“தேசம்” ஆசிரியர்; த. ஜெயபாலனின் ‘ வட்டுக்கோட்டையிலிருந்து முள்ளி வாய்க்கால் வரை’
இலங்கையில் தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைப் போராட்டத்தோடு சுமார் 30 ஆண்டுகளாகப் பயணித்த ஆயுத வன்முறை பல வடுக்களை இன்னமும் சுமந்து செல்கிறது. கல்வியிலும், கலாச்சார விழுமியங்களிலும் தன்னை ஓர் உயர்ந்த சமூகமாக காட்டிக்கொள்ளும் இக் குழுமம், போராட்டத்தின் போக்கில் காணப்பட்ட ஜனநாயக விரோத, மக்கள் விரோத அம்சங்களை அவ்வப்போது சுட்டிக்காட்டித் தடுக்க ஏன் தவறியது? போரின் இறுதிக் காலத்தில் மரணத்தின் விளிம்பில் தத்தளித்த மக்களின் கோர நிலமைகள் குறித்து ஊடகங்கள் ஏன் மௌனித்தன?
ஆயுத வன்முறை என்பது மனித நேயம், மனித உரிமை போன்ற சர்வதேச விழுமியங்களை காலில் மிதித்து மீறிச் சென்றபோது அதன் விளைவுகள் குறித்து ஒரு சில ஊடகங்களே அவ்வப்போது எச்சரித்து வந்தன. ஊடகவியலாளர்களின் உயிருக்கு ஆபத்து என்பதால் பலரும் மௌனித்த நிலையில், வெளிநாடுகளில் செயற்பட்ட ஒரு சில ஊடகங்களே குறிப்பாக சிறு சஞ்சிகைகளும், இணையத்தளங்களும், வானொலி சிலவும் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் மக்களின் துன்பங்களை பொது வெளியில் வைத்தன.
அவ்வாறான சிறு சஞ்சிகைகளில் ஒன்றான லண்டனில் வெளியான ‘தேசம்’ துணிச்சலோடு அச் செய்திகளை மக்கள் முன் எடுத்துச் சென்றது. ஓர் ஊடகம் என்ற வகையிலும், காலத்தின் கண்ணாடி என்ற வகையிலும் போரின் போக்கு மக்கள் மேல் சுமத்தி வரும் கொடுமைகள் குறித்த விபரங்களை அச்சமின்றி வெளியிட்டது.
தமிழ்த் தேசியம் வெற்றி கொள்வதாக பீத்தியபடி வன்முறை அரசியலை நியாயப்படுத்தி வானொலி, தொலைக்காட்சி, அச்சு ஊடகங்கள், இணையத்தளங்கள் போன்றன செய்திகளை நிறைத்து உண்மைகளை மறைத்து வந்த வேளையில் போரில் அவதியுறும் மக்களின் துன்பங்களையும், அவர்களைக் கவசமாக்கி நடத்தப்பட்ட தமிழ்த் தேசியவாதத்தின் கோர போலி முகத்தினையும், அவ்வப்போது கிடைத்த உண்மைத் தகவல்களை ‘தேசம்’ பதிவு செய்திருந்தது.
போரின் உண்மைத் தோற்றத்தினை அறிந்து கொள்வதற்கான உண்மைத் தகவல்களை மக்கள் அன்று புரிந்து கொள்வதற்குத் தவறியிருக்கலாம். ஆனால் போர் ஓய்வடைந்த பின்னரும் அம் மக்கள் அனுபவிக்கும் துன்ப, துயரங்கள் மேலும் மேலும் விரிவடைந்து செல்கையில் போரின்போது ஆதிக்கம் செலுத்திய அதே தமிழ்த் தேசியவாதம் மீண்டும் தனது கோர முகத்தினை வெளிக்காட்டுகிறது.
மக்கள் எச்சரிக்கையோடு செயற்படாவிடில் இன்னொரு முள்ளிவாய்க்கால் தவிர்க்க முடியாமல் போகலாம். கடந்த காலத்தை மீள் பரிசீலனைக்கு உட்படுத்துவது இன்று அவசியமாக உள்ளது. அவ்வாறான முயற்சிக்கான ஓர் உந்துகோலே த. ஜெயபாலனின் ‘வட்டுக்கோட்டையிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை’ என்ற செய்தித் தொகுப்பு நூலாகும்.

0 commentaires :
Post a Comment