11/18/2016

107 மேலதிக வாக்குகளினால் பாதீடு நிறைவேறியது-தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவாக வாக்களித்தது

2017 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டம் 107 மேலதிக வாக்குகளினால் நிறைவேறியது.
Résultat de recherche d'images pour "தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவாக வாக்களித்தது"
2017 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்ட இரண்டாம் வாசிப்பு மீது வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டுமென்று, ஜே.வி.பியின் தலைவரும் எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவுமான அனுர குமார திஸாநாயக்க கோரிநின்றார்.
இரண்டாம் வாசிப்பு மீதான இறுநாள் விவாதத்தை நிறைவுசெய்து, நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க உரையாற்றினார். அதன் பின்னர், சபாநாயகர் கரு ஜயசூரிய, வரவு-செலவுத்திட்டத்துக்கான அங்கிகாரத்தை கோரிநின்றார்.
இதன்போது எழுந்த அனுரகுமார திஸாநாயக்க, பாதீட்டை நிறைவேற்றுவதற்கு வாக்கெடுப்பு தேவையென்றும், பெயர் குறிப்பிட்டே வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் என்றும் கோரிநின்றார்.
வாக்கெடுப்பில், பாதீடுக்கு ஆதரவாக  162 வாக்குகளும், எதிராக  55 வாக்குகளும் கிடைத்தன. அதனடிப்படையில், வரவு-செலவுத்திட்டம்  107 மேலதிக வாக்குகளினால் நாடாளுமன்றத்தில் நேற்று நிறைவேற்றப்பட்டது. இந்த வாக்களிப்பின் போது 7 பேர் சமூகமளிக்கவில்லை
ஒன்றிணைந்த எதிரணி பாதீட்டுக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவாக வாக்களித்தது. ஜே.வி.பி எதிராகவே வாக்களித்தது.
இலங்கை தொழிலாளர்  காங்கிரஸின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான், வாக்களிப்பில் கலந்துகொண்டு 'ஆம்' என்று கூறினார். இதன்போது, ஆளும் தரப்பினர் மேசைகளில் தட்டி ஆரவாரஞ்செய்தனர்.
இதேவேளை, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், எம்.பியுமான டக்ளஸ் தேவானந்தாவும் பாதீட்டுக்கு ஆதரவாக வாக்களித்தார். இதன்போதும் ஆளும் தரப்பினர் மேசைகளில் தட்டி சந்தோஷத்தை வெளிப்படுத்தினார்.
- See more at: http://www.tamilmirror.lk/186380/-ம-லத-க-வ-க-க-கள-ன-ல-ப-த-ட-ந-ற-வ-ற-யத-#sthash.9yRAsKoC.dpuf

0 commentaires :

Post a Comment