10/24/2016

ஆந்திர - ஒடிசா எல்லையில் பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில் 21 மாவோயிஸ்ட்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்

.

ஆந்திரா - ஒடிசா மாநில எல்லையில் உள்ள மால்ங்கிரி வனப்பகுதியில் ஆந்திரா- ஒடிசா போலீசார் இணைந்து மாவோயிஸ்ட்களுடன் துப்பாக்கிச்சண்டையில் ஈடுபட்டனர். ஒடிசா போலீசார் வழக்கமான சோதனையில் ஈடுபட்ட போது, மாவோயிஸ்ட்களுடன் மோதலில் ஈடுபட்டனர்.ஒடிசா மாநில போலீசார் அளித்த தகவல் பேரில், ஆந்திர போலீசாரும் மாவோயிஸ்ட்களுக்கு எதிரான மோதலில், அவர்களுடன் இணைந்து ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் நடந்த இந்த மோதலில், மாவோயிஸ்ட் அமைப்பின் மூத்த தலைவர் மற்றும் மூத்த தலைவர் ஒருவரின் மகன் உட்பட 21 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

மாவோயிஸ்ட்கள் கொல்லப்பட்டதை ஆந்திர மாநில போலீஸ் டி.ஜி.பி., உறுதி செய்துள்ளார். அவர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளார். இந்த மோதலில் ஆந்திர போலீசார் 2 பேர் மற்றும் மாவோயிஸ்ட் எதிர்ப்பு படையை சேர்ந்த சில போலீஸ் அதிகாரிகள் காயமடைந்துள்ளனர். . காயமடைந்த போலீசார் ஹெலிகாப்டர் மூலம் உடனடியாக விசாகப்பட்டினம் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். கொல்லப்பட்ட மாவோயிஸ்ட்களிடமிருந்து ஏகே 47 ரக துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மாவோயிஸ்ட்களின் மறைவிடமும் கண்டுபிடிக்கப்பட்டது. மாவோயிஸ்ட்கள் உடல் பிரேத பரிசோதனைக்காகவும் அடையாளம் காணவும் சித்ரகொண்டாவுக்கு கொண்டு வரப்பட உள்ளது. தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்

0 commentaires :

Post a Comment