வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பின்தங்கிய பிரதேசங்களில் உள்ள விகாரைகளை புனரமைப்பதற்கு, சீனாவைச் சேர்ந்த தேரர் ஒருவர், 20 மில்லியன் ரூபாயினை நன்கொடையாக வழங்கியுள்ளார். சீனாவின் க்வான்துன் பிரதேசத்தைச் சேர்ந்த பௌத்த சங்கத்தின் தலைவர் அதி வணக்கத்துக்குரிய மின்க் ஸின் என்ற தேரரே, இந்த நன்கொடையை வழங்கியுள்ளார். வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அதிகுறைந்த வசதிகளுடன் காணப்படும் 100 விகாரைகளுக்கு, இந்த நன்கொடை பகிர்ந்தளிக்கப்படுவதுடன் ஒரு விகாரைக்கு 2 இலட்சம் ரூபாய் வீதம் வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. புத்தசாசன அமைச்சின் மேற்பார்வையின் கீழ், இந்த நிதிப் பகிர்ந்தளிப்பு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 commentaires :
Post a Comment