யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் ஆளுநர் என்ற ரீதியில் தன்ஊடக ஜனாதிபதிக்கு அனுப்புமாறு கடந்த திங்கட்கிழமை சமர்ப்பிக்கப்பட்ட மகஜர் சிங்கள மொழியிலேயே இருந்ததாக் கூறிப்பிட்டுள்ள வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரே குறித்த மகஜர் ஜனாதிபதியிடம் சேர்ப்பிக்கப்பட்டது என்ற செய்தியையே சிங்களத்தில் மாணவர்களிற்கு அனுப்பியதாகவும் மாணவர்களின் கடித்திற்கு பதில் கடிதமோ அல்லது விளக்க கடிதமோ தன்னால் சிங்களத்தில் அனுப்பவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இவ் விடையம் தொடர்பாக கொழும்பிலுள்ள சிங்கள ஊடகம் ஒன்றிற்கு பதிலளித்துள்ள அவர், பல்கலைக்கழகத்தின் மூன்று பீடங்களைச் சேர்ந்த மாணவர்கள் ஒப்பமிட்டு சிங்கள மொழியிலான கடித்தினையே ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்குமாறு வழங்கினர். அதனை அங்கு சேர்ப்பித்தாக அவர்கள் கடிதம் எழுதிய மொழியிலேயே அவர்களிற்கு பதில் செய்திஅனுப்பியிருந்தேன்.
அவர்கள் அதனை ஏற்க மறுத்து மீண்டும் என்னிடம் திருப்பி அனுப்பியதாக அறிகின்றேன்.
இங்கு மொழிகள் தொடர்பான புரிதல் எங்கிருந்து தொடங்குகின்றது என்பது புரியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 commentaires :
Post a Comment