மருதனார்மடம் பஸ் தரிப்பிடக் கட்டடத்தில், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் படம் பொறிக்கப்பட்ட சுவரொட்டியை ஒட்டிய குற்றச்சாட்டில், ஜேர்மன் நாட்டிலிருந்து வருகை தந்து, விடுதியொன்றில் தங்கியிருந்த பெண்ணொருவரை, செவ்வாய்க்கிழமை (11) இரவு கைது செய்துள்ளதாக, சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தன.
மருதனார்மடம் ஆஞ்சநேயர் கோவிலில் பொருத்தப்பட்ட சி.சி.டி.வி கமெரா பதிவின் அடிப்படையில் இந்தப் பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுவரொட்டியை ஒட்டியது ஒப்புக்கொண்ட அந்தப் பெண், அதனை நியாயப்படுத்தும் வகையிலும் கருத்துக்களையும் கூறியுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் படம் மற்றும் தமிழ்த் தேசிய அடையாளங்கள் பொறிக்கப்பட்ட சுவரொட்டிகள், கடந்த திங்கட்கிழமை ஒட்டப்பட்டிருந்தன. அது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், சி.சி.டி.வியின் உதவியுடன் மேற்படி பெண்ணைக் கைதுசெய்துள்ளனர்.

0 commentaires :
Post a Comment