9/19/2016

இலங்கை அரசுகூட எந்த தமிழ் கைதியும் மின்சாரத்தை வாயால் கடித்து தற்கொலை செய்ததாக இதுவரை கூறியதில்லை.

• பொலிசாரே கைது செய்தார்கள்
• பொலிசாரே விசாரணை செய்தார்கள்
• பொலிசாரே தீர்ப்பு வழங்கினார்கள்.
• இறுதியில் பொலிசாரே தண்டனையும் வழங்கியுள்ளார்கள்.
...
இதைத்தான் அவர்கள் “சட்டம் தன் கடமையைச் செய்கிறது” என்று கௌரவமாக கூறுகிறார்கள்.
ராம்குமார் கொல்லப்பட்டது; ஆச்சரியம் இல்லை. மாறாக கொல்லாமல் விடப்பட்டிருந்தாலே ஆச்சரியம் ஆகும்.
பொலிசார் காவலில் விசாரணைக் கைதி கொல்லப்படுவதோ அல்லது சிறையில் கைதி கொல்லப்படுவதோ இது முதலும் அல்ல. கடைசியும் அல்ல.
எல்லாமே வழக்கம்போல் செய்துள்ளார்கள். ஆனால் காரணம் மட்டும் இம்முறை புதிதாக சொல்லியுள்ளார்கள்.
மின்சாரக்கம்பியை வாயால் கடித்து ஒரு கைதி தற்கொலை செய்தான் என்று இந்திய வரலாற்றில் மட்டுமல்ல உலக வரலாற்றில்கூட இதுவரை நான் அறிந்தது இல்லை.
சிறையில் பல தமிழர்களைக் கொன்ற இலங்கை அரசுகூட எந்த தமிழ் கைதியும் மின்சாரத்தை வாயால் கடித்து தற்கொலை செய்ததாக இதுவரை கூறியதில்லை.
இப்போது என் அச்சமெல்லாம் இனி எத்தனை ராம்குமார்கள் மின்சாரத்தை வாயால் கடித்து தற்கொலை செய்ததாக தமிழக பொலிசார் கூறப்போகிறார்கள் என்பதே!
மற்றும்படி, கடந்த ஆட்சியில் சாதிக்பாட்சா கொலை செய்யப்பட்டு தற்கொலை செய்ததாக கூறப்பட்டபோது எப்படி கடந்து போனோமோ அதேமாதிரி தற்போது ராம்குமார் கொலையையும் நாம் கடந்து போகப் போகிறோம்.

நன்றி முகநூல் தோழர் பாலன்

0 commentaires :

Post a Comment