10/29/2016

தீபாவளி என்றால் என்ன? - பெரியார் பேசுகிறார்.

தீபாவளி என்றால் என்ன? - பெரியார் பேசுகிறார்.


Résultat d’images pour periyarதீபாவளி பண்டிகையைக் கொண்டாடுவது தமிழனுக்கு மானக்கேடும், முட்டாள்தனமுமான காரியம் என்று எழுதியும் பேசியும் வருகின்றேன். இதன் பயனாய் அனேக தமிழ் மக்கள் இப்பண்டிகையைக் கொண்டாடாமல் நிறுத்தி விட்டார்கள். என்றாலும் இன்னமும் பல தமிழ் மக்கள் தங்கள் இழிநிலையை மான ஈனத்தை உணராமல் கொண்டாடி வருகிறார்கள்.

இக்கொண்டாட்டமானது தமிழ் மக்களுடைய இழிவையும் முட்டாள் தனத்தையும் காட்டுவது மாத்திரமல்ல தமிழர் (திராவிடர்) ஆரிய இனத்தானுக்கு அடிமை, அவனது தலைமைக்கு அடிமை, மீட்சி பெற விருப்பமில்லாத மானங்கெட்டவர்கள் என்பதைக் காட்டிக் கொள்ள போட்டி போடுகிறார்கள் என்பதையே காட்டுகிறது .

"மானமும் பகுத்தறிவும் உடையவனே மனிதன் அஃதிலார் மனித உருவமுள்ள மிருகமே ஆவர்" என்ற அறிவுரைப்படி மானமில்லா மக்களே இப்போது தீபாவளி கொண்டாடுகிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது .

வெளிநாட்டிலிருந்து பிழைக்கும் வழி தேடிக் கொண்டு நம் நாட்டிற்குள் புகுந்த ஆரியர் அக்காலத்தில் அவர்கள் இருந்த காட்டு மிராண்டித் தன்மைக்கு ஏற்ற மடமையினால் கொண்ட கருத்துகளை மதுக்குடி வெறியில் உளறி வைத்த தன்மைக்கு ஏற்ப தொகுத்துக் களியாட்டம் ஆடிய ஆட்டங்களைத் தமிழ் மக்கள் என்ன சூழ்நிலையாலோ ஏற்று ,அவற்றிற்கு அடிமையாகி, பின்பற்றி தாங்களும் அப்படியே களியாட்டம் ஆடி வருகிறர்கள்

அதன் பயனாய் , அம்மடமையும் அல்லது வெறி உளறலுமே இன்று தமிழ் மக்களுக்கு கடவுளர்களாக , மதமாக , நீதி நெறிகளாக பண்டிகை விரதம் , நோன்பு - உற்சவங்களாக நல்ல நாள் தீயநாளாக, அப்பாத்திரங்களே நல்லவர்களாக, தீயவர்களாக ஆக்கப்பட்டு இருந்து வருகின்றார்கள்.

இஸ்லாம், கிறிஸ்த்துவம் முதலிய மார்க்கங்களாலும், வெள்ளையர் ஆட்சியாலும் உலக மக்களிடையே ஓர் அளவுக்குத் தலைக்கீழான மாறுதல் ஏற்படும்படியான கல்வி அனுபவமும் ஞானமும் ஏற்பட்டிருந்தும் கூட இந்த மடமை மிக்க ஆரிய வலையில் சிக்கிய தமிழ் மக்களிடையில் பெரிதும் சிறுஞானமும் மாறுதலும் ஏற்படாமல் அம்மடமையிலேயே மூழ்கித் திளைத்து வருகிறார்கள்.



படிப்புக்கும் பகுத்தறிவுக்கும் தொடர்பு இல்லையே

இப்படி நடப்பவர்கள் பாமர மக்கள் மாத்திரமல்லாமல் தமிழ் பண்டிதர்கள், அதுவும் டாக்டர் பட்டம் பெற்றவர்கள் உள்பட தமிழ் பண்டிதர்கள் முதல் பெரும் புலவர்கள் மற்றும் இங்கிலீஷ் வேதாந்தத்தில் இங்லீஷ் விஞ்ஞானத்தில் உடற்கூறு, பூகோளக்கூறு இவைகளில் நிபுணர்கள் உள்பட எல்லாத் தமிழர்களும் இந்தக் காட்டுமிராண்டி மடமைக்கும் அடிமைப்பட்டு ,சிந்தனையின்றி நடந்து கொள்வதென்றால் தீபாவளி கொண்டாடுவது என்பதில் உள்ள தமிழனின் இழிவுக்கும், மடமைக்கும் , மானமற்ற தன்மைக்கும் இதைவிட வேறு எதை எடுத்துக்கட்டாக கூற முடியும் ?

நம் பள்ளிகளும் கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் நம் மக்களுக்கு இந்த , இப்படி பட்ட மடமையை உணரும் அளவுக்கூட அறிவைக் கொடுக்கவில்லை என்றால் இக்கல்வி கூடங்கள் மடமையையும் மானமற்ற தன்மையையும் பயிர் செய்யும் வளமுள்ள விளை நிலம் என்பதை தவிர வேறு என்னவென்று சொல்ல முடியும் ? இதில் வதியும் பயிலும் மாணவர்களுக்கு எந்த விதத்தில்தான் மானமும் அறிவும் விளைய முடியும் ?

தீபாவளி என்றால் என்ன? ( புராணம் கூறுவது )

* ஒருகாலத்தில் ஒரு அசுரன் உலகத்தை பாயாகச் சுருட்டிக் கொண்டு போய் கடலுக்குள் ஒளிந்துக் கொண்டன்.

*தேவர்களின் முறையீட்டின் மீது மகாவிஷ்ணு பன்றி அவதாரம் (உரு) எடுத்து கடலுக்குள் புகுந்து அவனைக் கொன்று உலகத்தை மீட்டு வந்து விரித்தார்.

*விரித்த உலகம் (பூமி) அப்பன்றியுடன் கலவி செய்ய ஆசைப்பட்டது.

*ஆசைக்கு இணங்கி பன்றி (விஷ்ணு) பூமியுடன் கலவி செய்தது.

*அதன் பயனாய் பூமி கர்ப்பமுற்று நரகாசுரன் என்ற பிள்ளையைப் பெற்றது.

*அந்தப் பிள்ளை தேவர்களை வருத்தினான்.

*தேவர்களுக்காக விஷ்ணு நரகாசுரனுடன் போர் துவங்கினார்.

*விஷ்ணுவால் அவனை வெல்ல முடியவில்லை. விஷ்ணுவின் மனைவி நரகாசுரடனுடன் போர் தொடுத்து அவனைக் கொன்றாள்.

*இதனால் தேவர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள்.

*இந்த மகிழ்ச்சியை (நரகாசுரன் இறந்ததற்காக ) நரகாசுரனின் இனத்தாரான திராவிட மக்கள் கொண்டாட வேண்டும்.

இதுதானே தீபாவளிப் பண்டிகையின் தத்துவம்!

இந்தப் பத்து செய்திகள்தான் தமிழரைத் தீபாவளி கொண்டாட செய்கிறதே அல்லாமல், வேறு என்ன என்று யாருக்குத் தெரியும்? யாராவது சொன்னார்களா?

பார்ப்பான் சொன்னால் நம்ப வேண்டுமா?

பூமி தட்டையா? உருண்டையா? தட்டையாகவே இருந்த போதிலும் ஒருவனால் அதைப் பாயாகச் சுருட்ட முடியுமா? எங்கு நின்று கொண்டு சுருட்டுவது? சுருட்டினால் தூக்கிக் கக்கத்திலோ தலை மீதோ எடுத்துப் போக முடியுமா? எங்கிருந்து தூக்குவது? கடலில் ஒளிந்து கொள்வதாயின், கடல் அப்போது எதன் மீது இருந்திருக்கும்? விஷ்ணு மலம் தின்னும் பன்றி உருவம் எடுக்க வேண்டிய அவசியம் என்ன? அரக்கனைக் கொன்று பூமியை விரித்தால் பூமிக்கு பன்றி மீது காதல் ஏற்படுவானேன்?

பூமி மனித உருவமா? மிருக உருவமா? மனித உருவுக்கும் மிருக உருவுக்கும் கலவியில் மனிதப் பிள்ளை உண்டாகுமா? பிறகு சண்டை ஏன்? கொல்லுவது ஏன்? இதற்காக நாம் ஏன் மகிழ்ச்சி அடைய வேண்டும்? இவற்றைக் கொஞ்சமாவது கொண்டாடும் தமிழ்ப் புலவர்கள் அறிஞர்கள் சிந்திக்க வேண்டாமா?

நரகாசுரன் ஊர் மாகிஷ்மகி என்ற நகரம். இது நர்மதை ஆற்றின் கரையில் இருக்கிறது. மற்றொரு ஊர் பிரகத் ஜோதி ஷா என்று சொல்லப்படுகிறது. இது வங்காளத்தில் விசாம் மாகாணத்துக்கு அருகில் இருக்கிறது. இதை திராவிட அரசர்களே ஆண்டு வந்திருக்கிறார்கள். வங்காளத்தில் தேவர்களும் அசுரர்களும் யாராக இருந்திருக்க முடியும்?

இவை ஒன்றையும் சிந்திக்காமல் பார்ப்பனன் எழுதி வைத்தான் என்பதற்காகவும் நடு சாமத்தில் எழுந்து கொண்டு குளிப்பதும் புதுத்துணி உடுத்துவதும் பட்டாசு சுடுவதும் அந்தப் பார்ப்பனர்கள் வந்து பார்த்து "கங்காஸ்நானம் ஆயிற்றா?" என்று கேட்பதும், நாம் ஆமாம் என்று சொல்லிக் கும்பிட்டுக் காசு கொடுப்பதும் அவன் போவதும் என்றால் இதை என்னவென்று சொல்வது?

சிந்தியுங்கள்! சிந்தியுங்கள்!

மாணவர்களே! உங்கள் ஆசிரியர்களுக்கு மானம் புத்தி இல்லாவிட்டாலும் நீங்களாவது சிந்தியுங்கள். எதற்காக இவ்வளவு சொல்லுகிறேன் என்றால் இக்கதை எழுதின காலத்தில் (ஆரியர்) பார்ப்பனர்கள் எவ்வளவு காட்டுமிராண்டிகளாக இருந்திருக்க வேண்டும்? அந்தக் காலத்தில் நாம் மோசம் போனது, ஈனநிலை அடைந்தது ஏன்? என்பதை தமிழன் ஒவ்வொருவரும் நங்உ சிந்திக்க வேண்டும் என்பதற்காகவேயாகும்.
»»  (மேலும்)

பாரிஸ் நகரில் வாசிப்பு மனநிலைவிவாதம் 23 வது தொடர் இவ்வாரம் இடம்பெறுகின்றது.



பாரிஸ் நகரில் வாசிப்பு  மனநிலைவிவாதம் 23 வது தொடர் இவ்வாரம் இடம்பெறுகின்றது.  தோழர் பாலனின் இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு குறித்த கட்டுரை தொகுதிகள் அடங்கிய நூல் பற்றிய தனது கருத்துரையை தோழர் இராயாகரன் வழங்கவுள்ளார்.

அடுத்து  தோழர் சோபா சக்தியின் அண்மையில் வெளியான சிறுகதையான  "மிக உள்ளக விசாரணை" என்னும் கதை குறித்து அனல்பறக்கும் விமர்சனத்தை தர காத்திருக்கின்றார் தோழர் அசுரா.

இவற்றோடு எழுத்தாளர் தமிழ்நதியின் "பார்த்தினியம்"  நாவல் மீதான    தனது புதிய பார்வைகளை ஆக்காட்டி சஞ்சிகையின் ஆசிரியர் தோழர் தர்மு பிரசாத்  வழங்கவுள்ளார்.

வழமைபோல தனது இடைவிடாத மண்டப அனுசரணை உதவியை தோழர் அர்விந் அப்பாத்துரை நல்குகின்றார்.






»»  (மேலும்)

மட்டக்களப்பில் குடிவரவு –குடியகல்வுக்குக் காரியாலயம்

குடிவரவு -குடியகல்வுத் திணைக்களத்தின் பிராந்திய காரியாலயத்தை மட்டக்களப்பு நகரில் அமைப்பதற்கு கிழக்கு மாகாணசபையில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாகாணசபையின் எதிர்க்கட்சித் தலைவர் எம்.எஸ்.உதுமாலெப்பை, இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
இது விடயமாக அவர் மேலும் தெரிவிக்கையில், 'இலங்கை குடிவரவு -குடியகல்வுத் திணைக்களம் தென்மாகாணத்தில் மாத்தறை நகரிலும் மத்திய மாகாணத்தில் கண்டி நகரிலும் வடமாகாணத்தில் வவுனியா நகரிலும் பிராந்திய காரியாலயங்களாக அமைத்து மாகாண மட்டத்தில் கடவுச்சீட்டுக்களை வழங்கும் நடவடிக்கையை சிறப்பாகச் செயல்படுத்தி வருகின்றன. இதனால், மேற்குறித்த மாகாணங்களில் வாழும் மக்கள் பெரும் நன்மை அடைந்து வருகின்றனர்.

கிழக்கு மாகாண மக்கள், கடவுச்சீட்டுக்களைப் பெற்றுக்கொள்வதற்காக கொழும்பு நகருக்கு நீண்டதூரம் பிரயாணம் செய்து பல சிரமங்களுக்கு மட்டுமல்லாது நேரம் மற்றும் பணத்தையும் விரயம் செய்து வருகின்றனர்.
எனவே, கிழக்கு மாகாண மக்களின் நன்மை கருதி கிழக்கு மாகாணத்தில் மத்திய மாவட்டமாகத் திகழும் மட்டக்களப்பு நகரில் இலங்கை குடிவரவு -குடியகல்வுத் திணைக்களத்தின் காரியாலயத்தை அமைப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மத்திய அரசாங்க உள்நாட்டு அலுவல்கள், வடமேல் அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர்  எஸ்.பி.நாவின்ன ஆகியோரிடமும் கிழக்கு மாகாணசபை கோரிக்கை விடுக்க வேண்டும் என்ற தனிநபர் பிரேரணை தன்னால் சமர்ப்பிக்கப்பட்டபோது, அதற்கான தீர்மானம் கிழக்கு மாகாண சபையால் நேற்று வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டுள்ளது.
இவ்வாறிருக்க, கிழக்கு மாகாண நீர்ப்பாசனத் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் பணிமனையையும் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தித் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் பணிமனையையும் கிழக்கு மாகாணத்துக்கு மத்தியாகத் திகழும் மட்டக்களப்பு நகரில் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. அவ்வாறே குடிவரவு -குடியகல்வுத் திணைக்களத்தின் பிராந்திய காரியாலயத்தை மட்டக்களப்பு நகரில் அமைய வேண்டும்' என்றார்.
»»  (மேலும்)

10/28/2016

இராவணனை எரிக்காதே ! மராட்டிய பழங்குடி மக்கள் போராட்டம் !

பெந்திரி கிராமத்தில் 6,000 க்கும் மேற்பட்ட பழங்குடி மக்களும் ஒன்றுகூடி இராவணனை வழிபட்டனர். இராவணனை வழிபடும் இந்த விழாவை கோண்டி தர்ம சமஸ்கிருத பச்சாவ் சமிதி என்ற அமைப்பு கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக நடத்தி வருகிறது.

காராஷ்டிரா மாநிலம் கட்சிரோலி மாவட்டத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான கோண்டுப் பழங்குடி மக்கள் இராவணன் உருவபொம்மை எரிக்கப்படுவதை எதிர்த்து போராட்டம் நடத்தியிருக்கிறார்கள்.
விஜயதசமி – தசரா விழாவில் இராம லீலா என்ற பெயரில் இராவணனின் உருவபொம்மைகளை எரித்து இராமனின் வெற்றியை இந்தியாவின் வட மற்றும் மத்திய மாநிலங்களை சேர்ந்த ஆதிக்க சாதி இந்துக்கள் கொண்டாடுகிறார்கள்.
இதற்கு நேரெதிராக பன்னெடுங்காலமாக கோண்டு பழங்குடிமக்கள் இராவணனை தெய்வமாக வழிபடுகிறார்கள். டெல்லியில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் பிஸ்ராக் கிராமத்தில் தான் இராவணன் பிறந்ததாக அம்மக்கள் நம்புகிறார்கள். இராவணனின் மனைவியான மண்டோதிரி பிறந்ததாகக் கூறப்படும் ராஜஸ்தானின் மாண்டோர் கிராம மக்களும் தசராவை கொண்டாடுவதில்லை.
மராட்டிய மாநிலத்தில் இருக்கும் கட்சிரோலி மாவட்டத்தின் கோர்ச்சி நகரத்தில் இந்த ஆண்டும்  3000-த்திற்க்கும் அதிகமான பழங்குடிமக்கள் இராவணின்  படத்தை வைத்து வழிபாட்டுக்கூட்டம்  ஒன்றை நடத்தினார்கள்.
தாங்கள் வழிபடும் இராவணன் எரிக்கப்பட்டு அவமானப்படுத்தப்படுவது தடுக்கப்பட வேண்டுமென ஒவ்வொரு ஆண்டும் மனுக்கொடுக்கிறார்கள். இந்த ஆண்டும் இராவணனின் உருவபொம்மைகளை எரிக்கும் பழக்கத்தைக் கைவிட வேண்டுமென பேரணி ஒன்றை நடத்தி மாவட்ட நிர்வாகத்திடம் மனுக் கொடுத்தனர். எனினும் வழக்கம் போல அதிகார வர்க்கம் இதைக் குப்பைக் கூடைக்கு அனுப்பியிருக்கும்.
கோண்டு பழங்குடி மக்களின் கலாச்சாரம் பண்டைய காலத்திலிருந்தே தனித்துவம் வாய்ந்ததாக இருக்கிறது என்பதை ஒத்துக் கொள்ளும் அதிகாரிகள் இராவணனை எரிப்பதை தடுக்க முன்வர மாட்டார்கள். இது பழங்குடி மக்களுக்கும் தெரியாமல் இல்லை.
வால்மீகி இராமாயணம் கூட, இராவணனைப் பற்றித் தவறாக எதுவும் கூறவில்லை. துளசிதாஸ் இராமாயணத்தில் மட்டுமே இராவணன் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளார். இராவணன் தவறு எதுவும் செய்யவில்லையென்றும், அவர் செய்தது அனைத்தும் தனது குடும்பத்தையும் கலாச்சாரத்தையும் பாதுகாக்கத்தான் என்று வால்மீகித் தெளிவாகக் கூறியுள்ளாரெனக் கோண்டுவானா காண்டன்தாரா கட்சி அமைப்பாளர் சந்தீப் வாக்கடே கூறியுள்ளார்.
கட்சிரோலி மாவட்டத்தை சேர்ந்த கமால்பூர், ரஞ்சி, பென்திரி, மல்தாகிர் உள்ளிட்ட கிராமங்கள் மற்றும் தனோரா மற்றும் குர்கேடா தொகுதிகளிலும் இராவணன் வழிபாட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றதாக வாக்கடே கூறினார்.
கமலாபூர் கிராமத்தில் 42-க்கும் மேற்பட்ட கிராம மக்களும், பெந்திரி கிராமத்தில் 6,000 க்கும் மேற்பட்ட பழங்குடி மக்களும் ஒன்றுகூடி இராவணனை வழிபட்டனர். இராவணனை வழிபடும் இந்த விழாவை கோண்டி தர்ம சமஸ்கிருத பச்சாவ் சமிதி என்ற அமைப்பு கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக நடத்தி வருகிறது.
இந்நிலையில் உத்திரபிரதேசத்தின் கவுதம புத்தா நகர் மாவட்டத்திலுள்ள பிஸ்ரக் கிராமத்தில் இராவணின் சிலையைச் சேதப்படுத்தி, கோவிலையும் சூறையாடியிருக்கிறது இந்து மதவெறிக்கும்பல். ஆனால் அங்குள்ள கிராம மக்கள் இந்துத்துவ வெறியர்களின் மிரட்டலுக்கு அடிபணியாமல் இராவணனுக்கு பூஜைகள் செய்து வழிபட்டார்கள்.
கட்சிரோலி
சென்னையில் தந்தை பெரியார் திராவிடக்கழகம் பல தடைகளைத் தாண்டி இராமன் மற்றும் சீதாவின் உருவ பொம்மைகளை எரித்து இராவண லீலாவை கொண்டாடினார்கள். காவல்துறை அனுமதி மறுத்தும் தடையை மீறி இந்த ஆர்பாட்டம் நடந்ததால் ஏழுபேர் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்கள்.
இராமன் தேசிய நாயகன், அயோத்தியை ஏற்காதவன் தேசத்துரோகி என்று பார்ப்பனியத்தை திணிக்கும் இந்துமதவெறியர்களுக்கு எதிராக நாடெங்கம் இன்று இராவண லீலா வளர்ந்து வருகிறது. இது ஆர்.எஸ்.எஸ் அயோக்கியத்தனமாக சிக்ஸ் பேக் பாலிவுட் இராமனை அறிமுகம் செய்வதற்கு முன்பே பல நூற்றாண்டுகளாக பழங்குடி மக்களிடத்தில் இருக்கிறது. இத்தகைய பார்ப்பனிய எதிர் மரபுகளை, மக்களின் பண்பாடுகளை ஒழிப்பதே இந்து ராஷ்டிரத்தின் இலட்சியம்.
இராவணன் தீயவன் இல்லை என வால்மீகி பாராட்டியுள்ளார். ஆனால் அதிகாரிகளோ எங்கள் கோரிக்கைகளுக்கு தயக்கம் காட்டி வருகிறார்கள். இந்த ஆண்டும் நாங்கள் கொடுத்த குறிப்பாணையை ஏற்றுக்கொண்டார்கள். ஆனால் அரசின் மெத்தன நடவடிக்கையால் எப்பொழுதும் எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றப் போவதில்லை என்பது தெளிவாகப் புரிந்துவிட்டது என்கிறார்கள் கோண்டு மக்கள். இந்துமதவெறியருக்கு எதிராக மனுக்கொடுத்து பயனில்லை என்று பழங்குடி மக்களே தெளிந்து விட்டார்கள்.
சங்கவை நன்றி வினவு
»»  (மேலும்)

நல்லாட்சி ஆளுநர் நாட்டை விட்டு தப்பியோட்டம்

இலங்கை மத்திய வங்கியின் பிணை முறிகள் விவகாரம் தொடர்பான கோப் குழுவின் அறிக்கை  நாளை சபையில் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில்  முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கூட்டு எதிரணி   எம்.பி. ரஞ்சித் டி சொய்சா சபையில் தெரிவித்தார். 
பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற கடற்றொழில் மற்றும் நீர்வளங்கள் தொடர்பான ஒழுங்குவிதிகளை அங்கீகரிக்கும் சட்ட மூல விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே   அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 அவர் மேலும் உரையாற்றுகையில்
இலங்கை மத்திய வங்கியின் பிணைமுறிகள் விவகாரம் குறித்த  கோப் குழுவின் அறிக்கை பூரணப்படுத்தப்பட்டு நாளைய தினம் வெள்ளிக்கிழமை சபையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இந்த நிலையில்  மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் 15 நிமிடங்களுக்கு முன்னதாக அதாவது இன்று 3.30 மணியளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் ஊடாக நாட்டை விட்டு வெளியேறி தப்பிச் சென்றுள்ளார் .
அத்தோடு இந் நாட்டின் பிரஜையல்லாதவர் என்பதன் காரணத்தால் பிரதான நபரான அர்ஜுன மகேந்திரன் தப்பிச்சென்றுவிட்டார். அவருடைய கடவுச்சீட்டைக் கூட தடைசெய்ய முடியாத நிலைமை ஏன்? என்றும் கேள்வி தொடுத்தார்.
எனினும் ஆளும் தரப்பு உறுப்பினர் எவரும் இதற்குப் பதிலளிக்காது இருந்த நிலையில் ரஞ்சித் டி சொய்சா எம்.பி. தனது உரையைத் தொடர்ந்தார்.
»»  (மேலும்)

10/27/2016

போலீஸ் உத்தியோகஸ்தர்கள் தனது சிறப்புரிமைகளை மீறுகின்றனர். முன்னாள்முதல்வர் குற்றச்சாட்டு

 Résultat de recherche d'images pour "chandrakanthan chief minister" கிழக்கு மாகாண சபையின் 65ஆவது அமர்வுக்கு இன்று வியாழக்கிழமை (27)  வருகை தந்திருந்த, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான சிவனேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்), மாகாண சபை அமர்வு முடிந்த பின்னர் எதிர்க்கட்சி தலைவருடன் அவர் உரையாடல் ஒன்றில் ஈடுபட்டிருந்தார். 

இதன் காரணமாக தான் வெளியில் வரும்வரை தன்னை அழைக்க வேண்டாம் எனக் கூறி, மாகாண சபைக்குள்ளேயே அமர்ந்து கொண்டார் என போலீஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்..

இது சம்பந்தமாக கருத்து தெரிவித்த கெளரவ சந்திரகாந்தன் முன்னாள் முதல்வரும் தற்போதைய மாகாண சபை உறுப்பினருமான தான் நீதிபதியின் அனுமதியுடனேயே அமர்வுகளில் கலந்து கொள்வதாகவும்,போலீஸ் உத்தியோகஸ்தர்கள் நாகரிகமற்ற விதத்தில் நடந்து கொள்வதன் ஊடாக தனது சிறப்புரிமைகளை மீறப்படுவதாகவும் குற்றம் சாட்டினார்.  

இவ்வீடியோவில் கருத்தித்து தெரிவிக்கும் போலீஸ்காரர் கடமை நேரத்தில் வாய் நிறைய வெற்றிலை போட்டுக்கொண்டுபேசுவதை காணலாம்.



»»  (மேலும்)

ஐரோப்பாவிற்கு செல்ல முயன்ற நூறு குடியேறிகள் கடலில் மூழ்கிப் பலி

ஐரோப்பாவிற்கு செல்லும் வழியில் குடியேறிகள் சென்ற படகு ஒன்று சிக்கலுக்கு உள்ளானதில் அதில் பயணம் செய்த சுமார் நூறு பேர் காணாமல் போயுள்ளதாக லிபியா கடற்படை தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
பல்வேறு ஆஃப்ரிக்க நாடுகளை சேர்ந்த வெறும் 20 குடியேறிகளை மட்டுமே அவர்களால் காப்பாற்ற முடிந்ததாக கடற்படை தெரிவித்துள்ளது.
லிபியா தலைநகர் திரிப்போலியின் கிழக்கில் உள்ள காராபுல்லியிலிருந்து இந்த ரப்பர் படகு புறப்பட்டுள்ளது.
கடலில் ஏற்பட்ட உயர் அலைகளில் சிக்கியதை தொடர்ந்து படகு புதன் கிழமையன்று மூழ்கிப் போனது.
மத்திய தரைக்கடலிலிருந்து ஐரோப்பாவுக்கு பயணம் மேற்கொள்பவர்களின் மிக மோசமான ஆண்டாக தற்போது 2016 ஆம் ஆண்டு உள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது.
இந்த பயணங்களின் போது, சுமார் 3,800க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
»»  (மேலும்)

மாணவர்கள் சிங்களத்தில் அனுப்பிய கடித்திற்கே சிங்களத்தில் பதில் அனுப்பினேன் – வடக்கு ஆளுநர் கூரே

65d3b8b53b2054902b5370904f35a9c0_xlயாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் ஆளுநர் என்ற ரீதியில் தன்ஊடக ஜனாதிபதிக்கு அனுப்புமாறு கடந்த திங்கட்கிழமை சமர்ப்பிக்கப்பட்ட மகஜர் சிங்கள மொழியிலேயே இருந்ததாக் கூறிப்பிட்டுள்ள வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரே குறித்த மகஜர் ஜனாதிபதியிடம் சேர்ப்பிக்கப்பட்டது என்ற செய்தியையே சிங்களத்தில் மாணவர்களிற்கு அனுப்பியதாகவும் மாணவர்களின்  கடித்திற்கு பதில் கடிதமோ அல்லது விளக்க கடிதமோ தன்னால் சிங்களத்தில் அனுப்பவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இவ் விடையம் தொடர்பாக கொழும்பிலுள்ள சிங்கள ஊடகம் ஒன்றிற்கு பதிலளித்துள்ள அவர், பல்கலைக்கழகத்தின் மூன்று பீடங்களைச் சேர்ந்த மாணவர்கள் ஒப்பமிட்டு சிங்கள மொழியிலான கடித்தினையே ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்குமாறு வழங்கினர். அதனை அங்கு சேர்ப்பித்தாக அவர்கள் கடிதம் எழுதிய மொழியிலேயே அவர்களிற்கு பதில் செய்திஅனுப்பியிருந்தேன்.
அவர்கள் அதனை ஏற்க மறுத்து மீண்டும் என்னிடம் திருப்பி அனுப்பியதாக அறிகின்றேன்.
இங்கு மொழிகள் தொடர்பான புரிதல் எங்கிருந்து தொடங்குகின்றது என்பது புரியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
»»  (மேலும்)

வடக்கு ஆளுநரின் கடிதத்தை திருப்பி அனுப்பிய யாழ். பல்கலை மாணவர்கள்



யாழ். பல்கலைக்கழக மாணவர் இருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் நீதியான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற யாழ். மாணவர்கள் உட்பட யாழ். பல்கலைக்கழக சமூகத்தின் கோரிக்கை தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி, ஜனாதிபதிக்கு வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே அனுப்பி வைத்த கடிதத்தின் பிரதியை மாணவர்கள் திருப்பி அனுப்பி வைத்துள்ளனர். 

தனிச் சிங்களத்தில் ஆளுநரால் ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்பட்ட இந்தக் கடிதத்தின் ஊடாக, ஆளுநர் எதனைக் கூற வருகின்றார் என்பதை  தம்மால் புரிந்து கொள்ள முடியாது என்றும் குறிப்பிட்டுள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர்கள், இலங்கையின் அரச கருமமொழிகளாக சிங்களமும், தமிழும் இருக்கின்றன என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
»»  (மேலும்)

10/26/2016

தீண்டாமைக்கு எதிரான 50 வ‌து ஆண்டு நிறைவை கொண்டாடும் பொதுக்கூட்ட‌ம்

புதிய‌ ஜ‌ன‌நாய‌க‌ மார்க்சிய‌ லெனினிச‌க் க‌ட்சி ந‌ட‌த்திய‌, சாதிய‌ தீண்டாமைக்கு எதிரான 50 வ‌து ஆண்டு நிறைவை கொண்டாடும் பொதுக்கூட்ட‌ம், யாழ் ந‌க‌ரில், றிம்ம‌ர் ம‌ண்ட‌ப‌த்தில் ஞாயிற்றுக்கிழ‌மை (23-10-16) ந‌டைபெற்ற‌து
.
அந்த‌ நிக‌ழ்வில், இளைஞ‌ர் முத‌ல் முதியோர் வ‌ரை நூறுக்கும் குறையாத‌ பார்வையாள‌ர்க‌ள் க‌ல‌ந்து கொண்ட‌ன‌ர். ஆனால், முக‌நூலில் க‌ம்யூனிஸ்டுகளுக்கு எதிராக‌ க‌ம்பு சுழ‌ற்றும் வீர‌ர்க‌ள் யாரையும் அங்கு காண‌வில்லை.
சில‌ தின‌ங்க‌ளுக்கு முன்ன‌ர், "யாழ்ப்பாண‌த்தில் க‌ம்யூ...னிஸ்டுக‌ளா? ந‌ம்ப‌ முடிய‌வில்லை!" என்று வ‌ர்க்க‌த் திமிருட‌ன் ப‌திவிட்ட‌, ஜெரா த‌ம்பி, யோ. க‌ர்ண‌ன் போன்ற‌ ஊட‌க‌விய‌லாள‌ர்க‌ளுக்கு முன்கூட்டியே அறிவிக்க‌ப் ப‌ட்டிருந்தும் இருவ‌ரும் அங்கு ச‌மூக‌ம‌ளிக்க‌வில்லை. அவ‌ர்க‌ளுக்கு என்ன‌ நிர்ப்ப‌ந்த‌மோ? ப‌டிய‌ள‌க்கும் முத‌லாளிக்கு விசுவாச‌மாக‌ ந‌ட‌ந்து கொள்ள‌ வேண்டாமா?
அது ம‌ட்டும‌ல்ல‌, நிக‌ழ்ச்சி தொட‌ர்பாக‌ க‌ட்சி தயாரித்த‌ அறிக்கை, அனைத்து த‌மிழ்ப் ஊட‌க‌ங்க‌ளுக்கும் அனுப்ப‌ப் ப‌ட்டிருந்த‌து. ஆனால், ஒரு ப‌த்திரிகை கூட‌ அதைப் பிர‌சுரிக்க‌வில்லை! ஆகையினால், த‌மிழ் ஊட‌க‌ங்க‌ளை "ஆதிக்க‌ சாதியின‌ரின் ஊதுகுழ‌ல்" என்று அழைப்பதில் என்ன‌ த‌வ‌று?
»»  (மேலும்)

10/25/2016

சென்னையில் ஒரு சிறுமி விற்கப்பட்ட கொடுமையான செய்தி, எந்த அரசியல் கட்சிகளையும் உலுக்கவில்லையா?


என் மகள் பிரம்மிக்கு 11 வயது. ஏழாம் வகுப்பு படிக்கிறாள். பள்ளிக்குப் போகிற அக்கறை இல்லாமல் காலையில் சில நாட்கள் வெகுநேரம் தூங்குவாள். அவளைப் பள்ளிக்குக் கொண்டுசேர்ப்பதற்குள் படாத பாடு பட வேண்டும். அப்படிப்பட்ட ஒரு நாளில் கண்ணில் பட்டது அந்தச் செய்தி. தாம்பரம் பேருந்து நிலையத்தில் செப்டம்பர் 26 அன்று அதிகாலை 4 மணி இருளில் 11 வயதுச் சிறுமி அழுகையோடு அலைந்திருக்கிறாள். அவளது அம்மாவும் அப்பாவும் பிரிந்துவிட்டார்கள். ஏழாம் வகுப்பைப் பாதியில் நிறுத்தி, ஆயிரம் ரூபாய்க்குத் தன்னை விற்றுவிட்டார்கள் என்றிருக்கிறாள் அந்தச் சிறுமி. அவளை வாங்கியவன் தன் வீட்டிலும் உறவினர் வீட்டிலும் அந்தக் குழந்தையை இடுப்பொடிய வேலை வாங்கியிருக்கிறான். ஓய்வு ஒழிச்சல் இல்லை. தூங்க நேரம் இல்லை. வயிற்றுக்குப் போதுமான சோறும் இல்லை. பிஞ்சு இடுப்பை ஒடித்து அடிமைத்தனத்துக்குள் ஆழ்த்திவிட்டது அந்த ஆயிரம் ரூபாய்.
“நான் படிக்கணும்ணா…” என்று அவள் கேட்டிருக்கிறாள். தனக்கு உதவிசெய்து காப்பாற்றியவர்களிடம் அந்தப் பிஞ்சு கேட்ட பிச்சை கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் தோல்வியாக மட்டும் எனக்குத் தெரிய வில்லை. பேருந்து நிலையத்திலிருந்த சிலரின் உதவியால் மாவட்டக் குழந்தைகள் நல அதிகாரிகளின் கட்டுப்பாட்டுக்குள் அவள் போய்விட்டிருக்கிறாள்.
பெற்றோர் மீது புகார்
1098 எனும் கட்டணமில்லா தொலைபேசிக்கு ஓராண்டில் சராசரியாக இந்தியாவில் 20 லட்சம் அழைப்புகள் வருகின்றன. “இப்படி வரும் அழைப்புகளில் பெரும்பாலானவை கட்டாய வேலையில் மாட்டிக்கொண்ட குழந்தைகள் பற்றியது தான்” என்கிறார் குழந்தை உரிமைகள் செயல்பாட்டாளர் தாமஸ் ஜெயராஜ். “முதலில் பார்த்தபோது அவள் நடுநடுங்கிப் போயிருந்தாள். தற்போது அரசின் காப்பகத்தில் இருக்கிறாள். இனிமேதான் பள்ளியில் சேர்க்கணும். இவளைக் கட்டாய உழைப்பில் ஈடுபடுத்தியவர் மீது காவல்துறையில் புகார் தந்துள்ளோம். குழந்தையை ஆதரவற்ற நிலைக்குத் தள்ளிவிட்ட பெற்றோர் மீதும் புகார் பதியுமாறு கேட்டுக்கொண்டுள்ளேன்” என்கிறார் காஞ்சிபுரம் மாவட்டக் குழந்தைகள் நல அமைப்பின் பொறுப்பாளர் டாக்டர் மணிகண்டன்.
சில ஆண்டுகளுக்கு முன்னால் நார்வே நாட்டில் வசித்த இந்திய மென்பொருள் பொறியாளர், அவரது மனைவியிடமிருந்து குழந்தைகளை அரசு பறித்து வைத்துக் கொண்டது. ‘குழந்தைக்குத் தேவையான பராமரிப்பைக் கொடுக்கவில்லை’ என்பது குற்றச்சாட்டு. சர்வதேச அளவில் இந்த விவகாரம் விவாதிக்கப்பட்டது. இந்தியாவின் வெளியுறவுத் துறை போராடி அந்தக் குழந்தைகளை மீட்டது. ஒரு ஆண்டு காலத்துக்குப் பிறகு, குழந்தைகள் இந்தியா வந்து சேர்ந்தன. தாயிடம் இணைந்தன. அமெரிக்காவிலும் இதுபோன்ற ஒரு சம்பவம். குழந்தையை நன்றாகப் பராமரிக்கவில்லை என்பதற்காக இந்தியாவைச் சேர்ந்த பெற்றோர் கைதுசெய்யப்பட்டனர். குழந்தைகள், ஒரு அம்மாவுக்கும் அப்பாவுக்கும் மட்டும் சொந்தமானவர்கள் அல்ல. குழந்தைகள் சமூகத்தின் சொத்துகள். மக்கள் நல அரசுகள் அப்படித்தான் பார்க்கின்றன. குழந்தையைக் கைவிட்டதற்காகப் பெற்றோர் மீது வழக்கு போடும் நிலை அரசுக்கு இருக்கிற கடமையின் அடையாளம்தான்.
மனதை உலுக்கும் சூழல்
இந்தியச் சூழல் மனதை உலுக்குகிறது. ஆள் கடத்தல் தொடர்பாக 2015-ல் இந்தியாவில் பதிவான குற்றங்களில் பாதிக்கப் பட்டவர்கள் 40% குழந்தைகள். பாலியல் தொழில் உள்ளிட்ட காரணங்களுக்காக அவர்கள் வாங்கப்பட்டார்கள். விற்கப் பட்டார்கள். இது கடந்த ஆண்டைவிட 25% அதிகம். பாதிக்கப்பட்ட 9,127 பேரில் 18 வயதுக்குள்ளானவர்கள் 43% என்கின்றன தேசியக் குற்றப் பதிவேடுகளின் நிறுவனம் தரும் புள்ளிவிவரங்கள்.
தாம்பரத்திலிருந்து தப்பித்த சிறுமிக்கு உதவும் உள்ளங்கள் கிடைத்தன. கிடைத் திருக்காவிட்டால்? அப்படிக் கிடைக்காமல் எத்தனை எத்தனை குழந்தைகள் இந்தப் புள்ளிவிவரங்களுக்குள் புழுங்கித் தவிக்கும்? கோவில்பட்டியில் சில தினங்களுக்கு முன்புகூட 10 வயதுச் சிறுமியைப் பாய் முடைகிற கம்பெனியினர் கடத்தி, 20 நாட்கள் கட்டாய உழைப்பில் ஈடுபடுத்தினர் என்றும் கடத்தவில்லை, பெற்றோர் சம்மதத்தின்பேரில்தான் வைத்திருந்தோம் என்றும் மாறுபட்ட செய்திகள் வந்தன.
வெட்கமாக இல்லையா?
எப்படித் தீர்வுகாண்பது இந்தப் பிரச்சினைக்கு? சமூகத்தில் காணப்படும் மௌனத்தைவிட அரசியல் களத்தில் காணப்படும் மௌனம்தான் மனதை அரிக்கிறது. ஆளும்கட்சியான அதிமுகவுக்கு இது ஒரு பிரச்சினை இல்லை. பிரதான எதிர்க்கட்சியான திமுகவுக்கும் இது ஒரு பிரச்சினை இல்லை. காங்கிரஸுக்கு, கம்யூனிஸ்ட்டுகளுக்கு, பாமகவுக்கு, விடுதலைச் சிறுத்தைகளுக்கு, மதிமுகவுக்கு எவருக்குமே பிரச்சினை இல்லை என்றால், யாருக்குத்தான் இது பிரச்சினை? ஒரு குழந்தையை நடைப்பிணமாக ஆக்கும் இந்தக் கொடுமை ஏன் யாரையும் உலுக்கவில்லை?
உலகின் பெரும்பான்மை நாடுகளின் ஊடகங்களுக்குச் செய்திகளைப் பரிமாறும் ‘ராய்ட்டர்’ நிறுவனம் ‘15 டாலருக்கு சென்னையில் ஒரு சிறுமி விற்கப்பட்டாள்’ என்ற தலைப்பில் இந்தச் செய்தியை வெளியிட்டிருக்கிறது. யாருக்குமே வெட்கமாக இல்லையா?
பூனை கருப்பா, சிவப்பா என்பது முக்கியமில்லை. அது எலியைப் பிடிக்க வேண்டும். காரியம் முக்கியமா, வீரியம் முக்கியமா என்பார்கள் கிராம மக்கள். காரியம் நடக்க வேண்டும். எந்தக் கொள்கையை வேண்டுமானாலும் தேர்ந்தெடுங்கள்; எப்படியான திட்டங்களை வேண்டு மானாலும் வகுத்திடுங்கள்; குழந்தைகள் விற்கப்படுவதை, பிச்சையெடுக்க அனுப்பப் படுவதைத் தவிர்க்க வழி காணுங்கள். அரசு இதைக் கையில் எடுக்க வேண்டும் என்றால், முதலில் அரசியல் களத்தில் இதுகுறித்து விரிவான விவாதங்கள் நடக்க வேண்டும். முதலில் பேசுங்கள்!
- தொடர்புக்கு: neethirajan.t@thehindutamil.co.in
த.நீதிராஜன்
»»  (மேலும்)

10/24/2016

விருட்சம் சமூக மேம்பாட்டு அமையத்தின் கிராமத்தை நோக்கிய மருத்துவ முகாம்

விருட்சம் சமூக மேம்பாட்டு அமையத்தின் மருத்துவ முகாமானது இன்று 23.10.2016 ஞாயிற்றுக்கிழமை விளாந்தோட்டம் பல்தேவைக் கட்டடத்தில் இடம்பெற்றது

.

விருட்சம் சமூக மேம்பாட்டு அமையத்தினர் இம்மருத்துவ முகாமை களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையுடன் இணைந்து மேற்கொண்டதுடன், விமோச்சனா இல்லத்தினருடன் இணைந்து மது ஒழிப்பு வேலைத்திட்டத்தினையும் முன்னெடுத்தனர்.

மருத்துவ முகாமில் 150 க்கு மேற்பட்ட பொது மக்கள் பயனடைந்துள்ளதுடன் பலதரப்பட்ட மருத்துவசேவைகள் வழங்கப்பட்டுள்ளன. கிராமத்தினரின் வேண்டுகோளுக்கிணங்க தொடர்ந்தும் பல மருத்துவ சேவைகளையும் சமூக சேவைத்திட்டங்களையும் வழங்க விருட்சம் சமூக மேம்பாட்டு அமையத்தினர் முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த விளாந்தோட்டம் கிராமத்தில் அடிப்படை வசதிகள் எதுவுமில்லை. குடி நீர்கூட இல்லை. மருத்துவ வசதி பெறுவதாக இருந்தால் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்குதான் மக்கள் வரவேண்டிய நிலை. அக் கிராமத்தில் ஒரு மருத்துவ முகாம் இடம்பெறுவது இதுவே முதல் தடவை என்பது குறிப்பிடத்தக்கது.

கல்வியில் முன்னேறவேண்டும் என்கின்ற ஆர்வம் உள்ள மக்களாக உள்ளனர் ஆனால் வசதிகளற்ற கிராமம். பல மைல்களுக்கு அப்பால் பல கிராமங்கள் கடந்து பாடசாலை சென்று கற்று வருகின்றனர் மாணவர்கள். இரு மாணவர்கள் தரம் ஐந்து புலமைப் பரிசிற் பரீட்சையில் சித்தியடைந்துள்ளனர்.
அங்குள்ள மக்கள் நாட்டு நடப்புக்களைக்கூட அறிந்துகொள்ள முடியாத நிலையில் உள்ளனர். வாசிகசாலை வசதியில்லை. குறித்த கிராம மக்கள் விருட்சம் சமூக மேம்பாட்டு அமையத்தினரிடம் வாசிகசாலை ஒன்றினை அமைத்து தருமாறு கேட்டுக்கொண்டனர். அதற்கிணங்க வாசிகசாலை ஒன்றினை ஏற்படுத்திக்கொடுத்து தொடர்ந்து பத்திரிகைகளுக்கான செலவினையும் வழங்க விருட்சம் சமூக மேம்பாட்டு அமைப்பினர் முன்வந்துள்ளனர்.

நீண்டகாலப்பிரச்சினையாக இருந்துவரும் குடிநீர்ப் பிரச்சினைக்கும் தீர்வினை வழங்க விருட்சம் சமூக மேம்பாட்டு அமையத்தினர் முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ் வைத்திய முகாமில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் Dr. சுகுணன் தலைமையிலான வைத்திய குழுவினரும், விமோச்சனா இல்லத்தின் பணிப்பாளர் செல்விகா அவர்களும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
இத்தனைக்கும்மேல் அக்கிராம மக்கள் யானையின் அட்டகாசங்களுக்கு அஞ்சி வாழ்ந்துவருவது குறிப்பிடத்தக்கது
»»  (மேலும்)

சுன்னாகம் சம்பவம்: உரிமை கோரியது 'ஆவா' குழு

சுன்னாகம் சந்தைப் பகுதியில், முகமூடி அணிந்திருந்த நபர்களினால் கடந்த ஞாயிற்றுக்கிழமை (23) மதியம், இரு பொலிஸார் மீது மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டு சம்பவத்துக்கு 'ஆவா' குழு உரிமை கோரியுள்ளது.
மேற்குறிப்பிட்ட சம்பவம் தொடர்பில் 'ஆவா' குழுவினரால் யாழ்ப்பாணத்தில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளிலேயே இவ்வாறு உரிமை கோரப்பட்டுள்ளது.
குறித்த சுவரொட்டிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, உயிர் நீத்த பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆழ்ந்த கண்ணீர் அஞ்சலியை காணிக்கை ஆக்குகின்றோம்.
சுண்ணாகத்தில் பொலிஸார் மீது நடத்தப்பட்ட வாள்வெட்டு எம்மால் நடத்தப்பட்டதே. பல்கலைக்கழக மாணவர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட கொடூரத்துக்கு பதிலடியாக இடம்பெற்ற இச்சம்பவம், எம் இன சமூகத் துரோகிகளாக இயங்கும் தமிழ் பொலிஸாரை சிந்திக்க வைக்கும்.
யாழின் மிகப்பெரிய தலைப்பாக இன்று அனைவராலும் கருதப்படும் 'வாள்வெட்டுச் சம்பவங்கள்' சமூக கலாசார சீரழிவுகள் எனும் தலைப்பினுள் உள்ளடக்கம் என்றாலும் 'ஆவா' குழுவினால் இன்றளவும் மேற்கொள்ளப்படும் பெருமளவு வாள்வெட்டுக்கள் சமூகத்தில் காணப்படும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிராக மேற்கொள்ளப்படுகிறது.
பலதரப்பட்ட சமூக சீரழிவுகளுக்காக எம்மால் தண்டனைகள் வழங்கப்படுகின்றன. தமிழீழத்தின் கலாச்சார பூமி என அழைக்கப்படும் யாழ்ப்பாணத்தில் கலாசாரம் சீரழிந்து போவதை தமிழராக இருந்து எம்மால் அனுமதிக்க முடியாது.
யாழ். மக்களுக்கு கலாசாரம் எந்தளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததோ அந்தளவுக்கு யாழ் பல்கலைக்கழகமும் அதன் மாணவர்களும் முக்கியத்துவம் வாய்ந்தவர்கள். அவர்களுக்கு இன்று இழைக்கப்பட்ட இந்த துயரத்துக்கு சில சிங்கள பொலிஸார் துணை நின்றிருந்தாலும் முன்னின்று நடத்தியது தமிழ் பொலிஸாரே.
நீதிபதி இளஞ்செழியனின் கட்டளைக்கு அமைய, இந்தக் கொடூரத்தை இன்றுஇளைத்த உப-பொலிஸ் பரிசோதகர் ஸ்ரீகஜன் உட்பட அவர் தலைமைக்கு உட்பட்டு, செயற்பட்ட அத்தனை தமிழ் பொலிஸாருக்கு தண்டனைகள் கால அமைவுக்கு ஏற்ப வழங்கியே தீர்ப்போம்.
இதற்கு முற்பட்ட காலங்களில் எங்களால் நடத்தப்பட்ட வாள்வெட்டு சம்பவங்களுக்குப் பின்னாலும் வலுவான சமூகத்தை சீரழிக்கும் காரணங்கள் இருந்துள்ளன. ஆனாலும், எமக்கு பெருமை தேவையில்லை. அவ்வாறு நாம் செயற்பட்டாலும் என்னவோ சமூகத்துக்குப் புறம்பான சமூகவிரோத குழுவாக எங்களை பொலிஸாரும் ஊடகங்களும் மக்கள் மத்தியில் வெளியிட்டனர்.
திருட்டு, கொள்ளை, பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அடக்குவது போன்ற எங்களுடைய செயற்பாடுகளால் பாதுக்காப்பட்ட ஊர்கள் பல.
இனிவரும் காலம் முன்னையது போல் அல்லாமல் எங்களால் அரங்கேறும் சம்பவங்களுக்குரிய சரியான காரணங்களை தவறாமல் சமூம் மக்களுக்கு வெளிப்படுத்துவோம் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
சுன்னாகம் சந்தைப் பகுதியில், கடையொன்றில் மேற்கொள்ளப்பட்ட கொள்ளைச் சம்பவத்தை முறியடிக்க முற்பட்ட வேளையிலேயே குறித்த இரு பொலிஸாரும் வாள்வெட்டில் காயமடைந்ததாக பொலிஸார் தெரிவித்திருந்த நிலையிலேயே ஆவா குழுவின் இந்த சுவரொட்டி வெளிவந்துள்ளது.
»»  (மேலும்)

ஆந்திர - ஒடிசா எல்லையில் பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில் 21 மாவோயிஸ்ட்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்

.

ஆந்திரா - ஒடிசா மாநில எல்லையில் உள்ள மால்ங்கிரி வனப்பகுதியில் ஆந்திரா- ஒடிசா போலீசார் இணைந்து மாவோயிஸ்ட்களுடன் துப்பாக்கிச்சண்டையில் ஈடுபட்டனர். ஒடிசா போலீசார் வழக்கமான சோதனையில் ஈடுபட்ட போது, மாவோயிஸ்ட்களுடன் மோதலில் ஈடுபட்டனர்.ஒடிசா மாநில போலீசார் அளித்த தகவல் பேரில், ஆந்திர போலீசாரும் மாவோயிஸ்ட்களுக்கு எதிரான மோதலில், அவர்களுடன் இணைந்து ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் நடந்த இந்த மோதலில், மாவோயிஸ்ட் அமைப்பின் மூத்த தலைவர் மற்றும் மூத்த தலைவர் ஒருவரின் மகன் உட்பட 21 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

மாவோயிஸ்ட்கள் கொல்லப்பட்டதை ஆந்திர மாநில போலீஸ் டி.ஜி.பி., உறுதி செய்துள்ளார். அவர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளார். இந்த மோதலில் ஆந்திர போலீசார் 2 பேர் மற்றும் மாவோயிஸ்ட் எதிர்ப்பு படையை சேர்ந்த சில போலீஸ் அதிகாரிகள் காயமடைந்துள்ளனர். . காயமடைந்த போலீசார் ஹெலிகாப்டர் மூலம் உடனடியாக விசாகப்பட்டினம் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். கொல்லப்பட்ட மாவோயிஸ்ட்களிடமிருந்து ஏகே 47 ரக துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மாவோயிஸ்ட்களின் மறைவிடமும் கண்டுபிடிக்கப்பட்டது. மாவோயிஸ்ட்கள் உடல் பிரேத பரிசோதனைக்காகவும் அடையாளம் காணவும் சித்ரகொண்டாவுக்கு கொண்டு வரப்பட உள்ளது. தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்
»»  (மேலும்)

10/23/2016

யாழ். பல்கலை மாணவர்கள் மரணம்! நாளை அனைத்து பல்கலைக்கழகங்களிலும் போராட்டம்!!


யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் மரணத்திற்கு கண்டனம் தெரிவித்து நாளை (24/10/2016) நாட்டின் அனைத்து பல்ககைலக்கழங்களிலும் போராட்டம் நடத்தப்பட உள்ளதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் லஹிரு வீரசேகர நேற்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்தும் கூறுகையில்,
உயிரிழந்த சுலக்சன், கஜன் சகோதரர்களின் மரணமானது பொலிஸ் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் என பிரேதப் பரிசோதனை அறிக்கை வெளியிடப்பட முன்னதாகவே பொலிஸ் உத்தியோகத்தர்களின் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளது
உத்தரவினை மீறி வண்டியை நிறுத்தாது சென்றதால் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் கூறுகின்றனர்.இவ்வாறு உத்தரவினை மீறிச் சென்ற அனைவரையும் பொலிஸாரினால் துப்பாக்கிச் சூடு நடத்தி கொல்ல முடியுமா?
திடீர் விபத்து ஒன்று ஏற்பட்டது, அதனால் பொலிஸாரின் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் மாணவர் உயிரிழந்ததனை இந்த அனைத்து தரப்பினரும் அறிந்திருந்தார்கள்.
வடக்கில் மட்டுமல்ல தெற்கிலும் இவ்வாறு மக்கள் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மரணிக்கின்றனர். இது ஓர் சாதரண விடயம் என்று பாதுகாப்புச் செயலாளர் கூறுகின்றார்.
எனினும், இந்தக் கூற்றினை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. இது ஓர் சாதாரண நிலைமையல்ல, இது ஓர் அசாதாரண நிலைமையாகும்.
வடக்கில் இடம்பெற்ற காரணத்தினால் நாம் இந்த சம்பவத்தை கைவிட்டு விடப் போவதில்லை.
மாணவர் கொலை செய்யப்பட்டமைக்கு நீதி வழங்கப்பட வேண்டும் எனக் கோரியும் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தும் நாடு முழுவதிலும் உள்ள பலக்கலைக்கழகங்களில் நாளை போராட்டம் நடத்தப்படும் என லஹிரு வீரசேகர தெரிவித்துள்ளார்
»»  (மேலும்)

முன்னாள் மேயர் சிவகீதா உள்ளிட்ட 7பேர் கைது

மட்டக்களப்பு மாநகரசபை முன்னாள் மேயர் சிவகீதா பிரபாகரன் அவரது கணவர் உட்பட ஏழு பேரை மட்டக்களப்பு பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
மட்டக்களப்பு நகரில் மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின்போது வீட்டுடன் இணைந்த கட்டிடத்தில் விபசாரம் நடத்திய குற்றச்சாட்டின் பேரிலேயே இவர்கள் கைதுசெய்யப்பட்டனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

»»  (மேலும்)

10/22/2016

புதிய அரசியலமைப்பில் பௌத்த மதத்திற்கான முன்னுரிமைகள் குறைக்கப்பட மாட்டாது ஜனாதிபதி

திருகோணமலை, கோமரங்கடவல ரங்கிரி உல்பத்த ரஜமகா விகாரையின் புதிய வழிபாட்டுக்கான கட்டிடங்களை சாசனத்துக்கு அர்ப்பணிக்கும் புண்ணிய நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன  மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன் போது  பிரதேசத்தின் ஐந்து விகாரைகளுக்கு புனித பூமி உறுதி ஜனாதிபதியால் வழங்கப்பட்டது.
வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள பௌத்த விகாரைகளில் தங்கியிருக்கும் மதகுருமார்களின் அடிப்படைத் தேவைகளான வதிவிடம், குடிநீர், மின்சாரம், மற்றும் சுகாதார வசதிகள் உட்பட அடிப்படை வசதிகளை அபிவிருத்தி செய்யும் செயற்பாடுகள் ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்படுமென ஜனாதிபதி தெரிவித்தார்.
குறைந்த வசதிகளுடைய விகாரைகளை அபிவிருத்தி செய்வதற்காக ஆரம்பிக்கப்பட்ட பௌத்த புனருதய நிதியத்துக்கு பெருமளவு நிதி கிடைத்துள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அடிப்படை வசதிகள் இல்லாத விகாரைகளின் பட்டியலையும் முப்படையினர் ஊடாக பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.
அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு பௌத்த சாசனத்தை பாதுகாப்பதற்கும் ஊக்குவிப்பதற்கும் தற்போதய நல்லாட்சி அரசு கடப்பாட்டைக் கொண்டுள்ளது.
தற்போதுள்ள அரசியலமைப்பில் பௌத்த மதம் தொடர்பில் உள்ளடக்கப்பட்டுள்ள எந்தவொரு பிரிவும் அகற்றப்படமாட்டாதென்பதுடன் அரசாங்கத்தை அரசியல் ரீதியில் எதிர்ப்போர் இது தொடர்பில் முன்னெடுத்துவரும் போலியான பிரச்சாரங்கள் தொடர்பில் கவலையடைவதாகவும் தெரிவித்தார்.
»»  (மேலும்)

ரூ.730க்கு கைச்சாத்திட்டு துரோகமிழைத்துள்ளனர்: தம்பையா

ஏற்கெனவே 800 ரூபாவுக்கும் அதிகத்தொகை நாட் சம்பளமாகப் பெற வாய்ப்பு இருந்த நிலையில் 730 நாட் சம்பளத்துக்குக் கைச்சாத்திட்டுள்ள தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களுக்கு துரோகமிழைத்துள்ளனர். இது பெருந்தோட்டக் கம்பனிகளுக்கும், கம்பனிகள் நட்டத்தில் இயங்குகின்றன என்று கூறிய பரிவாரங்களுக்கும் கிடைத்த வெற்றியாகும் என்று மக்கள் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி இ.தம்பையா வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அச்சங்கத்தின் நிறைவேற்றுக் குழுசார்பாக வெளியிடப்பட்டுள்ள அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
தோட்டத் தொழிலாளர்கள் 1,000 ரூபாய் கோரி கடந்த காலங்களில் தமது போராட்டங்களை மேற்கொண்டிருந்த போதும் புதிய சம்பள கூட்டு ஒப்பந்தம், வெறும் 730 ரூபாய் என்று தீர்மானிக்கப்பட்டு கம்பனிகள் சார்பாக இலங்கை முதலாளிமார் சம்மேளனமும் தொழிலாளர்கள் சார்பாக இ.தொ.கா., இ.தே.தோ.தொ.ச. மற்றும் தொழிற்சங்க கூட்டுக் கமிட்டி என்பவும் கைச்சாத்திட்டுள்ளன.

அடிப்படை சம்பளம் வெறும் 50 ரூபாயாக அதிகரித்துள்ள புதிய சம்பள கூட்டு ஒப்பந்தத்தில், ஏற்கெனவே வழங்கப்பட்ட விலைக்கேற்ற கொடுப்பனவு 30 ரூபாய் அப்படியே வழங்குவதற்கும், ஏற்கெனவே 75சதவீத வரவுக்கு வழங்கப்பட்ட 140 ரூபாய் 60 ரூபாயாகக் குறைக்கப்பட்டும், இதுவரை இல்லாத உற்பத்தித்திறன் கொடுப்பனவு என்ற புதியவகை கொடுப்பனவாக 140 ரூபாயும் சேர்க்கப்பட்டுள்ளன.
எனவே, அடிப்படை சம்பளத்தில் 50 ரூபாயும் ஏனைய கொடுப்பனவுகளாக 60 ரூபாய் சேர்த்து வெறும் 110 ரூபாய் சம்பள உயர்வு மாத்திரம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த சம்பள உயர்வு தொழிலாளர்களால் எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல. அத்தோடு, இதுவரை காலமும் சம்பளக் கூட்டு ஒப்பந்தத்தில் வழங்கப்பட்டு வந்த நிலுவை சம்பள நடைமுறை இல்லால் ஆக்கப்பட்டு, 2015ஆம் ஏப்பிரல் மாதத்திலிருந்து வழங்கப்பட வேண்டிய 18 மாத நிலுவை சம்பளம் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படாமை என்பன கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களின் இயலாமையையே காட்டுகிறது.
ஏற்கெனவே 800 ரூபாவுக்கும் அதிகத்தொகை நாட் சம்பளமாகப் பெற வாய்பு இருந்த நிலையில் 730 நாட் சம்பளத்துக்குக் கைச்சாத்திட்டுள்ள தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களுக்கு துரோகமிழைத்துள்ளனர். இது பெருந்தோட்டக் கம்பனிகளுக்கும், கம்பனிகள் நட்டத்தில் இயங்குகின்றன என்று கூறிய பரிவாரங்களுக்கும் கிடைத்த வெற்றியாகும்.
ஒன்றாக இருந்து பேச்சுவார்த்தை நடத்தி, நிபந்தனைகளை ஏற்று கையொப்பமிட்டுப் பின்னர் ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டும் அசட்டுத்தனமான தொழிற்சங்க அரசியல் கலாசாரத்தை தொழிலாளர்கள் தொடர்ந்தும் சகிக்கக்கூடாது. இ.தொ.கா. தலைவர்கள் நிலுவை சம்பளம் பெற்றுக் கொடுக்க முடியாது என்றும் கூறும் கருத்துக்கள் கூட்டு ஒப்பந்தம் தொடர்பில் அடிப்படை அறிவற்ற கருத்துக்களாக இருப்பதுடன், அச்சங்கத்தில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களைக் கொச்சைப்படுத்தும் நடவடிக்கையாகும்.
அத்தோடு, தொழிலாளர்களுக்கு இழைக்கப்பட்டுள்ள துரோகத்துக்கு இ.தே.தோ.தொ.ச. மற்றும் பெருந்தோட்டக் கூட்டு கமிட்டியும் சம அளவில் பொறுப்பு கூறவேண்டியவர்களாவர். கம்பனிகள் கூறுவது போல் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் நு.P.கு மற்றும் நு.வு.கு என்பவற்றைச் சேர்த்து சம்பளத் தொகையை கூறும் வங்குரோத்து நிலைக்கு இன்று தொழிற்சங்கங்கள் தள்ளப்பட்டுள்ளன.
கம்பனிகள் அனைத்தும் இலாபமோ நட்டமோ ஒருமுகமாக இருந்து தங்கள் பக்க பேரப்பேச்சை முன்னெடுத்த போதும், தொழிலாளர்கள் சார்பாக ஒப்பமிடும் மூன்று சங்கங்களும் கம்பனிகளைப் பலப்படுத்தும் வகையில் பல முரண்பட்ட நிலைப்பாடுகளை பேச்சுவாத்தை மேசையிலும் அதற்கு வெளியிலும் வெளிப்படுத்தி அவர்களின் தொழிலாளர் விரோத நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளனர்.
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் தமிழ் முற்போக்கு கூட்டணியினரின் செயற்பாடுகள் அவர்கள் தோட்டத் தொழிலாளர்களின் நலனில் அக்கறை இல்லை என்பதையே காட்டுகிறது. ஆரம்பத்தில் தாங்கள் 1,000 சம்பள உயர்வுக்கு ஆதரவளிப்பதாகச் சத்தியாகிரகம் இருந்த அக் கூட்டணியினர், 730 இணங்கியதால் தாங்கள் நடத்த இருந்ததாகக் கூறிய போராட்டத்தை கைவிட்டனர்.
அடுத்த முறை கூட்டு ஒப்பந்தத்தில் நாட் சம்பளத்தையும் இல்லாமல் செய்து உற்பத்தித் திறனை அடிப்படையாக கொண்ட முறை என்ற பேரில் தொழிலாளர்களின் சட்ட ரீதியான உரிமைகளை பறித்து தொழிற்சங்க உரிமைகள் அற்ற உதிரிகளாக ஆக்கும் நிலைக்கு தள்ளுவதற்கே கம்பனிகள் திட்டமிட்டுள்ளனர். அதன் அங்கமாகவே உற்பத்தித்திறன் கொடுப்பனவு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அவ்வாறான திட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தே தற்போதைய கூட்டு ஒப்பந்தத்தில் தொழிற்சங்கங்கள் கைச்சாத்திட்டப்பட்டுள்ளதாக அம்முறைக்கு முழு ஒத்துழைப்பை கம்பனிக்கு வழங்கி வரும் பெருந்தோட்டத்துறை அமைச்சர் நவீன் திசாநாயக்க மற்றும் தொழில் அமைச்சர் ஜோன் செனவிரத்தின போன்றோர் குறிப்பிட்டுள்ளனர்.
அரசாங்கம் கூட்டு ஒப்பந்தத்தில் தான் மத்தியஸ்தர் என்று கூறிவந்த போதும் 730 ரூபாயை ஏற்றுக் கையொப்பம் இட வேண்டும் என்று வற்புறுத்தியமை அவர்கள் வெளிப்படையாக கம்பனிகள் சார்பாக இருந்தமையை காட்டுகிறது.
தோட்டத் தொழிலாளர்கள், தொழிலாளர் வர்க்கக் குணமற்ற கம்பனிகளுக்கு அடிப்பணியும் தொழிற்சங்கங்களையும் ஆளும் வர்க்கத்தைச் சார்த்திருக்கும் நாடாளுமன்றத் தலைமைகளையும் கூட்டு ஒப்பந்த நேரத்தில் மாத்திரம் விமர்சித்து விட்டு பின்னர் தேர்தலில் அவர்களை ஆதரித்து பின்னர் மீண்டும் கூட்டு ஒப்பந்தத்தின் போது விமர்சிக்கும் போக்கை மாற்றி தொழிலாளர் வர்க்க உணர்வுடன் மாற்று பாதையை பற்றி சிந்திக்க வேண்டும்.
அவ்வாறு மக்கள் செயற்படாவிட்டால் தோட்டத் தொழிலாளர்களின் வஞ்சிக்கப்பட்ட வரலாறு தொடர்வதையும் பெருந்தோட்டத் தொழிற்துறை அழிவடைவதையும் மலையகத் தேசிய இனத்தின் இருப்பு தகர்க்கப்படுவதையும் தடுக்க முடியாது போய்விடும் என்பதை வலியுத்துகின்றோம்.
 
»»  (மேலும்)

10/21/2016

ஜனாதிபதி மஹிந்தவின் அல்ல மைத்திரியின் ஒரு நாள் செலவு ஒரு கோடிக்கும் மேல்

பாராளுமன்றத்தில் நேற்று 2017ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட ஒதுக்கீட்டு வரைபு சமர்ப்பிக்கப்பட்டது. இதனடிப்படையில் ஜனாதிபதியின் உத்தேசிக்கப்பட்ட செலவீனம் 6.45 பில்லியன் ரூபாவாகும்.
2016ம் ஆண்டு 2.3 பில்லியன் ரூபாவாக உத்தேசிக்கப்பட்ட ஜனாதிபதிக்கான செலவீனம், 2017ம் ஆண்டு ஒதுக்கீட்டு சட்டமூலத்தின் படி, 6.45 பில்லியன் ரூபாவாக காணப்படுகின்றது. இம்முறை அது மூன்று மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று 2016ம் ஆண்டு 0.4 பில்லியன் ரூபாவாக இருந்த பிரதமரின் செலவீனம், 2017ம் ஆண்டு ஒதுக்கீட்டு சட்டமூலத்தின் படி, 1.25 பில்லியன் ரூபாவாக காணப்படுகின்றது.
அதற்கமைய 2017ம் ஆண்டு தொடர்பில் எதிர்பார்க்கப்படும் அரசாங்க செலவு 1819.5 பில்லியன் ரூபா என தெரிவிக்கப்படுகின்றது. 2016ஆம் ஆண்டு அரசாங்க செலவு 1941.4 பில்லியன் ரூபாவாக காணப்பட்டது. இது 2016ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 21.9 பில்லியன் ரூபா குறைவென கூறப்படுகின்றது.  
»»  (மேலும்)

அப்படின்னா வடக்கு கிழக்கு இணைந்த சமஸ்டி ஒன்னும் கிடையாதா?

“இந்த நாட்டில் ஜனநாயகம் நிலைபேற வேண்டுமாக இருந்தால் மாகாணசபை, உள்ளூராட்சி சபைகளுக்கு அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். அப்போதுதான் ஜனநாயகம் நிலைபெறும்” என எதிர்க் கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.
தேசிய சுற்சூழல் மாநாடு ஜனாதிபதி தலைமையில் இன்று காலை திருகோணமலையில்  நடைபெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
“நாட்டின் ஜனாதிபதி மற்றும்பிரதமர் ஆகிய இருவரும் இந்த நாட்டின் பிரச்சினைகளை தீர்ப்பதில் மிகவும் நிதானத்துடன் செயற்பட்டு வருகின்றனர்.
அதற்கு எமது பங்களிப்பை வழங்க வேண்டும். ஜனாதிபதி அவர்களின் ஆட்சிக் காலத்துக்குள்  நாட்டில் நிலையான  ஜனநாயகத்தை ஜனாதிபதி ஏற்படுத்த வேண்டும்.

ஜனாதிபதி பதவி ஏற்ற பின்பு சுற்றாடலில் அதிக கவனம் செலுத்தி வருவதனை நாங்கள் எல்லோரும் அறிவோம். அவர் அவரது காலப்பகுதியில் பல்வேறு விடயங்களை செய்ய முயற்சிகளை மேற் கொண்டு வருகின்றார்.
இந்த நாட்டில்  நாட்டின் பொருளாதாரம், நாட்டினுடைய கலாசாரம், ஒற்றுமை, ஒருமைப்பாடு, நல்லிணக்கம், புரிந்துணர்வு வெவ்வேறு மக்கள் மத்தியில் நாட்டில் தேசியப் பிரச்சினைக்கு தீர்வு மற்றும் ஜனாதிபதி முறைமையை ஒழிக்கவும் அவர் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்.
இந்த நாட்டின் சர்வாதிகாரத்தை இல்லாமல் செய்வது  ஜனநாயகத்துக்கு உரிய இடத்தைக்கொடுப்பது போன்ற பல்வேறு கருமங்களில் அவரது அரசாங்கம் ஈடுபட்டு வருகின்றது.
ஜனாதிபதி முறைமையை ஒழிக்கவேண்டும் என்று கூறுகின்றபோது, தனக்குள்ள அதிகாரங்களைத்தான் விட்டு விட்டு தான் செல்லத்தயாராக இருப்பதாகவும் அவர் தெள்ளத் தெளிவாக கூறுகின்றார்” என்றார்.அப்படின்னா வடக்கு கிழக்கு இணைந்த சமஸ்டி ஒன்னும் கிடையாதா?

»»  (மேலும்)

மாணவனின் நெஞ்சில் துப்பாக்கிச் சூடு?

மாணவனின் நெஞ்சில் துப்பாக்கிச் சூடு?


உயிரிழந்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவரில், ஒருவர் மீது துப்பாக்கியால் சுடப்பட்டதாகவும், அதனால் ஏற்பட்ட விபத்தால் மற்றைய மாணவனும் உயிரிழந்துள்ளதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இருந்த உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுன்னாகத்தைச் சேர்ந்த பவுண்ராஜ் சுலக்ஸன் (வயது 24) என்ற மாணவனின் நெஞ்சில் துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.
கொக்குவில், குளப்பிட்டிச் சந்திப் பகுதியில் வெள்ளிக்கிழமை (21) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்டு இரண்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களின் உடல்களை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பொலிஸார் ஒப்படைத்தனர்.
விபத்து நடைபெற்றதாக கூறப்படும் நேரத்தில் துப்பாக்கிச் சூட்டுச் சத்தம் கேட்டதாக அப்பகுதி பொதுமக்கள் கூறினர்.
இதனால், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற உடற்கூற்று பரிசோதனையின் போது, பெருமளவான பல்கலைக்கழக மாணவர்கள் வைத்தியசாலை வளாகத்தை ஆக்கிரமித்தனர்.
உடற்கூற்றுப் பரிசோதனையில் மாணவன் ஒருவனின் உடலில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்துள்ளதாக கூறப்படுகின்றது. எனினும் அதனை சட்ட வைத்தியதிகாரி வெளிப்படுத்தவில்லை.
»»  (மேலும்)

கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுமா? – டக்ளஸ் தேவானந்தா!


கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு வாக்குறுதி வழங்கியபடி இணைந்த வடக்கு கிழக்கிற்குள் சமஷ்டி அடிப்படையிலான தீவை பெற்றுக் கொடுக்கத் தவறுமாக இருந்தால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இரண்டாக உடையும் என்று கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியினரும், கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் ஊடகம் ஒன்றுக்குத் தெரிவித்துள்ள கருத்தானது, கூட்டமைப்பு மீதான தமிழ் மக்களின் அதிருப்திகளிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கான தந்திரோபாயமாகவே கருதமுடிகின்றது என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது –
இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வை 2016ஆண்டு நடுப்பகுதிக்குள் பெற்றுத்தருவதாக கூறியே தமிழ் மக்களின் வாக்குகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றத் தேர்தலில் பெற்றுக்கொண்டது.காலத்துக்குக் காலம், தேர்தலுக்குத் தேர்தல், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு கொடுத்த பல வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமலே காலாவதியாகிப் போயிருக்கின்றது.
அந்த வகையில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அரசியல் தீர்வைப் பெற்றுத்தருவதாகக் கூறியும், வடக்கு மாகாணசபைக்கான தேர்தலில் வடக்கிலிருந்து இராணுவத்தை வெளியேற்றுவோம் என்றும், படையினர் வசமுள்ள எமது மக்களின் நிலங்களை முழுமையாக மீட்டுத் தருவதாகவும் வாக்குறுதிகள் வழங்கினார்கள்.அந்த வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படாமலே காலவதியாகிப் போய்விடும் என்றே எண்ணத்தோன்றுகின்றது

2016ஆம் ஆண்டு நடுப்பகுதிக்குள் அரசியல் தீர்வைப் பெற்றுத் தருவதாக வாக்குறுதி வழங்கினார்கள். பின்னர் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனோ அந்த வாக்குறுதியானது தனது வெறும் கணிப்புத்தான் என்று கூறி தமிழ் மக்களை ஏமாற்ற முயற்சித்தார்.
சம்பந்தனின் கருத்துக்குத் தமிழ் மக்கள் கடுமையான கண்டனத்தையும், அதிருப்தியையும் வெளிப்படுத்தியதைத் தொடர்ந்து 2016ஆம் ஆண்டு இறுதிக்குள் அரசியல் தீர்வைப் பெற்றுத் தருவதாக மீண்டுமொரு வாக்குறுதியை வழங்கியிருக்கின்றார். தற்போது அரசாங்கம் தயாரித்துக் கொண்டிருக்கும் புதிய அரசியல் யாப்பு திருத்த வரைபில் எவ்வாறான தீர்வு தமிழ் மக்களுக்குத் தேவை என்பதை கூட்டமைப்பு வெளிப்படையாக முன்வைக்கவில்லை.

இந்த நிலையில், தமிழ் மக்களுக்கு கூட்டமைப்பு வாக்குறுதி வழங்கியபடி இணைந்த வடக்கு கிழக்கிற்குள் சமஷ்டி அடிப்படையிலான தீவை பெற்றுக் கொடுக்கத் தவறுமாக இருந்தால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இரண்டாக உடையும் என்று கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியினரும், கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் ஊடகம் ஒன்றுக்குத் தெரிவித்துள்ள கருத்தானது, கூட்டமைப்பு மீதான தமிழ் மக்களின் அதிருப்திகளிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கான தந்திரோபாயமாகவே கருதமுடிகின்றது கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்.
புதிய அரசுடன் இணக்க அரசியல் நடத்திக்கொண்டு எதிர்க்கட்சித் தலைமைப் பதவி, நாடாளுமன்றக் குழக்களின் பிரதி தவிசாளர் பதவி மற்றும் மாவட்ட அபிவிருத்திக் குழுக்களின் இணைத் தலைமைப் பதவி என்பவற்றையும் தமது குடும்பங்களுக்காக சொகுசு சலுகைகளையும் பெற்றுக்கொள்ளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர்,தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வைப் பெற்றுக் கொடுப்பதற்கும், தமிழ் மக்களின் முன்னுரிமைக்குரிய பிரச்சினைகளான நிலங்கள் விடுவிப்பு,
காணாமல் போனோர் விவகாரம், சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை போன்ற பிரச்சினைகளுக்கு உரிய தீர்வைப் பெற்றுக் கொடுப்பதற்கும் ஏன் கூட்டமைப்பினரால் அர்த்தபூர்வமான பேச்சுக்களை அரசுடன் நடத்த முடியாது என்பதே தற்போதுள்ள கேள்வியாகும்.

»»  (மேலும்)

10/20/2016

தமிழில் இயங்காத கிழக்கு மாகாண சபை

கிழக்கு மாகாண உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் தகவல்களை வெளியிடுமாறு அலுவலக மொழிகள் ஆணைக்குழு அறிவிக்கவேண்டிய நிலையில் கிழக்கு மாகாண ஆட்சி இடம்பெறுகின்றது. Afficher l'image d'origine


மொழி பிரச்னையை வைத்து அறுபது எழுபது ஆண்டுகளாக  பிழைப்பு வாத அரசியல் செய்துவரும் தமிழரசு கட்சியினரும் முஸ்லீம் காங்கிரசாராரும் இணைந்து கூட்டாட்சி செய்துவரும் கிழக்கு மாகாண சபைக்கு இப்படியொரு நிலை வந்துள்ளது.

Résultat de recherche d'images pour "chief minister of eastern province sri lanka"கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரின் ஆட்சி காலத்தில் தமிழ் மொழியில் இடம்பெற்ற சபையின் இணையத்தள வேலைகள் தற்போது கவனிப்பாரற்று கிடக்கின்றன.

தற்போது, இந்த இணையத்தளத்தில் பெரும்பாலும் ஆங்கில மொழியில் மாத்திரமே தகவல்கள் வெளியிடப்படுகின்றன.
எனவே, அரசாங்கத்தின் மும்மொழிக் கொள்கைக்கமைய மூன்று மொழிகளிலும் தகவல்களை வெளியிடுமாறு அலுவலக மொழிகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.


சிங்களத்தில் மட்டுமே தேசிய கீதம் பாட வேண்டும் என்று மகிந்த ஆட்சியில் சலசலப்பு உருவான வேளையில் மட்டக்களப்பு  புதிய  பஸ் நிலைய கட்டிடம்  திறப்பு விழாவில் கலந்து கொண்ட பசில் ராஜபக்ச முன்னிலையில் தமிழில் தேசியகீதம் பாடி காட்டிய அந்த
தில்லு பிள்ளையானுக்கு மட்டுமே உரியது. அப்படியொரு ஆளுமைகொண்ட தலைமைத்துவம் இன்மையால்தான் இந்த நிலைமை என்று இது தொடர்பாக  ஓய்வு பெற்ற அதிபர் ஒருவர் எமக்கு கருத்து தெரிவித்தார்.


»»  (மேலும்)

சிறப்புமுகாம் அகதிகளை விடுதலை செய்யுமாறு இவர்களால் ஏன் கோர முடியவில்லை?

செய்தி- ஈழத் தமிழர் நட்புறவு மையம் சார்பாக காசிஆனந்தன் திருநாவுக்கரசு சிவம் ஆகியோர் அ...ப்பலோ மருத்துவமனைக்கு சென்று திரும்பியுள்ளனர். முதல்வர் ஜெயா அம்மையார் விரைவில் குணமடைந்து தமிழக மக்களுக்கும் தமிழீழ மக்களுக்கும் சேவையாற்ற வேண்டும் என ஈழத் தமிழர்கள் சார்பில் இவர்கள் கேட்டுள்ளார்கள்.
காசி ஆனந்தன்- புலிகளின் சார்பாக ராஜீவ் காந்தியுடன் பேச்சு வார்த்தை நடத்தியவர். ராஜீவ் கொலையில் இவர் சேர்க்கப்படாதது மட்டுமன்றி சிறப்புமுகாமில்கூட இவர் அடைக்கப்படவில்லை. தமிழகத்தில் அகதி மாணவர்களுக்கு உயர் கல்வி வாயப்பு மறுக்கப்பட்ட நிலையில் இவருடைய இரு மகள்களும் மருத்துவ கல்வி பெற்று டாக்டர்களாக உள்ளனர்.
திருநாவுக்கரசு- புலிகளின் அரசியல் அலோசகர்களில் ஒருவராக இருந்தவர் என கூறுகின்றனர். முள்ளிவாய்க்காலில் கோத்தபாயாவின் கொலைக் கும்பலில் இருந்து எப்படி தப்பினார் என்று தெரியவில்லை. ஆனால் தடுப்பு முகாமில் இருந்து தப்பி சென்ற இவர் மன்னார் தீவு ஒன்றில் படகு பழுதாகி நின்ற போது அப்போதைய முதல்வர் கலைஞர் கருணாநிதி பொலிஸ் மூலம் படகு அனுப்பி காப்பாற்றப்பட்டார் என கூறுகின்றனர். பிரபாகரனின் வயதான தாயாரையே திருப்பி அனுப்பிய கலைஞர் கருனாநிதி இவருக்கு மட்டும் ஏன் உதவி செய்தார் என்பதுதான் இன்னும் புரியவில்லை.
இந்தியாவில் தங்கியிருக்கும் இவர்கள் இதுவரை சிறப்புமுகாமில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அகதிகளை விடுதலை செய்யுமாறு கோரியதில்லை.
சாதாரண அகதி முகாம்களில் வாழும் அகதிகள் நிலையை மத்திய மாநில் அரசுகளின் கவனத்திற்கு கொண்டு சென்றதில்லை.
தமது பிள்ளைக்கு உயர் கல்வி வாய்ப்பை பெற்ற காசி அனந்தன் அகதி முகாம்களில் உள்ள அகதி மாணவர்களுக்கு இந்த வாய்ப்பை பெற்றுக்கொடுக்க முன்வரவில்லை.
இப்போதுகூட காவிரி பிரச்சனைக்காக தமிழகம் போராடுகிறது. அதற்கு ஆதரவாக இலங்கையில் இந்திய தூதராலயம் முன்பாக போராட்டம் நடந்துள்ளது. லண்டன் கனடாவில் கூட முன்னெப்போதும் இல்லாதவகையில் தமிழக மக்களுக்கு அதரவாக போராட்டம் நடந்துள்ளது.
இத்தகைய போராட்டங்கள் எதிலும் கலந்து கொள்ளாத இந்த பிரமுகர்கள் , அகதிகளுக்காக எந்த கோரிக்கையும் முன்வைக்காத இவர்கள், ஜெயா அம்மையார் நலம் பெற வேண்டும் என கேட்கின்றனர்.
தமது சொந்த நலன்களுக்காக ஈழத் தமிழர்களின் பேரால் ஜெயா அம்மையார் நலம் பெற வேண்டும் எனக் கோருகிறார்கள்.
ஜெயா அம்மையாரால் சிறப்புமகாமில் எவ்வித குற்றச்சாட்டுமின்றி பல வருடங்களாக அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அப்பாவி அகதிகள் இவர்களின் இந்த துரோகத்தை மன்னிப்பார்களா?

நன்றி *முகநூல் *பாலன் தோழர்
»»  (மேலும்)

அரசியலுக்காய் சகட்டுமேனிக்கு ஓதுபவர்களும் ஊதுபவர்களும் கட்டி ஆடுகிற சலங்கை"யா? சிவசேனா

இப்படிக் கூறி "இதுவும் கடந்துபோகும்!" என்று கூறுகின்ற பொழிப்புரையானது, பகவத்கீதையில் காண முடியும்.
"எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும்"
சிவசேனாவின் வருகை குறித்தும் பகவத்கீதை கூறுவது போன்று, கண்ணை மூடிக்கொள் என்ற உபதேசங்களுக்கு குறைவில்லை. ஆக எது நடந்ததாலும் "இதுவும் கடந்துபோகும்!" என்கின்றனர். இது தான் இந்து வெள்ளாளிய யாழ்ப்பாணியக் குணாம்சம். சிவசேனா குறித்து அலட்டிக்கொள்ளத் தேவையில்லை. "சிவசேனா" என்பது சும்மா ஊதிப்பெருப்பிக்கும் "வேலை வெட்டியில்லாத – காரியவாதிகளல்லாத" சமூக ஆர்வலர்களின், அரசியல்வாதிகளின் பித்தலாட்டமாக காட்டுகின்றனர்.
இன்று "இதுவும் கடந்துபோகும்!" என்று யார் சொன்னது என்பதை விட, யாழ் இந்து வெள்ளாளிய சாதிய சமூக அமைப்பின் நலன்களை அனுபவிக்கின்றவர்களின் பொதுக் கண்ணோட்டம் இதுவாகும்.
இந்துத்துவ சிவசேனாவின் வருகையை அறிவுபூர்வமாக பாதுகாக்க முனைகின்றவர்கள் "அரசியலுக்காய் சகட்டுமேனிக்கு ஓதுபவர்களும் ஊதுபவர்களும் கட்டி ஆடுகிற சலங்கையாக" சிவசேனாவைக் காட்ட முற்படுகின்றனர். இதற்;கு அமைவாக பௌத்த அடிப்படைவாதம் இலங்கையில் எதையும் செய்ய முடியாத ஒன்றாக இருப்பதாகவும், எதையும் செய்யாத ஒன்றாகவும், இட்டுக்காட்டுகின்ற பின்னணியில் சிவசேனா பற்றி கூறப்படுகின்றது.
இலங்கை இன முரண்பாடானது, பௌத்த சிங்கள அடிப்படைவாதங்களின் பின்னணியில் கொலுவேற்று இருப்பதும், இலங்கையின் அரசியல் சட்ட அமைப்பே பௌத்தத்துக்கு முதன்மையான இடத்தை வழங்குகின்றது. இலங்கையில் நடந்த இன – மத கலவரங்களில், பௌத்த அடிப்படைவாதத்தின் தலையீடு இன்றி நடந்ததில்லை. இலங்கையில் பௌத்த அடிப்படைவாதமானது, இனவாத அதிகாரத்துடன் ஒன்றிக் காணப்படுகின்றது.
இனவாதம் என்பது சாதி மற்றும் மத அடிப்படைவாதத்துடன் ஒன்றிணைந்ததே. சிங்கள – தமிழ் என்று, எந்த இனவாதமாக இருந்தாலும், சமூகத்தில் காணப்படும் சாதி மதம் ஆணாதிக்கம் என்று அனைத்து பிற்போக்குடனும் ஒன்றிணைந்து தான் இயங்க முடியும்.
இந்த வகையில் "தமிழர்" என்று தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளும் யாழ் இந்து வெள்ளாள சாதிய சமூக அமைப்பே, சிவசேனாவின் அடிப்படைக் கொள்கையை தனக்குள் கொண்டு இருக்கின்றது. அந்த வீரியமான தன்மையை தட்டி எழுப்பி சமூகத்திற்கு தலைமை தாங்கி அழைத்துச் செல்ல விரும்புகின்றவர்கள் அணியாக, சிவசேனாவின் வருகையை புரிந்து கொள்ள முடியும்.
யாழ் வெள்ளாளிய சாதிய சமூக பண்பாட்டுச் சன்னதங்களை தலைமை தாங்க வெள்ளாளிய சிவசேனா முனைகின்றது. இதை மறுத்து "இந்துமதவெறி மனநிலையற்ற, இந்துத்துவ அடிப்படைவாதமற்ற சமூகத்தில் அது யாரை நெருங்கிவருதல் கூடும்?" என்று கூறுகின்றவர்கள், பொய்யை உரைக்கின்றனர்.
வடக்கில் வீதிக்கு வீதி, சாதிக்கு சாதி கோயில்களாக மாறிவரும் இந்துத்துவ சாதிய சூழல், வெள்ளாளிய ஊருக்குள் பிற சாதிகள் வாழ முடியாத வண்ணம் தீண்டாமை கடைப்பிடிக்கும் ஊர் (வெள்ளாளிய) தீர்மானங்கள், சாதிப் பண்;பாடுகளை கலாச்சாரமாக மாறி பெண்களை சேலை அணியக் கோரும் ஆணாதிக்க வக்கிரங்கள், மூலை முடுக்கெங்கும் மாட்டு கொத்து ரொட்டிக் கடைகள் இருந்த இடங்கள் சைவ உணவகங்களாக மாறிவரும் காட்சிகள், சிவசேனாவின் வருகையை கட்டியம் கூறி நிற்கின்றது. பொது நிகழ்வுகள் மத நிகழ்வுகளாக மாறிவிட்ட பின்புலத்தில், பாடசாலைகள் முதல் யாழ் பல்கலைக்கழகம் வரை மத அடையாளங்கள் முன்னிறுத்தப்பட்டு, அதுவே சமூகத்தின் முதன்மையான அடையாளமாகிவிட்ட பின்புலத்தில் சிவசேனாவின் வருகை அரங்கேறுகின்றது.
பகுத்தறிவற்ற மனித நடத்தைகளாகவும், சமூக உணர்வற்ற சுயநலம் கொண்டதாகவும், யாழ்ப்பாணிய வெள்ளாளியத்தனத்தை கொண்ட சமூகத்தை, "இந்துமதவெறி மனநிலையற்ற, இந்துத்துவ அடிப்படைவாதமற்ற.." என்று கூறுவதற்கு, பின்னாலான சிந்தனையும், "இதுவும் கடந்துபோகும்!" என்று கூறுகின்ற பின்னணியில், சமூகத்தை மாற்றுவதற்கு எதிரான சிந்தனையும் நடைமுறையும் இருக்க முடியும்.
"எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும்"
என்று பகவத்கீதை கூறுவது போல் "இதுவும் கடந்துபோகும்!" என்கின்றனர். இப்படி கருத்து கூறுகின்றளவுக்கு, இந்துத்துவ வெள்ளாளிய சாதியம் குறித்து சமூக வலைத்தளங்களில் கருத்துரைக்கப்பட்டு வருகின்றது. இந்தியாவின் ஆட்சி அதிகாரங்களையும், மக்களை ஒடுக்கும் இந்து வானரங்களின் (அனுமானாக வரும்) இலங்கை வருகை பெரிய விடையமல்ல என்று கூறுமளவுக்கு, இந்துமயமாக்கலுக்கு ஆதரவான, செயலற்ற அரசியல் போக்கை முன்வைக்கின்றது.
"இதுவும் கடந்துபோகும்!" என்பது வடக்கில் நடந்தேறுகின்ற இந்து மயமாக்கல், சாதி மயமாக்கலின் வழியில் சிவசேனாவின வருகையை அங்கீகரிப்பது தான்;. இந்து வெள்ளாளிய சாதிய சமூக அமைப்பில் வாழ்ந்தபடி, அதற்கு எதிராக புதிய சமூகத்தை நடைமுறையில் உருவாக்குவதற்காக போராடாத வெற்றுக் கண்டனங்கள் ஒருபுறும். மறுபக்கத்தில் "இதுவும் கடந்துபோகும்!" என்பது, இந்து சாதி வெள்ளாள சமூக அமைப்பினை பாதுகாத்து அங்கீரிப்பது தான்.
தனிமனித உணர்வுகளுக்கும் உணர்ச்சிகளுக்கும் வடிகாலாக, செயலற்ற கருத்துகள் மாறி வருகின்ற பொதுப் பின்னணியில் இத்தகைய கூற்றுக்களை இணைத்துக் காண முடியும். தொலைக்காட்சிகள் மனிதர்களை மந்தையாக்கி அதற்கு பின்னால் அடிமையாக்கி விடுவது போல், சமூக வலைத்தளமானது உணர்வுகளும் உணர்ச்சிகளும் வடிகாலாகி செயலற்ற மனித பிண்டங்களாக்க கருத்துக்களை மாற்றி விடுகின்றது.
தங்களின் செயலற்ற வாழ்வுக்கு ஏற்ப கருத்துகளை முன்வைப்பதன் மூலம், "இதுவும் கடந்துபோகும்!" என்று கூறுமளவுக்கு சமூகத்தின் பொது அவலத்துக்கு எதிராக எதையும் செய்யத் தேவையில்லை என்று கூறுமளவுக்கு கருத்தை முன்னிறுத்தி செயலை நலமடித்து விடுகின்றனர்.
செயலற்று கருத்துகளில் வாழும் யாழ்ப்பாணிய சிந்தனையானது "இதுவும் கடந்துபோகும்!" என்ற கூறுகின்ற தர்க்கத்தை நியாயப்படுத்த, "சிவசேனா போன்ற இந்துவெறி அமைப்புகளின் இருப்புக்கு இந்துத்துவ அடிப்படைவாதம் செழுமை பெற்ற அல்லது வளர்ச்சியுறுகிற சமூக மனநிலை வேண்டும்." என்கின்றது. ஆக இது யாழ்ப்பாணிய வெள்ளாளச் சாதிச் சமூகம் இதற்கு தயாரான மனநிலை கொண்டு இல்லை என்ற கூறுகின்ற பொதுப்புத்தி வழியிலான வரட்டுத்தனமான மூடிமறைப்பாகும். இன்று "எங்கே யார் சாதி பார்க்கின்றனர்" என்பது போன்ற குட்டிபூர்சுவா வர்க்க சிந்தனையின் பாலானது.
சாக்கடைப் பன்றியைப் போல் இந்துத்துவ வெள்ளாள சாதிய அடையாளங்களுடன் புரண்டு எழும் வடக்கு முதலமைச்சரை தலைவராகக் கொண்டதே வெள்ளாளியச் சமூகம் குறிப்பாக யாழ்ப்பாணம் இன்று, இந்துத்துவ வெள்ளாளிய சாதிய வக்கிரத்தை முதன்மையாக்கும், சமூக நடைமுறையைத் தொடங்கி இருக்கின்றது. 1960 களில் நடந்த சாதியப் போராட்டம், 1980 களில் நடந்த தேசியப் போராட்டக் காலத்தில் இருந்த சாதிய அமைப்பிற்கு போன்றவற்றுக்கு மாறாக, வீரியம் பெற்ற சாதிய நடைமுறைகள் தோற்றம் பெற்று முதன்மைக் கூறாக மாறி வருகின்றது.
அதன் ஒரு வடிவம் தான் கோயில்கள். பழைய கோயில்களுடன் புதிய கோயில்கள், சாதி முரண்பாடுகள் கூர்மையாக்கி வரும் பொதுப் பின்னணியில், சாதிக்கொரு கோயில் என்று வடக்கில் சாதிய அடிப்படைவாதம் கொலுவேறுகின்றது. இதற்கு சமாந்தரமாக கிறிஸ்துவ, இஸ்லாமிய அடிப்படைவாதங்களும் போட்டி போட்டு வளர்கின்றது. தமிழ் சமூகம் மத அடிப்படைவாதத்துக்குள் வாழத் தொடங்கிவிட்டது. இதன் வளர்ச்சியானது, வன்முறை வடிவத்தின் தோற்றத்துக்கான தயாரிப்புக்களை தொடங்கி இருக்கின்றது.
அதாவது சமூகம் மத அடிப்படைவாதம் நோக்கி வளருகின்றது. மத மோதல்களுக்கான களம் தயாரிக்கப்படுகின்றது. நாட்டை ஆளுகின்றதும், பாராளுமன்ற அரசியலை முன்வைக்கின்ற நவதாராள சுரண்டும் வர்க்கம், மக்களை சுரண்டுவதற்காக மத ரீதியாக பிரித்தாளுவதற்கு ஏற்ப மதம் அரசியலாக மாறி வருகின்றது.
இந்தியாவின் யாழ் தூதராலயத்தின் செயற்பாடுகள் அனைத்தும் இதற்கு அனுசரணையாக மாறி இருக்கின்றது. இதை தூண்டி விடுவதும் இந்தியா தான்.
தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாரம்பரிய கலைகள் அழிக்கப்படும் அளவுக்கு, இந்தியக் கலைகள் இறக்குமதி செய்யப்படுகின்றது. வடகிழக்கு உள்ளிட்ட தமிழர்களின் எல்லா நிகழ்வுகளிலும் இந்தியக் கலைகளும் கூத்துகளும் மேடையேற்றப்படுவதும், இதற்கு இந்தியா அனுசரணையாக இருப்பதும் வெளிப்படையானது. இந்தியாவின் ஒடுக்கப்பட்ட சமூகங்களின் கலைகளைக் கூட, தனது அனுசரணைக்கு கீழ் கொண்டு புதிய தலைமுறைக்கு பழக்குகின்றது. ஒடுக்கப்பட்ட குரலையும் தனது கைத்தடிகள் மூலம் முன்வைத்து வழி நடத்த முனைகின்றது.
பாரம்பரிய இலங்கை வாழ் தமிழரின் சமூகக் கூறுகள் அழிக்கப்பட்டு இந்திய பார்ப்பனியத்துக்கு நிகரான வெள்ளாளியத்தை இந்திய மயமாக்குகின்றது. இந்தப் புதிய சமூகப் பின்னணியில் தான் சிவசேனாவின் வருகை நடக்கின்றது.
"இதுவும் கடந்துபோகும்!" என்று கூறி, இதைக் கண்டுகொள்ளத் தேவையில்லை என கூறுவதற்காக ""தலித்" என்ற இந்திய வகை சுட்டல் இலங்கை சாதிய அமைப்பின் மீது, தீண்டாமையின் மீது அதீத பயத்தை தன் சொல் பிம்பமாக எவ்வாறு இழுத்துவந்ததோ அதுபோன்றே "சிவசேனா"வும் சொல் விம்பத்தை இழுத்து வருகிறது." என்கின்றனர். இதுவொரு அபத்தமான குரோதமான தர்க்கம். "சிவசேனா" போன்ற ஒடுக்கும் சாதியத்தை அடிப்படையாகக் கொண்டு, ஒடுக்கப்பட்ட சாதியைச் சார்ந்த "தலித்" சொல்லை பொதுமைப்படுத்துகின்ற அரசியல், ஒடுக்கும் சாதி சார்ந்ததே.
ஒடுக்கப்பட்ட சாதிகள் என்ற சொல்லுக்குப் பதில் "தலித்" என்ற சொல், மற்றொரு அரசியலைக் குறிக்கின்றது. இது சாதியை ஒழிப்பதற்கு பதில், சாதி ரீதியான ஒடுக்குமுறைக்கு எதிராக போராடுவதன் மூலம் இந்த வர்க்க அமைப்பில் தனக்கான சாதிய இடத்தைக் கோருகின்றது. இதன் வளர்ச்சியானது மற்றைய சாதித் தலைவர்கள் போல் சலுகை பெற்று வாழும் சாதித் தலைவரையே உருவாக்கும். இந்த அரசியலில் இருந்து தலித்தியத்தை காண்பதற்கு பதில், தலித்தியத்தை தீண்டாமையாக காட்டி அணுகுவதைக் காணமுடியும்.
இந்த பின்னணியில் "தீண்டாமையின் மீது அதீத பயத்தை" தலித் எழுப்புவதாக கூறுகின்ற பின்னணியில், யாழ் சாதிய சமூக அமைப்பின் வக்கிரத்தை மூடிமறைக்க முனைவதாகும்;. இன்று வடக்கில் எந்தப் பயன்பாடுமின்றி (வெளிநாட்டு) வெள்ளாளச் சாதிகளிடம் குவிந்து கிடக்கும் நிலமும், நிலமின்றி நிலத்தைக் கோரும் ஒடுக்கப்பட்ட சாதிகளுக்கு இடையிலான முரண்பாடு, இதன் பின்னான தீண்டாமையும் சமூகத்தில் பேசுபொருளாக முன் வராது காணப்படுகின்றது. ஒடுக்கும் வெள்ளாளச் சாதி, ஒடுக்கப்பட்ட சாதிகளுக்கு ஊருக்குள் நிலம் கொடுக்கக் கூடாது என்ற ஊர் தீர்மானங்கள் போன்ற சாதியத் தீண்டாமையின் கொடூரமானவைகள் யுத்தத்தின் பின் சமூகமயமாகி இருக்கின்றது.
இந்த பின்னணியில் சிவசேனாவின் வருகை அரசியலில் மதத்தைப் புகுத்துவதற்கு வழிகாட்டும். இதற்கு ஏற்ப கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் வெள்ளாள சிவசேனாவின் தலைவராக இருப்பதுவும், வெள்ளாள சிவசேனாவின் முக்கிய உறுப்பினர்கள் கூட்டமைப்பின் உறுப்பினராக இருப்பதுவும் இந்த பின்னணியில் தான். சாக்கடைப் பன்றியைப் போல் இந்துத்துவ வெள்ளாள சாதிய அடையாளங்களுடன் புரண்டு எழும் வடக்கு முதலமைச்சரின் செயற்பாடுகள் அனைத்தும், சமூகத்தை பிளந்து குதறும் இந்து வெள்ளாளிய சிவசேனாவின் குணங்குறிகளாகும்.


»»  (மேலும்)

இலங்கை பொது நூலக வரலாற்றில் முதன் முறையாக இணையவழி நூலக அணுகல் சேவை


இலங்கை பொது நூலக வரலாற்றில் முதன் முறையாக இணையவழி நூலக அணுகல் சேவை (Online Public Access Catalogue Service) இன்று (18.10.2016) பேத்தாழை பொது நூலகத்தில் www.ppl...ib.info என்ற உத்தியோக பூர்வமான இணைய விலாசத்தினூடாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

பேத்தாழை பொதுநூலகமும், ‘விபுலானந்தா வாசகர் வட்டமும்’ இணைந்து நடாத்திய இந்நிகழ்வுக்கு கோறளைப்பற்று பிரதேச சபையின் செயலாளர் ஜனாப்.எஸ்.எம்.சிஹாப்தீன் மற்றும் பேத்தாழை பொது நூலக நூலகர் திரு.வே.கேதாதரன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

இந்நிகழ்வில் இணையவழி நூலக அணுகல் சேவைக்கான மென்பொருளினை நிறுவி, அதனை வெற்றிகரமாக செயற்படுத்துவதற்கு உறுதுணை புரிந்து கொண்டிருக்கின்ற கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட உதவி நூலகர் எம்.என்.ரவிக்குமார் அவர்கள் பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர் கா.சித்திரவேல் உள்ளிட்ட அதிதிகளால் கெளரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


இந்த பொன்னான தருணத்தில் இந்த நவீன நூலகத்தை எமது வாசகர்களின் நலன் கருதி 2011 இல் அமைத்துத்தந்த கிழக்கின் முதல் முதலமைச்சர் கெளரவ. சி.சந்திரகாந்தன் ஐயா அவர்களின் சேவையும் நினைவு கூரப்பட்டது.


»»  (மேலும்)

10/18/2016

வடமாகாண பதில் முதலமைச்சராக குருகுலராஜா

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், இங்கிலாந்து சென்றுள்ளமையால் முதலமைச்சரின் அமைச்சுப் பொறுப்புக்கள், வடமாகாண சபையின் இரண்டு அமைச்சர்களிடம் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.
பதில் முதலமைச்சராக கல்வி அமைச்சர் த.குருகுலராஜா, சத்தியப்பிரமாணம் செய்துள்ளதுடன், மாகாண நிர்வாகம், நிதி, திட்டமிடல் சட்டஒழுங்கு, மின்சாரம் ஆகிய பொறுப்புக்கள் கையளிக்கப்பட்டுள்ளன.
விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனுக்கு காணி, விடு, வீடமைப்பு நிர்மாணம், மீள்குடியேற்றம், மகளிர் விவகாரம் கைத்தொழில், சுற்றுலா, உள்ளுராட்சி ஆகிய அமைச்சுக்கள் கையளிக்கப்பட்டுள்ளன.
கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் வைத்து, வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், முன்னிலையில் இவர்கள் இருவரும் திங்கட்கிழமை (17) சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.
வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே மற்றும் முதலமைச்சர் ஆகியோரின் ஆலோசனையின் அடிப்படையில் இந்த பகிர்ந்தளிப்பு நடைபெற்றுள்ளது.
பிரித்தானியாவின் கிங்ஸ்டன் நகரத்தையும், யாழ்ப்பாணத்தையும் இரட்டை நகரங்களாக பிரகடனம் செய்யும் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திடுவதற்காக வடமாகாண முதலமைச்சர் இங்கிலாந்து சென்றுள்ளார். அவர் திரும்பி வருவதற்கு 2 வார காலமாகும் என்பதால் இவ்வாறு அமைச்சுக்கள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணத்துடன் இரட்டை நகரமாக இணைந்து கொள்ளவுள்ள இங்கிலாந்து, கிங்ஸ்டன் நகரத்தில் சுமார் 12 ஆயிரம் தமிழர்கள் வசிப்பதுடன்  தமிழ்மொழி அந்த நகரத்தின் இரண்டாவது மொழியாகவும் பயன்படுத்தப்படுகின்றது.
கிங்ஸ்டன் நகரம் ஏற்கெனவே, ஜேர்மனியின் ஓல்டன்பேர்க் மற்றும் தென்கொரியாவின் வனாக்கு நகரங்களுடன் இதுபோன்ற இரட்டை நகர உடன்பாட்டை செய்து கொண்டுள்ளது.
»»  (மேலும்)

10/17/2016

கிழக்கு முதல்வரின் மெச்சத்தக்க செயல்

இதனையடுத்து அனைத்து ஆசிரியர்களும் கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு நியமனம் பெறவிருப்பதாக மாகாண முதலமைச்சர் செயலகம் கூறுகின்றது.
மத்திய கல்வி அமைச்சுக்கு இன்று திங்கட்கிழமை நேரடியாக சென்றிருந்த கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அகமட் கல்வி அமைச்சு செயலாளரை சந்தித்து கொடுத்த அழுத்தம் காரணமாகவே இந்த பிரச்சினைக்கு தீர்வை பெற முடிந்ததாக முதலமைச்சர் செயலகம் தெரிவிக்கின்றது.


மாகாண முதலமைச்சர் சென்றிருந்த வேளை கல்விச் செயலாளர் அங்கு இல்லாத நிலையில் '' இந்தப் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் வரை வெளியேற போவதில்லை '' என கூறி அலுவலகத்திற்கு முன்பாக அமர்ந்து கொண்டதாகவும் கூறப்படுகின்றது. இதனையடுத்து கல்வி அமைச்சின் செயலாளர் உட்பட உரிய அதிகாரிகளுக்கும் கிழக்கு மாகாண முதலமைச்சருக்குமிடையில் சந்திப்பொன்று இடம் பெற்றுள்ளது.



இந்த சந்திப்பில் வெளி மாகாண பாடசாலைகளுக்கு நியமனம் பெற்றுள்ள கிழக்கு மாகாணத்தை சேர்ந்த சகல ஆசிரியர்களையும் கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு நியமிக்க இணக்கம் காணப்பட்டு அது தொடர்பான உறுதிமொழியும் உத்தரவாதமும் வழங்கப்பட்டுள்ளது.
மத்திய கல்வி அமைச்சு நிர்வாகத்திலுள்ள கல்வியல் கல்லூரிகளில் டிப்ளோமா சான்றிதழ் பெற்று வெளியேறிய கிழக்கு மாகாணத்தை சேர்ந்த தமிழ் , முஸ்லிம் ஆசிரியர்களில் அநேகமானோர் வெளி மாகாண பாடசாலைகளுக்கு நியமனம் பெற்றுள்ளனர்.முதலமைச்சர் மத்திய கல்வி அமைச்சுக்கு நேரடியாக சென்ற காட்சி

இரு வாரங்களுக்கு முன்பு நியமனம் பெற்ற இந்த ஆசிரியர்கள் நாளை மறு தினம் புதன்கிழமைக்கு முன்னதாக தங்கள் பாடசாலைகளில் கடமைகளை பொறுப்பேற்க வேண்டும் என்றும் மத்திய கல்வி அமைச்சினால் அறிவுறுத்தப்பட்டிருந்தனர்.
கிழக்கு மாகாணத்தில் 5000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுகின்ற நிலையில் வெளி மாகாண பாடசாலைகளுக்கு இவர்களுக்கான நியமனம் வழங்கப்பட்டமை தொடர்பில் மாகாண சபைக்கும் மத்திய கல்வி அமைச்சுக்குமிடையில் சர்ச்சை எழுந்தது.
மாகாண சபைக்குரிய அதிகாரத்தில் மத்திய கல்வி அமைச்சின் தலையீடு என இதனை சாடியிருந்த கிழக்கு மாகாண முதலமைச்சர் பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்கவின் நேரடி கவனத்திற்கும் கொண்டு வந்திருந்தார்
இது தொடர்பாக பிபிசி தமிழோசையுடன் பேசிய கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அகமட் எதிர்வரும் புதன்கிழமைக்கு முன்னதாக தீர்வை பெற வேண்டும் என்பதற்காககே தான் கல்வி அமைச்சுக்கு நேரடியாக சென்றதாக கூறினார்.

வெளி மாகாண பாடசாலைகளுக்கு நியமனம் பெற்றுள்ள ஆசிரியர்கள் கடமையேற்பதற்கு நாளை மறுதினம் புதன்கிழமை வரை வழங்கப்பட்டுள்ள கால அவகாசத்தை மேலும் இரு வாரங்களுக்கு நீடிக்கவும் இன்றைய சந்திப்பின் போது இணக்கம் காணப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவிக்கின்றார்.

அந்த காலப்பகுதிக்குள் இவர்களுக்கு கிழக்கு மாகாண பாடசாலைகளில் நியமனத்தை வழங்கக் கூடியதாக இருக்கும் என்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அகமட் நம்பிக்கையும் வெளியிட்டார்.

»»  (மேலும்)

இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு பணிப்பாளர்-டில்ருக்ஷி இராஜினாமா-நல்லாட்சியிலும் அரசியல் தலையீடா?

இலஞ்ச, ஊழல் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் டில்ருக்ஷி டயஸ் விக்கிரமசிங்க, தனது பதவியை இராஜினாமாச் செய்துள்ளார். நல்லாட்சியிலும் அரசியல் தலையீடா?
»»  (மேலும்)

பதவியை துறப்பாரா திகாம்பரம்?

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு கோரிக்கையான ஆயிரம் ரூபாய்க்கு எனது அமைச்சு பதவி தடை என்றால், மக்களுக்காக எனது அமைச்சு பதவியை துறக்க நான் தயாராக உள்ளேன்” என மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு  மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.
ஹட்டன் போடைஸ் தோட்ட கொணக்கலை பிரிவில் சிறுவர் பராமரிப்பு நிலையத்தை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் வைத்து இன்று ஞாயிற்றுக்கிழமை அவர் இவ்வாறு தெரிவித்தார்.
»»  (மேலும்)

இன்று காரைதீவில் மூன்று நூல்களின் வெளியீட்டுவிழா!

காரைதீவின் எழுத்தாளரும் ஊடகவியலாளருமான கவிஞர் விபுலமணி எஸ்.நாகராஜா எழுதிய மூன்று நூல்களின் வெளியீட்டுவிழா இன்று 16ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3மணிக்கு காரைதீவு சண்முகா கலையரங்கில் நடைபெறவுள்ளது.
Résultats de recherche d'images pour « books »
காரைதீவு நேருசனசமுக நிலையம் வெளியிடும் இந்நூல் வெளியீட்டுவிழா நிலையத்தலைவர் பொறியியலாளர் றோட்டரியன் வீ.கிருஸ்ணமூர்த்தி தலைமையில் நடைபெறவுள்ளது.
எழுத்தாளர் விபுலமணி எஸ்.நாகராஜா எழுதிய 'நிலவில் சிரித்த பூக்கள்' என்ற கவிதைத்தொகு...தி நூலும் 'சுந்தரவனம்' என்ற சிறுவர்கதைகள் நூலும் 'வண்ணத்துப்பூச்சிகள்' என்ற சிறுவர் பாடல்கள் நூலும் வெளியிடப்படவுள்ளன.
பிரதம அதிதியாக நாடறிந்த பிரபல எழுத்தாளர் செங்கதிரோன் த.கோபாலகிருஸ்ணன் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.
மேலும் பல சிறப்பு கௌரவ விசேட அதிதிகளாக 18பிரமுகர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
முதற்பிரதியை முன்னாள் தவிசாளர் செ.இராசையா கல்முனை லயன்ஸ் தலைவர் க. தட்சணாமூர்த்தி கல்முனை றோட்டேரியன் தலைவர் சு. சசிக்குமார் ஆகியோர் பெறுவார்கள். மேலும் ஆறு பிரமுகர்கள் கௌரவ சிறப்புப்பிரதிகளைப் பெறுவர்.
நிகழ்வில் வரவேற்புரையை நேரு சனசமுக நிலையப்போசகர் க.புண்ணியநேசன் அறிமுக உரையை பிரபல எழுத்தாளர் சிரேஸ்ட்ட ஊடகவியலாளர் விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா ஆகியோர் நிகழ்த்துவர்.
மூன்று நூல்களுக்கான திறனாய்வுரைகளை இளம் எழுத்தாளர்களான அதிபர் து.யோகநாதன் ஆசிரியை திருமதி அருந்தவவாணி சசிக்குமார் ஆசிரியை திருமதி ஜெயமதி சந்திரசேகரம் ஆகியோர் நிகழ்த்துவர்.
ஏற்புரையை நூலாசிரியர் எஸ்.நாகராஜா நிகழ்த்த நேரு சனசமுக நிலையப்போசகர் மு.ரமணிதரன் நன்றியுரையை நிகழ்த்துவார்.
இந்நிகழ்ச்சியை விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா நெறியாள்கை செய்யவுள்ளார்.
»»  (மேலும்)

10/16/2016

தமிழர்களின் அரசியல் வறுமையிலிருந்தே இந்து பாசிச அமைப்புக்கள் இலங்கையில் கால்பதிக்கின்றன.


தமிழர்களின் அரசியல் வறுமையிலிருந்தே இந்து பாசிச அமைப்புக்கள் இலங்கையில் கால்பதிக்கின்றன.
Afficher l'image d'origine


சிவசேனா  என்னும் காவி பயங்கரவாதிகளை செங்கம்பளம் விரித்து வரவேற்க தயாராகியுள்ளார் மறவன் புலவு சச்சுதானந்தம்.  இது இந்தியாவில் இருந்து சர்வதேச ரீதியாக தனது கிளைகளை பரப்பிவரும் காவி பயங்கரவாதிகளுக்கு மேலும் ஒரு வெற்றியாகும். ஏற்கனவே கலாசார பண்பாட்டு புனிதம் பேணிவரும் யாழ்ப்பாணத்து காவலர்களுக்கு  இது தித்திக்கும் செய்தியாகவும் இருக்கும்.

ஆனால் தமிழர்களின் போராட்ட பாதையில் யார் எதிரிகள்? யார்  நேச சக்திகள் ?  என்பதை இன்றுவரை அறியாததன் காரணமே இதுவாகும். 1980களின் ஆரம்பத்தில் போராட்டம் என்பதற்கு முன்னுதாரணமாக பலஸ்தீனமும் கியூபாவும்  ரஸ்யாவும்  வியட்நாமும் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்களாயின. வர்க்கம் பற்றியும் புரட்சி பற்றியும் சர்வதேச முதலாளித்துவம் பற்றியும் தெளிவான பார்வைகளை அது பரப்பியது. அதனுடாக பாசிசமும்  நாசிசமும்  சியோனிஸமும் எவ்வாறான ஆபத்தானவை  என்பதை நமது போராட்டம் கற்று தீரவேண்டும் என  முற்போக்கு சக்திகள்  உந்தப்பட்டன .

ஆனால் துரதிஷ்ட வசமாக இத்தகைய இடதுசாரிய, முற்போக்கு சக்திகளில் கைகளில் இருந்து தமிழரது போராட்டம் பறித்தெடுக்கப்பட்டது. தமிழ் இன வெறியர்களும் இடதுசாரி என்ன வலதுசாரி என்ன என்று தெரியாத தற்குறிகளும் போராட்ட தலைமையை கைப்பற்றியதன் விளைவாகவே இன்று தமிழ் சமூகம் முச்சந்தியில் நின்று முழிக்கின்றது.

இன்று இஸ்ரவேலை எமக்கு முன்மாதிரியாகவும் யூதர்களை தமிழருக்கு முன்னுதாரணமாகவும் காட்டுகின்ற நிலைமையில் எமது மக்களின் பெயரில் அரசியல் செய்பவர்கள் இருக்கின்றார்கள், உலகில் தனது உரிமைக்காக போராடுகின்ற எந்த ஒரு இனத்துத்துக்கும் இவ்வாறான கேவலமான  அரசியல் வறுமை இருந்தது கிடையாது.   இன்னும் கேவலம் ஹிட்லரின் "பொன்மொழிகளை"  தமிழின உணர்வாளர்கள் என்று தம்பட்டமடிக்கும் பலர் தமது முகநூல்களில் அடிக்கடி பிரசுரித்து மகிழும் நிலையில் தான் நமது இனம் இருக்கின்றது.

 உலக மகா இஸங்களை அறியாதது ஒருபுறமிருக்க நமது அண்மை இந்தியாவில் இருக்கின்ற அரசியல் கலாச்சாரத்தின் அடித்தளங்களை கூட நாம் இன்னும் கற்றுக்கொள்ளவில்லை. இது  சுமார் அரை நூற்றாண்டுகால ஆயுத போராட்ட பாதையை கடந்து வந்த ஒரு இனம் என்னும் வகையில்  மிகவும் வேதனையான செய்தி ஆகும். இதனால் தான் நாம் யார் என்கின்ற அடையாளம் கூட தெரியாமல் ஆரிய மாயையில், இந்துத்துவ கனவில் எமதுமக்கள்  மிதக்க வைக்க படுகின்றனர். தமிழர்கள் என்போர் இந்துக்கள் அல்ல என்பது கூட தெரியாத நிலையில் இலங்கை தமிழர்களை சச்சுதானந்தம் போன்றோர் இந்த இந்து பயங்கரவாதிகளிடம் சரணடைய வைப்பது வேதனை மிக்கது. சுமார் 15 வருடங்களுக்கு  முன்னர் என்று எண்ணுகின்றேன் தொ.ப.பரமசிவம் என்கின்ற தமிழறிஞர் "நான் ஏன் இந்துவல்ல"   என ஒரு சிறு நூல் எழுதினார். அதை  வாங்கி ஒவ்வொரு தமிழனும் படிக்கவேண்டும் என்று அப்போது முதல்வராக இருந்த கலைஞர் கருணாநிதி கூறியிருந்தார். ஒவ்வொருவரும் படிப்பதற்கு முதல் இலங்கை தமிழ் அரசியல் வாதிகள் அதனை படிக்க வேண்டும்.

நமது பாரம்பரியம்  என்பது பல்லின பண்பாட்டுக்கும்  பகுத்தறிவுக்கும் மதிப்பளிப்பது என்பது கூட புரியாத அரசியல் வறுமை நிலையில் இருந்துதான்  இன்று சிவசேனாவும் விஷ்வ இந்து  பரிஷத்தும் எம்மால் வரவேற்கப் படுகின்றன. ஆன்மீகம் என்னும் பெயரில் பிரேமானந்தா போன்ற காம வெறியர்களின் கலைக்கூடங்களாக எமது மண் மாறிவருகின்றது. அதற்கு   கம்பளம் விரிப்பதில் கல்வி மான்கள் என்று சொல்லிக்கொள்கின்றவர்கள் அதிகம். அவர்களையே நாம் முதலமைச்சர்களாகவும் ஆக்கி வைத்திருக்கின்றோம்.


இந்து கலாச்சாரம் என்கின்ற பெயரில் இந்த சிவசேனா என்னும் அமைப்பு இந்துத்துவ ஒற்றைக்கலாச்சாரத்தை போதிக்கின்றது., முஸ்லிம் கிறிஸ்தவ, மற்றும் சிறுபான்மை இனங்கள் மீது இனசுத்திகரிப்பை கோருக்கின்றது.காதலர்தினங்களை கூட பகிஷ்கரித்து அடாவடித்தனம் பண்ணுகின்றது. இத்தகைய நடவடிக்கைகள்  சமாதானத்துக்கு சகவாழ்வுக்கும் எதிரானதேயாகும்.  இதையெல்லாம் சச்சிதானந்தம் போன்றவர்களோ பாலியல் வன்முறையாளன் பிரேமானந்தாவுக்கு கிளைபரப்பும்  விக்கினேஸ்வரன் போன்றவர்களோ அறியாதிருக்கின்றார்களா?  இல்லை . அவர்கள் அறிந்தே செய்கின்றார்கள்.

ஆனால் இந்த அரசியலின் ஆபத்துக்களை புரியாதிருப்பவர்கள் அப்பாவி மக்கள்தான். அப்பாவிகளாக முப்பது வருட போரில் அழிந்து மீண்டும் சாம்பலில் இருந்து எழுவதுபோல  புதிய வாழ்வை தொடங்க நினைக்கும் எமது மக்களுக்கு இவர்கள் காட்டும் அரசியல் பாதை இதுதான்.


கிழக்கிலும்  மட்டக்களப்பு  பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன்போன்றவர்கள்  விஷ்வ இந்து பரிஷத் போன்ற அமைப்புகளுடன் நெருக்கமான உறவை பேணி வருகின்றனர். அடிக்கடி இந்தியா சென்று இந்த காவி பயங்கர வாதிகளுடன் சந்திப்புக்களில் கலந்து கொண்டு வருகின்றார். "முஸ்லிம்களின் ஆக்கிரமிப்பை" கட்டுப்படுத்தவும் கையாளவும்  இதுதான் வழி என்று  மட்டக்களப்பு இளைஞர்களிடையே அவர் ரகசிய பிரச்சாரம் செய்து வருகின்றார்.

கல்முனையில் ஒரு சில தமிழ் அரசியல் வாதிகளும் சிவில் சமூக ஆர்வலர்களும்  முஸ்லிம்களுக்கு எதிராக சிஹல உறுமய, பொதுபல சேனா   முக்கியஸ்தர்களுடன் இணைந்து இரகசிய செயல் திட்டங்களை ஆரம்பித்துள்ளனர். "முஸ்லிம்களின் சனத்தொகை பெருக்கமே" தமிழர்களின் காணி நிலம் பறிபோகின்றமைக்கு காரணம் என தமிழ் மக்கள் திசை திருப்ப படுகின்றனர்.இளைஞர்களிடையே இயல்பாக இருக்கும் இன, மான உணர்வுகளை  மாற்று இனங்களுக்கு எதிராக திருப்பி விடுவதில் இந்த அரசியல் வாதிகள் வெற்றிகண்டே  வருகின்றார்கள்.


இவையனைத்தும் எமது மக்களுக்கு சரியான அரசியல் பாதையை காட்டிட முடியாமையின் வெளிப்பாடுகளே ஆகும். துரதிஷ்ட வசமாக எமக்கு அரசியல் தந்தைகளாக இருப்பவர்கள்  அப்புக்காத்துக்களே தவிர சமூக விடுதலை போராட்ட பாதையில் வந்தவர்கள் இல்லை. இதுவே  இதற்கான காரணமுமாகும்.

தமிழ் தலைமைகளின் அரசியல் அறிவின்மையும் பிரச்சனைகளை சமூக பொருளாதார ,பண்பாட்டு அம்சங்களுடாக அணுக முடியாமையும், இராஜ தந்திரமற்ற அரசியல் நகர்வுகளும் காரணமாகவே எமது மக்களை உரிய முறையில் வாழவைக்க முடியாமால் இருக்கின்றது என்பதே உண்மையாகும்.

 ஆனால் அதை மறைத்து போருக்கு பின்னரான இன்றைய வாழ்வில் வேலைவாய்ப்புக்களோ வாழ்வாதாரங்களோ இன்றி  விரக்திக்கு தள்ளப்படும் மக்களின் வறுமைக்கும் ஏழ்மைக்கும் காரணம் முஸ்லிம்களும் சிங்களவர்களும் என்று இலகுவாக திசை திரும்புகின்றனர்இந்த அரசியல் வாதிகள்.   இனவாத மதவாத அமைப்புக்களிடம் இளைஞர்களை இலகுவாக இவர்கள் தள்ளிவிடுகின்றனர்.  தமிழர்களை பாதுகாப்பது என்னும் பெயரில்  இத்தகைய காவி பயங்கரவாதத்தை இந்தியாவில் இருந்து கூவி அழைத்து கொண்டு வருவதன் ஊடாக   எமது நாடு மீண்டுமொரு முறை பற்றியெரிய இதனுடாக திரி வைக்கப்படுகின்றது என்பதே உண்மையாகும்.

எழுகதிரோன்








»»  (மேலும்)

10/15/2016

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் சிவசேனா என்னும் நச்சுக் கிருமி



Maravanpulavu Sachithananthan, chief organiser of ‘Siva Senai’இந்தியாவில் மதவெறியைத் தூண்டி மக்களை பிளவுபடுத்தும் சிவசேனா என்ற கொலைகாரக் கும்பலை இலங்கைக்கு இறக்குமதி செய்திருக்கிறார்கள். மறவன்புலவு சச்சிதானந்தன், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த யோகேஸ்வரன் போன்றவர்கள் சேர்ந்து வவுனியாவில் வைத்து இந்துமதவெறி என்னும் நச்சுக் கிருமியை பரப்ப வெளிக்கிட்டிருக்கிறார்கள். சிவசேனா, அரைக் காற்சட்டை ஆர்.எஸ்.எஸ், விஸ்வ இந்து பரிசத் போன்றவர்களுடன் கலந்து ஆலோசித்து விட்டுத் தான் தாங்கள் இந்த புண்ணிய காரியத்தை ஆரம்பித்திருப்பதாக மறவன்புலவு சச்சிதானந்தன் பத்திரிகைகளிற்கு தெரிவித்திருக்கிறார்.
மதவெறியர்கள் என்பவர்கள் யார்? அவர்களின் அரசியல் என்பது என்ன? அவர்களை பின்னால் நின்று இயக்குபவர்கள் யார்? இந்து சமயம், இஸ்லாமிய சமயம், கிறீஸ்தவ சமயம், பெளத்த சமயம், யூத சமயம் என்று விதம் விதமாக மண்டையை மறைத்துக் கொண்டு வந்தாலும் அவர்களின் மக்கள் விரோத கொலைவெறி அரசியல் கொண்டையை என்றைக்குமே மறைக்க முடியாது. உலகின் பெரும்பான்மையினரான ஏழை மக்களின் முதலாவதும், அடிப்படையானதுமான பிரச்சனை வறுமை, பசி, பொருளாதாரம். உழைக்கும் ஏழை மக்களை சுரண்டி வைத்திருப்பவர்கள் முதலாளிகள், ஆதிக்க வர்க்கத்தினர் என்னும் கொள்ளைக் கூட்டத்தவர்கள். உழைக்கும் ஏழை மக்கள் தங்களைச் சுரண்டும் முதலாளிகளிற்கு எதிராக, அதிகார வர்க்க அயோக்கியக் கும்பல்களிற்கு எதிராக போராடுவதைத் தடுப்பதற்காக வைத்திருக்கும் முதன்மையான ஆயுதம் தான் மதம்.
வறுமைக்கு காரணம் சுரண்டும் முதலாளிகள் அல்ல; நாட்டை விற்கும், மக்களின் உழைப்பை முதலாளிகளிற்கு விற்கும் தரகர்களான ஆட்சியாளர்கள் அல்ல மற்ற மதத்தவர்கள் தான் உங்களது வறுமைக்கு காரணம் என்று பெரும் பொய் சொல்லும் அயோக்கியர்கள் தான் மதவாதிகளும், மதவெறியர்களும். முதலாளிகள், ஆட்சியாளர்கள் எறியும் எலும்புத் துண்டுகளிற்காக மக்களை அடிப்படைப் பிரச்சனைகளில் இருந்து திசை திருப்பி முதலாளிகளிற்கும், அதிகார வர்க்கத்தினருக்கும் சேவை செய்யும் நயவஞ்சகர்கள் தான் மதவெறிக் கொலைகாரர்கள்.
ஆதிப் பொதுவுடமைக் கூட்டுச் சமுதாய வாழ்க்கையில் தாம் வாழ்ந்த இயற்கையை வழிபாட்டார்கள். தமக்கு முன்னே வாழ்ந்த மூத்தவர்களை வழிபட்டார்கள். அந்த கூட்டு வாழ்க்கை முறையை அழித்துக் கொண்டு தனிமனிதர்களாகி தனிச்சொத்துரிமை என்னும் ஏற்றத் தாழ்வு கொண்ட வாழ்வு முறைக்கு வந்த போது இயற்கையில் இருந்து விலகிய பெரு மதங்கள் தோன்றின. மனிதர்கள் எல்லோரும் சமம், இயற்கையின் செல்வங்கள் எல்லோருக்கும் உரித்தானவை என்னும் பழங்குடி மனிதர்களின் நம்பிக்கைக்கு மாறாக அரசர்கள் ஆளப் பிறந்தவர்கள், விண்ணில் இருக்கும் கடவுளின் மண்ணில் இருக்கும் டபுள் அக்டிங்குகளே மன்னர்கள் என்னும் புளுகுப் புராணங்களை சொல்லும் மதங்கள் தோன்றின.
"திருவுடை மன்னரைக் காணில் திருமாலைக் கண்டேனே" என்று புண்ணிய பாரதத்தின் வைணவ ஆழ்வார்கள் சொல்லும் போது "kings are god's lieutenants on earth" என்று கொஞ்சமும் மாற்றமின்றி ஐரோப்பிய கிறீஸ்தவர்களும் அதே கோட்பாட்டில் அடியொற்றிச் சொல்கிறார்கள். இந்த தத்துவ மயிரில் இருந்து எல்லா பெரு மதங்களின் நோக்கங்களும் கடவுளுக்கு அடிபணிவது போல அரசர்களிற்கும் அடி பணியுங்கள் என்று மக்களை மந்தைகள் ஆக்குவதே என்பதை அறிந்து கொள்ளலாம்.
ஜேர்மனியின் அதிகார வர்க்கத்தினர் புரட்டஸ்தாந்து கிறீஸ்தவர்கள். ஆனால் மிகச் சிறுபான்மையினரான யூதர்கள் தான் ஜேர்மனி மக்களின் வறுமைக்கு காரணம் என்று நாசிகள் பொய் சொல்லி கொலை செய்தார்கள். அதையே இத்தாலியில் கத்தோலிக்க கிறிஸ்தவ பாசிஸ்டுக்கள் செய்தார்கள். தலிபான்கள், இஸ்லாமிய அரசு என்னும் பயங்கரவாதிகள் மற்ற மதத்தவரின் தலையறுத்து புனிதப் போர் செய்கிறார்கள். இலங்கையில் சிங்கள பெளத்த இனவெறி அரசுகளினதும், பெளத்த மதவெறியர்களினதும் பொய்களையும், கொலைகளையும் தனியே எடுத்துச் சொல்லத் தேவையில்லை.
டெல்லியின் மத்திய அரசு ஊழல்காரர்களில் இருந்து தமிழ் நாட்டின் கருணாநிதி, ஜெயலலிதா என்னும் கமிசன் கொள்ளையர்கள் வரையான அயோக்கியர்கள் இந்தியாவின் அவலங்களிற்கு காரணமில்லை என்பது தான் இந்து மதவெறியர்களின் கண்டுபிடிப்பு. மக்களின் பொதுப் பணத்தை கோடிகளில் கடன் வாங்கி விட்டு திருப்பிக் கட்டாமல் திரியும் முதலாளிகள் காரணமில்லை என்பது இந்த அயோக்கியர்களின் ஆராய்ச்சி முடிவு. மக்களின் வறுமையைப் பயன்படுத்தி அவர்களை மிக மலிவான சம்பளத்திற்கு வேலை வாங்கி சுரண்டும் உள்நாட்டு, வெளிநாட்டு முதலாளிகள் மக்களின் பிரச்சனைகளிற்கு காரணமில்லை சிறுபான்மையினரான கிறீஸ்தவர்களும், முஸ்லீம்களுமே இந்திய மக்களின் வறுமைக்கு காரணம் என்று கூசாமல் பொய் சொல்லும் சிவசேனா, ஆர்.எஸ்.எஸ், பாரதிய ஜனதா, இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி என்னும் கொலைகாரர்களின் அயோக்கிய அரசியலை இலங்கைக்கு கொண்டு வந்து தமிழ் மக்களைக் காப்பாற்றப் போகிறார்களாம் இந்த மண்டை கழண்டவர்கள்.

"இந்திய சிவசேனா போல் இலங்கை சிவசேனா இந்துக்களிற்காக குரல் கொடுக்குமாம், சிங்கள பெளத்த அரசை எதிர்க்குமாம் என்று அறிஞர் பெருமக்கள் சொல்கிறார்கள். இந்திய சிவசேனா இந்திய மக்களிற்கு இது வரை என்ன செய்து கிழித்திருக்கிறது என்று இவர்கள் இலங்கையில் சிவசேனாவிற்கு கிளைகள் திறக்கிறார்கள்.? மதச்சார்பின்மை முகமூடி போட்ட காங்கிரஸ் இந்து அரசுகளும், வெளிப்படையான இந்துக் கட்சியான பாரதிய ஜனதா கட்சி அரசுகளும் இலங்கைத் தமிழ் மக்களிற்காக என்ன செய்து கிழித்தார்கள்? பெளத்த இலங்கை அரசுகளுடன் சேர்த்து, இந்து இந்திய அரசுகளும் இலங்கைத் தமிழ் மக்களை கொன்று குவித்த இரத்த வரலாற்றை இவர்கள் மறைத்து விட்டு இந்து ஒற்றுமை பேசிக் கொண்டு வருகிறார்கள். மக்கள் விரோத இலங்கை அரசிற்கு எதிராகவும், இந்திய பெரு நிறுவனங்களின் சுரண்டல்களிற்கு எதிராகவும் இலங்கை மக்கள் ஒன்று சேர்ந்து போராடக் கூடாது என்பதற்காகவே மதவெறி சிவசேனாவை இலங்கைக்கு இறக்குமதி செய்கிறார்கள்.
முற்போக்கு ஜனநாயக சக்திகள் எப்போதும் போல இப்போதும் இந்த மதவெறியர்களை எதிர்ப்பார்கள். ஆனால் சாப்பாட்டுக் கடைக்காரர்கள் தான் இவர்களிடம் கவனமாக இருக்க வேண்டும். சிவசேனா, இந்து முன்னணி போன்ற இந்து மதவெறியர்கள் கோவையில் நடத்திய கலவரத்தின் போது ஒரு கடையில் பிரியாணிச் சட்டியை களவெடுத்துக் கொண்டு ஓடினார்கள். அது போல இவர்களைப் பின்பற்றும் இலங்கைச் சிவசேனாக்காரர்களும் எதிர்காலத்தில் எங்காவது ஆர்ப்பாட்டம் நடத்தினால் புட்டுக் குழலோ, இடியப்பச் சட்டியோ களவெடுக்கப்படலாம். விழித்திருங்கள்.

»»  (மேலும்)