கிழக்கில் வாழ் சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களை சந்தித்து கலந்துரையாடும் நோக்கில் மட்டகளப்பு செல்லும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ , விகாரை ஒன்றில் இடம்பெற உள்ள விஷேட நிகழ்வொன்றிலும் கலந்துக் கொள்ளவுள்ளார். பின்னர் அப்பிரதேச மக்களையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
கூட்டு எதிர் கட்சியின் முற்போக்கு முஸ்லிம் அமைப்பை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அண்மையில் ஆரம்பித்து வைத்த நிலையில் , கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது இழந்த முஸ்லிம் மக்களின் ஆதரவை மீண்டும் அடையவதற்கான நகர்வுகள் தற்போது தீவிரமாக முன்னெடுக்கப்படுகின்றது.
இந்நிலையில் நாளை மட்டக்களப்பு செல்லும் மஹிந்த ராஜபக்ஷ அங்கு விஷேட கலந்துரையாடல்களில் ஈடுப்பட்டவுள்ளார் என அவரது செயலாளர் உதித்லொக்கு பண்டார தெரிவித்தார் .
0 commentaires :
Post a Comment