10/04/2016

கடுகு சிறிதென்றாலும் கரம் பெரிதே !மரபணு மாற்ற கடுகு விதையை அனுமதிக்க எதிர்ப்பு: வலுக்கும் போராட்டம்

மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகு விதை வகைகளுக்கு அனுமதி வழங்க மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு எதிராக விவசாயிகள் மற்றும் விவசாய அமைப்புகள் நாடெங்கிலும் பல்வேறு பகுதிகளில் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.விதை சத்தியாகிரகம் போராட்டம்

'விதை சத்தியாகிரகம்' என பெயரிடப்பட்டுள்ள இந்த போராட்டம், தமிழகத்தின் தலைநகர் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்றது.
இந்த போராட்டங்கள் இந்திய அளவில் 145 இடங்களிலும், அவற்றில் தமிழகப் பகுதிகளில் மட்டும் 45 இடங்களில் நடைபெற்றதாக பிபிசி தமிழோசையிடம் பேசிய விவசாயி பார்த்தசாரதி தெரிவித்தார்.
சென்னையில் இந்த போராட்டங்களுக்கு இடையே பாரம்பரிய விதை திருவிழா ஒன்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது
இந்திய திரைப்படத்துறையை சேர்ந்த பலரும் கூட இந்த போராட்டங்களில் பங்கேற்றார்கள்.
அந்த வகையில் தேசிய விருதுகளை பெற்றுள்ள இயக்குனர் வெற்றிமாறன், இன்று சென்னையில் நடைப்பெற்ற போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அதில் கலந்து கொண்டனர். இது குறித்து பிபிசி தமிழோசையிடம் பேசிய அவர், சாமானியர்களின் அடிப்படை உரிமையை பறிக்கும் உரிமை யாருக்கும் கிடையாது என்பதால் தான் இந்த போராட்டத்திற்கு துணை நிற்பதாக கூறினார்.
மரபணு மாற்று கடுகு விதைகளுக்கு அனுமதி வழங்கும் விவகாரத்தில் மத்திய அரசாங்கம் தவறான அணுகு முறையை கடைப்பிடிப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர்.
2010-ஆம் ஆண்டு இந்தியாவில் மரபணு மாற்றப்பட்ட கத்திரிக்காய் அறிமுகம் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போது தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் கொடுத்த அழுத்தங்கள் காரணமாக மத்திய அரசு அந்த திட்டத்தை கைவிட்டது. இதே போன்ற விவகாரங்கள் தொடர்கதையாக தொடர்வதை ஏற்க முடியாது என்று இன்றைய போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் திரைப்பட நடிகை ரோகிணி தெரிவித்தார்

0 commentaires :

Post a Comment