இந்த வருட அமைதிக்கான நோபல் பரிசு கொலம்பிய அதிபர் மேனுவல் சான்டோசுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு போர் காரணமாக கடந்த 50 வருடங்களாக பாதிக்கப்பட்ட கொலம்பியாவில் அமைதி திரும்ப, போராட்ட குழுவான பார்க் அமைப்புடன் செய்து கொண்ட அமைதி ஒப்பந்தத்திற்காக நோபல் பரிசு வழங்கப்படுகிறது.
இது தொடர்பாக நோபல் பரிசுக்குழு தலைவர் கூறுகையில், "நாட்டில் 50 ஆண்டுக்கு மேலாக நிலவி வந்த உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வர முயற்சி செய்த கொலம்பியா அதிபர் மேனுவல் சான்டோசுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது. அமைதி ஒப்பந்தத்தை நிறுத்திவிட்டு மீண்டும் உள்நாட்டு போர் மீண்டும் வரும் அபாயம் உள்ளது. இந்த விருது மூலம், அதிபர் தலைமையிலான கட்சி மற்றும் போராட்ட குழுவும் அமைதி ஒப்பந்தத்தை தொடர்ந்து கடைப்பிடிக்க முக்கியத்துவம் கொடுக்க வைக்கும்" என்றார்.
உள்நாட்டு போர்:
கடந்த 1964ம் ஆண்டு முதல் கொலம்பியா உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்டுள்ளது. அரசு படைகளுக்கும், இடதுசாரி பயங்கரவாத அமைப்பான பார்க் அமைப்பிற்கும் இடையே நீண்ட நாள் போர் நடைபெற்றது. இதில் சுமார் 2,20,000 பேர் பலியாகியுள்ளனர். சுமார் 6 லட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர். இரு தரப்புக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தை பெரும்பாலான மக்கள் நிராகரித்துள்ளனர்
0 commentaires :
Post a Comment