10/20/2016

இலங்கை பொது நூலக வரலாற்றில் முதன் முறையாக இணையவழி நூலக அணுகல் சேவை


இலங்கை பொது நூலக வரலாற்றில் முதன் முறையாக இணையவழி நூலக அணுகல் சேவை (Online Public Access Catalogue Service) இன்று (18.10.2016) பேத்தாழை பொது நூலகத்தில் www.ppl...ib.info என்ற உத்தியோக பூர்வமான இணைய விலாசத்தினூடாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

பேத்தாழை பொதுநூலகமும், ‘விபுலானந்தா வாசகர் வட்டமும்’ இணைந்து நடாத்திய இந்நிகழ்வுக்கு கோறளைப்பற்று பிரதேச சபையின் செயலாளர் ஜனாப்.எஸ்.எம்.சிஹாப்தீன் மற்றும் பேத்தாழை பொது நூலக நூலகர் திரு.வே.கேதாதரன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

இந்நிகழ்வில் இணையவழி நூலக அணுகல் சேவைக்கான மென்பொருளினை நிறுவி, அதனை வெற்றிகரமாக செயற்படுத்துவதற்கு உறுதுணை புரிந்து கொண்டிருக்கின்ற கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட உதவி நூலகர் எம்.என்.ரவிக்குமார் அவர்கள் பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர் கா.சித்திரவேல் உள்ளிட்ட அதிதிகளால் கெளரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


இந்த பொன்னான தருணத்தில் இந்த நவீன நூலகத்தை எமது வாசகர்களின் நலன் கருதி 2011 இல் அமைத்துத்தந்த கிழக்கின் முதல் முதலமைச்சர் கெளரவ. சி.சந்திரகாந்தன் ஐயா அவர்களின் சேவையும் நினைவு கூரப்பட்டது.


0 commentaires :

Post a Comment