9/03/2016

மயிலந்தனையில் சுவீஸ் உதயத்தின் ஏற்பாட்டில் பாடசாலை திறந்துவைப்பு

DSCN0375 சுவீஸ் உதயத்தின் ஏற்பாட்டில் புனானை மயிலந்தனைக் கிராமத்தில் மாலைநேர வகுப்பு நடைபெறும் கட்டிடத்தினை புனர் நிர்மாணம்செய்து திறந்துவைக்கும் நிகழ்வு வியாழக்கிழமை 1 ஆம்திகதி மாலை இடம்பெற்றது.
கடந்த காலப் போர்ச் சூழலினால் பெரிதும் பாதிக்கப்பட்ட புனானை மயிலந்தனைக் கிராமத்தில் வாழுகின்ற பிள்ளைகளின் கல்வி முன்னேற்றத்திற்காக சுவீஸ் உதயம் அமைப்பு 2004 ஆண்டில் இருந்து மாலைநேர வகுப்பு நடாத்தி வருகின்றது.

DSCN0408
அவ்வாறு வகுப்பு நடைபெற்றுவரும் கட்டிடம் மாணவர்களின் கல்வி நடவடிக்கையினை மேற்கொள்ளுவதற்கேற்ற வகையில் வசதிவாய்ப்பாக இல்லை என்பதனை இப்பிரதேச மக்கள் சுவீஸ் உதயத்திடம் வேண்டிக் கொண்டதற்கு இணங்கவே சுவீஸ் உதயம் அமைப்பின் தலைவர்; சமூகசேவையாளர் ரி.சுதர்சன் செயலாளர் சமூகசேவையாளர் வி.ஜெயக்குமார் பொருளாளர் சமூகசேவையாளர் க.துரைநாயகம் மற்றும் சுவீஸ் உதயத்தின் நிருவாகக் குழுவினர்களும் மற்றும் அங்கத்தவர்களுடைய பாரிய முயற்சியினாலும் இக்கட்டிடம் புனர் நிர்மாணம் செய்யப்பட்டு இருக்கின்றது.

இக்கட்டிடத்தினை புனரமைப்புச் செய்வதற்காக சுவீஸ் உதயத்தின் வேண்டுகோளை ஏற்று அதற்கான நிதியுதவியை.யாழ்ப்பாணம் கைதடியினைப் பிறப்பிடமாகவும் சுவிஸ்லாந்தில் வதிவிடமாகக் கொண்டிருக்கும் திரு திருமதி ரட்ணம் சிவதாஸ் குடும்பத்தினர் வழங்கியுள்ளனர் அதேபோன்று மயிலந்தனைப் பாடசாலைக்கு தளபாடத்திற்கான நிதி உதவியினை யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும் சுவிஸ்லாந்தில் வசித்துக் கொண்டிருக்கும் லட்சுமணன் சிவச்செல்வன் அவர்கள் வழங்கியிருந்தனர்.இவர்களது . மனிதாபிமான சேவையினை பிரதேசத்தில் வாழும் அனைவரும் பாராட்டியுள்ளதுடன் இந்த பின்தங்கிய பிரதேச மாணவர்களின் கல்விக்காக உதவிய இப் பெருந்தகைகளுக்கு மயிலந்தனை மக்கள் நன்றி தெரிவிப்பதுடன் சுவீஸ் உதயத்தினருக்கும் நன்றிதெரிவித்துள்ளனர்.

இந்நிகழ்வில் சுவீஸ் உதயதத்தின் பொருளாளர் சமூகசேவையாளர் க. துரைநாயகம் சுவீஸ் நாட்டில் இருந்து வருகைதந்து அக்கட்டிடத்தினைத் திறந்துவைத்ததுடன் சுவீஸ் உதயம் அமைப்பின் கிழக்குமாகாணத் தலைவர் மு.விமலநாதன் கிழக்குமாகாணத்திற்கான பொருளாளர் பாவாணர் அக்கரைப்பாக்கியன் உட்பட கிரான் பிரதேசசெயலக உத்தியோகத்தர்கள் மற்றும் அக்கிராமத்தின் பெரியோர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்
அங்கு சுவீஸ் உதயத்தின் பொருளாளர் சமூகசேவகர் துரைநாயகம் உரையாற்றுகையில் கடந்தகாலத்தில் நடைபெற்ற யுத்தம் தமிழ்ச்சமூதாயத்தினை மூன்றாம் நிலைக்கு இட்டுச்சென்றுள்ளமை கவலையான விடயமாகும்

அதனால்தான் அம்மக்களின் கல்வி பொருளாதாரம் என்பவற்றினை முன்னேற்றும் நோக்கில் 2004 ஆம் ஆண்டில் இருந்து சுவீஸ் உதயம் ஆரம்பிக்கப்பட்டு அன்றில் இருந்து இன்றுவரைக்கும் பாரிய சேவையாற்றிவருகின்றோம். அதில் ஒரு அங்கமாகவே இந்த மயிலந்தனைக்கிராமத்தில் இரண்டு ஆசிரியர்களை தெரிவுசெய்து மாலைநேர வகுப்பு நடாத்திவருவதுடன் மாணவர்கள் கல்வி கற்பதற்காக இங்கு சேதமடைந்து காணப்பட்ட கட்டிடத்தினையும் புனரமைப்பு செய்து திறந்துவைப்பதனை இட்டு பெருமையடைவதுடன் என்னோடு இணைந்து சுவீஸ் உதயம் அமைப்பின் தலைவர்; சமூகசேவையாளர் ரி.சுதர்சன் செயலாளர் சமூகசேவையாளர் வி.ஜெயக்குமார் மற்றும் சுவீஸ் உதயத்தின் நிருவாகக் குழுவினர்கள் அமைப்பின் அங்கத்தவர்கள் ஆகியோர்களின் பாரிய முயற்சியின் பயனாலேயே இவ் வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம். அதே வேளை விஷேசமாக இக்கட்டிட புனர் நிர்மாணத்திற்காக உதவிய யாழ்ப்பாணம் கைதடியினைப் பிறப்பிடமாகவும் சுவிஸ்லாந்தில் வதிவிடமாகக் கொண்டிருக்கும் திரு திருமதி ரட்ணம் சிவதாஸ் குடும்பத்தினர் நிதி வழங்கியுள்ளனர் அதேபோன்று தளபாடத்திற்கான நிதி உதவியினை யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும் சுவிஸ்லாந்தில் வசித்துக் கொண்டிருக்கும் லட்சுமணன் சிவச்செல்வன் வழங்கியுள்ளார்கள். எனவே இந்த நல் சேவைக்கு உதவிய இருவருக்கும் நாம் அனைவரும் நன்றியுள்ளவர்களாக இருக்கின்றோம் என்றார்.

0 commentaires :

Post a Comment