9/17/2016

கிளிநொச்சியில் திலீபனின் நினைவு தாங்கிய சுவரொட்டிகள் : அச்சத்தில் மக்கள்

திலீபனின் 29ஆவது நினைவுதினம்  எனும் தலைப்பினைத் தாங்கிய சுவரொட்டிகள் கிளிநொச்சியின் சில இடங்களில் நேற்றிரவு ஒட்டப்பட்டுள்ளது.

ஜனநாயகப் போராளிகள் கட்சி  என குறித்த சுவரொட்டியில் பெயர் குறிப்பிடப்பட்டு ஓட்டப்பட்டுள்ளது
குறித்த  சுவரொட்டிகள் கிளிநொச்சிக் கடைகளுக்கு அருகாமையிலும் கடைக் கதவுகளிலும்  ஓட்டப்பட்டமையால் அச்சத்தில் கடை உரிமையாளர்கள்  குறித்த  சுவரொட்டிகளை அகற்றி உள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்
 குறித்த சுவரொட்டியில் 'திலீபன் அண்ணாவே நீ மூட்டிய தியாக தீபம் அணையவில்லையடா. மக்கள் புரட்சி வெடிக்குதடா.  நீ காட்டிய அகிம்சை வழியில்  எம் தமிழினம் தலைநிமிரும். நீ வானத்தில் இருந்து பார்க்கும் காலம் வெகு விரைவில். தன்மானத்த தமிழனடா அண்ணன் திலீபனடா. கடுகளவும் நீர் அருந்தா கடுந்தவமும் நீ புரிந்தாய் தியாக செம்மல் திலீபன் அண்ணாவே  எனக் குறிப்பிடப்பட்டுள்ளது 

0 commentaires :

Post a Comment