தமிழர்கள்,முஸ்லிம்களின் பங்களிப்பில் உருவான நல்லாட்சி அரசானது சிறுபான்மை மக்களுக்கு எதிரான தீர்மானங்களை ஒன்றன் பின் ஒன்றாக நிறைவேற்றி சாதனை புரிந்து வருகின்றது. இந்நிலையில் எதிர்வரும் யாப்பு மாற்ற சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இஸ்லாமிய திருமண சட்டத்தில் மாற்றம் கொண்டுவரும் முயற்சியில் அரசு தற்போது ஈடுபட்டு வருகின்றது. இது குறித்து உலமாக்கட்சியானது தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளது.
"முஸ்லிம் திருமண சட்டத்தை ஐரோப்பிய நாடுகளின் ஆசைக்கிணங்க இந்த இனவாத அரசாங்கம் திருத்துவதற்காக குழுவொன்றை நியமித்திருப்பதை கண்டித்தும், இந்தக்குழுவில் எந்தவொரு முஸ்லிமும் இடம்பெறக்கூடாது என்று வலியுறுத்தியும் எதிர் வரும் ஜும் ஆ தினத்தில் குத்பா ஓதும்படி உலமா கட்சி கேட்டுகொள்கிறது. அதே போல் நாசமாய் போன அரசின் இச்செயல் வெற்றிபெறக்கூடாது என ஒவ்வொரு முஸ்லிமும் சுஜூதில் துஆ செய்யும்படியும் உலமா கட்சி கேட்டுக்கொள்கிறது."என அதன் தலைவர்
-முபாறக் அப்துல் மஜீத் அவர்கள் தெரிவித்துள்ளார்
0 commentaires :
Post a Comment