10/10/2016

தஞ்சாவூரில் சசிகலா போட்டி?

'முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவை, தஞ்சாவூர் சட்டசபை தொகுதியில் போட்டியிட வைக்க, அவரது தரப்பு முனைப்பு காட்டுகிறது' என, அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.சட்டசபை பொதுத்தேர்தலில், அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் தொகுதிகளில் வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்ததாக புகார்கள் எழுந்ததால், அவ்விரு தொகுதிகளிலும் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது.
காலியான தொகுதிகளுக்கு நடக்கும் தேர்தலில் தஞ்சாவூர் தொகுதியில் களமிறங்க, சசிகலா தரப்பு திட்டமிட்டுள்ளது என, அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இது குறித்து, சசிகலா தரப்பினர் கூறியதாவது: முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை சரியில்லாமல், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது, ஆட்சி நிர்வாகத்தை வழிநடத்துவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. தற்போதைய சூழலில், சசிகலா நேரடி அரசியலுக்கு வர வேண்டும்; தஞ்சாவூர் சட்டசபை தொகுதியில் சசிகலாவை போட்டியிட வைக்க வேண்டும் என, அவருக்கு நெருக்கமானவர்கள் விரும்புகின்றனர்; அதற்கான பூர்வாங்க பணிகளையும் செய்து வருகின்றனர்.

0 commentaires :

Post a Comment