யாழ். பல்கலைக்கழக மாணவர் இருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் நீதியான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற யாழ். மாணவர்கள் உட்பட யாழ். பல்கலைக்கழக சமூகத்தின் கோரிக்கை தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி, ஜனாதிபதிக்கு வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே அனுப்பி வைத்த கடிதத்தின் பிரதியை மாணவர்கள் திருப்பி அனுப்பி வைத்துள்ளனர்.
தனிச் சிங்களத்தில் ஆளுநரால் ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்பட்ட இந்தக் கடிதத்தின் ஊடாக, ஆளுநர் எதனைக் கூற வருகின்றார் என்பதை தம்மால் புரிந்து கொள்ள முடியாது என்றும் குறிப்பிட்டுள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர்கள், இலங்கையின் அரச கருமமொழிகளாக சிங்களமும், தமிழும் இருக்கின்றன என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
0 commentaires :
Post a Comment