10/04/2016

வடக்கா- கிழக்கா- இணைப்பா- பிரிப்பா -பகுதி ஒன்று

வடக்கு மாகாணத்துடன் கிழக்கு மாகாணத்தை இணைப்பது பற்றிய பேச்சுக்கள் மீண்டும் ஆரம்பித்துள்ள நிலையில் இந்த மாகாணகளின் வரலாறு பற்றிய மேலதிக புரிதல்களுக்காக  ஒரு சில வரலாற்று குறிப்புக்களை சிறு சிறு பகுதிகளாக தரவுள்ளேன்.(எம்.ஆர்.ஸ்டாலின்)


 Résultat d’images pour east lanka பகுதி ஒன்று -மாகாணங்களின் வரலாறு

லங்கையில் காலணித்துவ ஆட்சி ஏற்பட்டபோது மூன்றுவகை அரசுகள் காணப்பட்டிருந்தன. கோட்டை இராட்சியம், கண்டி இராட்சியம், யாழ்ப்பாண இராட்சியம் எனும் அரசுகளே அவையாகும்.

1505 இல் முதன் முதலாக இலங்கையில் காலடி வைத்தவர்கள் போர்த்துக்கேயராகும். இவர்கள் 1597 இல் கோட்டை இராட்சியத்தை தமது முழுக்கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். அதன் பின்னர் 1619 இல் யாழ்ப்பாண இராட்சியத்தையும் போர்த்துகேயர் தோற்கடித்து கைப்பற்றினர். இந்த வேளைகளில் கொட்டியாரம் என்றழைக்கப்பட்ட திருகோணமலை, மட்டக்களப்பு, பழுகாகமம், பாணமை போன்ற நால்வகை வன்னிமைகள் கண்டிராட்சியத்துடன் இணைந்தே இருந்தன. இறுதியாக 1815 இல் ஆங்கிலேயேர் கண்டிராட்சியத்தை வீழ்த்தும் வரை தமது சுதந்திரத்தை விட்டுக்கொடுக்காமல் கண்டி இராட்சியத்தின் பிரசைகள் கடுமையாகப் போராடி வந்தனர்.

1818 ல் ஆங்கிலேயருக்கு எதிராக கண்டியில் ஏற்பட்ட கிளர்ச்சியானது ஆங்கிலேயர் தமது ஆட்சியமைப்பில் கூடிய கவனம் செலுத்த வேண்டிய கட்டாயத்தை அவர்களுக்கு உணர்த்தியது. கண்டி பிரசைகளின் தேசிய உணர்வானது ஆங்கிலேயருக்கு அச்சமூட்டியது. எனவேதான் எதிர்கால பாதுகாப்பினை உறுதிப்படுத்தி கொள்வதற்காக கண்டி ராச்சியத்தை கூறு போடும் முயற்சியில் ஆங்கிலேயர் இறங்கினர். 1832 இல் கோல்புறுக் – கமறோன் குழுவினரின் ஆலோசனையின் பெயரில் இலங்கை ஐந்து பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு மாகாணங்கள் எனும் புதிய நிர்வாக அலகு உருவாக்கப்பட்டது. இதன்படி கண்டிராச்சியத்தின் தூரப்பகுதிகளான (திசாவைகள்) அனுராதபுரத்தின் வடக்கேயிருந்த சில பகுதிகள் மற்றும் மன்னார், காளிதேசம் என்று அழைக்கப்பட்டு நீண்டதொரு வரலாற்று காலத்தில் தனியரசாய் திகழ்ந்த முல்லைத்தீவு போன்றவற்றை யாழ்ப்பாண இராச்சியத்துடன் இணைத்து வடமாகாணமாகவும்  கண்டிராச்சியத்தின் தீகவாவி அடங்கிய மட்டக்களப்பு, திருகோணமலை பகுதிகளை ஒருங்கிணைத்து கிழக்கு மாகாணமாகவும் புதிய மாகாண அலகுகள் உருவாக்கப்பட்டன.

ஆக கிழக்கு மாகாணம் என்பது கண்டி இராச்சியத்தில் இருந்து பிரிக்கப்பட்டு 1932 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.அது யாழ்ப்பாண இராச்சியத்தின் பகுதியாக இருந்ததல்ல.








0 commentaires :

Post a Comment