார்.
400 படங்களுக்கு இவரே இசையமைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 1930ம் ஆண்டு ஆந்திர மாநிலம் சங்கர குப்தம் என்ற ஊரில் பிறந்த இவர் தனது 6 வயதில் இசைப் பயணத்தை தொடர்ந்தார்.
சில காலம் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவர் இன்று சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்
0 commentaires :
Post a Comment