10/06/2016

சம்பளப் பேச்சுவார்த்தை முதலாளிமார் சம்மேளனம் தலைமறைவு

பெருந்தோட்டத் தொழிலாளர்களது சம்பளப் பிரச்சினை தொடர்பாக, தொழிலாளர் சங்கத்துக்கும் தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சுக்கும் இடையில் நேற்றுப் புதன்கிழமை (05) இடம்பெற்ற 11ஆவது பேச்சுவார்த்தையில், எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை.
தொழிலாளர்களுக்கு 730 ரூபாய் சம்பளம் வழங்கும் நிலைப்பாடே இன்னும் காணப்படுகின்ற நிலையில், இது தொடர்பில் இறுதித் தீர்மானத்தை எட்டுவதற்காக, நேற்றுப் புதன்கிழமை கூட்டப்பட்ட பேச்சுவார்த்தையில், முதலாளிமார் சம்மேளனம் கலந்துகொள்ளவில்லை.Résultat d’images pour up country sri lanka
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த தொழிலாளர் காங்கிரஸின் உபதலைவரும் மத்திய மாகாண முன்னாள் தமிழ் கல்வி அமைச்சருமான அருள்சாமி, தொழிலாளர்களுக்கு 730 ரூபாய் சம்பளம் வழங்கும் நிலைப்பாடே இன்னும் காணப்படுகின்றது
என்றும் தெரிவித்தார்.
தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சர் ஜோன் செனவிரத்னவின் தலைமையில் அமைச்சில் இடம்பெற்ற இந்தப் பேச்சுவார்த்தையில், பெருந்தோட்டத் தொழிற்சங்கச் சம்மேளனம், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஸ்ரீலங்கா சுதந்திரச் சேவையாளர் சங்கம் போன்றவை கலந்துக்கொண்டிருந்தன.
இந்தக் கலந்துரையாடல் நிறைவடைந்தவுடன், இது தொடர்பாக முன்னாள் மாகாண அமைச்சரான அருள்சாமியிடம் வினவியபோது,
“3 நாட்கள் வேலை வழங்கி 730 ரூபாய் சம்பளம் வழங்குவதற்கு, முதலாளிமார் சம்மேளனம் சம்மதம் தெரிவித்துள்ள போதிலும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸாகிய நாங்கள், அதனை ஏற்றுக்கொள்ளவும் இல்லை, 1,000 ரூபாய் சம்பளமே வேண்டும் என்ற நிலைப்பாட்டிலிருந்து நாம் இறங்கி வரவும் இல்லை. கடந்த 2003ஆம் ஆண்டு செய்யப்பட்ட ஒப்பந்தத்தில் 300 வேலைநாட்கள் வழங்கப்படுவதாகவே குறிப்பிடப்பட்டுள்ளது. இதனையே நாம் தற்போதும் வழியுறுத்தியுள்ளோம்.
இதன்பிரகாரம், இது தொடர்பில் அமைச்சுக்கும் முதலாளிமார் சம்மேளத்துக்கும் இடையிலான பேச்சுவார்த்தை, நாளை மறுதினம் (நாளை) வெள்ளிக்கிழமை (07) இடம்பெறவுள்ளது. இதன்போது எடுக்கப்படும் தீர்மானம், எதிர்வரும் 13ஆம் திகதியன்று எமக்கு அறிவிக்கப்படவுள்ளது” என்று அவர் தெரிவித்தார்.
மேலும், “ஒரு நாளைக்கு எவ்வளவு கொழுந்து பறிக்க முடியும் என்பது, குறித்து தோட்டத் துரைமாரும் தோட்டத் தலைவருமே தீர்மானிக்க முடியுமேயொழிய, இங்கிருந்துக்கொண்டு நாமோ, முதாலாளிமாரோ அமைச்சோ தீர்மானிக்க முடியாது என்பதையும் நாம் இதன்போது தெரிவித்தோம்” என்றும் அவர் கூறினார்.


0 commentaires :

Post a Comment