10/17/2016

இன்று காரைதீவில் மூன்று நூல்களின் வெளியீட்டுவிழா!

காரைதீவின் எழுத்தாளரும் ஊடகவியலாளருமான கவிஞர் விபுலமணி எஸ்.நாகராஜா எழுதிய மூன்று நூல்களின் வெளியீட்டுவிழா இன்று 16ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3மணிக்கு காரைதீவு சண்முகா கலையரங்கில் நடைபெறவுள்ளது.
Résultats de recherche d'images pour « books »
காரைதீவு நேருசனசமுக நிலையம் வெளியிடும் இந்நூல் வெளியீட்டுவிழா நிலையத்தலைவர் பொறியியலாளர் றோட்டரியன் வீ.கிருஸ்ணமூர்த்தி தலைமையில் நடைபெறவுள்ளது.
எழுத்தாளர் விபுலமணி எஸ்.நாகராஜா எழுதிய 'நிலவில் சிரித்த பூக்கள்' என்ற கவிதைத்தொகு...தி நூலும் 'சுந்தரவனம்' என்ற சிறுவர்கதைகள் நூலும் 'வண்ணத்துப்பூச்சிகள்' என்ற சிறுவர் பாடல்கள் நூலும் வெளியிடப்படவுள்ளன.
பிரதம அதிதியாக நாடறிந்த பிரபல எழுத்தாளர் செங்கதிரோன் த.கோபாலகிருஸ்ணன் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.
மேலும் பல சிறப்பு கௌரவ விசேட அதிதிகளாக 18பிரமுகர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
முதற்பிரதியை முன்னாள் தவிசாளர் செ.இராசையா கல்முனை லயன்ஸ் தலைவர் க. தட்சணாமூர்த்தி கல்முனை றோட்டேரியன் தலைவர் சு. சசிக்குமார் ஆகியோர் பெறுவார்கள். மேலும் ஆறு பிரமுகர்கள் கௌரவ சிறப்புப்பிரதிகளைப் பெறுவர்.
நிகழ்வில் வரவேற்புரையை நேரு சனசமுக நிலையப்போசகர் க.புண்ணியநேசன் அறிமுக உரையை பிரபல எழுத்தாளர் சிரேஸ்ட்ட ஊடகவியலாளர் விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா ஆகியோர் நிகழ்த்துவர்.
மூன்று நூல்களுக்கான திறனாய்வுரைகளை இளம் எழுத்தாளர்களான அதிபர் து.யோகநாதன் ஆசிரியை திருமதி அருந்தவவாணி சசிக்குமார் ஆசிரியை திருமதி ஜெயமதி சந்திரசேகரம் ஆகியோர் நிகழ்த்துவர்.
ஏற்புரையை நூலாசிரியர் எஸ்.நாகராஜா நிகழ்த்த நேரு சனசமுக நிலையப்போசகர் மு.ரமணிதரன் நன்றியுரையை நிகழ்த்துவார்.
இந்நிகழ்ச்சியை விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா நெறியாள்கை செய்யவுள்ளார்.

0 commentaires :

Post a Comment