வடபுலத்தான்
“இரவல் புடவையில் இது நல்ல கொய்யகம்“ என்று ஆச்சி சொல்லுவா. இதை ஏன் சொல்கிறா எண்டு எனக்கு அப்ப புரியிறதில்லை. ஆனால், இப்பொழுது இதற்கு என்ன பொருள் என்று நல்லா விளங்குது. எல்லாம் காலம் செய்யும் கோலம்தான்.
சங்கதி இதுதான்.
கிளிநொச்சி பொதுச் சந்தையில் தீ விபத்து ஏற்பட்டதல்லவா! அந்தத் தீவிபத்தில் பாதிக்கப்பட்டிருக்கும் வர்த்தகர்களுக்கு கரைச்சிப் பிரதேச சபை, தன்னுடைய சொந்த நிதியிலிருந்து தலா 20.000 ரூபா நிதியை உடனடி உதவியாக வழங்கியது. இந்த முடிவை பிரதேச சபையின் செயலாளர் க. கம்ஸநாதன் தற்துணிவாகவே எடுத்திருந்தார். இந்தத் தகவலை பிரதேச சபையின் செயலாளர் கே. கம்ஸநாதனே தெரிவித்துமிருக்கிறார்.
இந்த நிதியை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குவதற்கான ஆயத்தங்களைச்செய்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக, எரிந்த சந்தையைப் பார்வையிடுவதற்காக அங்கே வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் வந்திருந்தார். அவர்கள் பாதிக்கப்பட்டவர்களுடனும் பிரதேச சபையின் செயலருடனும் பேசினார். அப்போது “உடனடி உதவியாக, பிரதேச சபையின் நிதியிலிருந்து தலா 20 ஆயிரம் ரூபா வீதம் கொடுக்கலாம் என்று எண்ணியிருக்கிறோம்“ என்று பிரதேச சபையின் செயலர் கம்ஸநாதன் முதலமைச்சரிடம் சொன்னார். பிறகென்ன? காகம் இருக்கப் பனம் பழம் விழுந்த மாதிரித்தான்.
இதனையடுத்து, பதவி நிமித்தமாகச் சம்பிரதாய புர்வமாக அந்த நிதியை வழங்கி வைத்தார் விக்கினேஸ்வரன். வெறுங்கையோடு வந்தவருக்குப் பலகாரப் பார்ஷல் கிடைத்த மாதிரி, சந்தோசமாகக் காரியத்தை முடித்துக் கொண்டு கிளம்பினார்.
இந்த நிகழ்வு முடிய, விக்கினேஸ்வரன் சென்று விட்டார். இதற்குப் பிறகு அங்கே இந்த விசயம் வேறு விதமாக மக்களிடம் சொல்லப்பட்டுள்ளது. அதாவது, முதலமைச்சர் கொடுத்த 20 ஆயிரம் ரூபா கட்சிக் காசு என்றும் கட்சி நிதியிலிருந்து இதை அவர் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வழங்கினார் என்றும் சொல்லப்பட்டுள்ளது. சொன்னது மட்டுமல்ல, அப்படித்தான் வர்த்தகர்கள் நம்பவும் வைக்கப்பட்டுள்ளனர். இதைச் செய்ததும் செய்து கொண்டிருப்பதும் கரைச்சிப்பிரதேச சபையைக் கட்டியாண்ட முன்னாள் உறுப்பினர்களும் சிறிதரன் எம்பியின் வலது கையானுமாகிய வேழமாலிகிதனும்தான்.
அப்படியென்றால், இது எந்தக் கட்சியின் நிதி? தமிழரசுக்கட்சியின் நிதியா? அல்லது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நிதியா? கட்சியின் நிதியில் இருந்து இந்த உடனடி உதவி வழங்கப்பட்டிருந்தால், எதற்காக பிரதேச சபை தன்னுடைய நிதியைக் கொடுத்ததாகக் கூற வேண்டும்? அல்லது கரைச்சிப் பிரதேச சபை கட்சிக்கு நிதியை அன்பளிப்புச் செய்திருக்கிறதா? அப்படியானால், அது எந்தக் கட்சிக்கு இந்த நிதியைக் கொடுத்தது? அப்படிக் கொடுப்பதற்கு பிரதேச சபைக்கு விதிமுறையும் அனுமதியும் உண்டா?
இப்ப கேள்வி என்னெண்டால், கம்ஸநாதன் பொய் சொல்கிறாரா? இதற்குப் பிரதேச சபையின் பதில் என்ன? முதலமைச்சர். இதைப்பற்றி என்ன சொல்கிறார்? இந்தக் கட்டுக்கதைகளைப் பரப்பியது, பிரதேச சபையில் முன்னர் உறுப்பினராக இருந்த சிலர் என்று பகிரங்கமாகத் தெரிந்து கொண்டும் இதைப்பற்றி சிறிதரனும் விக்கினேஸ்வரனும் வாய் திறக்காமல் மௌனமாக இருப்பது ஏன்?
வேற ஒன்றுமில்லை, மீண்டும் தாமே பிரதேச சபையைக் கைப்பற்றுவதற்காகவே ஓசிக்காசில் இந்தப் பரப்புரையைச் செய்து கொண்டிருக்கிறார்கள்.
வேற ஒன்றுமில்லை, மீண்டும் தாமே பிரதேச சபையைக் கைப்பற்றுவதற்காகவே ஓசிக்காசில் இந்தப் பரப்புரையைச் செய்து கொண்டிருக்கிறார்கள்.
சந்தை எரிந்த கவலை ஒருபக்கம். பாதிக்கப்பட்டவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்துப் போயிருக்கிறார்கள். இதற்குள்ளும் ஓசிக் காசில் அரசியல் ஆதாயம் தேடும் கேவலம்.
என்னதான் நடந்து கொண்டிருக்கிறது இந்த உலகத்தில்? இது எந்த வகையான அரசியல் நாகரீகமாகும்?
வழித் தேங்காயை எடுத்துத் தெருப்பிள்ளையாருக்கு அடிக்கும் கலை நன்றாகத்தானிருக்கிறது. இதைப்பற்றி தமிழ் “வெற்றி“ (Win) இணையத்தளத்தின் பதில் என்னவாக இருக்கும்?
இதைத்தான் உடையாரின் திருவிழாவில் சடையர் வாணம் விட்ட கதை என்று சொல்வதா? அரசாங்கக் காசில் கட்சிப்பணி....
ஆஹா அருமையாகத்தான் உள்ளது தமிழ்த் தேசியத்துக்கான அரசியற் பண்பாடு.
வழித்தேங்காய் தெருப்பிள்ளையார்
வழித் தேங்காயை எடுத்துத் தெருப்பிள்ளையாருக்கு அடிக்கும் கலை நன்றாகத்தானிருக்கிறது. இதைப்பற்றி தமிழ் “வெற்றி“ (Win) இணையத்தளத்தின் பதில் என்னவாக இருக்கும்?
இதைத்தான் உடையாரின் திருவிழாவில் சடையர் வாணம் விட்ட கதை என்று சொல்வதா? அரசாங்கக் காசில் கட்சிப்பணி....
ஆஹா அருமையாகத்தான் உள்ளது தமிழ்த் தேசியத்துக்கான அரசியற் பண்பாடு.
வழித்தேங்காய் தெருப்பிள்ளையார்
நன்றி தேனீ
0 commentaires :
Post a Comment