9/03/2016

சிவநேசதுரை சந்திரகாந்தனின் பிணைமனு நிராகரிப்பு

கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சித் தலைவரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தனின்  பிணை மனுவை  மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி திருமதி வி.சந்திரமணி நிராகரித்துள்ளார்.
இதுவரைகாலமும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுவந்த சிவநேசதுரை சந்திரகாந்தனின் பிணை மனு மீதான விசாரணை, மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதன்போது, பயங்கரவாத தடுப்புச்சட்டத்தில் கைதுசெய்யப்பட்டவருக்குப் பிணை வழங்கும் அதிகாரம் மேல் நீதிமன்றத்துக்கு இல்லை என்று கூறி பிணை மனுவை நீதிபதி நிராகரித்துள்ளார்.

0 commentaires :

Post a Comment