11/30/2016

கருணா அம்மான் கைதின் பின்னணி- இலங்கையில் இராணுவ புரட்சி 

நிர்மல் தனபாலன்.Afficher l'image d'origine

அண்மையில் சில நாட்களாக இலங்கையில் ஓர் இராணுவ புரட்சி நிகழ உள்ளதாகவும் அதை அரசு வெற்றிகரமாக முறியடித்து வருவதாக அனைவரும் செய்திகளில் அறிந்து கொண்டோம் . இந்த நிலையில் தான் கருணா அம்மான் கைது செய்யப்பட்டுள்ளார் .

கருணா யார் என்றும் அவரின் பின்னணி என்ன என்றும் யாரும் அறியாமல் இல்லை . இந்த நிலையில் தான் இந்த கைதுக்கு மேற்குறிப்பிட்ட... கதைக்கும் காரணம் இருக்குமோ என நினைக்க தோன்றுகின்றது .

அரச வாகனங்களை அல்லது வளங்களை முறை கேடாக பாவித்தவர்கள் என்று பார்த்தால் இலங்கை அரசியல்வாதிகள் அநேகர் உள்ளார்கள். அவர்கள் எல்லோரும் கைது செய்யப்பட்டார்களா? அல்லது சட்டத்தால் தண்டிக்க பட்டார்களா? என்ற கேள்விகளும் எழுகின்றது அல்லவா?

30 வருட புலிகளின் விடுதலை போராட்டத்தில் கருணா அம்மான் என்ற பெயரும் அவரின் போர் திறனும் யாரும் அறியாத ஒன்று அல்ல. அப்படியான ஒருவர் ஆளும் அரசுக்கு வெளியே இருப்பது ஆரோக்கியமான போக்கு அல்ல என்பதை ஆட்சியாளர்கள் அறியாமலில்லை.  இந்நிலைமையில்  இராணுவ புரட்சிக்கு ஒன்று திட்டம் தீட்டபட்டால் அதில் அம்மானின் பங்களிப்பு இடம்பெற நேரலாம். இது ஆபத்தான சூழலை உருவாக்க கூடும் என அரசு நினைப்பதில் தவறும் இல்லை.

இவ்வாறான ஒரு இராணுவ புரட்சி நடக்குமாக இருந்தால் அல்லது அதற்கான ஆயத்தம் இருந்தால் அதட்கு கருணாவின் பங்கு கணிசமாக இருக்கும் என சந்தேகிப்பதை புறம் தள்ளவும் முடியாது. காரணம் முன்னொரு காலத்தில் அரச படைகளுக்கு நிகரான இராணுவ வலு சமநிலை ஒன்றை கொண்டிருந்து உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த விடுதலை புலிகளின் இராணுவ கட்டமைப்பும் அதன் போரியல் ஆற்றலும் கருணா அம்மான் மனிதனை சுற்றியே காணப்பட்டது.

இப்படியான பின்னணியில்தான் கருணா கைது செய்யப்பட்டதை சிந்திக்க தோன்றுகின்றது இலங்கை இராணுக கட்டமைப்பில் உள்ள உயர் இராணுக அதிகாரிகளை கைது செய்தால் இராணுவத்தின் நம்பகம் மக்கள் மத்தியில் கெட்டுவிடும் என அரசு சிந்திக்க கூடும் அத்துடன் கைது செய்வதுக்கான மாற்று காரணங்களும் இல்லாமல் இருக்கலாம் .

எது எப்படியோ கைது செய்யப்பட்ட கருணா அம்மானிடம் மேற்கொள்ளப்படும் விசாரணையிலும் அவரின் வாக்குமூலத்திலும்தான் உன்மை வெளிச்சத்துக்கு வரும்.


»»  (மேலும்)

கிழக்கு மாகாணசபையின் முன்னால் அதிபர்கள் ஆர்ப்பாட்டம்

கிழக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைகளில் கடமை நிறைவேற்று அதிபர்களாகக் கடமையாற்றி வருகின்ற அதிபர்கள், தங்களுக்கு நிரந்தர நியமனங்களை வழங்குமாறு கோரி, இரண்டாவது நாளாக இன்று செவ்வாய்க்கிழமையும் (29), கிழக்கு மாகாணசபையின் முன்னால் ஆர்ப்பாட்டதில் ஈடுபட்டனர்.
»»  (மேலும்)

11/29/2016

முன்னாள் அமைச்சர் விநாயக மூர்த்தி முரளீதரன் நிதித்துறை குற்றவியல் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்

முன்னாள் அமைச்சர் விநாயக மூர்த்தி முரளீதரன் நிதித்துறை குற்றவியல் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
Résultat de recherche d'images pour "விநாயக மூர்த்தி"
அரசு வாகனத்தைத் தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் அவரை இன்று காலை விசாரணைக்கு வருமாறு நிதித்துறை குற்றவியல் புலனாய்வுப் பிரிவினர் அழைத்திருந்தனர். அப்போது சில மணி நேரங்கள் நடந்த விசாரணைக்குப் பிறகு அவரைக் கைது செய்ததாகப் போலிசார் கூறினர்.
இன்னும் சற்று நேரத்தில் அவர் கொழும்பு மேஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படுவார் என்று தெரிகிறது.
விடுதலைப் புலிகள் இயக்கத்திலி்ருந்து 2004ம் ஆண்டு பிரிந்த கருணா, பின்னர் மஹிந்த அமைச்சரவையில், துணை அமைச்சராகவும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பிரதி தலைவர்களில் ஒருவராகவும் செயல்படடவராவார்.

2004ல் உருவான கிழக்கு பிளவின் பின்னர் கருணாவுடன் 6000 விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து பிரிந்தமையே   புலிகளின் அழிவுக்கு வித்திட்டது.
»»  (மேலும்)

11/28/2016

கியூபாவின் புரட்சிகர தலைவர் ஃபிடல் காஸ்ட்ரோவின் அஸ்திக்கு பொதுமக்கள் அஞ்சலி

கியூபா தலைநகர் ஹவானாவில் ஆயிரக்கணக்கான கியூப மக்கள் மறைந்த முன்னாள் புரட்சிகர தலைவர் ஃபிடல் காஸ்ட்ரோவின் சாம்பல் கொண்ட தாழிக்கு தங்களுடைய இறுதி அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.கியூபாவின் புரட்சிகர தலைவர் ஃபிடல் காஸ்ட்ரோவின் அஸ்திக்கு பொதுமக்கள் அஞ்சலி

பொதுமக்கள் அஞ்சலி செலுத்தும் நிகழ்வின் தொடக்கமாக 21 குண்டுகள் முழுங்க ராணுவ மரியாதையுடன் ஹவானா மற்றும் சான்டியாகோவில் தொடங்கியது.
சான்டியாகோவில் தான் 1959 ஆம் ஆண்டு ஃபிடல் காஸ்ட்ரோ அதிகாரபூர்வமாக புரட்சியை அறிவித்தார்.
காஸ்ட்ரோவின் தேசியவாத மற்றும், சோஷலிச தத்துவங்களையும் இறுதிவரை கடைப்பிடிக்க உறுதிமொழி ஒன்றில் துக்கம் அனுஷ்டித்தவர்கள் கையெழுத்திட்டனர்.
வரும் புதன்கிழமை முதல், போர்களில் காஸ்ட்ரோவின் புரட்சியாளர்கள் பயணித்த பாதை வழியாக காஸ்ட்ரோவின் அஸ்தி எடுத்து செல்லப்பட உள்ளது.
இந்த புரட்சிதான் காஸ்ட்ரோ ஆட்சியில் அமர காரணமாக இருந்தது.
ஞாயிறன்று, அவருடைய அஸ்தி இறுதியாக சான்டியாகோவில் அடக்கம் செய்யப்பட உள்ளது
»»  (மேலும்)

ஜனாதிபதி தலைமையில் மாணவர்க்கு விருதுவழங்கும்விழா! கிழக்கிலிருந்து 12பாடசாலைகள் தெரிவு

இன்று ஜனாதிபதி தலைமையில் மாணவர்க்கு விருதுவழங்கும்விழா!
கிழக்கிலிருந்து 12பாடசாலைகள் தெரிவு:
மல்வத்தை கீர்த்தனா முதலிடம்!


*காரைதீவு சகா

Résultat d’images pour srilanka studentதேசிய உணவு பாதுகாப்பு வாரத்தையொட்டி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் சாதனை படைத்த பாடசாலைமாணவர்களுக்கு தேசியவிருது வழங்கும் விழா கொழும்பு தாமரைத்தடாகத்தில் இன்று 28ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெறவுள்ளது.
...
நாட்டிலுள்ள பாடசாலைகளில் சிறந்த சுகாதார மேம்பாட்டுக்கழகங்களைத் தெரிவுசெய்யும் போட்டியில் வெற்றிபெற்ற பாடசாலைகளுக்கு தேசிய விருது ஜனாதிபதியினால் வழங்கிவைக்கப்படவிருக்கிறது.
அதேவேளை போசாக்கு மாதத்தை முன்னிட்டு கல்வியமைச்சினால் நடாத்தப்பட்ட போட்டியில் தேசிய மட்ட பரிசளிப்பு விழாவும் அதேமேடையில் நடைபெற ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.
கிழக்கில் சிறந்த சுகாதார மேம்பாட்டுக்கழகங்களுள்ள பாடசாலைகளாக 12 பாடசாலைகள் தெரிவாகியுள்ளன.இதற்கான போட்டி ஏலவே நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கிழக்கு மாகாணத்தில் கிண்ணியா மட்டக்களப்பு கல்முனை சம்மாந்துறை அக்கரைப்பற்று திருக்கோவில் ஆகிய 06 வலயங்கள் தேசியவிருதுக்காக தெரிவாகியுள்ளன.
90புள்ளிகளைப்பெற்ற திருக்கோவில் கோமாரி மெ.மி.த.க.பாடசாலை திருக்கோவில் குமரபுர வித்தியாலயம் செம்மண்புலவு கணேசா வித்தியாலயம் 85புள்ளிகளைப்பெற்ற இறக்காமம் றோயல் ஜூனியர் வித்தியாலயம் தம்பட்டை மகா வித்தியாலயம் 83புள்ளிகளைப்பெற்ற கிண்ணியா முஸ்லிம் வித்தியாலயம் காரைதீவு சண்முகா மகா வித்தியாலயம் 82புள்ளிகளைப்பெற்ற கல்லடி வேலூர் சக்தி வித்தியாலயம் 81புள்ளிகளைப்பெற்ற மட்.ஊறணி சரஸ்வதி வித்தியாலயம் நாவிதன்வெளி கணேசா வித்தியாலயம் அக்கரைப்பற்று அந்நூர் வித்தியாலயம் அக்கரைப்பற்று அல்இர்பான் வித்தியாலயம் ஆகிய 12 பாடசாலைகள் தெரிவாகியுள்ளன.
இவர்களுக்கான விருதுகளை ஜனாதிபதி வழங்கிவைப்பார்.
மல்வத்தை கீர்த்தனா முதலிடம்!
போசாக்கு மாதத்தை முன்னிட்டு கல்வியமைச்சினால் நடாத்தப்பட்ட போட்டியில் சம்மாந்துறை வலய மல்வத்தை விபுலானந்த மகா வித்தியாலய மாணவி பாஸ்கரன் கீர்த்தனா முதலிடத்தை பெற்று தேசிய மட்ட பரிசளிப்பு விழாவில் கலந்துகொள்கின்றார்.

நன்றி *சகா
»»  (மேலும்)

11/27/2016

வீரவணக்கம்! மாவோயிஸ்ட் தோழர்கள் மூர்த்தி என்ற குப்பு தேவராஜிற்கும், அஜிதாவிற்கும் வீரவணக்கம்!

எழுத்தாளர்: துரை சிங்கவேல்  *நன்றி -கீற்று maoist encounter
24-11-2016 இரவு பாலிமர் தொலைக்காடசியில் வந்த செய்தி என் தூக்கத்தைக் கலைத்தது. எந்த மூர்த்தி, எந்த அஜிதா என்று குழப்பம் காலை வரை நீடித்தது. காலையில் உறுதி செய்து கொண்டேன்.
வீரமரணம் அடைந்த இருவரும் ஒடுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர்கள். தோழர் மூர்த்தி [தமிழகத்தில் 1986 வரை இப்பெயரிலேயே வெளிப்படையாக அறியப்பட்டார்] தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த தலைமைத் தோழர் ஆவார். இவர் கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாக கர்நாடக மாவோயிஸ்ட் [மக்கள் யுத்தம் உடபட] தலைமைத் தோழராகவும், கடந்த 15 ஆண்டுகளாக தமிழ்நாடு, கேரளா மாநில பொறுப்பாளராகவும் இருந்தார். கடந்த 20 ஆண்டுகளாக மாவோயிஸ்ட் கட்சியின் மையக் குழு உறுப்பினராக இருந்தார்.
தோழர் அஜிதா தமிழகத்தில் வீரமரணம் அடைந்த முதல் பெண் போராளி ஆவார். [நான் இங்கு வீரமரணம் என்று குறிப்பிடுவது அரசு படைகளுடன் சண்டையிட்டு மரணம் அடைவதையே குறிப்பிடுகிறேன்] தியாகி தோழர்கள் ரவீந்திரன், சிவா என்ற பார்த்திபன், நவீன் பிராசாத் வரிசையில் தோழர் அஜிதாவும் இணைந்துள்ளார்.
தோழர் மூர்த்தி என்ற குப்பு தேவராஜ்
தோழர் மூர்த்தி கிருஷ்ணகிரியில் பிறந்தார். ஆனால், பெருநகரமான பெங்களுருவில் படித்து வளர்ந்தார். சிறுவயதிலேயே தந்தையை இழந்ததால் தாயின் அரவணைப்பிலேயே வளர்ந்தார். அவருடைய தாய் அம்மணி அம்மாள் மார்க்சிம் கார்க்கியின் 'தாய்' நாவலில் வரும் தாயைப் போன்றவர். எங்கள் அனைவரையும் மகனாக பாவித்து பாசம் காட்டியவர். [இதனால் அம்மணி அம்மாளும், அவரது மகள் தரணியும் 1988ல் மதுரை வங்கி கொள்ளை வழக்கில் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டு பல நாட்கள் சித்திரவதை செய்யப்பட்ட்னர். சிறைப்படுத்தப்படட நாங்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தின் மூலம் இவர்களை விடுவிக்க வைத்தோம். ]. இவர் நகர்புறத்து அடித்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்த குடும்பப் பின்னணியையும், பாட்டாளி வர்க்கப் பின்னணியையும் கொண்டவர்.
என்னைவிட 5வயது மூத்தவர். இருப்பினும், தோழர் மூர்த்தியின் அரசியல் வாழ்க்கையும், என்னுடைய அரசியல் வாழ்க்கையும் ஒரே காலகட்டத்தில் [80களின் தொடக்கத்தில்] தொடங்கியது. எண்பதுகளின் தொடக்கத்தில் தமிழகத்தில் பலமான கட்சி [மக்கள் யுத்தம்] உருவானது. ஆனால், கர்நாடகாவில் அப்பொழுதுதான் தொடங்கியது. தியாகி தோழர் ஆசாத் [ராஜ்குமார்], தோழர் வீரமணி [கோவை சிறையில் உள்ளார்] போன்றவர்கள் அமைப்பு கட்டிட முனைந்தனர். தொடக்கத்தில் காந்தியவாதியாக இருந்த மூர்த்தியை தொடர்ந்த விவாதத்தின் மூலம் கம்யூனிஸ்ட்டாக மாற்றினர்.
இவரது அறிவுஜீவித்தனமும், களப்பணித்திறனும் இவரை வளரும் இயக்கத்தின் முக்கிய தலைமைத் தோழராக மாற்றியது. இதனால், வேலையை விட்டு முழுநேர அரசியல் பணியை மேற்கொண்டார்.
1985ல் கட்சிக்குள் உருவான நெருக்கடியில், தமிழ்நாட்டில் எ.எம்.கே. மற்றும் தமிழ்வாணன் தலைமை கட்சியை முற்றிலுமாக கலைத்தது. இக்கும்பலை எதிர்த்து மாணவர் மற்றும் இளையோர் அமைப்பைச் சேர்ந்த மிக சிலரே போராடினோம். இப்போராடடத்தில் தோழர் மூர்த்தி மற்றும் வீரமணியின் பங்கு உறுதிமிக்கதாக இருந்தது. இக்கட்டத்திலேயே நானும் மூர்த்தியும் மிகவும் நெருக்கமானோம்.
இதற்குப் பிறகு 1987ல் நடந்த கர்நாடக மாநில மாநாட்டில் மாநிலக் குழுவிற்கு தேர்ந்தெடுக்கப்படடார். இதற்குப் பிறகு கட்சி கண்ணோட்டம் வகுக்கப்பட்டு கிராமப்புற வேலைகள் தொடங்கியது. தோழர் பின்தங்கிய வறட்சி மாவட்டமான ரெய்ச்சூர் மாவட்டத்திற்கு பொறுப்பு எடுத்துக் கொண்டார்.
1995ல் நடந்த அனைத்திந்திய சிறப்பு மாநாட்டில் மையக் குழுவின் மாற்று உறுப்பினராக தேர்ந்து எடுக்கப்படடார். இம்மாட்டில் நடந்த அரசியல் விவாதங்களில் தமிழ்நாடு, கர்நாடக தோழர்களின் சார்பாக இவரே தலைமையேற்று நடத்தினார். எங்களது பெரும்பாலான கருத்துக்கள் வெற்றி பெற்றதில் இவரது விவாத அணுகுமுறை முக்கிய பங்காற்றியது. இவரிடம் இருந்துதான் நான் தொடக்கத்தில் பொறுமையும், நிதானத்தையும் கற்றுக்கொண்டேன்.
2001ல் நடந்த 9வது பேராயத்தில் அரசியல்வழி மீது விமர்சனம் வைத்த தமிழ்நாடு, கர்நாடகத் தோழர்கள் சிறுபான்மையானோம். எங்களது கருத்தில் சில மாறுபாடுகளை கொண்ட மூர்த்தி தனியாக அரசியல் வழி மீது விமர்சனம் வைத்தார்.
இதற்குப் பிறகு நான் ஊத்தங்கரை மோதலை ஒட்டி சிறைபட்டேன். என்னுடைய முரண்பாடுகள் வளர்ந்து நான் பிரியவேண்டிய சூழ்நிலை வந்தது. இன்று நான் தனி அமைப்பாக வந்து என்னுடைய நிலைப்பாடுகளை முன்வைத்து அது சனநாயகபூர்வமாக தீர்மானிக்கப்பட்டு நடைமுறைக்குச் செல்கிறது. ஆனால், என்னைப் போலவே மாற்றுக் கருத்தை கொண்டிருந்த தோழர் மூர்த்தியின் அரசியல் போராட்டங்கள் கடந்த 12 ஆண்டுகளாக எப்படி இருந்தது என்று எனக்குத் தெரியாது. இதைப் பற்றி மாவோயிஸ்ட் தலைமைத் தோழர்களே வெளியிடுவது மிகப் பொருத்தமாக இருக்கும்.
அதே சமயத்தில், எனக்கு அடித்தளமிட்டதில் தோழர் மூர்த்தியின் பங்கு மிக முக்கியமானது. எனது அரசியல், பொருளாதாரம் பற்றி அறிவில் அடித்தளமிடடவர். இவர் பன்மொழியில் வல்லவர். தமிழராக இருந்தபோதிலும் கன்னடம், தெலுகு. ஆங்கிலம் மூன்று மொழிகளிலும் திறன் பெற்றிருந்தார். நான்கு மொழிகளிலும் ஒன்றிலிருந்து மறறொன்றுக்கு மொழிபெயர்க்கும் அறிவைப் பெற்றிருந்தார். அநேகமாக, கடந்த 12 ஆண்டுகளில் இந்தி, மலையாளத்திலும் அறிவைப் பெற்றிருப்பார் என்று கருதுகிறேன்.
இதனால், இவரே 1986லிருந்து 2002 வரை எங்களுக்கு மொழிபெயர்ப்பாளராக இருந்தார். பல கூட்டங்களுக்கும் சரி, சிறப்பு நிகழ்ச்சிகளுக்கும் சரி இவரே சலிக்காமல் மொழி பெயர்ப்பாளராக இருந்தார். இதனால் எங்களுக்குள் ஆழமான கருத்துப் பரிமாற்றங்கள் நடந்தன.
எனக்கும் ஆசாத்துக்குமான உறவு ஆசான், அடுத்து தோழராக வளர்ந்து இறுதியில் கடுமையான மாறுபாடு கொண்டவர்களாக மாறியது. ஆனால், மூர்த்தியுடனான உறவு முதலில் இருந்து இறுதிவரை தோழமையாகவே இருந்தது. எங்களுக்குள் கருத்துக்கள் பெரும்பாலும் உடன்பாடாகவே இருந்தன. நான் மக்கள் யுத்தக் கட்சியில் செயல்பட்ட காலத்தில் எனது முதன்மைத் தோழர் மூர்த்தியே ஆவார்.
ஒரு தவறான வழி மாபெரும் இழப்பை ஏற்படுத்தி உள்ளது. மகத்தான தலைவனை, மாபெரும் அறிவுஜீவியை, சிறந்த களப்பணியாளனை புரடசிகர முகாம் இழந்துவிட்டது. இது ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.
தோழர் அஜிதா
தோழர் அஜிதாவின் குடும்பப் பின்னணி அரசியல் பின்புலம் கொண்டது. அவரது பெயரே அவர் எம். எல் பின்னணி கொண்டவர் என்பதைப் புலப்படுத்தும். அவரது தந்தை பரந்தாமன் இறக்கும்வரை மக்கள் யுத்தக் கட்சியில் இருந்தவர். இதனால் மகளையும் அரசியல் ரீதியாக வளர்த்தார். அஜிதாவை வளர்த்ததில் முக்கிய பங்காற்றியவர் தியாகி தோழர் ரவீந்திரன் ஆவார்.
சட்டப் படிப்பை முடித்த அஜிதா நீதிமன்றத்தில் செயல்பட மறுத்து முழுநேர ஊழியரானார். தமிழ்நாடு பெண்ணுரிமைக் கழகத்தில் செயல்படட அஜிதா அதன் பொதுச் செயலரானார். ஊத்தங்கரை மோதலை ஒட்டி த. பெ. க. தடை செய்யப்படட பொழுது அஜிதா தலைமறைவானார். இதற்குப் பிறகு இவரது செயல்பாடுகளைப் பற்றி எனக்குத் தெரியாது.
இவரது சிறப்பம்சங்களில் ஒன்று அரசியல் அமைப்பில் உறுதிப்பாடு ஆகும். இதற்கு நல்ல எ-டு இவரது சொந்த வாழ்க்கை ஆகும். இவருக்கு வாழ்க்கை ஒப்பந்தம்[திருமணம்] நிச்சயமானது. சிறிது காலம் கழித்து அவரது இணை அரசியல் வாழ்க்கையிலிருந்து விலக முடிவு செய்தார். அஜிதா அவருடன் செல்ல மறுத்து விடடார். வாழ்க்கை ஒப்பந்தத்தை ரத்து செய்தார் [ஏன் இதைக் குறிப்பிடுகிறேன் என்றால் 99. 9% பெண்கள் தங்களது இணையுடன்[ஆண் ] சென்று விடுகின்றனர்]. தனது சொந்த வாழ்க்கையை இறுதிவரை அரசியல் அமைப்புடன் பிணைத்துக் கொண்டு உறுதியுடன் வீரமரணம் அடைந்த தோழர் அஜிதாவைப் போற்றுவோம்!
தோழர் மூர்த்தியைப் போற்றுவோம்!

»»  (மேலும்)

11/26/2016

தோழரே -   எம்  சிரந்தாழ்த்தி வணங்குகின்றோம்

Résultat d’images pour fidel castroகியூபா புரட்சியின் தந்தையும் கியுபாவின் முன்னாள் அதிபருமான ஃபிடல் காஸ்ட்ரோ காலமானார். அவருக்கு வயது 90. 


"கியுபப் புரட்சியின் தலைமைத் தளபதி வெள்ளிக்கிழமை இரவு 10.29 (இந்திய இலங்கை நேரப்படி சனிக்கிழமை காலை 9 மணி) மணிக்கு காலமானார்’’, என்று அவரது சகோதரரும் கியுப அதிபருமான ரவுல் காஸ்ட்ரோ அறிவித்திருக்கிறார்.

ஃபிடல் காஸ்ட்ரோ கியுபாவை சுமார் 50 ஆண்டுகளுக்கு கம்யூனிச பாதையில் மக்கள் நல அரசாக ஆண்டு வந்தார். அவரது சகோதரர் ரவுல் காஸ்ட்ரோ 2008ல்தான் அவருக்கு அடுத்த அதிபராகப் பதவியேற்றார்.

மிகவும் சோகமான முகத்துடன் கியுபா அரச தொலைக்காட்சியில் எதிர்பார்க்கப்படாத பின்னிரவு ஒளிபரப்பில் இந்த அறிவிப்பை ரவுல் காஸ்ட்ரோ செய்தார்.
ஃபிடல் காஸ்ட்ரோவின் இறுதிக்கிரியைகள் சனிக்கிழமை நடக்கும் என்றும் அவர் அறிவித்தார்.
ஃபிடலின் மறைவையொட்டி கியூபாவில் பல நாட்கள் துக்கம் அனுஷ்டிக்கப்படும்.
அவ்வப்போது அவர் எழுதி வந்த பத்திரிகை கட்டுரைள் தவிர, ஃபிடல் காஸ்ட்ரோ அரசியல் வாழ்விலிருந்து ஏறக்குறைய ஓய்வு பெற்ற நிலையிலேயே இருந்தார்.

கடந்த ஏப்ரல் மாதத்தில் , நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சி காங்கிரஸின் கடைசி நாளன்று, ஃபிடல் , அபூர்வமாகத் தோன்றி உரையாற்றினார்.

கியூபாவில் 1959 இல் புரட்சியை வழிநடத்தி புல்ஜென்சியோ பாட்டிஸ்ட்டாவின் அரசை வீழ்த்தி தலைமை அமைச்சர் பொறுப்பை ஏற்ற காஸ்ட்ரோ ,1959 முதல் 1976 வரை கியூபாவின் பிரதமராகவும், 1976 முதல் 2008 வரை ஜனாதிபதியாகவும் பொறுப்பு வகித்தார்.
கியூபாவின் பொதுவுடைமைக் கட்சியின் முதல் செயலாளராக 1965 இல் பதவியேற்ற இவர் கியூபாவை ஒற்றைக் கட்சி சமூகவுடைமைக் குடியரசாக்கினார். 49 ஆண்டுகள் கியூபாவை ஆட்சி செய்த காஸ்ட்ரோ பெப்ரவரி 24. 2008 ஆம் திகதி பதவியிலிருந்து விலகினார்.
உலகத்தில் நீண்ட காலத்துக்கு தலைமைப் பொறுப்பில் இருந்த தலைவர் காஸ்ட்ரோ மட்டுமே. சர்வதேச அளவில், காஸ்ட்ரோ 1979ல் இருந்து 1983 வரை மற்றும் 2006 முதல் 2008 வரை, அணி சேரா இயக்கத்தின் பொதுச் செயலாளராக இருந்துள்ளார்.
அமெரிக்காவில் இருந்து 93 மைல் தூரத்தில் இருந்தாலும் கியூபாவை ஒரு சோசலிச நாடாகப் பேணிய பெருமை இவரைச் சாரும். இதைவிட ரஷ்யா-அமெரிக்க பனிப்போர் நடந்த வேளையில் இவர் ரஷ்யாவுக்கு சாதகமாகப் பல பணிகளைச் செய்தார்.
15 ஆம் நூற்றாண்டில் ஸ்பானிய கொலனித்துவத்தின் கட்டுப்பாட்டில் வந்த கியூபா, 1895 இல் சுதந்திரமடைந்தது. அதைத் தொடர்ந்து அமெரிக்காவின் ஆதிக்கத்துக்குட்பட்ட பொம்மை அரசுகளால் ஆளப்பட்டு வந்தது. 19 ஆம் நூற்றாண்டிலும் 20 ஆம் நூற்றாண்டின் முன்னரைப் பகுதியிலும் இலத்தீன் அமெரிக்க நாடுகள் குறிப்பாக மத்திய அமெரிக்கா மற்றும் கரிபியன் தீவு நாடுகள் 'வாழைப்பழக் குடியரசுகள்' என அழைக்கப்பட்டன. அமெரிக்க வாழைப்பழக் கம்பெனிகள் இந்நாடுகளில் மிகப்பெரிய முதலீடுகளைச் செய்து வாழைப்பழத் தோட்டங்களைப் பேணி வந்தன. அவ்வரசுகளைக் கட்டுப்படுத்தும் வல்லமை பொருந்தியதாக இக்கம்பெனிகள் இருந்தன. இந்நாடுகளில் உள்ள மக்கள் மோசமான சுரண்டலுக்கு ஆளாகினார்கள். கியூபாவும் இதற்கு விலக்கல்ல.
1933 இல் கியூப ஜனாதிபதியாக இருந்த ஜெராடோ மச்சாடோவிற்கு எதிரான இராணுவப் புரட்சியில் முக்கிய பங்காற்றிய பல்ஜென்சியோ பட்டீஸ்டா இராணுவத்தைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதன் ஊடாக தொடர்ச்சியாக தெரியப்பட்ட ஜனாதிபதிகளை ஆட்டிப் படைப்பவராக விளங்கினார். 1940 இல் ஜனாதிபதியாகிய பட்டீஸ்டா தனது பதவிக்காலம் முடிந்தவுடன் 1944 இல் அமெரிக்காவிற்குச் சென்றார். 1952 இல் மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட நாடு திரும்பிய பட்டீஸ்டா, தேர்தல் தனக்கு சாதகமாக அமையாது என்பதைத் தெரிந்து இராணுவப் புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றினார். பட்டீஸ்டாவின் கொடுங்கோலாட்சியில் 20,000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள்.
1953 ஜுலை 26 இல் பிடல் காஸ்ட்ரோவும் 135 தோழர்களும் கியூபாவின் மொன்கடா இராணுவத் தளத்தை தாக்கி பட்டீஸ்டாவுக்கு எதிரான போராட்டத்தைத் தொடங்கினர். ஆனால் அத்தாக்குதல் தோல்வி கண்டதுƒ பலர் கொல்லப்பட்டனர். பிடல் காஸ்ட்ரோ, அவர் தம்பி ராகுல் காஸ்ட்ரோ உட்பட ஒன்பது பேர் நீதி மன்றத்தில் விசாரிக்கப்பட்டு, சிறைவைக்கப்பட்பட்டனர். பிடல் நீதிமன்றத்தில் தானே தமக்காக வாதாடினார். அப்போதே அவர் 'வரலாறு என்னை விடுதலை செய்யும்' என்ற புகழ்பெற்ற உரையை நிகழ்த்தினார். ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட காஸ்ட்ரோவும் ஏனையோரும் மக்களின் கடும் எதிர்ப்புக் காரணமாக 1955 இல் விடுதலை செய்யப்பட்டனர்.
விடுதலை செய்யப்பட்ட பின்னர் மெக்சிக்கோ சென்ற காஸ்ற்;ரோ, அடுத்த கட்டப் புரட்சிக்குத் தயாரிப்பு செய்தார். அங்கேதான் ஏனஸ்ட் சேகுவேராவின் அறிமுகம் கிடைத்தது. இவர்கள் தமது இயக்கத்துக்கு 'யூலை 26 இயக்கம்' எனப் பெயரிட்டனர். 1955 இன் டிசெம்பரில் மெக்சிக்கோவிலிருந்து கிரான்மா என்ற படகில் கியூபாவின் சியாரா மெஸ்திரா மலைப் பகுதிக்கு வந்து சேர்ந்தனர்.
அங்கிருந்து நாட்டில் மீண்டும் புரட்சிக்கான பன்முகத் தயாரிப்புகள் செய்யப்பட்டது. கெரில்லா யுத்தத்தை ஆரம்பித்த கிளர்ச்சியாளர்கள் மெதுமெதுவாக முன்னேறினர். மக்கள் ஆதரவு பெருகத் தொடங்கியது. 1958 டிசெம்பர் 31 ஆம் திகதி சர்வாதிகாரி பட்டீஸ்டா நாட்டை விட்டுத் தப்பி ஓடினார். 1959 ஜனவரி எட்டாம் திகதி 33 வயது நிரம்பிய பிடல் காஸ்ற்ரோவும் அவரது தோழர்களும் கியூபத் தலைநகர் ஹவானாவிற்குள் பிரவேசித்தனர். புரட்சி வெற்றியடைந்தது.
கியூபப் புரட்சி உலக வரலாற்றின் திசைவழியை மாற்றிய முக்கியமான ஒரு நிகழ்வாகும். 1917 ஆம் ஆண்டு லெனின் தலைமையில் நடந்தேறிய ரஷ்யப் புரட்சிக்குப் பின்னர் உலகமே திரும்பிப் பார்த்து, நம்பிக்கை கொண்ட ஒரு நிகழ்வு கியூபப் புரட்சியாகும்.                            
»»  (மேலும்)

விலை போனாரா வியாழேந்திரன் ? பதவியின் பின்னணி என்ன ?   

Résultat de recherche d'images pour "வியாழேந்திரன்"
நிமல் தனபாலன் Afficher l'image d'origine

எமது நாட்டில் நிலவும் நல்லாட்சியின்... அடுத்த சமிக்கை மட்டக்களப்பு தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரை ஐக்கிய நாடுகளின் அபிவிருத்திக்கான திட்டமிடலின் இலங்கைக்கான குழுவில் இணைத்து கொண்டதேயாகும் .

ஆம் நல்ல விடயம் தானே அதற்கும் தலைப்புக்கும் என்ன தொடர்பு என நீங்கள் சிந்திக்க கூடும் அதே சிந்தனையோடு கூட வருவதே சந்தேகமும் கூட. காரணம் கூட்டமைப்பு கட்சிக்கு வழங்கிய எதிர் கட்சி தலைவர் பதவியும் அவரின் செயல்பாடும் இவ்வாறான பதவிகள் வழங்க
படுவதிலும் பின்னர் அவர்களின் செயற்பாடுகளினாலுமே இவ்வாறான சந்தேகங்கள் எழுகின்றன .

அமைக்கப்பட்ட இக் குழுவில் இணைக்கப்பட்டுள்ளவர்கள்   (மலையகத்துக்கு ராதாகிருஷ்ணனும் ஆளும் அரசின் நேரடி அல்லது மறைமுக செயல்பாட்டளர்கள்) ஆனால் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் வியாளேந்திரன் யார் ? எதற்காக வழங்கப்பட்ட்து ? என்பதே இப்போ இருக்கும் சந்தேகம் .

ஆனால் ஒருபுறம் வியாழேந்திரன் முன்னெடுக்கும்   திட்டமிட்ட சிங்கள குடியேற்றத்துக்கு எதிரான துணிச்சலான நடவடிக்கைகளும் வெளியிடுகின்ற காரசாரமான அறிக்கைகளும் தொடர  அதே வேளையில் மறுபுறம் இப்படியான பதவி அவரை நோக்கி வருவதே இவ்வாறான சந்தேகங்கள் வலுப்பெற காரணமாக அமைகின்றன .

தமிழர்கள் செறிந்து வாழும் மட்டக்களப்பு மாவட்டத்தில்   ஒரு தமிழருக்கு முழு மாவட்ட அபிவிருத்தி தலைவர் பதவி கொடுக்க முடியாத நல்லாட்சி அரசு, கிழக்கின் திருகோணமலை அம்பாறை போன்ற மாவட்டங்களுக்கு வழங்காமல் இந்த ஐ.நா பதவியை மட்டக்களப்பு மாவட்டத்துக்கு கொடுப்பதே சந்தேகத்துக்கான காரணம் ஆகும்.

 அம்மாவட்டங்களில் சிங்கள குடியேற்றத்துக்கு எந்த தடையும் இல்லை.
நமக்கு முன் உதாரணமாக உள்ள எதிர் கட்சி தலைவர் பதவிக்கு விலை போனது போல ஐக்கிய நாடுகளின் உதவியால் மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ள இருக்கும் சிங்கள குடியேற்றத்துக்கான தடைக்கல்லை அகற்றும் ஒரு மாற்றிடாகவும் இருக்கலாம் .

ஆகவே இனி வரும் காலங்கள்தான் பதில் சொல்லும் வியாளேந்திரன் விலை போய் விட்டாரா இல்லயா என்பதை பொறுத்தித்திருந்து பார்ப்போம்


»»  (மேலும்)

11/24/2016

பாரம்பரிய மாமூல் அரசியலில் இருந்து முஸ்லிம் சமூகம் விடுபடவேண்டும்


*எம்.ஏ.எம் முர்ஸித்* .
Afficher l'image d'origine

சுமார் 33 வருடங்களுக்கு மேலாக நாம் ஏதோ ஒருவகையில் அரசியல் மடையர்களாகவே ஆக்கப்பட்டிருக்கிறோம். ஆனாலும் அதன் முதல் அரை காலப்பகுதி பயங்கரவாதச்சூழல், முஸ்லிம்கள் மீதான அத்துமீறல்கள் , உரிமை மீறல்கள் தொடர்பாக இலங்கையின் உயரிய அதிகார சபையான பாராளுமன்றத்தில் முஸ்லிம் மக்களுக்கான தனித்துவ அரசியல் அடையாளத்துடனான குரலுக்கான தேவை இருந்தது.

இதன் காரணமாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தோற்றம் பெற்றது. அதனை அடிமட்ட மக்கள் கூட கண்ணீரும், செந்நீரும் சிந்தி அதை வளர்த் தெடுத்தனர். ஆனாலும் பின்னைய காலப்பகுதியில் இஸ்தாபகர் மர்ஹூம் அஸ்ரப் அவர்களின் மரணத்தைத் தொடர்ந்து வந்து தலைமையை கையில் எடுத்த அமைச்சர் ஹக்கீம் அவர்களால் முஸ்லிம் அரசியல் களம் தடம்புரட்டப்பட்டது,

இது ஹக்கீம் எனும் தனிமனித இருப்பிற்காகவும், அவரது ஆசா பாசங்களுக்காகவும் அறிந்தும் அறியாமலும் நடந்த சம்பவங்களாகவே கருதமுடியும், அன்றைய காலகட்டத்தில் மு.கா வின் கடிவாளமாக இருந்த கலாநிதி இனாமுல்லா மசூதின் உட்பட பலரது வெளியேற்றம், தாருசலாம் சொத்துவிவகாரம், பேரியல் அஷ்ரப் -அமான் அஸ்ரப் விவகாரம் மட்டுமல்லாமல் "இது எனது தனிப்பட்ட விடயம்"என்று முஸ்லிம் சமுதாய தலைமையாக இருந்த கட்சியின் தலைமை அமைச்சர் ஹக்கீமினாலும் அவரின் ஜால்ராக்களாலும் மூடி மறைக்கப்பட்ட விடயங்கள் போன்றவைகளால் கட்சியில் பிளவுகள் ஏற்பட்டன.

காலப்போக்கில் முஸ்லிம்கள் மத்தியில் தங்களின் ஏகவோக அரசியல் கட்சி ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் எனும் நிலை மாறி முஸ்லிம் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பல கட்சிகள் தோற்றம் பெற்றன.


அதன் தொடர்ச்சியில்   அரசியல் அதிகாரம் தொடர்பிலும் அபிவிருத்தி தொடர்பிலும் உரிமைகள் தொடர்பிலும் தேசிய மற்றும் சர்வதேச ரீதியாக செயல்படக்கூடிய இன்னுமொரு புதியஅரசியல் போக்கு அவசியமாகியுள்ளது. அது பாசாங்கு , பசப்பு வார்த்தைகள் கலந்த  அரசியல் தெரிவிலிருந்து விலகி சத்திய மார்க்கத்தை முன்நிறுத்தி மக்களுக்காக சேவைகளை செய்யக்கூடிய பிரதிநிகளை தெரிவு செய்யும்  வண்ணம் உருவாக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக இலங்கை முஸ்லிம் அரசியலின் இதயமாக பார்க்கப்படும் அம்பாறை மாவட்டத்தின் அபிவிருத்தியை ஏனைய பகுதிகளின் அபிவிருத்திகளோடு ஒப்பிட்டு பார்க்கும் போது நாம் இவ்வளவு காலமும் சிலரது ஆடம்பர வாழ்க்கைக்கும், சல்லாபங்களுக்கும் அவற்றை தக்கவைத்துக் கொள்வதற்குமாக பயன்படுத்தப்பட்ட- பயன்படுத்தப்படுகின்ற பகடைக்காய்களாகவே கையாளப்படுகிறோம் என்பது தெட்டத்தெளிவாக தெரியக்கூடிய விடயமாகும்.

அமைச்சர் ஹிஸ்புல்லா தனி மனிதராக நின்று காத்தான்குடி நகரை அபிவிருத்தி செய்த அளவில் , அமைச்சர் ரிசாட் வடக்கு மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பிலும், அபிவிருத்தி தொடர்பிலும் செயற்பட்ட அளவில் முஸ்லிம் மக்களின் பேரியக்கம் என்று கூறப்படும் கட்சி, அதன் 4 மாகாண சபை உறுப்பினர்கள், மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள், அதி சக்திவாய்ந்த கெபினேட் அமைச்சர், சர்வதேச அரங்கில் இலங்கை முஸ்லிம் மக்களின் தேசிய தலைமை என்ற முகமூடி, எல்லாவற்றுக்கும் மேலாக பேரம் பேசும் சக்தி என பல ஆயுதங்கள் இருந்தும் அடிக்கல் நாடகங்களை தவிர சமூக உரிமை மற்றும் அபிவிருத்தி தொடர்பில் பெரிதாக ஏதும் நடந்தபாடில்லை.

வருகின்றன தேர்தல்களிலாவது கடந்தகால பாட்டு அரசியல் போன்ற பாரம்பரிய மாமுல் அரசியல் சிந்தனையில் இருந்து விடுபட்டு,கடந்தகால கசப்பு உதாரணங்களை படிப்பினையாகக் கொண்டு மாற்று அரசியல் சிந்தனையை முன்நிறுத்தி சரியான தெரிவுகளை மக்கள் மேற்கொள்ளவேண்டும். இவ்வாறான அரசியல் மறுமலர்ச்சி சிந்தனைக்கு இளைஞர்கள் மூலகாரணமாக அமைவது குறித்த மறுமலர்ச்சி நீடித்த ஆரோக்கியத் தன்மையுடனான மாற்றத்திற்கு வழிவகுக்கும் என்பதில் ஐயமில்லை.


»»  (மேலும்)

11/23/2016

பாரிஸில் வாள்வெட்டு ???

Afficher l'image d'origine2009 இன் போராடாமல் பெயர் வாங்கும் புலம்பெயர் புலிகள் அடிக்கடி


வாள்வெட்டு சம்பவங்களில் ஈடுபட்டார்கள்..........
 காரணம் உண்டியல்.......
ஒவ்வொரு முறையும் கொலைகளும் ,,வாள்வெட்டும் நடக்கும் போது கோத்தபாய அவர்களே காரணம் என்று சொல்லி வந்த சருகு புலிகள் ????
.இப்போது தான் முதன் முதலில் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி உள்ளார்கள்...
 யாழ்ப்பாணத்தில் நடக்கும் வாள்வெட்டுக்கு இலங்கை அரசு தான் காரணம் என்று சொல்லிவரும் அரசியல் ஆய்வாளர்கள்!!!!!!லண்டன் ,,கனடா, பாரிஸ் போன்ற நகரங்களில் இதுவரை பல வருடங்களாக பலர் கொல்லப்பட்டும்,,2000 பேருக்கு மேல் பலமான காயங்கள் பட்டும் இருக்கிறார்கள்.....
2009 இன் பின் யாழில் வாள்வெட்டு ஆரம்பிக்கும் முன்னமே புலம்பெயர் தேசங்களில் பிணங்கள் குவிய தொடக்கி விட்டது. இன்று யாழில் நடக்கும் வாள்வெட்டு புலம்பெயர் தேசத்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டதே....https://www.facebook.com/?ref=tn_tnmn
»»  (மேலும்)

கொலம்பியா அரசு - ஃ பார்க் குழு இடையே நாளை ஒரு புதிய அமைதி ஒப்பந்தம் கையெழுத்து

நாளை (வியாழக்கிழமையன்று) ஃ பார்க் போராளிகள் குழுவுடன் ஒரு புதிய அமைதி ஒப்பந்தத்தில் தாங்கள் கையெழுத்திடவுள்ளதாக கொலம்பிய அரசு கூறியுள்ளது.
புதிய அமைதி ஒப்பந்தத்தை வரவேற்கும் ஆதரவாளர்கள்
முன்னதாக கொலம்பியா அரசுக்கும், ஃ பார்க் போராளிகள் குழுவுக்கும் இடையே கையெழுத்தான ஒரு அமைதி ஒப்பந்தம் மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில் நிராகரிக்கப்பட்டது.
நாளை கையெழுத்தாகவுள்ள இந்த புதிய அமைதி ஒப்பந்தத்தில், 50 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்த மோதல்களில் நடந்த மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட போராளிகளை தண்டிப்பதில் போதிய அளவு கடுமை காணப்படவில்லை என கொலம்பியாவில் உள்ள எதிர்க்கட்சிக் குழுக்கள் தெரிவித்துள்ளன.
ஆனால், இனி மேலும் பேச்சுவார்த்தைக்கு இடமில்லை என்று தெரிவித்துள்ள கொலம்பியா அதிபர் ஜுவான் மானுவேல் சாண்டோஸ், இந்த புதிய ஒப்பந்தம் குறித்து நாட்டின் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படுமென்றும் மக்களின் கருத்தறியும் வாக்கெடுப்புக்கு இந்த முறை வாய்ப்பில்லை என்றும் தெரிவித்தார்.
»»  (மேலும்)

புகழ்பெற்ற கர்நாடக இசைப் பாடகர் பாலமுரளி கிருஷ்ணா காலமானார்

bala_murali_krishnaபுகழ்பெற்ற கர்நாடக இசைப் பாடகர் பாலமுரளி கிருஷ்ணா காலமானார். இவருக்கு வயது 86. பத்ம விபூஷன், செவாலியே விருது பெற்றுள்ளார்.
2 முறை தேசிய விருதும் பெற்றுள்ளார். இவர் கர்நாடக சங்கீதத்தில் ஏராளமான கீர்த்தனைகள் இயற்றியுள்ளார். திரைப்படபாடல்களும் பாடியுள்ளார்.
இளையராஜாவின் இசையில் சின்ன கண்ணன் அழைக்கிறான் என்ற பாடலையும் பாடியுள்ளார். பாரம்பரிய இசைத்தனம் சிறிதுமில்லாத ஒரு மெல்லிசைப் பாடலை முதன்முதலில் திரையிசையில் பாட வைத்தது இளையராஜாதான் என்பது மறுக்க முடியாத உண்மை.
இதேபோல் திருவிளையாடல் படத்தில் பாடிய ஒரு நாள் போதுமா உள்ளிட்ட  பாடல்கள் மிகவும் பிரபலம். 
இதுவரை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் பல பாடல்கள் பாடியுள்ளார்.
400 படங்களுக்கு இவரே இசையமைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 1930ம் ஆண்டு ஆந்திர மாநிலம் சங்கர குப்தம் என்ற ஊரில் பிறந்த இவர் தனது 6 வயதில் இசைப் பயணத்தை தொடர்ந்தார்.
சில காலம் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவர் இன்று சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்
»»  (மேலும்)

11/22/2016

கற்றதையும் பெற்றதையும் அறிவார்ந்த தளத்தில் சமூகத்திற்காக பயன்படுத்திய பேராசிரியை சித்திரலேகா மௌனகுரு! * முருகபூபதி

திரும்பிப்பார்க்கின்றேன்

முருகபூபதி (நன்றி அக்கினி குஞ்சு)

பெண்களது இலக்கிய மரபை நிறுவுதல் என்பது எப்பொழுதும் சவால்களை எதிர்கொள்வதாகவே இருக்கிறது. பல இடைவெளிகள், கேள்விகள் என்றும் இருந்துகொண்டே உள்ளன.
Résultat de recherche d'images pour "சித்திரலேகா மௌனகுரு"
சங்க இலக்கியம் தொட்டு இன்றுவரை இந்நிலை தொடர்கிறது. சங்கப்பாட்டுகளில் எத்தனை பெண்களுடையவை…? சங்கப்புலவர்களில் எத்தனைபேர் பெண்கள்…? என்ற மயக்கம் இன்னும் முற்றாகத் தீர்ந்து விடவில்லை. பெயர் தொடர்பான மயக்கமே இது. ஆணா? பெண்ணா? என்கிற மயக்கம் தற்காலம் வரை தொடர்கிறது.”

பேராசிரியை சித்திரலேகா மௌனகுரு, 2007 ஆம் ஆண்டு வெளியான பெயல் மணக்கும் பொழுது ( ஈழத்துப்பெண் கவிஞர்கள் கவிதைகள் – தொகுப்பு அ. மங்கை) நூலுக்கு எழுதியிருந்த பின்னுரையில் மேற்கண்ட வரிகளைப்பார்க்கலாம்.
எஸ்.பொ.வுடன் இணைந்து நாம் தொகுத்த பனியும் பனையும் -புலம்பெயர்ந்தவர்களின் கதைத்தொகுப்பு வேலைகளிலும் எமக்கு இந்த மயக்கம் வந்தது. பல ஆண் எழுத்தாளர்கள் பெண்களின் பெயர்களில் இன்றுவரையில் எழுதிவருகிறார்கள். காலப்போக்கில் தொடர்ச்சியான வாசிப்பில் எழுதுவது பெண்களா, ஆண்களா என்பதை தெரிந்துகொள்கின்றோம்.
ஈழத்தில் பெண் எழுத்துக்களை குறிப்பாக இளம் தலைமுறை பெண்படைப்பாளிகளை எமக்கு அறிமுகப்படுத்தியிருக்கும், எம்மத்தியில் இன்றும் அயர்ச்சியின்றி இயங்கும் ஆளுமையான சித்திரலேகா மௌனகுரு அவர்களை சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் கொழும்பில் சந்தித்தேன். கலை, இலக்கியம், கல்வி மற்றும் ஊடகத்துறையில் ஈடுபாடுகொண்டிருந்தவர்கள் வாழ்ந்த ஒரு அழகிய மாடி வீட்டில்தான் சித்திரலேகா – மௌனகுரு தம்பதியரையும் கண்டேன்.
அந்த இல்லத்தை ஏற்கனவே எனது பத்திகளில் காவிய நயம் நிரம்பிய கலாசாலை என்றும் வர்ணித்துள்ளேன்.
கொழும்பு – பாமன் கடை என்னும் இடத்தில் அமைந்த அந்த வீட்டில் ‘அப்பல்லோ’ சுந்தா சுந்தரலிங்கம், மௌனகுரு, கவிஞர்கள் முருகையன், சிவானந்தன் குடும்பத்தினர் வசித்தனர். அடிக்கடி அங்கு இலக்கிய சந்திப்புகள் நடக்கும்.
நீர்கொழும்பில் ஏதும் இலக்கியக்கூட்டங்கள் ஒழுங்கு செய்யும்பொழுது அந்த இல்லத்திலிருப்பவர்களிடம் சென்றுதான் ஆலோசனைகள் பெறுவேன்.
அன்று முதல் இன்றுவரையில் அங்கிருந்தவர்களுடனான எனது நேசிப்புக்கு எந்தவொரு விக்கினங்களும் வந்ததில்லை. கலை இலக்கிய ஊடக உலகில் உறவுகள் ஆரோக்கியமாக நீடித்திருப்பது அபூர்வம் என்பதனால்தான் அவ்வாறு சொல்கின்றேன்.
சித்திரலேகா அக்காலப்பகுதியில் இலங்கை வானொலி கலைக்கோலத்தில் இலக்கிய உரைகளை நிகழ்த்தியபோது கேட்டிருக்கின்றேன்.
இவரது வானொலி ஊடகப்பிரவேசம் குறித்து ஜோர்ஜ் சந்திரசேகரன் தமது நூலிலும் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால், அந்தப்பதிவு சித்திரலேகாவின் ஆற்றல்களை மேன்மைப்படுத்தாமல், வளர்ந்துவரும் ஆளுமையை இனம்காணாமல் ஆணாதிக்க மனோபாவத்தில் எழுதப்பட்டிருந்தது.
இதுகுறித்து, அந்த நூலை எனக்கு வாசிக்கத்தந்த நண்பர் காவலூர் ராசதுரையிடமும் சொல்லியிருக்கின்றேன்.
பெயல் மணக்கும்பொழுது – அது வெளிவந்த ஆண்டின் (2007) இறுதியிலேயே எனக்கு படிக்கக் கிடைத்தது. பெண்கவிஞர்களின் கவிதைகளை தொகுப்பதில் நேரும் நெருக்கடிகள், அச்சங்கள் பற்றியெல்லாம் விரிவாகச் சொல்கிறார் அதனைத்தொகுத்திருக்கும் அ. மங்கை.
பெண்கள் குறித்து பெண்களுக்கு மட்டுமல்ல முழு உலகத்திற்கும் தயக்கம் நீடிக்கிறது.
பெண்கள் தாயாகவும் தாரமாகவும் இருக்கும்பொழுதும் நெருக்கடிகளை சந்திக்கிறார்கள். கல்வி, கலை, இலக்கியம், அரசியல், சமூகப்பணி, விழிப்புணர்வு – மனித உரிமை வேலைத்திட்டங்கள் முதலானவற்றில் ஈடுபடும்பொழுது அவர்கள் வசம் அதிகாரம் வந்துவிடக்கூடாது என்பதிலும் ஆணாதிக்க சமுதாயம் கவலைகொள்கிறது.
இந்தப்பின்னணிகளிலிருந்துதான் பேராசிரியை சித்திரலேகா மௌனகுரு அவர்களின் ஆளுமைப்பண்பிற்குரிய பின்புலத்தை அவதானிக்க முடிகிறது.
மகாகவி பாரதியின் வாழ்க்கைச் சரிதத்தை நோக்கினால், அவருடைய ஆளுமைக்கும் பெண் விடுதலைச் சிந்தனைகளுக்கும் சுதந்திரவேட்கைக்கும் பின்புலமாக நிவேதிதா தேவியிலிருந்து பலர் தொடர்ச்சியாக அவரில் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதைக் காணலாம்.
பாரதியின் கவிதை வரிகள் பலவற்றுக்கு பல ஆளுமைகள்தான் ஊற்றுக்கண். சித்திரலேகாவின் வளர்ச்சியிலும் இந்த அம்சங்களை காணமுடிகிறது.
வடபுலத்தில் சாதி ஆதிக்கத்திற்கு எதிராக குரல்கொடுத்த அவரது தந்தையின் கருத்தியல்களினால் சிறுவயதிலேயே ஆகர்சிக்கப்பட்டிருக்கும் இவர், பெற்றவர்கள் கிழக்கில் வாழத்தலைப்பட்டவேளையில், மட்டக்களப்பில் பிறந்து வின்சன்ட் மகளிர் கல்லூரியில் பயின்றவர். அங்கு தனது ஆசிரியைகளிடம் கல்வியை மாத்திரம் கற்றுக்கொள்ளாமல் பெண்கள் பற்றிய அறிவார்ந்த சிந்தனைகளையும் பெற்றவர்.
கல்லூரிப்பருவத்திலேயே தான் கற்றதையும் பெற்றதையும் அறிவார்ந்தவகையில் மூலதனமாக்கிய சித்திரலேகா, மௌனகுரு அவர்களை சந்தித்த பின்னர்– மார்க்ஸ், லெனின், ஏங்கல்ஸ் முதலானோரின் கருத்தியல்களிலிருந்து பெண்ணியம், குடும்பம், சொத்துடைமை, அரசியல், பொருளாதாரம் , ஒடுக்குமுறை, இனநெருக்கடிகள், சோஷலிஸ யதார்த்தப்பார்வை முதலான இன்னோரன்னவற்றையும் உள்வாங்கியிருக்கிறார்.
ஒருவருடைய ஆளுமையை பெரிதும் தீர்மானிப்பவர்கள்: பெற்றோர், ஆசிரியர், துணை, நண்பர்கள் வட்டம். சித்திரலேகாவும் இதற்கு விதிவிலக்கல்ல.
கொழும்பு பல்கலைக்கழகத்தில் பிரவேசித்தபின்னர், அவரிடத்தில் இலக்கியம், அரசியல், பெண்ணியம் சார்ந்த பார்வைகள் மேலும் ஆழமும் விரிவும் பெற்றிருக்கிறது.
பேராசிரியர் கைலாசபதி, குமாரி ஜயவர்தனா முதலானோரின் ஆளுகை இவரது ஆற்றல்களை வெளிப்படுத்தியும் நெறிப்படுத்தியுமிருக்கிறது.
நெதர்லாந்தில் சமூக விஞ்ஞானத்திற்கான நிறுவனத்தில் அபிவிருத்தி சம்பந்தமான கற்கை நெறியில் இணைந்து பெண்களும் அபிவிருத்தியும் என்ற பாட நெறியில் முதுகலை மாணி பட்டம் பெற்றிருக்கும் சித்திரலேகா, அங்கும் தனது விரிவுரையாளர்களிடமிருந்து அனைத்துலக பெண்களின் பிரச்சினைகளையும் , பல உலக நாடுகளில் பெண்கள் தொடர்பான கோட்பாடுகளையும் தெரிந்துகொள்கிறார்.
சித்திரலேகா, நியூயோர்க் பல்கலைக்கழகத்தின் அனுசரணையிலிருக்கும் ஹன்டர் கல்லூரியில் சுமார் ஒருவருடகாலம் தங்கியிருந்து ஆராய்ச்சிகள் மேற்கொண்டவர். இங்கு பாலஸ்தீனம், எல்சல்வடோர் முதலான நாடுகளைச்சேர்ந்த பெண்கள் அமைப்புகளின் பிரதிநிதிகளின் சேர்க்கையினால் பெண்ணிலைவாதம், புகலிடத்தில் பெண்களின் வாழ்வுக்கோலங்கள் பற்றியெல்லாம் மேலும் மேலும் புதிய கருத்தியல்களை பெற்றுக்கொள்கிறார்.
இவ்வாறு தனது அறிவையும் ஆற்றலையும் தொடர்ச்சியாக விரிவுபடுத்திக்கொண்டிருக்கும் இயல்பு அவரிடம் குடியிருப்பதனால்தான் நெருக்கடியான காலகட்டங்களிலும் தெளிவோடும் தீர்க்கதரிசனத்தோடும் அவரால் செயல்பட முடிந்திருக்கிறது.
நானறிந்தவரையில் அவர் முன்னேடுத்த சொல்லாத சேதிகள் கவிதைத்தொகுப்பு முயற்சி காலம் கடந்தும் பேசப்படுகிறது.sollathasethikal
மிகவும் நெருக்கடியான காலகட்டங்களில், குறிப்பாக போர்நெருக்கடிகளுக்கு மத்தியிலிருந்துகொண்டு ஈழத்து பெண் எழுத்துக்களை அறிமுகப்படுத்தினார். சித்திரலேகா 1986 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் பெண்கள் ஆய்வு வட்டத்தின் சார்பில் தொகுத்து வெளியிட்ட சொல்லாத சேதிகள் கவிதைத்தொகுப்பு இன்றும் இலக்கியப்பரப்பில் பேசுபொருளாகவே வாழ்கிறது.
அதில் இடம்பெற்ற சிவரமணி தற்கொலைசெய்துகொண்டார். செல்வி என்ற செல்வநிதி காணாமலாக்கப்பட்டார். ஒரு சிலர் நாட்டை விட்டே சென்றனர். சிலர் தற்பொழுது எழுதுவதும் இல்லை.
அ.சங்கரி, சிவரமணி, சன்மார்க்கா, ரங்கா, மசூரா ஏ.மஜிட், ஒளவை, மைத்ரேயி, பிரேமி, ரேணுகா நவரட்ணம், ஊர்வசி ஆகிய பத்துப் பெண்கவிஞர்களின் கவிதைகளின் தொகுப்பு சொல்லாத சேதிகள். இலங்கைத் தமிழ்ப்பெண் கவிஞர்களது முதலாவது கவிதைத் தொகுதி என்ற பெருமையும் அதற்குண்டு.
இலங்கையிலும் தமிழகத்திலும் மாத்திரமின்றி உலகின் எந்தப்பகுதியிலும் தமிழ்க்கவிதை தொடர்பாக நடைபெறும் மாநாடுகள், கருத்தரங்கு உரைகளிலும் – எழுதப்படும் ஆய்வுகளிலும் சொல்லாத சேதிகள் இடம்பெறுவது தவிர்க்க முடியாதது.
சித்திரலேகாவிடம் நாம் காணும் மற்றும் ஒரு சிறப்பியல்பு: அவருடைய இயங்குதளம். தானும் இயங்கி மற்றவர்களையும் இயங்கவைக்கும் தன்முனைப்பற்ற இயல்பு.
பேராசிரியர் கைலாசபதியிடத்திலும் இந்த இயல்பை நாம் அவதானித்திருக்கின்றோம். அவர் கொழும்பில் தினகரன்
பத்திரிகையில் ஆசிரியராக பணியாற்றியபோதும், யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழகம் அமைந்ததும் அதன் முதல் தலைவராக நியமனமானதன் பின்பும் அவரிடம் இந்த இயல்பின் செயலூக்கத்தை காணமுடிந்தது.
1976 இல், கைலாஸ் யாழ். பல்கலைக்கழகத்தில் முன்னின்று நடத்திய நாவல் நூற்றாண்டு ஆய்வரங்கு ஈழத்து இலக்கிய வளர்ச்சியில் ஒரு மைல்கல். இரண்டு நாட்கள் நடந்த அந்த ஆய்வரங்கில்தான் கொழும்பில் முன்னர் நான் சந்தித்த சித்திரலேகாவை மீண்டும் கண்டேன்.
சிவத்தம்பி, மௌனகுரு, நுஃமான், சிவநேசச்செல்வன், சண்முகதாஸ், சண்முகலிங்கம், மு. நித்தியானந்தன், துரை மனோகரன், நிர்மலா, ஏ.ஜே.கனகரத்தினா , கிருஷ்ணராஜா, நா. சுப்பிரமணியன் முதலான பலருடன் தமிழகத்திலிருந்து வருகை தந்திருந்த அசோகமித்திரனையும் இவர்களுடன் சித்திரலேகாவையும் அங்கு காணமுடிந்தது.
குறிப்பிட்ட ஆய்வரங்கு நிறைவு நாளையடுத்து நண்பர் டானியல் தமது இல்லத்தில் அனைவருக்கும் இராப்போசன விருந்துகொடுத்தார். அதில் பேராசிரியர் சண்முகதாஸ் மேசையில் தட்டி தாளம்போட்டு நாட்டார் பாடல்கள் பாடினார்.
சிலர் உரையாடிக்கொண்டிருந்தனர். அதில் இருவருக்கிடையில் வாக்குவாதம் வந்துவிட்டது. அதில் ஒருவர் – அக்காலப்பகுதியில் யாழ்.பல்கலைக்கழகத்தில் சித்திரலேகாவின் மாணவர்களில் ஒருவரான, பின்னாளில் கவிதையிலும் அரசியலிலும் ( சினிமாவிலும்தான்) பிரபல்யம் பெற்றவர். உணர்ச்சிவசப்பட்டு பேசத்தொடங்கினார்.
கைலாஸ் அவரை அமைதியாக இருக்கச்சொல்லியும் அவர் அசட்டைசெய்துகொண்டு தன்னை முன்னிலைப்படுத்த முயன்றார்.
உடனே சித்திரலேகா, அந்த மாணவ இளைஞரை உற்றுநோக்கி, பார்வையாலேயே அமரச்சொன்னதும், அவர் மறுபேச்சின்றி மௌனமானதும் எனக்கு அதிசயமாகப்பட்டது.
இவ்வாறு ஒரு விருந்தினர் சபையின் அழகை சித்திரலேகா அன்று பேணியதை என்னால் இன்றும் மறக்க முடியவில்லை.
யாழ். பல்கலைக்கழகம் பரமேஸ்வராக்கல்லூரியில் முன்னைய ஶ்ரீமா – என்.எம்., பீட்டர் முதலான தலைவர்கள்
இணைந்திருந்த கூட்டரசாங்கத்தால் அமைந்தபோது, தமிழர் தரப்பு அரசியல் தலைவர்கள் நடந்துகொண்ட விதம் விமர்சனத்திற்குரியது.
அத்துடன் இப்பதிவில் நான் மேலே குறிப்பிட்ட விரிவுரையாளர்களில் சிலரது பங்களிப்புடன் நிகழ்ந்த சமூக மாற்றங்கள் காலத்தின் தேவையாக உருவாகியதை பின்னாளில் அந்தத்தலைவர்களினால் உணரப்பட்டிருக்கும் என்றே நம்புகின்றேன்.
சித்திரலேகாவும் வேறும் சில ஆசிரியர்களும் மாணவிகளும் இணைந்து உருவாக்கிய பெண்கள் முன்னேற்றச்சங்கம், பெண்ணியம் சார்ந்த விழிப்புணர்வு வேலைத்திட்டங்களை முன்னெடுத்தது. அதிலிருந்து பெண்கள் ஆய்வு வட்டம் உருவாகியிருக்கிறது. இந்த வட்டத்தினால், மௌனகுருவின் சக்தி பிறக்குது, குழந்தை சண்முகலிங்கத்தின் தியாகத்திருமணம் முதலான நாடகங்கள் அரங்காற்றுகை கண்டுள்ளன.
அனைத்துலக பெண்கள் தினம் வருடாந்தம் மார்ச் முற்பகுதியில் வரும். இதனையிட்டு குறிப்பிட்ட பெண்கள் ஆய்வு வட்டம் ஆக்கபூர்வமான பணிகளை முன்னெடுத்திருக்கிறது.
பெண்கள் ஆய்வு வட்டம் அமைப்பு, அரங்காற்றுகை, நூல் வெளியீடு, கருத்தரங்கு முதலானவற்றை நிகழ்த்தியிருக்கிறது. இக்காலகட்டத்தில் வடக்கில் அன்னையர் முன்னணியும் தொடங்கப்பட்டது.
வடபுலத்தில் அக்காலத்தில் நீடித்த தேடுதல் வேட்டைகள், காணமல் போகும் படலம், தாக்குதல்கள் என்பன தென்னிலங்கை ஏடுகளில் செய்தியாகிக்கொண்டிருந்த வேளையில், சித்திரலேகாவும் மற்றும் பல பெண்களும் சோர்வின்றி இயங்கினார்கள். ஆயுதப்படையினரின் மனித உரிமை மீறல்களையும் கடல் வலயத்தில் உருவாகியிருந்த தடைச்சட்டங்களையும் கண்டித்து அன்னையர் முன்னணி பேரியக்கங்களையும் கவனஈர்ப்பு போராட்டங்களையும் நடத்தியது.
ஆயுதம் ஏந்திய தமிழ் விடுதலை இயக்கங்களுக்கிடையே தோன்றிய பிரச்சினைகளுக்காகவும் சம்பந்தப்பட்டவர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியது.
அன்னையர் முன்னணியை அமைதிகாக்க வந்த இந்தியப்படையினர் மௌனமாக்கினர். இறுதியில் அந்தப்படைவெளியேறியதும் பூரணி என்ற பெண்களுக்கான அமைப்பை வடக்கில் உருவாக்குவதில் சித்திரலேகா சிலருக்கு பக்கபலமாக இருந்திருக்கிறார். பாதிக்கப்பட்ட மக்கள் பக்கம் நிற்கும் இயல்பும்கொண்டிருந்த இவருக்கு, அந்த அமைப்பின் ஊடாக பல பெண்களுக்கும் உதவ முடிந்திருக்கிறது.
அதற்கும் தடை வந்தது. 1984 முதல் 1991 வரையில் சித்திரலேகா, தனது விரிவுரைப்பணிக்கும் இலக்கிய விமர்சனப் பிரதிகள் படைக்கும் எழுத்தூழியத்திற்கும் மொழிபெயர்ப்பு வேலைகளுக்கும் மத்தியில் சோர்வின்றி மேற்கொண்ட சமூக நலன்சார்ந்த இயக்கங்கள் பற்றி முறையாக ஆவணப்படுத்தப் படல்வேண்டும்.
எம்மை நாம் சுயவிமர்சனம் செய்துகொள்வதற்கு, கடந்துவந்த பாதையையும் திரும்பிப்பார்க்கவேண்டும். அப்பொழுதுதான் செல்லும் பாதையில் வெளிச்சம் தோன்றும்.
சித்திரலேகா, சர்வதேச ரீதியில் பல பெண்ணிய ஆளுமைகளுடன் இணைந்து பயின்ற அனுபவமும் – இலங்கையில் மூவினத்தையும் சேர்ந்த பெண்களுடன் இயங்கிய முழுமையான அனுபவமும் பெற்றவர்.
தென்னிலங்கையில் மனித உரிமை ஆர்வலரான சுனிலா அபயசேகரா , குமுதினி சாமுவேல், செல்வி திருச்சந்திரன், அன்பேரியா ஹனிபா, பவித்ரா கைலாசபதி, சர்வமங்களம் கைலாசபதி, ஔவை, ரெஜி டேவிட் , சாந்தி சச்சிதானந்தன், உட்பட பலருடனும் இணைந்து இயங்கியவர்.
தென்னிலங்கையில் இவர்களினால் உருவாக்கப்பட்ட சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையமும் காலப்போக்கில் கிழக்கிற்கு இடம்பெயர்ந்தது. இவை தவிர தேசிய மட்டத்தில் இயங்குகின்ற அரச சார்பற்ற தொண்டு நிறுவனங்களிலும் இணைந்திருப்பவர் இந்த அயற்சியற்ற ஆளுமை.
இறுதியாக இவர் தொடர்பான செய்தியும் எமக்கு கிட்டியிருக்கிறது.
இலங்கையில் புதிய அரசு பதவியேற்றதும் தொடங்கப்பட்டிருக்கும் நல்லிணக்கம் தொடர்பான செயலணியில் சித்திரலேகா இணைந்துள்ளார்.
இலங்கையில் நீடித்து முற்றுப்பெற்ற போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் மனித உரிமை மீறல்களுக்கு இலக்காகிய மக்களுக்காகவும், ஐ.நா. மனித உரிமைப்பேரவை நிறைவேற்றிய தீர்மானத்திற்கு அமைய இச்செயலணி தொடங்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் சித்திரலேகா பெற்றுக்கொண்ட அனுபவங்கள் அவரை எமது சமூகம் சார்ந்து, முக்கியமாக பெண்களிடத்தில் விழிப்புணர்வை வளர்ப்பதற்கு தூண்டியிருக்கிறது.
தனது வளர்ச்சியில் மற்றவர்களின் ஆளுகையை இன்றுவரையில் போற்றிவரும் சித்திரலேகா, தனது மாணாக்கரிடத்தில் தமது ஆளுகையை செலுத்தியிருப்பதையும் அவதானிக்க முடிகிறது.
யாழ். பல்கலைக்கழகம், கிழக்கு பல்கலைக்கழகம் ஆகியனவற்றில் இவரின் விரிவுரைகள் கேட்டுப்பயின்ற பல மாணவர்களிடம் இவரின் சிந்தனைத்தாக்கம் நீடித்திருக்கிறது.
பேராசிரியர் கைலாசபதியின் அபிமானத்திற்குரிய மாணவியான சித்திரலேகா, பேராசிரியர் பொன். பூலோகசிங்கத்தின் பாசத்திற்குரிய மாணவி. மற்றவர்கள் தன்னை சித்திரா என அழைப்பார்கள். ஆனால், பூலோகசிங்கம் சேர் எங்கு கண்டாலும் முழுப்பெயருடன்தான் விளிப்பார் என்று எனக்கு எழுதிய மின்னஞ்சலில் குறிப்பிட்டிருக்கிறார்.
பூலோகசிங்கம் அவுஸ்திரேலியா சிட்னியில் முதியோர் இல்லத்தில் அனுமதிக்கப்பட்டிருக்கும் செய்தியுடன் நான் எழுதிய பதிவை பார்த்துவிட்டு உடனடியாக அவருக்கு தமது அன்பைத்தெரிவிக்குமாறும் மேலும் தகவல் கேட்டும் எழுதியிருந்தார்.
இவருடைய இரண்டு மாணவிகளான தேவகௌரி, சூரியகுமாரி ஆகியோரிடம் கேட்டால், தம்மை விமர்சனத்துறையில் நெறிப்படுத்தியதில் சித்திரா மிஸ் அவர்களுக்கு முக்கிய பங்கிருக்கிறது என்பார்கள்.
” விமர்சனம் என்பது மேலோட்டமானது அல்ல. உன்னிப்பாக அவதானித்து எழுதப்படுவது. அந்த அவதானிப்பில் கூர்மை இருத்தல் வேண்டும் என்றும் சுருக்கமாகச்சொல்வதாயின் கழுகுப்பார்வை வேண்டும் என்றும் வலியுறுத்தி
பயிற்றுவித்தவர் அவர். எங்களுக்கு மிகவும் பிடித்தமான விரிவுரையாளர்தான் சித்ரா மிஸ் ” – என்று இவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
இவ்வாறு தான் கற்றவர்களிடமிருந்தும் கற்பித்தவர்களிடமிருந்தும் அபிமானம் பெற்றிருக்கும் சித்திரலேகா மௌனகுரு , பெண்களின் சமத்துவத்தை ஊக்குவித்தமைக்காக ஐ.நா.வின் அகதிகளுக்கான தூதுவர் அலுவலகத்தின் (U.N.H.C.R) விருதினையும் பெற்றவர்.
சித்திரலேகா, இருபதாம் நூற்றாண்டு ஈழத்தமிழ் இலக்கியம் என்னும் நூலை நுஃமான், மௌனகுரு ஆகியோருடன் இணைந்து எழுதியிருக்கிறார். கொழும்பில் இயங்கிய விபவி நிறுவனத்தினால் நடத்தப்பட்ட சுதந்திர இலக்கிய விழாவில் சமர்பித்த இலங்கைத்தமிழரின் புலம்பெயர் இலக்கியம் என்னும் ஆய்வையும் எமக்கு நூல் வடிவில் வரவாக்கியிருக்கிறார். 2010 இல் கவிதைகள் பேசட்டும் என்ற மற்றுமொரு கவிதைகளின் தொகுப்பினையும் வெளியிட்டுள்ளார்.
அத்துடன் சில மொழிபெயர்ப்பு நூல்களையும் எமது சமூகத்திற்காக தந்துள்ளார். இவர் எழுதியிருக்கும் பாரதியின் பெண்விடுதலை (இலக்கியம்-கருத்து-காலம்) பெண்ணிலைச்சிந்தனைகள் , பேரழிவுகளுக்கு பெண்கள் முகம் கொடுத்தல், உயிர்வெளி – கவிதைகள் (தொகுப்பு) டாக்டர் மேரி ரட்னம், (மொழிபெயர்ப்பு) முதலான நூல்கள் பற்றிய மேலதிக விபரங்களை நூலகம் இணையத்தளத்தில் படிக்க முடியும்.
நூலகர் செல்வராஜா தொகுத்திற்கும் நூல்தேட்டத்தில் காணமுடியும்.
சித்திரலேகாவிடம் கற்ற ஒரு மாணவர், இவரைப்பற்றி கலாநிதிப்பட்டத்திற்கான ஆய்வையும் மேற்கொண்டிருக்கிறார்.
தர்மசேன பத்திராஜாவின் இயக்கத்தில் வெளியான காவலூர் ராசதுரையின் பொன்மணி திரைப்படத்தில் பொன்மணியின் அக்காவாகவும் இவர் நடித்திருக்கிறார்.
பன்முக ஆற்றலும் ஆய்வறிவும் மிக்கவராக எம்மத்தியில் இன்றும் இயங்கிக்கொண்டிருக்கும் பேராசிரியை சித்திரலேகா மௌனகுரு அவர்கள் கடந்து வந்திருக்கும்
பாதை எமக்கு முன்மாதிரியானது. அதில் சர்வதேசியப்பார்வையே அகலித்திருக்கிறது
»»  (மேலும்)

ஏறாவூரில் முதன்முறையாக மேற்கொள்ளப்பட்ட காளான் உற்பத்தி வெற்றி


மட்டக்களப்பு, ஏறாவூரில் முதன்முறையாக காளான் உற்பத்தி வெற்றியளித்துள்ளதாக ஏறாவூர் விரிவாக்கல் பிரிவு விவசாயப்  விவசாயப் போதனாசிரியை எம்.எச். முர்ஷிதா ஷிரீன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு, ஏறாவூரில் முதன்முறையாக காளான் உற்பத்தி
ஏறாவூர் விவசாய விரிவாக்கல் பிரிவில் தெரிவு செய்ப்பட்ட பயனாளிகளிடத்தில் பரீட்சார்த்தமாக மேற்கொண்ட காளான் செய்கை அறுவடை, போதனாசிரியை எம்.எச். முர்ஷிதா ஷிரீன் தலைமையில், திங்கட்கிழமை (21) இடம்பெற்றது.
'21 நாட்களில், மிகக் குறைந்த உழைப்பிலும் செலவிலும் மேற்கொண்டு அறுவடையைப் பெற்றுக் கொள்ளக் இந்தக் காளான் செய்கை மூலம், அதிக இலாபத்தை ஈட்ட முடியும்' என்று முர்ஷிதா ஷிரீன் தெரிவித்தார்.
காளான் செய்கையை ஊக்குவிப்பதற்காக ஏறாவூரில் 5 பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டு, அவர்களுக்கு தலா 30 ஆயிரம் ரூபாய் பெறுமதியில் காளான் செய்கைக்கான அனைத்து உபகரணங்களும் காளான் விதைகளும் வழங்கப்பட்டதுடன், செய்கை வழிகாட்டல்களும் வழங்கப்பட்டிருந்தன.
»»  (மேலும்)

விபுலாநந்தருக்கு வந்த வினை

முத்தமிழ்வித்தகன் பிறந்த வீதியின் இன்றைய நிலை மிகவும் பரிதாபகரமாகவுள்ளது. காரைதீவு விபுலானந்த வீதியின் அவலநிலையையே இங்கு காண்கிறீர்கள். மழைகாலங்களில் வீதியில் வெள்ளம் தேங்கிநிற்பதும் மத்தியவீதியிலிருந்து இவ்வீதி ஆரம்பமாகும் இடத்தில் ஒரு குளம் இருப்பது போன்று வெள்ளம் தேங்கிநிற்பதும் வழமையாகிவிட்டது.

இவ்வீதியால் பயணிப்பவர்கள் படும் கஸ்ட்டம் சொல்லும்தரமன்று. எனவே சம்பந்தப்பட்டவர்கள் இதுவிடயத்தில் கவனஞ்செலுத்தவேண்டும் என பொது மக்கள் வேண்டுகோள்விடுக்கின்றனர்.


*நன்றி *படங்களும் தகவலும் சகா
»»  (மேலும்)

மாற்றுச் சிந்தனைகளுக்கு இடமளிக்கின்ற ஓர் அரசியல் கலாசாரம் கட்டியெழுப்பப்பட வேண்டும்”

தமிழ் சமூகத்தின் இறுக்கத்தன்மை நீங்கி,எதிர்காலத்தில் மாற்றுச் சிந்தனைகளுக்கு இடமளிக்கின்ற ஓர் அரசியல் கலாசாரம் கட்டியெழுப்பப்பட வேண்டும்” என தமிழர் மகா சபையின் செயலாளரும் பிரபல எழுத்தாளருமான செங்கதிரோன் த.கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

தமிழர் மகா சபையின் செயலாளரும் பிரபல எழுத்தாளருமான செங்கதிரோன் த.கோபாலகிருஷ்ணனின் “தமிழர் அரசியலின் மாற்றுச்சிந்தனைகள்” நூல் வெளியீட்டு விழா, ஞாயிற்றுக்கிழமை(20) மாலை மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், “ஒரு உண்மையான,நேர்மையான,வெளிப்படைத் தன்மையான அரசியல் தலைமைகள் உருவாக வேண்டும் என்ற காரணத்தினாலேயே இவ்வாறான நூலினை நாங்கள் வெளியிட்டுள்ளோம்.வேறு எந்த கட்சியையும் குறைகூறுவதற்காக அல்ல.மக்கள் இதனை உணர்ந்துகொள்ள வேண்டும். தமிழ் மக்களை சிந்திக்கவிடுகின்றார்கள் இல்லை. யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் என்ற அடிப்படையில் யாதார்த்தங்களை உணர்ந்து எமது அரசியல்முன்னெடுப்புகளை மேற்கொள்ளவேண்டும். ஓர் அரசியல் அந்த சமூகத்தின் சமூக பொருளாதாரத்தினை கட்டியெழுப்ப முடியாவிட்டால் அந்த அரசியலினால் சமூகத்துக்கு என்ன பிரயோசனம். தமிழ் மக்கள் தேர்தலில் வாக்களித்துவிட்டால் தமது கடமை முடிந்துவிட்டது என கருதுகின்றனர். ஜனநாயக ரீதியாக யாரும் யாருக்கும் வாக்களிக்கலாம்.ஆனால் வாக்களித்துவிட்டால் கடமை முடிந்துவிடமாட்டாது. அதன் பிறகும் அந்த தலைவர்கள் என்ன செய்கின்றார்கள் என்று தட்டிக்கேட்க வேண்டும். பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாட வேண்டும், விவாதிக்க வேண்டும். இவ்வாறான சமூகம் எங்களுக்கு வேண்டும் என்பதற்காகவே இந்த கலந்துரையாடல்களை நாங்கள் மேற்கொண்டுள்ளோம். இதுவேறு எந்த அரசியல் நோக்கமும் இல்லை” என்றார். “அரசியல் என்பது ஒரு விஞ்ஞானம்.வாக்குகளை சேகரிப்பது அரசியல் அல்ல. அந்த அரசியல் சமூகத்தினை கட்டியெழுப்பவேண்டும். அதற்காக சமூகம் விழிப்படைய வேண்டும் என்பதற்காகவே இந்த நூலினை உருவாக்கியுள்ளேன்” எனவும் குறிப்பிட்டார். 
»»  (மேலும்)

11/21/2016

நாடு எங்கே போகின்றது?-மத்திய வங்கி பிணைமுறி மோசடி: பிரதமர் பிரதான சூத்திரதாரி-

இலங்கை மத்திய வங்கி பிணைமுறி மோசடியில் பிரதான சூத்திரதாரி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவாகும். ஆகவே பிரதமர் ஆட்சி பொறுப்பில் இருக்கும் வரைக்கும் இது குறித்தான விசாரணை உரிய முறையின் பிரகாரம் இடம்பெறாது. இதற்கு தீர்வும் கிடைக்காது. எனவே பிரதமர் உடனடியாக பதவி விலக வேண்டும் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஒன்றிணைந்த எதிரணி பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார கோரினார்.
பாராளுமன்றத்தில் இன்று திங்கட்கிழமை 2017 ஆம் ஆண்டுக்கான வரவு –  செலவுத் திட்டத்தின் தேசிய கொள்கை மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு செலவினம் தொடர்பான குழு நிலை விவாதத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்;
சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு ஏற்ற வகையிலேயே பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பாதுகாப்பிற்கு கடந்த முறையை விடவும் நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது.
அது மாத்திரமின்றி ஐக்கிய தேசியக் கட்சி கொள்கையில் இதுவரையும் மாற்றமில்லை. அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்தல் கொள்கை இன்னமும் நடைமுறையில் உள்ளது. இலாபம் பெற முடியமான நிறுவனங்களை தான் தனியார் மயப்படுத்துகின்றார்கள்.
அத்துடன் அம்பாந்தோட்டை விமான நிலையத்தையும் துறைமுகத்தையும் விற்க முனைகின்றீர்கள். ஏன் இப்படி  செய்கின்றீர்கள். எமது வளங்களை பாதுகாத்து நாட்டை வளர்ச்சிக்கு உட்படுத்த முடியாதா? ஏன் மக்களின் சாபத்திற்கு உள்ளாகின்றீர்கள்?
அத்துடன் பிணைமுறி விவகாரத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவியில் இருக்கும் வரைக்கும் இதில் விசாரணை நிறைவு பெறாது. ஏனெனில் பிணைமுறி விவகாரம் தொடர்பில் பிரதான சூத்திரதாரி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவாகும். ஆகவே பிரதமர் உடனடியாக பதவி விலக வேண்டும். 
»»  (மேலும்)

ஐஎஸ் ஐஎஸ் இயக்கத்தில் இலங்கை முஸ்லிம்களில் சிலர்

கேள்வி -ஐஎஸ் ஐஎஸ் இயக்கத்தில் இலங்கை முஸ்லிம்களில் சிலர் இணைந்துள்ளதாகக் கூறப்படுகின்றதே?
பதில் - இதில் உண்மை இருக்கிறது என நான் நினைக்கவில்லை. இது மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் ஒரு கூற்றாகவே தெரிகிறது.
கேள்வி - நீதி அமைச்சரே அவ்வாறு கூறியிருக்கிறார்?
...
பதில் - அவர் நீதி அமைச்சரே அன்றி பாதுகாப்பு அமைச்சரோ, சட்டம், ஒழுங்கு பற்றிய அமைச்சரோ அல்ல. இதில் ஏதோ அரசியல் உள் நோக்கம் இருப்பதாகவே கருத வேண்டியுள்ளது.
தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்று சிங்கள ஊடகங்களுக்கு அளித்த பேட்டியிலிருந்து.
»»  (மேலும்)

11/20/2016

80 குடும்பங்களுக்கு சுயதொழிலுக்கு நிதிஒதுக்கீடு

தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சித்தலைவரும் கிழக்கு மாகாண  முதல் முதலமைச்சருமான சி.சந்திரகரந்தன் அவர்களின் நிதிஒதுக்கீட்டில் மட்டக்களப்பு நாவற்கேணி,சுவிஸ்கிராமங்களில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தினை இழந்திருந்த சுமார் 80 குடும்பங்களுக்கு சுயதொழிலுக்கு நிதிஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதனை 19.11.2016ம் திகதி கடைசியில் செயலாளர் பூ.பிரசாந்தன்,மகளிரணி தலைவி திருமதி.செல்வி மனோகர் போன்றோர் வழங்கி வைத்தனர்.

"செத்தும் சீர் கொடுத்தான் சீதக்காதி" என்பார்கள் அதுபோல கிழக்கின் முதல் முதல்வரான சந்திரகாந்தன் தற்போது சிறையிலிருக்கின்ற போதும் யுத்தத்தால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தினை இழந்திருக்கும் எண்பது குடும்பங்களுக்கு வாழ்வாதாரத்துக்கான தம்மாலான உதவிகளை செய்துள்ளார்.

சந்திரகரந்தன் அரசியல் பழிவாங்கல் காரணமாக கடந்த ஒரு வருடமாக எவ்வித விசாரணைகளுமன்றி பிணையும் மறுக்கப்பட்டு அவர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
»»  (மேலும்)

11/19/2016

கேவலமான தலைமைத்துவ சாயலை மக்கள் வெறுக்க ஆரம்பித்துவிட்டார்கள்

எம்.ஏ.எம் முர்சித்

Résultat de recherche d'images pour "ஹக்கீம்"இலங்கை முஸ்லிம்களின் ஏகபோகத் தலைமை நான் ” எனும் நிலையில் தன்னை அடையாளப்படுத்த முனையும் அமைச்சர் ஹக்கீம் அவர்கள் அதே மக்கள் இலங்கை பேரினவாத அமைப்புகளின் அடாவடி நெருக்கடிகளுக்கு மத்தியில் நிம்மதியாக வாழமுடியாத நிலை வெளிப்படையாக தெரிந்தும் கூட ஒரு இஸ்லாமிய சமூகத்தின் உண்மையான தலமைத்துவத்திற்கு எதுவித அருகதையும் அற்ற நபராகவே தன்னை வெளிப்படுத்திவருகிறார்.
போர்க்காலத்தில் கூட முஸ்லிம் மக்கள் அனுபவித்த இழப்புக்கள், வடக்கு முஸ்லிம்களின் வெளியேற்றம்-அவர்களின் மீள்குடியேற்றம், தர்கா நகர்கலவரம் , பள்ளிவாசல்கள் மீதான தொடர் தாக்குதல்கள், சிங்களப் பேரினவாத அமைப்புக்களின் அடாவடி அட்டகாசங்கள், முஸ்லிம்களின் பூர்வீக பகுதிகளில் அத்துமீறிய குடியேற்றங்கள்-சிலை வைப்புக்கள், முஸ்லிம் மக்களின் காணிப்பிரச்சினை, கரையோர மாவட்டக் கோரிக்கை, வடக்கு-கிழக்கு இணைப்பு விவகாரம், கிழக்கு மக்கள் மீதான தொடர் புறக்கணிப்பு, மர்ஹும் அஸ்ரப் அவர்களின் மரண விசாரணை மீதான பொடுபோக்கு மட்டுமல்லாமல் உட்கட்சிப் பூசல் , ஹராம் கலந்த வாழ்க்கை முறை என 17 வருடங்களாக தொடரும் பெருத்த பட்டியலுடன் தான்தான் முஸ்லிம் மக்களின் ஏகபோக தலமை என்ற பிரம்மையில் வலம் வருவது கேலிக்கூத்து பேலதான் பார்க்க முடியும்.

புனித குர் ஆன் , ஹதீஸ் என்பவற்றை மூலமாகக் கொண்டு நடாத்தப்படும் முஸ்லிம் மக்களின் அரசியல் பேரியக்கம் என்று பசப்பு மற்றும் போலி வார்த்தைகளால் சாதாரண மக்களைக்கூட மடையர்களா வழிநடத்த எத்தணை செய்யும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ஹக்கீம் அவர்களின் போலி முகத்திரை கிழியும் சம்பவங்கள் ஒன்றன்பின் ஒன்றாக நடந்துவருவதை பார்க்கும்போது மு.காவின் ஒட்டு மொத்த அழிவுக்கு மூலகாரணமாக இருக்கப்போவது அமைச்சர் ஹக்கீம் அவர்களே என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல தெட்டத்தெளிவாக அனைவராலும் புரிந்து கொள்ள முடியும்.

இவற்றுக்கு எடுத்துக்காட்டாக புத்தளம் கே.பாயிசின் வரவேற்பு நிகழ்வில் அமைச்சர் ஹக்கீம் அவர்களை செருப்புக்களால் தோரணம் செய்து வரவேற்பு செய்தமை , அதே கூட்டத்தில் ஒரு இஸ்லாமிய தலைவன் என்பதை மறந்து வடிவேலுவை விடவும் கேவலமான முறையில் வெகுளித்தனமாக படிப்பறிவு இல்லாத பாமரனுவிடவும் கீழ்த்தரமாக பேசியமை, வடபுல மக்களின் மனங்களில் என்று அழியாத இடம்பிடித்துள்ள மர்ஹும் நூர்தீன் மசூர் அவர்கள் மீதான வக்கிர வார்த்தைப் பிரயோகங்கள் மற்றும் சக அமைச்சர் ரிசாட் அவர்களை கீழ்தரமாக அவருடைய மண்ணிலேயே சித்தரிக்க முயற்றமை என்று தொடர் பட்டியலே இடமுடியும்.
எனவேதான் இவ்வாறான கேவலமான தலைமைத்துவ சாயலை மக்கள் வெறுக்க ஆரம்பித்துள்ளனர். இதன் பிரதிபலிப்பே கிழக்கின் எழுச்சியின் தோற்றமும் மு.கா.வின் தலைமைக்கு எதிரான தொடர் அழுத்தங்களும், ஏனைய முஸ்லிம் கட்சிகளின் புத்துயிர்ப்பு மட்டுமல்லாமல் எல்லாவற்றையும் மிகைக்கும் வண்ணம் அமைச்சர் ஹக்கீம் மீதான சாதாரண மக்களின் வெறுப்பு மனநிலையையும் காணமுடியும்.
இவற்றின் வெளிப்பாடே அமைச்சர் ஹக்கீம் அவர்கள் முஸ்லிம் பகுதிகளுக்குள் முன்னைய காலங்களைப் போன்று நடமாடவோ, பொதுக்கூட்டங்களில் பேசவோ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலைக்கு சிறந்த உதாரணம் மு.கா.வின் அசைக்கமுடியாத கோட்டையாக கருதப்பட்ட சாய்ந்தமருது பிரதேசத்தில் அண்மையில் அமைச்சர் ஹக்கீம் அவர்களுக்கு ஏற்பட்ட அவமானம் ஆகும்.

அங்கு மேடைக்கு பிரசன்னமாகியிருந்த அனைத்து மு.கா பிரமுகர்களும் பேசும்போது அமைதியாக இருந்த மக்கள் மு.கா.வின் தேசிய தலைவர் என்று கூறிக்கொள்ளும் அமைச்சர் ஹக்கீம் அவர்கள் பேசும்போது கூக்குரல் இட்டு அவரின் பேச்சை இடைநிறுத்தச்செய்து ஓடச்செய்தமையும் அதற்கு முன்னர் அமைச்சரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்குமுகமான கறுப்புக்கொடி மற்றும் போஸ்டர்கள் முக்கிய இடங்களில் காட்சிப்படுத்தப்பட்டமையும் குறிபிடமுடியும்.

இதனையோட்டியதாக கிழக்கில் மு.காவின் ஆதிக்கம் செறிந்திருந்த பல முக்கிய முஸ்லிம் கிராமங்களில் மு.கா மீதான நம்பிக்கை இன்மை அலையாக வெகுவாக பரவுகிறது. எனவேதான் இச்சந்தர்ப்பத்தை கிழக்கில் மு.கா வுக்கு அடுத்தபடியாக செல்வாக்குப் பெற்றுவரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பயன்படுத்துமாக இருந்தால் அடுத்துவரும் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபை தேர்தலை சிறப்பாக முகங்கொள்ள முடிவதோடு கிழக்கு மாகாண சபையின் ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாகவும் அது மாறமுடியும்.

நன்றி முகநூல்
»»  (மேலும்)

கால வெள்ளம் சுழித்து சென்று விட்டது.

Afficher l'image d'origineகால வெள்ளம் சுழித்து சென்று விட்டது.


நினைவுகள் அழிவதில்லை *தோழர் நாபா 65 வது பிறந்த நாள்


எந்த அறங்கள்- தார்மீக விழுமியங்கள் பிரதானமாக மானிட விடியலுக்குத் தேவையோ -அவசியமோ அதில் தோழர் நாபா உறுதியாகவும் தெளிவாகவும் நின்றிருந்தார்.
சமூகத்தின் எந்த பிரிவினர் மிகவும் பாதிக்கப்பட்டவர்களோ- சுரண்டப்படுபவர்களோ- ஒடுக்கப்படுபவர்களோ அவர்களுடன் அவர் தன்னை அடையாளப்படுத்தினார்.
எந்தப்பிரிவினர் ஒடுக்கப்படுபவர்களுக்காக போராடினார்களோ குரல் கொடுத்தார்களோ அவர்களுடன் அவர் தோழமை கொண்டார்.
வர்க்கம் ,சாதி ,பால் , தேசம், சர்வதேசியம் இவை பற்றிய பிரக்ஞையும் ஒருங்கே அமையப்பெற்றவர்.
எங்கு துன்பம் ஒடுக்குமுறை இருந்ததோ அங்கு அவர் சென்றார்.
இந்த ஒடுக்குமுறைகளுக்கெதிராக போராடும் பரந்த எண்ணம் கொண்ட மனிதர்களை எல்லாம் கலந்துரையாடியார். அந்த உறவுகளின் பெறுமதியை ஆழமாக உணர்ந்திருந்தார்.
அவர்கள் மார்க்சியர்-இடதுசாரிகளாகவும் ,பெரியாரின் பாரம்பரியத்தைச்சோந்தவர்களாகவும், நேர்மையான தேசியவாதிகளாவும் காந்திய சுதந்திர போராட்ட இயக்கங்களில் பங்குபற்றியவர்களாகவும் இருந்தார்கள்.
தோழர்கள் வர்க்க உணர்வுள்ளவர்களாக இருக்கவேண்டும் சாதாரணமக்களிடம் அன்பு செலுத்துபவர்களாக இருக்க வேண்டும் அவர்களுக்கு அரசியல் கல்வி அவசியம் .தீவிரமான செய்றபாடு அவசியம் என்பதில் உறுதியாக இருந்தார். அதிகம் பேசாதவராகவும்; சில வார்த்தைகளிலேயே செறிவாக விடயங்களை உணர்த்துபவராகவும்
செயற்பாட்டில் நம்பிக்கை உள்ளவராகவும் அந்த நம்பிக்கையை இடையறாது பிரயோகிப்பவராகவும் அவர் இயங்கினார்.
மிகவும் வரட்சியான அவநம்பிக்கையான சூழலோ அல்லது மிகவெற்றிகரமான நிலைமைகளோ அவரை பாதித்து விடுவதில்லை . எல்லாக்காலங்களிலும் அவர் பெருநம்பிக்கையுடன் உழைத்தார்.
தோழர்களிடம் பிற்போக்கான உணர்வுகள் தலைதூக்கினால் அவர் கடிந்து கொள்வார்.
இனவாதம் ,பிரதேசவாதம் ,சகோதரப்படுகொலை தயவு தாட்சணியம் இன்றி கண்டித்தார். சகோதரத்துவத்தை இடையறாது வலியுறுத்தினார்.
70களின் பிற்பகுதி 80களில் வாழ்ந்த தற்போது மறைந்து போன பல ஆழுமைகள், விடுதலைப்போராட்டக்காரர்கள், கல்வியாளர்கள் ,உன்னதமான சாமானிய மனிதர்கள் பலருடன் சிறந்த உறவைப்பேணியவர்.
தெற்கு, மலையகம் ,முஸ்லீம்மக்கள், பெரியார் வழிவந்த இயக்கங்கள் ,இந்திய இடதுசாரிகள் ,பாலஸ்தீன மாணவர்கள் இன்னும் சொல்லப்படாத பன்முக தொடர்பை அவர் பேணினார்
ஈழவிடுதலை இயக்கங்களிடையே ஐக்கியத்திற்காக அவர் இடையறாது உழைத்தார்.
சமூக வர்க்க ரீதியாக ஒடுக்கபட்ட மக்கள் , முஸ்லீம்மக்கள் தெற்கின் இடது ஜனநாயக சக்திகள் ,பல்கலைக்கழக மாணவர்கள் தமிழகத்திற்கு புலம்பெயர்க்கப்பட்ட மலையக மக்கள் இந்திய தமிழக ரயில்வே துறைமுகத் தொழிலாளர்கள் ஊடகவியலாளர்கள் மாணவர்கள்
கிழக்கு-வடக்கின் மரபார்ந்த சமூகப்போராளிகள் தலைவர்கள் கல்வியாளர்கள் இவர்களோடு பரிச்சயம் மாத்திரமல்ல.
அவர்களிடம் இருந்து தாமும் தோழர்களும் கற்பதற்கும் ஏற்பாடு செய்தார்.
மிக எளிமையான மிகச்சாதாராணமான மனிதராகவே வாழ்ந்தார். அவர் மறைவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னரே தான் நீண்டநாள் காதலித்த ஆனந்தியைக் கரம் பற்றினார்.
அவரது தேவைகள் மிக குறைவானவை . காந்திய எளிமை அவரிடம் இருந்தது.
கண்களில் சமூக நேய ஈரம் கலந்திருக்கும் . பல ஆயிரம் தோழர்களை இன்றளவில் ஆகர்சித்திருப்பவை.
அதனூடாவே அவர் தோழர்களுடன் பேசினார்.
டெல்லியின் பெறுமதிவாய்ந்த 'மெயின் ஸ்ரீம்' சஞ்சிகை ஆசிரியர் தோழர் பத்மநாபா அவர்கள் மறைந்த போது மென்மையாகப் பேசும் செயலாளர் நாயகம் என்று தலையங்கம் தீட்டியிருந்தார்.
போராட என்று வந்து உருக்குலைந்து போனவர்கள் எல்லோரையும் அவர் அரவணைத்தார்.
போராட வந்தவர்கள் யார் தொடர்பிலும் வன்மம் பாராட்டியது கிடையாது.
தோழர் நாபா போன்று உன்னதமான தோழர்கள் போராளிகள் பலர் படுகொலை செய்யப்பட்டு காலவெள்ளம் சுழித்து சென்று விட்டது.
ஆனல் இந்த இழப்புக்களின் தாற்பரியம் இன்றளவில் உணரப்பட்டிருக்கிறதா???
அவர் மாபெரும் மக்கள் இயக்கத்தை கனவு கண்டார் . அறிவும் எளிமையும் பிரக்ஞைம் கொண்ட மனிதர்களுடன் அவர் உறவாடினார்.
தோழர் நாபாவின் வாழ்வும் மரணமும் சமூக விடுதலைக்கு போராடமுனையும் இளையதலைமுறையினரின் கற்றலுக்குரியது.
தனது 39 வது வயதில் தமிழ் பாசிசத்தால் அவர் படுகொலை செய்யப்படும்போது அவருக்கு 39 வயது.
காலம் அந்த வயதுக்குள்ளேயே மிகப் பெரும் ஆழுமையாக அவரை உருவாக்கி இருந்தது.
நன்றி முகநூல்*தோழர் சுகு-ஸ்ரீதரன்
»»  (மேலும்)