வாழைச்சேனை மாவடிவேம்பைச் சேர்ந்த 11 வயது மாணவியான ரவீந்திரன் சர்மிலா கடந்த 03.09.2016 அன்று சித்தாண்டி சந்தனமடு ஆற்றுப்பகுதியில் யானை தாக்கி உயிரிழந்தார். அவரது தங்கையும் யானையினால் தாக்கப்பட்டு காயங்களுக்குள்ளானார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் சமூக வலைத்தளங்கள் முலம் குறிப்பாக வைபர் ஊடாக ஒன்றிணைந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் மாற்றத்தை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கும் மட்டு இளைஞர் அணியினர் இன்று 10.09....2016 மரணமடைந்த சிறுமியின் வீட்டுக்கு சென்று நிலமைகளையும் குடும்ப நிலைமைகளையும் நேரடியாக பார்வையிட்டு கேட்டறிந்ததுடன் நாளைய எட்டாம் நாள் செலவுக்கு சிறுதொகை பணம் வழங்கியதுடன், குடும்பத்தின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக கோழி வளர்ப்புக்காக உதவுவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

சமூக வலைத்தளம் மூலமாக ஒன்றிணைந்து இவ்வாறான செயற்றிட்டங்களை முன்னெடுக்கும் இளைஞர்கள் பாராட்டப்படவேண்டியவர்கள்.
0 commentaires :
Post a Comment