2008ம் ஆண்டு நவம்பர் மாதம் 14ம் திகதி கொழும்பில் உள்ள அத்துருகிரிய பகுதியில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி தலைவர் குமாரசாமி நந்தகோபன் உட்பட இருவர் கொல்லப்பட்டனர்.
இதனை நினைவுகூரும் நிகழ்வு இன்று காலை மட்டக்களப்பு வாவிக்கரை வீதியில் உள்ள தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி தலைமையகத்தில் நடைபெற்றது.
இதன்போது நந்தகோபனின் படத்திற்கு ஒளியேற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன் மௌன அகவணக்கமும் செலுத்தப்பட்டது
இந்நிகழ்வில் கட்சியின் உப தலைவர் எஸ்.யோகவேள் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான பூ.பிரசாந்தன்,முன்னாள் மட்டக்களப்பு மாநகரசபையின் பிரதி முதல்வரும் கட்சியின் உப செயலாளருமான ஜோர்ஜ்பிள்ளை, உயிரிழந்த நந்தகோபனின் சகோதரரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளருமான கு.நளினகாந்தன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0 commentaires :
Post a Comment