இந்தப் படங்களைப் பாருங்கள். முள்ளிவாய்க்கால் காட்சி அப்படியே தெரியும். தீ, புகை, அழிவு, இழப்பு. கண்ணீர். துயரம். அவலம். நிர்க்கதியான நிலை. இது முள்ளிவாய்க்காலில் இருந்து மீண்டவர்களுக்கு கிளிநொச்சிச் சந்தையில் ஏற்பட்டிருக்கும் அவலம். அவர்கள் இன்னும் அழுதுகொண்டேயிருக்கிறார்கள். கண்ணீர் பெருகிக்கொண்டேயிருக்கிறது. “வீழ்ந்தவர்களை மாடு ஏறி மிதித்த கதை“ தொடர்வதேன்?
கடந்த வெள்ளிக்கிழமை (16) இரவு சந்தையின் பழக்கடைத் தொகுதியில் திடீரென தீ பரவியது. எப்படி இந்தத் தீ பரவியது என்று இன்னும் கண்டறியப்படவில்லை. மின்னொழுக்கினால் ஏற்பட்டிருக்கலாம் என்கிறார்கள் சிலர். வெள்ளிக்கிழமைகளில் விளக்கேற்றும் வழக்கமிருப்பதால், அப்படி ஏற்றப்பட்ட விளக்கொன்றில் இருந்து தீ பரவியிருக்கலாம் என்கிறார்கள் வேறு சிலர். இப்படியே ஆளாளுக்கு ஒவ்வொரு அபிப்பிராயங்கள். ஆனால், இன்னும் எது காரணம் என்று உறுதிசெய்யப்படவில்லை. பரவிய தீ பழக்கடைத்தொகுதியைத் தின்று, புடவைக்கடைகள், அழகுப்பொருட்தொகுதி, தையற்கடைகள், வீட்டுப்பாவனைப்பொருட்கள் பகுதி என்று பசியோடு அலைந்தது. காற்று வேறு அதிகமாக இருந்தால் தீயின் வேகம் கூடியது.
அது இரவு நேரம். எனவே, தீயை உடனடியாக அணைப்பதற்கு அங்கே வர்த்தகர்களோ, பிற வசதிகளோ உடனடியாக இருக்கவில்லை. என்றாலும் தீபரவுவதைக்கண்டவர்கள், முடிந்தளவுக்கு அதை அணைப்பதற்கு முயற்சித்தார்கள். ஆனால், அது கைகளை மீறிய காரியம். இதற்குள் சேதி பரவி, கடைக்காரர்கள், அக்கம் பக்கத்திலிருந்தவர்கள், வாகனச்சாரதிகள், ஓட்டோ ஓட்டுநர்கள், பொலிசார், இராணுவத்தினர், அதிகாரிகள் எனப்பலரும் திரண்டு விட்டனர். தீயைக் கட்டுப்படுத்துவதற்கும் அணைப்பதற்குமாக ஆளாளுக்கு முயன்று கொண்டிருந்தனர். இதற்கிடையில் பிரதேச சபையின் நீர்க் கொள்கலன் வண்டியும் படையினரின் தீயணைப்பு வண்டிகளும் வந்து விட்டன. இருந்தாலும் தீ அடாங்காப்பிடாரியாக மிளாசி எரிந்து கொண்டேயிருந்தது. மனிதர்களுக்கும் நெருப்புக்குமிடையிலான போராட்டம் தொடர்ந்து கொண்டேயிருந்தது.
இதேவேளை தெருக்களில் தலையிலடித்துக் கத்திக்கதறிக்கொண்டு சந்தையை நோக்கி பெண்களும் குழந்தைகளும் என்று பலர் ஓடி வந்து கொண்டிருந்தார்கள். அவர்களுடைய கடைகளே எரிந்து கொண்டிருப்பவை. வாழ்க்கை எரிந்தழிந்து கொண்டிருக்கும்போது அதை எப்படித்தாங்கிக் கொள்ள முடியும்? அத்தனைபேரும் வன்னியில் நடந்த யுத்தத்தினால் இடப்பெயர்வுகளையும் இழப்புகளையும் சந்தித்தவர்கள். ஒரு தடவை, இரண்டு தடவை அல்ல. பத்துத் தடவைக்கு மேல். ஒவ்வொரு இடப்பெயர்வும் ஒவ்வொரு அழிவுக்குச் சமம். அப்படி இடம்பெயர்ந்து, இடம்பெயர்ந்து சென்றவர்கள், இறுதியில் முள்ளிவாய்க்காலில் மிஞ்சியிருந்த சொந்தங்களையும் பலிகொடுத்து விட்டு மீண்டு வந்திருக்கும்போது இங்கும் நெருப்பென்றால்....?
பரவிக்கொண்டிருந்த தீயை அணைப்பதற்கு முயற்சிகள் நடந்து கொண்டிருந்தபோது, இன்னொரு பகுதியால், தீ தொடர்ந்து பரவுவதைத் தடுப்பதற்காக கடைத்தொகுதி இரண்டாகப் பிளக்கப்பட்டது. அது ஒரு புத்திசாலித்தனமான நடவடிக்கை. இதனால் தொடர்ந்து பாரிய அழிவுகள் ஏற்படாமல் தடுக்கப்பட்டாயிற்று. ஆனாலும் 124 கடைகள் முற்றாக எரிந்து அழிந்து விட்டன. அது ஒரு சுடுகாட்டுக்காட்சி. இப்பொழுது மயானத்தைப்போலக் கருகிக் கிடக்கிறது பழக்கடை வளாகமும் புடவைக்கடைப்பகுதியும்.

இந்தத் தீயணைப்பு முயற்சியில் படையினரில் ஐந்து பேருக்கு காயங்கள் ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இராணுவத்தினர் தீவிரமாகச் செயற்பட்டனர். பொலிசாரின் முயற்சியும் பிரதேச இளைஞர்கள், பொதுமக்களின் பங்களிப்புகளும் குறிப்பிட்டுச் சொல்லப்படவேண்டியது. துயரம் தரும்விதமாக. தீ பரவிக்கொண்டிருக்கும்போது அதைத் தடுப்பதற்குப் பதிலாகப் பலர் படம்பிடித்துக்கொண்டிருந்தார்கள். மறுமுனையில் ஏனைய கடைகள் உரிமையாளர்கள் தங்களுடைய கடைகளை உடைத்தும் திறக்கந்தும் பொருட்கள் வெளிய எடுத்து பாதுகாக்க முற்பட்டனர். இதற்கு உதவிக்கு வந்த பலரும் கடைகளின் உள்ளே இருந்து பொருட்களை வெளியே கொண்டு சென்று பல இடங்களிலும் குவித்தனர். இப்படியிருக்க பொருட்களுக்கு மேல் நீர்த்தாங்கிகள், வாகனங்கள் ஏறி அவையும் விற்பனைக்கு உதவாத நிலையில் சேதமடைந்துள்ளது. இதேவேளை சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்ட திருடர்களும் பொருட்களை திருடிச் சென்றுள்ள சம்பவங்களும் இடம்பெற்றுள்ளது. எரிந்த வீட்டில் எடுப்பது லாபம் என்ற கணக்கில் அவரவர் செயற்பட்டது வெட்கத்துக்குரிய செயல். ஒரு பக்கம் தீ. மறுக்கம் தீயை அணைப்பதற்கு விசிறப்படும் தண்ணீர். இரண்டும் பொருட்களை நாசமாக்கியது. ஆனாலும் வேறு வழியில்லை. எஞ்சியது மிச்சம் என்ற நிலையில் காப்பாற்றக் கூடியதைக் காப்பாற்றிக்கொண்டனர் சிலர். எப்படியோ தீ அடங்கியபோது 124 கடைகள் முற்றாக அழிந்து விட்டன.
இப்பொழுது மதிப்பீட்டுப்பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இதை களத்திலிருந்தே செய்து கொண்டிருக்கிறார் கரைச்சிப்பிரதேச சபையின் செயலாளர் கே.கம்ஸநாதன். பதிவு செய்யப்பட்ட 124 கடைகள் அழிவில் சிக்கியுள்ளன. 64 கடைகள் முற்றாக அழிந்திருக்கின்றன. 60 கடைகள் பகுதிச் சேதம் அல்லது பகுதி அழிவு. மொத்தமாகடிகாரணமாக 124 கடைகளில் 225 மில்லியன் ரூபா சொத்தழிவுகள் ஏற்பட்டுள்ளது என பிரதேச சபையின் ஆரம்ப கட்ட மதிப்பீட்டு தகவல்கள் குறிப்பிடுகின்றன. இழப்பு விவரங்களைத் தாமும் சேகரித்துக் கொண்டிருக்கிறோம். அத்துடன் பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்குரிய இழப்பீட்டைப்பற்றியும் உடனடி நிவாரணத்தைப்பற்றியும் அரசாங்கத்திடமும் மாகாணசபையிடமும் அரசியற் தலைவர்களிடத்திலும் பொது அமைப்புகளிடமும் கோரிக்கைகளை முன்வைத்திருக்கிறோம் என சந்தையின் வர்த்தகர் சங்கத்தலைவர் அ.ஜேசுராஜன் தெரிவித்தார். பாதிக்கப்பட்டிருக்கும் வர்த்தகர்கள் ஒவ்வொருவருக்கும் இதற்கிடையில் கரைச்சிப் பிரதேச சபை தலா 20 ஆயிரம் ரூபா பணத்தை உடனடி நிவாரணமாக வழங்கியிருக்கிறது. இந்தத் தகவலை செயலாளர் கம்ஸநாதன் உறுதிப்படுத்தினார். இதைவிட யாழ்ப்பாணத்திலிருந்து அக்கினிச்சிறகுகள் அமைப்பைச் சேர்ந்தவர்களும் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மருத்துவ பீட, பொறியியற் பீட மாணவர்களும் வேறு சில பொது அமைப்புகளும் பாதிக்கப்பட்டவர்களுக்கான உடனடி உதவிகளைச் செய்து வருகின்றனர்.
இந்த மாதிரி விபத்துகளும் அழிவுகளும் நடப்பதுண்டு. ஆனால், அவற்றைத் தடுப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்குமான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்பதே இங்கே நாம் பேசவேண்டிய விசயம். தீ பரவிய இந்தச் சந்தைக்கடைத்தொகுதி, தற்காலிகமாக அமைக்கப்பட்டது. நிரந்தரக் கட்டிடத்தொகுதி அமைக்கப்படும்வரையில், வியாபாரத்தைத் தொடர்வதற்காக ஒரு ஆண்டுக்கான உத்தரவாதத்துடன் தற்காலிகமாக அமைக்கப்பட்டது. அப்போது (2013 இல்) பாராளுமன்ற உறுப்பினராக இருந்த முருகேசு சந்திரகுமார், அமைச்சராக இருந்த டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் முயற்சியினால், கிளிநொச்சிப் பொதுச்சந்தையை இரண்டு கட்டமாக நிர்மாணிப்பதற்குத் திட்டமிடப்பட்டது. முழுநிர்மாணத்துக்கு என 270 மில்லியன் நிதி ஒதுக்கீடும் திட்டமிடப்பட்டது. அதில் 60 மில்லியன் ரூபாய் செலவில் மீன்சந்தையும் மரக்கறிச்சந்தையும் நிர்மாணிக்கப்பட்டன. இது முதலாம் கட்ட நிர்மாணம். இரண்டாம் கட்ட நிர்மாணம், 210 மில்லியன் ரூபாய் செலவில் நவீன சந்தைக் கட்டிடத்தொகுதியாக முழுமைப்படுத்தப்படவிருந்தது. இரண்டும் இணைந்த பொதுச்சந்தையென்பதே முழுமையான வடிவம். தற்போது மீன்சந்தையும் மரக்கறிச்சந்தையும் மட்டும் நிர்மாணிக்கப்பட்ட தொகுதிகளில் இயங்கி வருகின்றன. இரண்டாம் கட்டமான நவீன சந்தையை நிர்மாணிப்பதற்கு திட்டமிடப்பட்டு. அதற்கான ஆயத்த வேலைகளும் இட ஒதுக்கீடும் செய்யப்பட்டிருந்தன. சந்தைக்கான மாதிரி உருவப்படமும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
இடையில் வந்த உள்ளுராட்சித் தேர்தல் அதிகார மாற்றங்களை ஏற்படுத்தியது. பின்னர் ஏற்பட்ட அதிகார இழுபறியும் பிரதேச சபையின் அலட்சியமும் ஒத்துழையாமையும் வினைத்திறனற்ற தன்மையும் சந்தையின் நிர்மாணப்பணிகளை இல்லாமற் செய்து விட்டது. குறிப்பாக அன்று பதவியில் இருந்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் சபையே இதற்கு முழுக்காரணம். இதனால், ஒரு ஆண்டுக்கு மட்டுமே என நிர்மாணிக்கப்பட்டிருந்த தற்காலிகக் கொட்டகைகளிலேயே இந்த வர்த்தகர்கள் தொடர்ச்சியாக, ஐந்து ஆண்டுகளாக வியாபாரத்தைச் செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர். இந்தத் தற்காலிகக் கடைகள் பாதுகாப்பற்றவை.. இதை மாற்றியமைத்துத் தருமாறு அவர்கள் மாகாணசபையிடமும் பிரதேச சபையிடமும் பாராளுமன்ற உறுப்பினர்களிடத்திலும் ஆளுநரிடத்திலும் அரசாங்கத்திடத்திலும் கேட்டுக்கொண்டேயிருந்தனர். இந்த நிலையில்தான் இந்தத் தீ விபத்து ஏற்பட்டது.

நிரந்தரக்கட்டிடத்தொகுதியில் தீ பரவுவதற்கான வாய்ப்புகள் குறைவு. மட்டுமல்ல, அப்படி ஏற்பட்டிருந்தாலும் அதைக் கட்டுப்படுத்துவது இலகு. என்ன செய்வது, யாருடையவோ அரசியற் தினவுகளுக்கு பாதிக்கப்பட்டமக்களே மீண்டும் பலியாக வேண்டியதாக இருக்கிறது. இருந்தாலும் சந்தை வர்த்தக சங்கம் தமக்கு நிரந்தரக் கட்டிடத்தொகுதி வேண்டும் என எல்லாத்தரப்பின் கதவுகளையும் தட்டிக்கொண்டேயிருந்தது.
கடந்த மாதம் கூட சந்தை வர்த்தகர்களின் ஏற்பாட்டில் வடமாகாண ஆளுநர் றெஜினோல் கூரேயும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமாரும் சந்தைக்கு நேரடியாக விஜயம் செய்து வர்த்தகர்களின் நிலைமைகளை அவதானித்திருந்தனர். அத்துடன், புதிய நிரந்தரக்கட்டிடத்தொகுதியை நிர்மாணிப்பதற்கு முயற்சிப்பதாகவும் கூறிச்சென்றனர். இதைவிட ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித்தலைவர் சம்மந்தன், வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் எனப் பலருக்கும் கோரிக்கைக் கடிதங்களைக் கூடச் சமர்ப்பித்திருந்தனர். எந்தத் தரப்பிலிருந்தும் உறுதியான பதில் திருப்திகரமாகக் கிடைக்கவில்லை.
இப்போது தீ ஒரு தீவிர கவனத்தை இங்கே குவித்திருக்கிறது. சந்தை எரிந்து கொண்டிருந்தபோது பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அங்கே வந்திருந்தார். மறுநாள் வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரனும் மாகாணசபை உறுப்பினர் சிலரும் வந்திருந்தனர். பிறகு பிரதியமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் வந்தார். பின்னர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் வந்தார். கிளிநொச்சியின் உருவாக்கத்துக்கு ஒரு காலம் பெரும் பங்களிப்பைச் செய்திருந்த ஆனந்தசங்கரியும் வந்திருந்தார். இப்பொழுது அமைச்சர் மனோ கணேசனும் வந்திருக்கிறார். இடையில் அதிகாரிகள், தொண்டர் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் என எல்லோரும் வந்தனர். ஒரு பேரழிவையொட்டி இப்படி அங்கே அனுதாபம் தெரிவிக்கவும் நிலைமைகளை அவதானிக்கவும் தலைவர்களும் பிரதானிகளும் வருவது இயல்பு. எல்லாம் சரி. இந்தத் தீ விபத்து ஏற்பட்டபோது அதைத் தடுப்பதற்கு அல்லது கட்டுப்படுத்துவதற்கு ஒரு தீயணைப்பு வண்டி கிடைக்காமல் போனதே. கிளிநொச்சி என்ற தனிமாவட்டத்துக்கு ஒரு தீயணைப்பு வண்டி இல்லாமலிருப்பதைப்பற்றி இவர்களில் அநேகர் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. அப்படி ஒரு தீயணைப்பு வண்டியும் தீயைக் கட்டுப்படுத்தும் பிரிவினரும் இருந்திருந்தால், நிலைமை இந்த அளவுக்கு மோசமாகியிருக்காது. கரைச்சிப்பிரதேச சபை தனக்கான ஒரு தீயணைப்புப் பிரிவை உருவாக்கியிருக்க முடியும். அதற்குப்போதிய நிதி பிரதேச சபையிடம் உண்டு.
கிளிநொச்சி வளர்ந்து வருகின்ற மையநகரம். பல்கலைக்கழகம், தொழில்நுட்பக் கல்லூரி, தொழிற்சாலைகள், பொது மையங்கள் என நிறைந்து வரும் பிரதேசம். சனச்செறிவு வேறு அடர்த்தியாகிக் கொண்டிருக்கிறது. இப்படியெல்லாம் இருந்தும் ஒரு தீயணைப்பு வண்டிகூட அங்கில்லாமல் இருப்பது அனர்த்தங்களை இப்படித்தான் பெருக்கி விடும். எனவே இனிமேலாவது இதுதொடர்பாக அரசாங்கமும் பிரதேச சபையினரும் கவனத்திற் கொண்டு, கிளிநொச்சிக்கான தீயணைப்புப் பிரிவை உண்டாக்க வேண்டும். மட்டுமல்ல, கடந்த காலத்தில் ஏன் சந்தை அமைப்பதில் தவறுகள் நடந்தன? வாய்ப்புகள் எதற்காகக் கைவிடப்பட்டன? என்பதைப்பற்றியும் கண்டறிந்து, அந்தத் தவறை சீர் செய்ய முன்வருவது அவசியம்.
கிளிநொச்சியில் அரச திணைக்களங்கள் அனைத்தும் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ளன. சேதமடைந்திருந்தவை முழுமையான அளவில் புனரமைக்கப்பட்டுள்ளன. மக்களுக்கான வீடுகள் தொடக்கம் கிராமங்களின் பொது நோக்கு மண்டபங்கள், முன்பள்ளிகள், பாடசாலைகள், மருத்துவமனைகள், சந்தைகள், பேருந்து நிலையங்கள், நூலகங்கள், சிறார் பொழுது போக்கு மையங்கள் எனப் பலவும் புதிதாகக் கட்டப்பட்டுள்ளன. மக்கள் அதிகமாகக் கூடுகின்ற சந்தை மட்டும் இன்னும் முழுமையான நிர்மாணத்தை எட்டாமலே உள்ளது. இது இதற்குப் பொறுப்பாக இருந்த சபையின் குறைபாடின்றி வேறென்ன? இதனையே இந்த வியாபாரிகள் கேட்கிறார்கள்.
கிளிநொச்சி பொதுச் சந்தை வியாபாரிகள் போரின் பாதிப்புகளைச் சந்தித்தவர்கள் மட்டுமல்ல, ஏற்கனவே நலிவடைந்த பொருளாதார நிலையை உடைய சிறிய நிலை வர்த்தகர்கள். பெரும்பாலானவர்கள் மலையத்திலிருந்து இடம்பெயர்ந்து வந்து கிளிநொச்சியில் குடியேறியவர்கள். அனைவருக்கும் ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிகளிலும் மொத்த வியாபாரிகளிடமும் கடன்கள் உண்டு. இதைத் தவிர வியாபாரத்திற்காக அடகு வைத்த நகைகள் என மிகப்பெரும் சுமைக்குள் வாழ்கின்றனர். இந்த நிலையில் ஏற்பட்ட தீ தங்களுடைய வாழ்கையை எரித்து விட்ட தீ என வியாபாரிகள் தலையில் கை வைத்துக் கதறுகின்றனர்.
இப்போது இந்த வியாபாரிகளின் கோரிக்கைகள். சந்தைக்கான நிரந்தர கட்டிடம் அமைக்கப்பட வேணும். வங்கிகள், நிதி நிறுவனங்களில் பெற்ற கடன்களை அரசு விசேட ஏற்பாடு மூலம் தள்ளுபடி செய்தல், அல்லது வட்டியை இரத்துச் செய்தல் அல்லது மீள் செலுத்துகைக் காலத்தை நீடித்தல். வியாபாரிகள் வழமைக்கு திரும்பும் வரைக்கும் விசேட நிதி ஒதுக்கீடு மூலம் வாழ்வாதார உதவிகள் வழங்கப்படுதல். பிரதேச சபை குறிப்பிட்ட ஆண்டுகாலத்துக்கு வரியிறுப்பில் விலக்களித்தல். அத்துடன், கிளிநொச்சி நகரத்திற்கு ஒரு தீ அணைப்பு வாகன வசதியையும் அதற்குரிய ஆளணியையும் ஏற்படுத்துதல்
போன்றவை. இதையெல்லாம் செய்வதற்கு யார் இருக்கிறார்கள்? கூரை ஏறிக் கோழி பிடிக்க மாட்டாதவர்கள் வானம் ஏறி வைகுண்டமா செல்லப்போகிறார்கள்?
முள்ளிவாய்க்கால் துயரத்தின்போது கேட்ட அதே அழுகுரல்கள் இன்னும் சந்தை வளாகத்தில் கேட்டுக்கொண்டிருக்கின்றன. சாம்பல் பறந்து கொண்டிருக்கிறது.

நன்றி தேனீ
0 commentaires :
Post a Comment