11/18/2016

2016-ம் ஆண்டின் சிறந்த வார்த்தை : ஆக்ஸ்போர்ட் அகராதி வெளியீடு

உலகப் புகழ்பெற்ற ஆக்ஸ்போர்ட் அகராதி 2016-ம் ஆண்டின் சிறந்த வார்த்தையாக post-truth என்னும் வார்த்தையை தேர்ந்தெடுத்துள்ளது.
கடந்த 11 வருடங்களாக அந்தந்த ஆண்டின் சிறந்த வார்த்தையை ஆக்ஸ்போர்ட் அகராதி வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டின் சர்வதேச வார்த்தையாக post-truth என்னும் வார்த்தையை தேர்ந்தெடுத்துள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது. “பொது கருத்து என்பது உண்மைகளை கடந்தும் தனிப்பட்ட உணர்வுகள் மற்றும் நம்பிக்கைகளை சார்ந்து உருவாக்குவதில் அங்கம் வகிப்பது" என இந்த வார்த்தைக்கு ஆக்ஸ்போர்ட் அகராதி விளக்கம் கொடுத்துள்ளது.
சர்வதேச சிறந்த வார்த்தையைப் பொறுத்தவரையில் இந்த அகராதியின் பிரிட்டன், அமெரிக்க பதிப்புகள் சில நேரங்களில் வேறு வார்த்தைகளை தேர்ந்தெடுக்கும். ஆனால் இந்த ஆண்டு, இரண்டு பதிப்புகளும் ஒரே வார்த்தையை தேர்ந்தெடுத்துள்ளன. அமெரிக்க அதிபர் தேர்தல் மற்றும், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலகியது போன்ற காரணங்களால் இந்த வார்த்தை பயன்பாடு உலக அளவில் பன்மடங்கு அதிகரித்துள்ளதாக ஆக்ஸ்போர்ட் அகராதி கூறியுள்ளது.

0 commentaires :

Post a Comment