10/07/2016

வடக்கா- கிழக்கா- இணைப்பா- பிரிப்பா -பகுதி-03-நாங்க வேற நீங்க வேற

வடக்கா- கிழக்கா- இணைப்பா- பிரிப்பா -பகுதி-03

நாங்க வேற நீங்க வேற

Résultat d’images pour north sri lanka map கிழக்கு மாகாண மக்கள் தமது கலை, கலாசாரம், பண்பாடு, சடங்கு சம்பிரதாயங்கள், மற்றும் உணவு முறைகளிலும் கூட தமக்கான தனித்துவமான பழக்கவழக்கங்களை கொண்டிருக்கிறார்கள். இவைகளில் பெரும்பாலானவை ஆரியகலப்பற்றவையாகவும் தாய்வழி சமுதாய உரிமைகளை பேணுபவையாகவும் மற்றும் சாதிவாரியாக தீண்டாமை இறுக்கமற்றவையாகவும் காணப்படுகின்றது. இப்பண்புகள் ஒரு சமூகவியல் பார்வையில் முற்போக்கு அம்சங்கள் நிறைந்தனவாகும். இந்த அம்சங்களடங்கிய சமூக ஒழுங்குகளையும் அவைசார்ந்த பண்பாட்டு கூறுகளையும் பேணிபாதுகாப்பதற்காக கிழக்குமாகாணம் தனக்கான தேசவழமைகளை காலா காலமாக கைக்கொண்டு வந்திருக்கின்றது. அந்தவகையில் 1876 ல் பிறித்தோ  என்பவரால் கிழக்கில் நிலவிய இந்த தேசவழமைகள் ஒரு நூலாக தொகுக்கப்பட்டு ‘முக்குவர் சட்டம்’ எனும் அந்தஸ்தை பெற்றது.

யாழ்ப்பாண மக்களிடையே காணப்பட்ட இத்தகைய தேசவழமைகள் எப்படி 1707 இல் தொகுக்கப்பட்டு யாழ்ப்பாண தேசவழமை சட்டம் எனும் சட்ட அந்தஸ்தை பெற்றனவோ அதேபோன்று கிழக்கில் வாழ்ந்த முஸ்லிம்கள் அல்லாத தமிழர்களுக்குரியனவாக இந்த முக்குவர் சட்டமும் ஆங்கிலேயரால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. பேசுகின்ற மொழியில் தமிழர்களாகவே இருந்தபோதும் கிழக்கும் வடக்கும் ஒரே விதமான சட்டத்திட்டங்களால் கட்டுப்படுத்தப்பட முடியாதவையாக உள்ளன.

இதே போன்றே கிழக்கில் வாழும் முஸ்லிம்களுக்கும் அவர்களது மத நம்பிக்கையின் அடிப்படையிலமைந்த இஸ்லாமிய ஷரியா சட்டகோவை இலங்கையில் காலணித்துவ ஆட்சியாளர்களினாலேயே ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளமையும் 'காதி நீதிமன்றுகள்' 'வக்பு சபை' போன்றவற்றுக்கான மரபார்ந்த சட்டவலு இன்றுவரை வழங்கப்பட்டு வருகின்றமையும்   நம் எல்லோரது கவனத்திலும் கொள்ளப்பட வேண்டியதொன்றாகும்.

0 commentaires :

Post a Comment