9/04/2016

மட்டு. சிறைக்கைதி தப்பியோட்டம்

மட்டக்களப்பு சிறைச்சாலைக் கைதியொருவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த வேளை, மலசலகூடத்தின் ஜன்னல் வழியாக தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.Afficher l'image d'origine
பல்வேறு கொள்ளைச் சம்பவங்களில் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட மிச்நகர் கிராமத்தைச் சேர்ந்த முபாறக்கனி அல்லது முபாறக் கசீர் (வயது 24) என்று அழைக்கப்படும் இவர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் மட்டக்களப்பு சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
இவர், இன்று ஞாயிற்றுக்கிழமை தனக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதுடன், உடல்நிலை மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார். இந்நிலையில், இவரை சிறைச்சாலைப் பொலிஸார் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் 11ஆம் வார்ட்டில் அனுமதித்துள்ளனர்.
இதன் பின்னர், இவர் மலசலகூடம் செல்ல வேண்டுமென்று தனக்கு காவல் நின்ற பொலிஸ் உத்தியோகஸ்தரிடம் கூறவும் அப்பொலிஸ் உத்தியோகஸ்தர் கைதியை 2ஆம் மாடியிலுள்ள 11ஆம் வார்ட்டின் மலசலகூடத்துக்கு அழைத்துச் சென்று, கைதியை உட்செல்லவிட்டு வெளியில்  காவலுக்கு நின்றுள்ளார்.
நீண்டநேரமாகியும் மலசலகூடத்துக்குச் சென்ற கைதி வெளியில் வராமை தொடர்பில்  சந்தேகமடைந்த  அப்பொலிஸ் உத்தியோகஸ்;தர், மலசலகூடத்துக்குள் சென்று பார்த்தபோது, குறித்த கைதி ஜன்னல் வழியாகத் தப்பிச்சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.
குறித்த கைதியை  தேடி வருவதாக பொலிஸார் கூறினர்.

0 commentaires :

Post a Comment