2000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விடுவதால் கறுப்புப்பணம் குறையும் என்பது புதிராக உள்ளது என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
நாட்டில் மலிந்து கிடக்கும் கருப்பு பணம் மற்றும் ஊழலை ஒழிக்கும் நோக்கோடு ரூ500 மற்றும் ரூ1,000 நோட்டுகள் செல்லாது என்ற வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பை பிரதமர் மோடி நேற்று இரவு வெளியிட்டார்.
இதுகுறித்து இன்று கருத்து தெரிவித்துள்ள முன்னாள் நிதியமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் பழைய ரூபாய் நோட்டுகளுக்கு புதியவற்றை மாற்றி தருவது விரைவாக நடைபெறுமா என கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த புதிய ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க அரசுக்கு ரூ.15000 கோடி முதல் ரூ.20000 கோடி வரை செலவாகும் உயர்மதிப்பு நோட்டு செல்லாது என்று 1978 ஆண்டு வெளியிட்ட அறிவிப்பால் எந்த பயனும் ஏற்படவில்லை என்று அவர் கூறினார்
0 commentaires :
Post a Comment