11/13/2016

முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் முன்னாள் போராளிகளுக்கு காணிகளை பகிர்ந்தளித்துள்ளார்.

கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சித் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன், தனது கட்சிக்காரர்களுக்கு சுமார் 400 -500 ஏக்கர் காணிகளை நீண்டகாலக் குத்தகை என்ற போர்வையில் பகிர்ந்தளித்துள்ளதாக கிழக்கு  மாகாணசபை உறுப்பினர் எம்.எஸ்.சுபைர் குற்றஞ்சாட்டினார்.   Afficher l'image d'origine

ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச செயலகத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை (08) நடைபெற்ற பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் கூட்டத்தின்போதே அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார்
அங்கு அவர் மேலும் தெரிவித்தபோது, 'ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச செயலகத்தால் காணி நிர்வாகம் மேற்கொள்ளப்படும் மீராகேணி, மிச்நகர், ஐயங்கேணி போன்ற கிராமங்களில் சுமார் 400 தொடக்கம் 500 ஏக்கர் காணிகள், கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரான சிவநேசதுரை சந்திரகாந்தன்  தலைமையில் இயங்கும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உறுப்பினர்களுக்கு நீண்டகாலக் குத்தகை என்ற  போர்வையில் தலா 10 ஏக்கர் காணிகள் வழங்கப்பட்டுள்ளன' என்றார்.

இது குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் போராளியொருவர் இலங்கையில் முன்னாள் போராளிகளுக்கு வாழ்வாதார வசதிகள் இன்மையானது மிக பெரிய பிரச்சனையாக விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் முன்னாள் முதல்வர் இப்படியொரு காரியம் செய்திருந்தால் அது பாராட்டுக்குரியது ஆகும், என்பதோடு வடக்கில் கூட தமிழரசு கட்சியினரின்ஆட்சியில் இருக்கும்  வட மாகாண சபையினால் கூட இப்படியொரு துணிகரமான நற்காரியத்தை செய்ய முடியாதுள்ளது.என அவர் குறிப்பிட்டார்.







0 commentaires :

Post a Comment