9/03/2016

உண்மைகள் உறங்குவதில்லை - மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தினை உருவாக்குவதில் முன்னாள் முதலமைச்சர் சந்திரகாந்தனுக்கே அதிக பங்குள்ளது! ஸ்ரீநேசன் எம்.பி

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தினை உருவாக்குவதில் பாரிய பங்கை முன்னாள் முதலமைச்சர் சந்திரகாந்தன் ஆற்றியுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

.

கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் இதனை தெரிவித்துள்ளார்.
உண்மைகள் சிலருக்கு கசக்கும் என்றாலும் உண்மையினை மறைக்ககூடாது என்பது எனது அடிப்படைவாதம் எனவும் அவர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தினால் தயாரிக்கப்பட்டுள்ள “மேற்கு ஒளி” சஞ்சிகையின் வெளியீட்டு விழா நேற்று இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,










மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தினை அமைப்பது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் பேசியிருந்தனர்.
இருந்தாலும் உண்மையினை மறைக்ககூடாது என்ற அடிப்படையில் இந்த வலயம் தோற்றுவிக்கப்படுவதற்கு முன்னாள் முதலமைச்சர் சந்திரகாந்தன் அவர்கள் பாரிய பங்களிப்பினை வழங்கினார்.
சிலவேளைகளில் உண்மைகள் கசப்பானதாக இருந்தாலும், உண்மைகள் மறைக்கப்படக்கூடாது என்பது எனது அடிப்படையான வாதம் ஆகும்.
இந்த வலயத்தினை உருவாக்குவது தொடர்பான முன்னெடுப்புகளை தமிழ் தேசிய கூட்டமைப்பினர் முன்னெடுத்திருந்தாலும், சந்திகாந்தன் அதனை உருவாக்குவதில் பாரிய பங்களிப்பினை செய்தார் என்பதை யாரும் மறைக்க முடியாது.
சந்திகாந்தன் வேறு கட்சியினை சார்ந்தவராக இருந்தாலும் உண்மையென்பதை வெளிப்படையாக சொல்லவேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 commentaires :

Post a Comment